நம் தேசத்தினை 

துளிர்க்க துளிர்க்க 

கிள்ளி எறிந்துவிடுகிறது 

இனம்புரியாத மிருகத்தின் 

நகங்கள் 

 

சிதறிய நேசம் ஒன்றுகூடி 

போர்க்களத்தில் அணிவகுக்கையில் 

பலிபீடமாகிவிடுகிறது 

அக்களம் 

 

மரணவாயிலில் அன்பின் 

தாகத்தில் ஏங்கும் நம் இளமை 

அதன் மூச்சுக் காற்றின் 

உஷ்ணத்தில் ஆவியாகிவிடுகிறது 

 

ஆம் இனி அம்மிருகத்தின் 

உக்கிரம் தணிந்து பரிதாபத்தின் 

சின்னமாகிவிடும் 

இன்னும் பல நேசங்கள் 

உயிர் பெறாத உரை.