DHARAM PAL: COLLECTED WRITINGS. Vol.III

The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century. Other Indian Press, Mapusa 403507, Goa. Second Edition 1995 என்ற நூலில் உள்ள தகவல்கள், இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

 இந்தியக் கல்வி வளர்ச்சி பற்றி 19ஆம் நூற்றாண்டின் முன்பகுதி வரை அறியப்படவில்லை. அதற்கான ஆவணச் சான்றுகளும் இல்லை. சென்னை மாகாணத்தை ஆண்ட கவர்னர் தாமஸ் மன்றோ எழுதிய பல குறிப்புகளின் அடிப்படையில் பார்ப்போமானால், 1822ஆம் ஆண்டு தமிழக மக்களின் கல்வி மற்றும் படிப்பு ஆகியவற்றை அறிய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம்தோறும் ஒவ்வொரு ஆட்சி யாளர்களிடமிருந்து கல்வி பயில்கின்றவர்களின் நிலைகுறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. அத்தகைய தகவல்கள் பெறுவது என்பது அன்றைய சூழ்நிலையில் அவ்வளவு எளிதாக இல்லை.

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் சார்ந்த ஜாதி, மதம், பள்ளி கட்டணம் ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டன. மாணவர்கள் கல்வி கற்கும் காலம், ஏதேனும் பள்ளிகள் அறக்கட்டளை வாயிலாக நடத்தப்பட்டதா? அப்படி யெனில் அந்த அறக்கட்டளை பற்றிய விவரம் ஆகியவையும் திரட்டப்பட்டன. வேத சாஸ்திரம், வான சாஸ்திரம், சட்டம் ஆகிய பாடங்களைக் கற்றுத்தரும் கல்லூரிகள் பற்றிய விவரமும் தரப்பட்டன. பொதுவாக இந்தப் பாடங்கள் ஒரு சில குறிப்பிட்ட மாணவர்களுக்காக எவ்வித கட்டணமும் இன்றி நடத்தப் பட்டன. ஒருசில இடங்களில் இவ்வகை ஆசிரியர்களுக்காக, அப்பகுதியைச் சார்ந்த உள்ளூர் நிர்வாகம் பணம் மற்றும் இடம் அளித்து நிர்வகித்து வந்தன.

பொதுவாக அக்காலகட்டத்தில் கல்வி என்பது பார்ப்பன‌ர்கள் மற்றும் வணிகர்களுக்காக மட்டுமே என்ற நிலை இருந்தது. ஓரிரு இடங்களில் அவை இந்து மதத்தைச் சார்ந்த பல சாதி பிரிவினர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்தது. பார்ப்பன‌ மற்றும் இந்து பெண்களுக்குக் கல்வி அளிக்கப்படவில்லை. கல்வியினால் அவர்களின் நாணயம் கெட்டுவிடும் என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால், இந்து மதத்தைச் சார்ந்த ஒருசில சாதிகளில் இக்கட்டுப்பாடு கிடையாது. அச்சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கல்வி பயின்று வந்தனர். அவ்வகை தகவல்களும் திரட்டப் பட்டன.

திரு.தாமஸ் மன்றோ அவர்கள், உள்ளூர் கல்வி நிர்வாகத்தில் தலையிட விரும்பவில்லை. மேற்கூறிய தகவல்களைப் பெற மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு தரப்பட்டது. மேலும் ஏதேனும் பள்ளிகளுக்குத் தரப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டு இருக்குமானால், மீண்டும் அப்பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், பல புதிய பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

திருநெல்வேலி : 18.10.1822

திருநெல்வேலி ஆட்சியர் அனுப்பிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 542. அதில் 1921 பார்ப்பன‌ர்களும், 2708 சூத்திரர்களும், 3003 இதர பிரிவு இந்துக்களும் கல்வி பயின்றுள்ளனர். மொத்தம் 5711 (பார்ப்பன‌ர்கள் 1921 மாணவர்கள் நீங்கலாக) இந்து மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

இந்து மதத்தைச் சார்ந்த (வைசியர்கள், சூத்திரர்கள் பிரிவு நீங்கலாக) 107 மாணவிகளும் கல்வி பயின்றுள்ளார்கள். பார்ப்பன‌ர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர் பிரிவைச் சார்ந்த பெண்கள் யாரும் இந்தப் பள்ளிகளில் கல்வி பெறவில்லை. இஸ்லாம் சமுதாயத்தைச் சார்ந்த 327 மாணவர்களும், 2 மாணவி களும் கல்வி பயின்றுள்ளனர். மொத்தமுள்ள 542 பள்ளிகளில் 8068 மாணவர்கள் (மாணவர் 7559, மாணவிகள் 109) கல்வி பயின்றுள்ளனர். இம்மாவட்டத்தில் ஒரு கல்லூரிகூட இல்லை.

