அனுபவங்கள் 8

கும்பகோணம் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் பழமையான நகரம். ஆலயங்கள் நிறைந்த புனிதபூமி. தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்று புகழப்பட்ட அரசினர் ஆண்கள் கல்லூரி காவிரிக் கரையில் அழகுடன் கம்பீரமாக நிற்கிறது. தமிழ்த் தாத்தா திரு.உ.வே. சாமிநாத அய்யர் அவர் களும், கணித மேதை திரு.ராமானுஜம் அவர்களும் இந்தக் கல்லூரியில் பாடம் நடத்தியதும், பாடம் கற்றதும் எனப் பெருமை உடைய கல்லூரி.

இதோடு இன்னொரு பெருமை, இங்கே ஓவியக்கல்லூரி ஒன்று காவேரிக்கரையில் ரம்மியமாக வீற்றிருக்கிறது. தமிழகத்தில் இரண்டு ஓவியக்கல்லூரிகள்தான் உண்டு. ஒன்று சென்னையில் இன்னொன்று கும்பகோணத்தில். இப்போது அரசால் நடத்தப்படும் ஓவியக்கல்லூரி 1960க்கு முன்பு நகராட்சியினரால் சித்திரக்கலாசாலை என்ற பெயரில் நடத்தப்பட்டது. இப்போது இதன் வயது 150 இருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட சித்திரக்கலா சாலை இது.

இந்த சித்திரக்கலாசாலையில்தான் ஆனந்த விகடனின் ஒப்பற்ற ஓவியர்கள் மாலி, கோபுலு, சாரதி மூவரும் ஓவியம் கற்றார்கள். திரைப்படத் துறையில் ஆர்ட் டைரக்டராக சிறந்து விளங்கிய கங்கா அவர்கள், ஜெமினி ஸ்டூடியோவில் கோட்டை சாமிநாதன், ஜானகிராமன் இவர்கள் ஓவியர்களாகப் பணியாற் றினார்கள். எல்லோரும் இங்கே ஓவியம் கற்றவர்கள் தான். இந்த சித்திரக்கலாசாலையில்தான் நான் 1950ஆம் ஆண்டு சித்திரம் கற்பதற்காகச் சேர்க்கப்பட்டேன். உயர்நிலைப் பள்ளி யில் படிக்க வசதி இல்லை, வறுமை வாட்டியது. ஆதலால் தொழிற்கல்வி கற்க சித்திரக்கலாசாலையை நாடினேன். சித்திரக்கலாசாலைக்குள் நுழைவதற்கு முன்பு சித்திரம், ஓவியம் பற்றிய அருமை பெருமைகள் எதுவும் எனக்குத் தெரியாது. புகழ்பெற்ற ஓவியர்களைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை.

சித்திரம் கற்பதின் மூலம், விளம்பரப்பலகைகள் எழுதுவதற் கான பயிற்சி பெற்று வறுமையைப் போக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சித்திரக்கலாசாலைக்குள் வந்தேன் என்பதுதான் உண்மை.

ஓராண்டு காலம் பயின்றுவிட்டு வெளியேறிவிடலாம் என நினைத்து வந்த நான், சித்திரத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து சித்திரம் கற்று அரசின் சித்திரத் தேர்வுகளெல்லாம் எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்போது கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, ஆகிய சரித்திர நாவல்கள் படிப்ப தற்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கல்கி அவர்களின் எழுத்துக்களும் மணியன் அவர்களின் ஓவியங்களும் அந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டுவந்தன. பகலில் படிக்கும் சரித்திர நாவலால், மாமல்லர், நரசிம்மபல்ல வர், நாகநந்தி, சிவகாமி, விக்கிரம சோழர், பார்த்திப மன்னன், பொன்னன், வள்ளி, வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி, ரவிதாசன், நந்தினி, கரிகாலன், சுந்தரசோழர், மந்தாங்கினி, ஆழ்வார்க்கடியான், மணிமேகலை, பழுவேட்டரையர் எல்லோரும் தினமும் கனவில் வருவதுண்டு.

இந்தக் கனவுகளே எனக்குச் சித்திரக்கதைகள் எழுத மனதில் ஆசையைத் தூண்டிவிட்டன. என் மனதில் மட்டு மல்ல, தமிழகத்தில் உள்ள எழுதப்படிக் கத் தெரிந்த அனைத்து மக்கள் மனதிலும் கல்கி எழுதிய சரித்திரக் கதையின் கதா பாத்திரங்கள் உலாவந்தனர். கனவிலும் நடமாடி வந்தார்கள்.

