அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை
கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
மானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக்
கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்! 
   - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

anbazhagan_karunanidhi_stalin_640

தனது பள்ளிப் பருவம் முதலாகப் பகுத்தறிவுக் கொள்கை உணர்வு பெற்று, கல்லூரி நாட்களில் கழகப் பணியில் ஈடுபட்டு, அறிஞர் அண்ணாவின் அருமையையும், பெருமையையும் உணர்ந்து, தமது தந்தை கலைஞரின் அறிவாற்றலைத் தெளிந்து - கழகத்திற்கு வலிமை சேர்க்கும் படையாக இளைஞர் அணியை உருவாக்கி, அதை வழிநடத்தும் தளபதியாக உயர்ந்து, நாடெங்கும் உள்ள இளைஞர்கள் தடம் மாறிப் போகாது, கொள்கை வழியில் நம்பிக்கைச் சுடரொளியாக விளங்குபவர் ஸ்டாலின்.
      - இனமாப் பேராசிரியர்

என்றைக்கு ஸ்டாலின் மிசாவில் கைதாகி ஓராண்டுக் காலம் இன்னல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் ஆளானாரோ அன்றைக்கே கழக அரசியலுக்கு ஸ்டாலின் தேவை என்பதனைக் காலம் உணர்த்திவிட்டது.
        - க. சுப்பு

தி.மு.கழகத்தில் ஒரு தொண்டனாக, சேவகனாக ஸ்டாலின் அடியயடுத்து வைத்தவர். அரசியலில் தூய்மை,பொதுவாழ்வில் தூய்மை என்பது அவரது அணிகலன்களாக இருக்கின்றன. இன்றுவரை அவர் எந்த அமைச்சரின் பணியிலும் தலையிட்டதில்லை. ஆகவேதான் தொலைவில் நின்று பார்க்கின்ற எம்மைப் போன்றவர்களுக்கு ஸ்டாலின் மீது பிரியம் பிறக்கிறது.
      - மூத்த பத்திரிகையாளர் சோலை

அரசியலில் ஸ்டாலின் அங்குலம் அங்குலமாக வளர்ந்து மேலே வந்தார் என்பதை அனைவரும் அறிவோம். அது மட்டுமே அவருடைய பெருமை ஆகிவிடாது. தான் முன்னேறிய ஒவ்வொரு அங்குலத்தின் போதும் தன் தோள்களில் கட்சியைச் சுமந்து கொண்டே முன்னேறினார்.
        - சுப.வீரபாண்டியன்

ஸ்டாலினைப் பற்றி கவலைப்பட்டவர்களில் எம்.ஆர். ராதாவும் ஒருவர். பையன் எப்படி இருக்கிறான்? என்று அவர் அடிக்கடி விசாரிப்பார். பையன் எழுதிக் கொடுத்துட்டானா? என்று விசாரிப்பார். இல்லை என்றால், அதுதானே பார்த்தேன். புலிக்குப் பொறந்ததாச்சே என்பார்.
   - ஆயிரம் விளக்கு உசேன், மிசா சிறை வாசத்தின் போது

ஸ்டாலின் தொட்டிச் செடிபோல் தூக்கி வைக்கப்பட்ட மரமல்ல. இந்த மண்ணுக்குள் வேர்களைச் சொந்தமாக வீசி வளரும் சுயம்பு.
      - கவிப்பேரரசு வைரமுத்து

கட்சியிலோ தேர்தலில் போட்டியிடுவதிலோ ஸ்டாலின் திணிக்கப்பட்டிருந்தால் ஆட்சேபிப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால் இருபது வருடங்களாக தி.மு.க.வுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில் மக்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அதனாலேயே தேர்தலில் ஓட்டுப் போட்டு மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
       - சோ, பத்திரிகையாளர்