திருத்தித்தரப்பட்ட தகவல்கள் (திருநெல்வேலி) 7.11.1882

மொத்தமுள்ள 607 பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 9377. ஆண்கள் 9258 பெண்கள் 119. இதில் பார்ப்பன‌ இனத்தைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2016. இந்த இனத்தைச் சார்ந்த பெண்கள் ஒருவர்கூட கல்வி பயில பள்ளிகளுக்குச் செல்லவில்லை. சூத்திர இனத்தைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2889. இந்த இனத்திலும் பெண்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மற்ற சாதியைச் சார்ந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3674. இதில் மாணவர்கள் 3557, மாணவிகள் 117. இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 798, மாணவர்கள் 796 மாணவிகள் 2. மாவட்ட ஆட்சியாளர் அறிக்கைப்படி வைசிய சாதியைச் சார்ந்த ஒருவரும் பள்ளிக்குச் செல்லவில்லை. இம்மாவட்டத்தில் கல்லூரி எதுவும் செயல்படவில்லை.

கோயம்புத்தூர் 23.11.1822

இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 763. கல்லூரிகளின் எண்ணிக்கை 173. பார்ப்பன‌ மாணவர்கள் 918; வைசிய மாணவர்கள் 289; சூத்திர மாணவர்கள் 6461 (இதில் 82 மாணவிகளும் அடங்குவர்); மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் 226. பார்ப்பன‌, வைசிய மற்றும் மற்ற சாதியைச் சேர்ந்த (சூத்திர சாதியைத் தவிர) பெண்கள் எவரும் கல்வி அறிவு பெறவில்லை. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 312 மாணவர்கள் இப்பள்ளிகளில் கற்றுள்ளனர். இம்மதத்தில் பெண்கள் பள்ளிகளுக்குச் செல்ல வில்லை.

173 கல்லூரிகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 724. அனைவரும் பார்ப்பன‌ பிரிவைச் சார்ந்தவர்கள். மற்ற இந்து மற்றும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த எவரும் கல்லூரிக்குச் செல்லவில்லை. இம்மாவட்டத்தில் கோயம்புத்தூரில் மிக அதிகமாக 45 கல்லூரிகள் இருந்தன. ஆனால், மிக அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயின்ற இடம் கரூர். மாணவர்களின் எண்ணிக்கை 138. கல்லூரிகள் 25.

பள்ளி சென்ற மாணவர்களின் குறைந்தபட்ச வயது 5. மேலும் அவர்கள் 13 அல்லது 14 வயது வரை கல்வி பயின்றுள்ளனர். 15 வயது முதல் மாணவர்கள் வேத சாஸ்திரம் மற்றும் சட்டம் பயின்றனர். அவர்கள் அந்த சாஸ்திரத்தில் போதிய கல்வி அறிவு பெறும் காலம் வரையிலோ அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும் வரையிலோ கல்வி பயின்று வந்தனர்.

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தன. மேலும், தசரா போன்ற பெரிய விழா காலங்களில் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டுதோறும் ரூபாய் 3 முதல் 14 வரை ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. பள்ளிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெற்றன. பண்டிகை கால விடுமுறை இன்றி, மாதந்தோறும் நான்கு நாட்கள் (பௌர்ணமி, அமாவாசை, இவை இரண்டு நாட்களுக்கு அடுத்த நாள்கள்) விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

மாணவிகளைப் பொருத்தவரை, நெசவாளர் சாதியைச் சார்ந்த கைக்கோளர் என்ற பிரிவைச் சார்ந்த ஆடல் பெண்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட்டு வந்தது. இதில் சில விதிவிலக்கு இருந்தாலும், எண்ணிக்கை குறிப்பிடும் அளவு இல்லை என்றே கூறலாம். இம்மாவட்டத்தில் ஆங்கில மொழி கற்பிக்க ஒரு பள்ளியும் இருந்தது. இது இம்மாவட்டத்தைச் சார்ந்த ஒரு ஆங்கில ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது.

