யாருமில்லாத வனாந்தரம்
பெண்களுக்கு மேலாடை இல்லை
விறகு வேண்டி காடுகளுக்குள் போகிறார்கள்
குழந்தைகள் தெருவற்று
அம்மணமாய் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
ஆண்கள் சுவடுகளற்றுப்
போய்விட்டார்கள்.
எல்லா ஓலை வீடுகளிலும்
விசித்திரமாய்
பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.


00000

பழனி

பேகன் போர்வையில்
நிறைய கிழிசல்கள்
கண்ணகிக்கு காற்சிலம்பு இல்லை
(கண்ணகி பேகனின் மனைவி)

வையாபுரி, சித்தன் என்று
பல பெயர்கள்
நடமாடும் மனிதர்களுக்கும்

சுகன் குளிகை அருந்தி
உடம்பை லேசாக்கி
ஆகாய மார்க்கம் போகலாம்

நவபாஷாணம்
கரைகிறது சுரண்டலால்
கமல முனி, இடைக்காய், புலிப்பாணி
சாலிவாகன சகாப்தம்
முடிந்து
புலிப்பாணி மரணம்
பாத்திர சாமிகளிடமிருந்து
பார்ப்பானுக்கு வழிபாட்டுமுறை
திருநீறும் சந்தனமும் வாங்க
கைநிறைய காசு தரவேண்டியிருக்கிறது.

- சுப்ரபாரதிமணியன்