தமிழில் அண்மைக் காலத்தில் (1980 - 2010) வெளிவந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் முயற்சி இவ்விதழில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதிகளாக வெளிவந்த சிறுகதைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தொகுக்கப் படாத சிறுகதைகள், பலரின் சிறுகதைகள் அடங் கிய தொகுதிகள் ஆகியவை கணக்கில் கொள்ளப் படவில்லை. தமிழ் நாட்டவர்களின் கதைத் தொகுதிகளை மட்டும் மதிப்பீடு செய்ய தெரிவு செய்து கொண்டோம். பிறவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. அவற்றைத் தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

தமிழில் சிறுகதை உருவான பின்புலம், பெண்படைப்பாளர்களின் கதைகள், இஸ்லா மிய எழுத்தாளர்களின் சிறுகதைகள், தலித்திய எழுத்தாளர்களின் கதைகள் என்ற புரிதல்நோக்கி கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். அண்மைக் காலத்தில் எழுதியுள்ள அனைத்துப் படைப்பாளி கள் குறித்தும் மதிப்பீடு செய்ய இயலவில்லை. இருபத்தைந்து ஆளுமைகள் குறித்து மட்டும் மதிப்பீடு செய்துள்ளோம். இதழின் பக்க அளவே அதற்கு முதன்மையான காரணம். வேறு காரணங்கள் இல்லை. இருப்பினும் வழக்கத் திற்கு மாறாக இந்த இதழின் பக்கங்களைக் கூட்டியுள்ளோம்.

இந்த இதழ், அண்மைக்காலத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்தப் புரிதலுக்கு உதவும் ஆவண மாக அமையும் என்று கருதுகிறோம்.

Pin It