மதுரை 5.2.1823

இம்மாவட்டத்தில் மொத்தம் 846 பள்ளிகள் இருந்தன. அவற்றில் 1186 பார்ப்பன‌, 1119 வைசிய, 7312 சூத்திர மற்றும் 2977 பிற சாதியைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். இதில் சூத்திர சாதியைச் சார்ந்த 65 மாணவிகளும், பிற சாதியைச் சார்ந்த 40 மாணவிகளும் கல்வி பயின்றனர். மேலும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த 1147 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். இவற்றில் மாணவி எவரும் இல்லை.

இப்பள்ளிகளுக்கு மானியமாக எந்த நிலமும் கொடுக்கப்பட வில்லை. ஆசிரியர்களுக்கு ஊதியமாக 1 முதல் 33/4 பகோடா அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் 5 வயதில் பள்ளிப் படிப்பைத் தொடங்கி 12 முதல் 15 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டனர். கோயில்களில் இருந்த ஆடல் பெண்கள் மட்டும் கல்வி பயில பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இம்மாவட்டத்தில் ஒரு கல்லூரிகூட செயல்படவில்லை. வேதம் மற்றும் புராணம் படிக்கும் பார்ப்பன‌ மாணவர்களுக்கு மானியமாக நிலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

தஞ்சாவூர் 28.6.1823

இம்மாவட்டத்தில் மொத்தம் 884 பள்ளிகளும், 109 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை பார்ப்பன‌ர் - 2817; சேதிரியா (Chetriah) - 369; வைசியர்- 222; சூத்திரர்கள் -10786 (இதில் 125 மாணவிகளும் அடங்குவர்). பிற சாதியினர்- 2455 (இதில் 29 மாணவிகளும் அடங்குவர்); இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மாணவர்கள் 17582 (154 மாணவிகள் இதில் அடக்கம்). இதில் சூத்திர சாதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற சாதி, மதப் பிரிவினரைவிட அதிகமாகக் கல்வி பயின்றுள்ளனர். எண்ணிக்கை (மாணவர்கள் 10661; மாணவிகள் 125). மொத்தமுள்ள 109 கல்லூரிகளில் 769 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். பார்ப்பன‌ சாதியைச் சார்ந்தவர்களே கல்லூரி வரை கல்வியைத் தொடர்ந்தனர். இதில் ஒரு மாணவிகூட கல்லூரி செல்லவில்லை.

மொத்தமுள்ள 884 பள்ளிகள், 120 பள்ளிகள் தஞ்சாவூரை ஆண்ட மன்னரின் ஆட்சிக்குட்பட்டது. இதில் 21 பள்ளிகள் இலவசமாக கல்வி அளித்து வந்தன. மேலும் இம்மாவட்டத்தில் 23 பள்ளிகள் இலவசப் பள்ளி இருந்தன. புதுக்கோட்டை மற்றும் மன்னார்குடி ஆகிய ஊர்களில் இலவசப் பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார்.

இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சராசரியாக மாதத்திற்கு 4 டி பணம் (4 D Fanams) கட்டணம் செலுத்தி வந்தனர். சில பள்ளி ஆசிரியர்களுக்கு மன்னரும் மன்னரின் அன்னையும் ஊதியம் வழங்கிவந்தனர். கல்லூரி மாணவர்களும் ஆசியர்களுக்கு ஊதியம் செலுத்தி வந்தனர். இவ்வகை ஊதியம் மாதமாகவோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ ஆசிரியர்களுக்கு அளிக்கப் பட்டன. சில இடங்களில் (புதுக்கோட்டை, திருவேதி போன்ற ஊர்களில் ஆசிரியர்களுக்கு ஊதியமாக நெல்மணிகள் மாதத்திற்கு ஒருமுறையோ ஆண்டுக்கு ஒருமுறையோ வழங்கப்பட்டது. ஒரு சில கல்லூரிகளில் அசிரியர்கள் இலவசமாகக் கல்வி அளித்தனர்.