1959ஆம் ஆண்டு எனக்குச் சென்னை தினத்தந்தி பதிப்பில் ஓவியர் பணி கிடைத்தது. அங்கே பத்திரிகை அதிபர் பத்திரிகை உலக மேதை சி.பா.ஆதித்தனார் அவர்கள் எனக்கு நேரிடையாகக் கார்ட்டூன் வரைய பயிற்சி தந்தார் கள். திரு.மாரிசாமி என்கிற துணை ஆசிரியர் அவர்கள் தினத்தந்தியில் “கறுப்புக் கண்ணாடி” என்கிற சித்திரக்கதை எழுதுவதற்குப் பயிற்சி தந்தார். 1960ஆம் ஆண்டு அந்தச் சித்திரக்கதை சென்னை “தினத்தந்தி” நாளிதழில் வெளிவந்தது. அதன்பிறகு “இவள் இல்லை” என்ற சித்திரக்கதை தினத்தந்தி யில் வெளி வந்தது. 1961ஆம் ஆண்டு தினத்தந்தியின் மாலை நாளிதழான மாலைமுரசு தஞ்சை, மதுரை பதிப்புகளில் “பேசும்பிணம்” என்ற சித்திரக்கதை தினமும் வெளிவந்தது. கார்ட்டூன் வரைவதற்குத் தீவிரமாகப் பயிற்சி செய்தேன். நான் வரைந்து தினத்தந்தியில் முதலில் வந்த கார்ட்டூன் சினிமாத் தியேட்டரில் புகைப்பிடித் தால் போலிசார் கைது செய்வார் கள் என்ற கருத்துக்கு வரைந்த படம் தான். இது டிசம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னையில் தினத்தந்தியில் பிரசுரமானது. தமிழகம் எங்கும் அடுத்தநாள் மற்ற நகரங்களில் உள்ள தினத்தந்தியில் பிரசுரம் ஆனது.

tharangam_370அக்காலத்தில் எனக்குக் கார்ட்டூன் வரைவதைவிடச் சித்திரக்கதை வரைவதில் விருப்பமும், ஆர்வமும் இருந்தது. நாளிதழ் அலுவலகத்தில் என் விருப்பத்தைக் கூறினேன். அதுமட்டுமல்ல பொன்னியின் செல்வன் போன்ற சரித்திரக் கதைகளைச் சித்திரக்கதையாக வரைந்து தினமும் தொடராக வெளியிடலாம் என்று சொன்னேன். மேலிடம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

பின்னர் சில நாட்களில் “கன்னித்தீவு” என்ற அரேபியக் கதை சித்திரக்கதையாக வெளிவரத்துவங்கியது. அதை வரைந்த ஓவியர் கணு என்று புனைப்பெயர் கொண்ட ஓவியர் கணேசன். அவர் மூத்த ஓவியர் என்னைச் சகோதரனாக ஏற்றுக் கொண்டவர். அவருடைய கை வண்ணத்தில் மிக அற்புதமா கச் சித்திரக்கதை துவங் கியது. வாசகர்கள் லட்சக்கணக்கான வர்கள் தினமும் படித்து ரசித்தார்கள். அந்த நேரம் ஓவியர் கணேசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக என்னைக் கன்னித்தீவு படக்கதை வரைவதற்கு வாய்ப்புத்தந்து வற்புறுத்தினார்கள் அலுவலகத்தில். ஓவியர் கணேசன் அவர்களும் “தம்பி தங்கம், நீங்கள் கன்னித்தீவு வரைய வேண்டும்.

நான் நலம்பெற்று அலுவலகம் வரும் வரை யில் நீங்கள் வரைந்து தாருங்கள்” என்றார். அலுவலகத்திலும் மிகவும் விரும்பிக் கேட்டதால் சில மாதங்கள் நான் கன்னித்தீவு சித்திரக்கதை வரைந்து வந்தேன். ஓவியர் கணேசன் அவர்கள் ஏறத்தாழ நான்கு மாதங்கள் கழித்துத் தான் பூரண நலம் பெற்று அலுவலகம் வந்தார்கள். மிகச் சிறப்பாகக் கன்னித் தீவு சித்திரக்கதை நான் வரைந்ததற்கு என்னை உள்ளன்புடன் பாராட்டினார்கள். மறுநாள் முதல் மீண்டும் அவரே கன்னித் தீவுக்குச் சித்திரம் வரைந்தார். அதன் பிறகு எனக்குத் திருமணம் நடைபெற்றது. எனது துணைவி சந்திரோதயமும் சிறந்த ஓவியர். திருமணத்திற்குப் பின்னர் எனக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஓவியர் பணி கிடைத்தது. என் துணைவிக்குத் தஞ்சையில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்தது.

மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தாலும் என் மனதில் சித்திரக்கதை வரையும் ஆர்வம் கொழுந்து விட்டது. தஞ்சை பெரிய கோயில் செல்லும்போதெல்லாம் மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றிச் சித்திரக்கதை வரைவதற்குத் தோன்றும். எங்களின் மாதவருமானத்தைச் சிக்கனப்படுத்தி ராஜராஜனின் ஆயிரமாவது முடிசூட்டுவிழா அன்று சிறிய அளவில் சித்திரக்கதை எழுதி வெளியிட்டோம். அதிகம் அச்சடிக்கவில்லை. என் தாகத்தைச் சிறிது தணித்துக் கொண் டேன்.

பின்னர் எங்கள் மகன் ராஜேந்திரன் அமெரிக்காவுக்குப் பிஸியோதெரபிஸ்டாகச் சென்றான். எங்கள் மகள் பொன்னி யின் செல்வி புவியியல் படித்து முடித்து இப்போது அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறாள். இந்த நல்ல சூழலில், வறுமை விலகிய நேரத்தில் சரித்திரச் சித்திரக் கதை வரைந்து வெளியிட விரும்பி இரண்டு புத்தகங்கள் வரைந்தோம்.

ஒன்று என் துணைவி சந்திரோதயம் வரைந்தா “மர்மவீரன் ராஜராஜசோழன்” மற்றொன்று நான் வரைந்த “இராஜகம்பீ ரன்” தாராசுரம் கோயில் கட்டிய இரண்டாம் ராஜராஜன் இவை இரண்டும் தமிழக நூல் நிலையங்களில் இடம் பெற்றுள் ளன. இது எங்கள் சித்திரக்கதைக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரம். தற்போது “தரங்கம்பாடி புதையல்” என்ற சித்திரக் கதையினை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். (இக்கதை 11.11.2011 முதல் சிறுவர்மலரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது). தரங்கம் பாடி முற்காலத்தில் சடங்கன் பாடி என்ற பெயர் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கி.பி 1305ஆம் ஆண்டு மாறவர்மன்  குலசேகரப் பாண்டியன் மாசிலாமணி நாதருக்கு தரங்கம்பாடியில் ஒரு கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில்பற்றி மணிவர்ணீச்சுரர் மாசிலாநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 700 வருடங்கள் பாரம்பரியமிக்க இந்தக் கோயில் பழமை மாறாமல் தற்போது புதுப்பிக்கப் படுகிறது.  1620இல் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் டேனிஷ் நாட்டு மன்னர் 4ஆம் கிறிஸ்டிய னுக்கு இந்தச் சடங் கன்பாடியை விற்பதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டார். அந்த ஒப்பந்தம் ஒரு பனையோலை வடிவிலான தங்கத்த கட்டில் எழுதப்பட்டிருந்தது. ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 3 ஆயிரத்து 111 வாடகையில் டேனிஷ் நாட்டுக் காரர்கள் தரங்கம் பாடியில் வாணிபம் செய்துகொள்ளலாம்.

ஒப்பந்தம் உருவான அதே ஆண்டில் டேனிஷ் நாட்டின் கடற்படை கேப்டன் ரோலண்ட் கிராப் தரங்கம்பாடியை ஒரு கோட்டையாக உருவாக்கினார். அந்தக்கோட்டை டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்பட்டது.  இந்த வரலாற்றுத்தரவு களோடு  மாசிலாமணிநாதன், கவர்னர், டேனிஷ் வீரர்கள், தளபதிகள், துபாஷ் கள், ஒற்றர்கள், தமிழ் மாலுமிகள், பண்டக சாலை குமாஸ்தாக்கள், வர்த்தக பிரதிநிதிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள், கோட்டைக் காவலாளி கள், தமிழ்ப்பெண்கள் என்னும் பல கதாபாத்தி ரங்களைக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட் டுள்ளது. 

இக்கதையானது, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாக டேனிஷ் அரசு வீரர்களுடன் கப்பலில் பயணமாகும் தமிழ்வீரர் களுக்கு ஆசை காட்டி, தென்ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா மற்றும் ஜாவா தீவுகளில் தமிழர்களை அடிமைகளாக விற்பதற்குத் திட்டமிடும் குள்ளநரிக்கும்பலுக்கும், இவற்றை அறிந்து தமிழர்களை விடு வித்துக் காப்பாற்ற நினைக்கும் தமிழ்வீரன் மாசி என்ற நாயகனுக்கும் இடையிலான போராட்டத்தைச் சித்தரிக்கிறது.

சித்திரக்கதை வரைவதில் எனக்கிருந்த ஆர்வமும், வரலாற்று க்ஷ்க்கதைகள் மேல் இருந்த தீராத காதலுமே என்னை இன்றும் இயக்கிக்கொண்டிருக்கின்றன.

Pin It