செங்கல்பட்டு 3.4.1823

இம்மாவட்டத்தில் மொத்தம் 508 பள்ளிகள் இயங்கி வந்தன. இதில் 858 பார்ப்பன‌ர், 424 வைசியர், 4809 சூத்திரர், 452 மற்ற சாதி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றனர். மேலும் 3 பார்ப்பன‌ர், 79 சூத்திரர் மற்றும் 34 பிற சாதிப் பிரிவைச் சார்ந்த மாணவிகளும் கல்வி பயின்றனர். இஸ்லாம் பிரிவைச் சார்ந்த 186 மாணவர்கள் இப்பள்ளிகளில் கல்வி பயின்றுள்ளனர். வைசிய மற்றும் இஸ்லாம் பிரிவைச் சார்ந்த மாணவிகள் யாரும் இங்குக் கல்வி பயிலவில்லை.

இம்மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு 3லு முதல் 12 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியரின் ஊதியம் ரூபாய் 7 ஆகும். இம்மாவட்டத்தில் கல்லூரிகள் என எதுவும் இல்லாவிடினும், ஒருசில கல்வி நிலையத்தில் உயர்கல்வி அளிக்கப்பட்டு வந்தது. மேலும் 51 சமஸ்கிருத பள்ளிகள் இம்மாவட்டத்தில் இருந்தன. இதில் 398 பார்ப்பன‌ பிரிவைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். கால்வாசி காணி நிலம் முதல் இரண்டு காணி நிலம் வரை ஒரு சில ஆசிரியர்களுக்கு ஊதியமாக அளிக்கப்பட்டன.

கடலூர்

இம்மாவட்டத்தில் 872 பள்ளிகள் இயங்கிவந்தன. இவற்றில் 997 பார்ப்பன‌, 370 வைசிய, 7938 - சூத்திர மற்றும் 862 பிற சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர். 94 சூத்திர மாணவிகளும், 10 பிற சாதியைச் சேர்ந்த மாணவிகளும் இப்பள்ளியில் பயின்றனர். இம்மாவட்டத்தில் கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இங்கு ஆசிரியர்களுக்கான ஊதியம், மாணவர்களின் பெற்றோர்களால் வழங்கப்பட்டது. உள்ளூர் நிர்வாகம் எவ்வித பண உதவியும் இவர்களுக்குச் செய்யவில்லை.

இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் மலபார் மற்றும் ஜென்டோ (gentoo) மொழியைக் கற்றுத்தர ஒரு ஆசிரியர் இருந்துள்ளார். பொதுவாக மாணவர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 7 அல்லது 8 மணி வரையிலும் கல்வி கற்க பள்ளிக்குச் சென்றனர்.

திருச்சிராப்பள்ளி 23.8.1823

இம்மாவட்டத்தில் 790 பள்ளிகளும், 9 கல்லூரிகளும் இயங்கி வந்தன. இதில் 1198 பார்ப்பன‌ மாணவர்களும்; 229 வைசிய மாணவர்களும்; 7745 சூத்திர மாணவர்களும்; 329 பிறசாதிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கல்வி பயின்றனர். சூத்திர பிரிவைச் சார்ந்த 66 மாணவிகளும், பிறசாதியைச் சர்ந்த 18 மாணவிகளும் இப்பள்ளி களில் கல்வி பயின்றுள்ளனர். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த 690 மாணவர்களும், 56 மாணவிகளும் கல்வி பயின்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மாணவர்கள் பொதுவாக 7 வயது முதல் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். மேலும், 15 வயதில் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டனர். இப்பள்ளிகள் எந்த அரசு உதவிகளையும் சார்ந்திருக்காமல் சுயமாக நிர்வாகம் செய்துவந்தன. ஜாளூர் (Jyalore) தாலுக்காவில் மட்டும் 7 பள்ளிகளை அந்தப் பகுதி உள்ளூர் நிர்வாகம் செயல்படுத்தி வந்தது. ஆசிரியர்களின் நிர்வாகத்திற்காக 44 முதல் 47 காணி நிலத்தை இந்த உள்ளூர் நிர்வாகம் பள்ளிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது.

சென்னை 13.11.1822

இம்மாவட்டத்தில் 305 பள்ளிகளும் 17 அறக்கட்டளை பள்ளிகளும் இயங்கி வந்தன. இதில் 358 பார்ப்பன‌ர், 789 வைசியர், 3506 சூத்திரர் மற்றும் 313 பிற சாதி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பயின்றனர். 1 பார்ப்பன‌, 9 வைசிய, 113 சூத்திர மற்றும் 4 பிற சாதியைச் சார்ந்த மாணவிகளும் இப்பள்ளிகளில் கல்வி பயின்றனர். மேலும் அறக்கட்டளை பள்ளிகளில் 52 பார்ப்பன‌, 48 வைசிய (46 மாணவர்கள், 2 மாணவிகள்); 172 சூத்திர, 181 பிற சாதியைச் சார்ந்தோர் (134 மாணவர்கள்; 47 மாணவிகள்) கல்வி பயின்றனர். இது தவிர பள்ளிக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பலர் கல்வி கற்றனர். 7684 பார்ப்பன‌ (7586 மாணவர்கள்; 98 மாணவிகள்) 6195 வைசிய (6132 மாணவர்கள், 63 மாணவிகள்;) 8029 சூத்திர (மாணவர்கள் 7802; மாணவிகள் 220); 3585 பிற வகுப்பைச் சார்ந்தவர்கள் (மாணவர்கள் 3449, மாணவிகள் 136) இவ்விதத்தில் கல்வி அறிவு பெற்றனர். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த 143 மாணவர்கள் பள்ளியிலும், 10 மாணவர்கள் அறக்கட்டளை பள்ளிகளிலும், 1690 மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தங்கள் வீட்டிலேயும் கல்வி கற்றனர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்கள் இம்மாவட்டத்தில் கல்வி பயின்றதற்கான சான்றுகள் இல்லை. மேலும், இம்மாவட்டத்தில் கல்லூரிகள் செயல்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.

ஐந்து வயது நிரம்பிய பின் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். அவர்கள் பள்ளிக்கல்வியைத் தொடர்வது, அவர்களின் கல்வி கற்கும் திறமையைப் பொருத்து இருந்தது. பொதுவாக மாணவர்கள் 132 வயது அடையும்போது பல பாடபிரிவுகளிலும் அவர்களின் கல்வி அறிவு அதிகமாக இருந்ததாக அப்பொழுதில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பன‌ பிரிவைச் சார்ந்த ஒரு சில ஏழை மாணவர்களுக்கு வான சாஸ்திரம், சோதிடம் பற்றிய கல்வி சில இடங்களில் அளிக்கப் பட்டு வந்தது. மேலும், அவர்களின் பெற்றோர்கள் வருமான நிலையைப் பொருத்து, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஊதியமாக ஒவ்வொரு மாணவர்களும் ஆண்டுக்கு 12 பகோடா (Pagodas) அளித்துள்ளனர்.

சேலம் 8.7.1823

இம்மாவட்டத்தில் இருந்த 386 பள்ளிகளில் 783 பார்ப்பன‌; 324 வைசிய; 1674 சூத்திர (மாணவர்கள் 1671, மாணவிகள் 3); 1410 பிற சாதியைச் சேர்ந்த (1382 மாணவர்கள், 28 மாணவிகள்) மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த 432 மாணவர்களும், 27 மாணவிகளும் இப்பள்ளிகளில் கல்வி பயின்றுள்ளனர். இம்மாவட்ட ஆட்சியரின் தகவல்படி மாணவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை கல்வி படிப்பைத் தொடர்ந்துள்ளனர் எனத் தெரியவருகிறது. அதற்குமேல் கல்வியைத் தொடர்வது ஒவ்வொரு மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைப் பொருத்து அமைந்திருந்தது.

இந்து பள்ளிகளில் மாணவர்களின் ஒரு ஆண்டுக்கான கல்விச் செலவு 3 ரூபாய்க்குக் குறைவாக இருந்தது இல்லை. இதுவே இஸ்லாம் பள்ளிகளில் 15 முதல் 20 ரூபாய் வரை இருந்தது. எந்த ஒரு இந்து பள்ளியும் பொதுமக்களின் நிதியுதவியில் செயல்பட வில்லை. ஒரே ஒரு இஸ்லாம் பள்ளிக்கு மட்டும் ஒரு நிலம் மூலம் கிடைத்த 20 ரூபாய் (ஆண்டுக்கு) தன் நிர்வாகத்திற்குச் செலவிடப்பட்டது. மேலும், இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு இருந்த இயோமி (ஹ்மீஷீனீவீணீலீ)யால் அவருக்கு ஆண்டுக்கு 56 ரூபாய் அளிக்கப்பட்டு வந்தது. அவரது மறைவுக்குப் பிறகு அந்தத் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.

அப்தூர், நாமக்கல், சேலம் மற்றும் பார்மட்டி ஆகிய தாலுக்காக்களில் வேத சாஸ்திரம், சட்டம் மற்றும் வான சாஸ்திரம் கற்பிக்கும் 20 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். அவர்களின் ஊதியத்திற்காக இனாமாக நிலம் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டொன்றுக்குக் கிடைத்த 1109 ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைத்த வருவாய் இந்த ஆசிரியர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டது.

வட ஆற்காடு 3.3.1823

ஏறத்தாழ 28 கல்லூரிகள், உள்ளூர் ஆட்சியின் மானியத்தின் உதவியுடன் நடத்தப்பட்டன. அந்த ஆட்சி இதற்காக வழங்கிய பணம் 516-11-9 சௌகத் தாலுகாவில் உள்ள பெர்சியன் மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்று இயோமியா எனப்படும் நிதி மூலம் நடத்தப்பட்டது. காவேரிபாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி ஒன்றும் இவ்வாறு நிதியுதவி பெற்று நடத்தப்பட்டது. ஒருசில பள்ளி, கல்லூரிகளில் இலவசமாகக் கல்வி கற்றுக்கொடுத்து வந்தனர். ஆனால், பெரும்பாலும் வகுப்புகள் ஊதியம் பெறும் ஆசிரியர்களால் மட்டுமே நடைபெற்றன. அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமானது, அவர்கள் நடத்தும் பாடம் மற்றும் மாணவர்களின் பொருளாதார நிலையைப் பொருத்து அமைந்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி பள்ளிகளில் கல்வி மேம்பட்டு இருந்தது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏறத்தாழ 5 வயது அடையும்போது சேர்க்கப்பட்டனர். 5 முதல் 6 வருடங் களில் அவர்கள் கல்வி அறிவைப் போதுமான அளவுக்குப் பெற்று கணக்கு வழக்கு எழுதவோ அல்லது அரசு பொது அலுவலகங் களில் தன்னார்வத்துடன் வேலை செய்யவோ தகுதி பெற்றிருந்தனர்.

இம்மாவட்டத்திலிருந்த 69 கல்லூரிகளில் 43 கல்லூரிகள் வேத சாஸ்திரம் கற்றுத் தந்தன. 24 கல்லூரிகள் சட்டமும், 2 கல்லூரிகள் வானசாஸ்திரமும் கற்றுத் தந்தன. ஆரம்பப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக ரூபாய் 3-8 ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. உயர்நிலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 36 - 2 ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் 8 முதல் 12 வருடங்கள் கல்லூரிகளில் பயின்றனர். இந்து பள்ளிகளில் 3 மட்டும் இலவசமாக நடத்தப்பட்டன. மற்றவை மாணவர்கள் வழங்கிய கல்விக் கட்டணம் மூலம் நடத்தப் பட்டன. கல்விக் கட்டணமானது மாதம் 1 அனா 3 பைசா முதல் 1 ரூபாய் 12 அனாக்கள் வரை செலுத்தப்பட்டன.

பெர்சியம்: பள்ளிகளில் 6 பள்ளிகள் பொது நிதியிலிருந்து நடத்தப்பட்டன. ஆண்டு செலவாக 1361 ரூபாய் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலும் பள்ளிகள் மாணவர்கள் மாதாமாதம் வழங்கிய 2 அனா 6 பைசா முதல் 2 ரூபாய் மூலம் நடத்தப்பட்டன. ஆங்கிலம் கற்றுத் தந்த 7 பள்ளிகளில் 3 இலவசமாக நடத்தப்பட்டன. மற்றவை மாணவர்கள் மாதாமாதம் வழங்கிய 10 அனா முதல் 3 ரூபாய் 8 அனா நிதியின் மூலம் நடத்தப்பட்டன.

இந்து பள்ளிகளில் மாணவர்கள் 5 முதல் 6 வருடங்கள் கல்வி பயின்றனர். இஸ்லாமிய பள்ளிகளில் 7 முதல் 8 வருடங்கள் கல்வி பயின்றனர். இங்கு குறிப்பிட்ட விவரங்களில் ஜமீன்தார் மற்றும் பெள்ளம் பகுதிகளின் விவரங்கள் சேர்க்கப்படவில்லை. இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தொகை ஏறத்தாழ 3 லட்சங்கள் ஆகும்.

பிற குறிப்புகள்:

1825 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தகவல்கள்

* தஞ்சாவூரில்தான் அதிகமான பள்ளிகள் இருந்தன (884 பள்ளிகள்)

* கோயம்புத்தூரில்தான் அதிகமான கல்லூரிகள் இருந்தன (173 கல்லூரிகள்)

* தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் பார்ப்பன‌ பிரிவினர் அதிக அளவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி பயின்றுள்ளனர் (எண்ணிக்கை: பள்ளி 3186 மாணவர்கள்; கல்லூரி 769 மாணவர்கள்)

* பார்ப்பன‌ பிரிவினர் மட்டுமே கல்லூரி கல்வியைப் பெற்றனர்.

* பார்ப்பன‌ பிரிவைச் சார்ந்த 7586 சிறுவர்கள் 98 சிறுமிகள் பள்ளிகளுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்து கல்வியறிவு பெற்றனர்.

* வீட்டிலிருந்தே கல்வி அறிவு பெற்றவர்கள்: சாதிவாரியாக

வைசிய சிறுவர்கள் - 6132, வைசிய சிறுமிகள் - 63, மொத்தம்: 6195

சூத்திர சிறுவர்கள் - 7589, சூத்திர சிறுமிகள் - 220, மொத்தம்: 7809

பிற பிரிவு சிறுவர்கள் - 3449, பிற பிரிவு சிறுமிகள் - 136, மொத்தம்: 3585, இஸ்லாம் மத சிறுவர்கள் - 1690

* மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் தகவலின்படி, செங்கல் பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தில் மட்டும்தான் (3+1) பார்ப்பன‌ மாணவிகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றனர்.

* வைசிய பிரிவைச் சார்ந்த 9 சிறுமிகள் சென்னை மாவட் டத்தில் பள்ளிகளில் கல்வி பயின்றனர். வேறு எந்த மாவட்டத்தி லும் இப்பிரிவு சிறுமிகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கவில்லை.

* மதுரை மாவட்டத்தில்தான் வைசிய மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்றனர் (எண்ணிக்கை 1119).

* தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் சூத்திர மாணவ, மாணவிகள் அதிக அளவில் கல்வி பயின்றனர். (எண்ணிக்கை மாணவர்கள் 10661, மாணவிகள் 125).

* பிற மதத்தைச் சார்ந்த இந்து மதத்தின் மாணவ, மாணவிகள் அதிகம் கல்வி பயின்றது திருநெல்வேலி மாவட்டத்தில்தான் (எண்ணிக்கை: மாணவர்கள் 3557, மாணவிகள் 117).

* மதுரை மாவட்டத்தில் அதிக அளவு இஸ்லாம் மாணவர்கள் கல்வி பெற்றனர். (எண்ணிக்கை 1147)

* திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அதிக அளவு இஸ்லாம் மாணவிகள் கல்வி பெற்றனர் (எண்ணிக்கை 56)

* பெண்கள் கல்லூரி மேற்படிப்பை மேற்கொள்ளவில்லை.

*செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 51 சமஸ்கிருத பள்ளிகள் இருந்தன. அவற்றில் பார்ப்பன‌ இனத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டும் 398 பேர் கல்வி கற்றனர்.

* செங்கல்பட்டு, தென்னாற்காடு, மதுரை, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் இல்லை.

* சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் சூத்திரர்கள் மற்ற மத, சாதி பிரிவினரைவிட அதிகமாகக் கல்வி பயின்றனர்.

* இஸ்லாமியர்களுக்கான தனி பள்ளிகள் இருந்தன (சேலம் மாவட்டம்)

* இந்து மதத்தைச் சார்ந்த ஆடல் மகளிர் அதிக அளவில் கல்வி பயின்றனர்.

* கல்வி கற்கும் மாணவர்கள், 13 வயது அடையும் முன்பே பல்வேறுபட்ட பாடப் பிரிவுகளில் அவர்களின் திறமை அதிகமாக இருந்ததாக மெட்ராஸ் மாவட்ட ஆட்சியாளர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

* வேத சாஸ்திரம், வான சாஸ்திரம், வேதம், தர்க்கம், சட்டம் ஆகிய பாடங்களே பள்ளிகளில் போதிக்கப்பட்டன.

* ஒரு சில மாவட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளும் கற்பிக்கப்பட்டன.

அனைத்து மாவட்டத்திற்கும் பொதுவான விவரங்கள்:

இக்காலகட்டத்தில் இருந்த பள்ளிகளில், பெரும்பாலானவை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கொடுக்கும் பணத்திலிருந்து நிர்வகிக்கப்பட்டது. மாணவர்களின் குடும்ப சூழ்நிலை அவர்களின் பெற்றோர்களின் வருமானம், மாணவர்கள் படிக்கும் கல்வி பிரிவு ஆகியவற்றில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கல்வி கட்டணம் 1 அனாவிலிருந்து 4 ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது. ஏழை மாணவர்களுக்கு 4 அனாவிலிருந்து அரை ரூபாய் வரை கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கல்விக்காக ஒதுக்கப்பட்ட பொது நிதி எதுவும் வேறு எதற்காகவும் செலவிடப்படவில்லை. சேலத்தில் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் (ஆண்டுக்கு ரூபாய் 384 வருமானம் தரக்கூடிய) ஆங்கிலேய அரசால் கைப்பற்றப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருமானம், நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் கல்லூரிகளுக்கு ஆண்டு 2208 ரூபாய் வருமானம் தரக்கூடிய நிலம் மீண்டும் அக்கல்லூரிகளுக்கே தரப்பட்டது. இப்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகையான 12.5 மில்லியனில், 1,88,000 மாணவ-மாணவிகள் கல்வி பெற்றிருந்தனர். இந்த நிலையானது அப்போதைய தமிழ்நாட்டில் நிலவிய கல்வி முறையில் இருந்த குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலையை விரிவாக எடுத்துரைக்கிறது. 

MINUTE OF GOVERNOR SIR THOMAS MUNRO ORDERING THE COLLECTION OF DETAILED INFORMATION ON INDIGENOUS EDUCATION:

25.6.1822

(TNSA: Revenue consultation: Vol.920: dated 2.7.1822)

Much has been written both in England and in this country about the ignorance of the people of India and the means of disseminating knowledge among them. But the opinions upon this subject are the mere conjectures of individuals unsupported by any authentic documents and differing so wildly from each other as to be entitled to very little attention. Our power in this country and the nature of its own municipal institutions have certainly rendered it practicable to collect material from which a judgment might be formed of the state of the mental cultivation of the people. We have made geographical and agricultural surveys of our provinces. We have investigated their resources and endeavoured to ascertain their population, but little or nothing has been done to learn the state of education. We have no record to show the actual state of education throughout the country. Partial inquiries have been made by individuals , but those who have taken place at distant periods-and on a small scale and no inference can be drawn from them with regard to the country in general. There may be some difficulty in obtaining such a record as we want. Some districts will not-but others probably will furnish it – and if we get it only from two or three it will answer in some degree for all the rest. It cannot be expected to be very accurate, but it will at least enable us to form an estimate of the state of instructions among the people.The only record which can furnish the information required is a list of the school in which reading and writing are thought in each district showing the number of scholars in each and the caste to which they belong. The collectors should be directed to prepare this document according to the form which accompanies this paper. They should be decide to state the names of the book generally read at the schools.

Dharampal, The Beatiful Tree, p.89

Pin It