Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மக்கள், பிற உயிரினங்கள் அனைத் தினது வாழ்வாதாரங்களுக்கும் நீர் மிக மிக இன்றியமையாததாக இருக்கிறது. இதற்கு பருவ மழையையும் நீர் நிலைகளையுமே நம்பி வாழ வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டின் புவியியல் இருப்பு இரண்டு வழிகளில் நீர் பெறும் நிலையில் உள்ளது. 1. பருவ மழை மூலம் பெறப் படும் நீர் 2. அண்டை மாநிலங்களில் உற் பத்தியாகி தமிழகத்தின் ஊடே பாய்ந்து கடலில் கடக்கும் ஆறுகளின் வழி பெறப் படும் நீர்.

இந்த ஆற்று நீரைப் பொறுத்த மட்டில் தமிழ் நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரைத் தராமல், அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து தமிழகத் தைத் தங்கள் வடிகால் பகுதியாகவே பயன்படுத்தி வருவதால் ஆற்று நீர் என்பது நிச்சயமற்றதாகவே இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலை யில் தமிழகத்தைப் பாதுகாக்கின்ற இரட்ச கனாக இருப்பது பருவ மழை ஒன்று மட் டுமே. ஆனால் இப்பருவ மழையும் பருவத்திற்கு ஏற்றார்போல் சரியான காலத்தில் பெய்வதில்லை. இவை பெரும் பாலும் பருவம் தப்பியே பெய்கிறது. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை சரியான அளவில் பெய்தாலும், தென் மேற்கு பருவ மழை சராசரி அளவில் 30 விழுக்காட்டிற்கும் குறை வாகப் பெய்கிறது.

இக்காரணங் களாலேயே தமிழகம் நீர்த் தட்டுப்பாட்டுக் குள்ளாகி வருகிறது எனவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் நிலைமை மோசமாகி மக்கள் வாழ்வதற்கே கூட நீர் கிடைக்கா மல் போவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கின்றனர் நீரியல் நிபுணர்கள் .

இந்நிலையில் தமிழகத்தின் நீர் ஆதாரங்களையும், நீர்த் தேவைகளையும் நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதே தற்போது நம்முன் உள்ள கேள்வி.

 பண்டைத் தமிழர்கள் பல துறையில் சிறந்து விளங்கியது போலவே நீர் வளத்துறையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த நமது முன்னோர்கள் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி, நீர்வளத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

ஆனால் இன்றைய நிலையில் இவ் நீராதாரங்கள் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டன. இவ் விடங்களில் அரசுத் துறை சார்ந்த நிறுவ னங்கள், போக்குவரத்துப் பணிமனைகள், வணிக வளாகங்கங்கள், தொழிற்சாலைகள், அடுக்கு மாடி கட்டடங்கள், பேருந்து, தொடர்வண்டி நிலையங்கள் அமைக்கப் பட்டு அனைத்தும் கான்கிரிட் தளங் களாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஏரிகள், கால்வாய்கள் வீட்டுமனைகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை வளப்படுத்திய ஆறுகள் எல்லாம் இன்று கழிவோடைகளாகவும், சிற்றோடைகளா கவும் உருமாறிக் கொண்டு இருக்கின்றன. கடலைப் போல் பரவிக் கிடந்த ஏரிகள் எல்லாம் குட்டைகளாக குறுகிப் போய் இருக்கின்றன. தவிர, ஆற்றுப்படுகைளில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப் படுவதால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு போய் கிணற்று நீர்ப் பாசனம் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் கிணற்று நீர் பாசனம் முக்கிய நீர்ப்பாசன முறையாக உள்ளது. தமிழ் நாட்டின் மொத்த நீர்ப் பாசனப் பரப்பில் 44 விழுக்காடு கிணற்று நீரப் பாசனமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஆழ் குழாய் கிணறுகள், திறந்த வெளிக் கிணறுகள் உள் ளிட்டு சுமார் 18 இலட்சம் பாசனக் கிணறுகள் உள்ளன. இதில் இதில் சுமார் 1.60 இலட்சம் கிணறுகள் எதற்கும் பயனின்றி பாழுங் கிணறாக உள்ளது.

இதில் கிணற்று நீரைக் கொண்டு சுமார் 14 இலட்சம் ஏக்கரில் பாசனம் செய்யப்படுகிறது. கிணற்று நீர்ப் பாச னத்தின் தொடக்க காலத்தில் 20 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது. கமலை, இறை வெட்டி, ஏற்றம் போன்ற பாரம்பரிய முறைகளைக் கைக்கொண்டு நீரைப் பாச னத்திற்கு பயன்படுத்தினர். அதன் பின்பு டீசல் எஞ்சினைக் கொண்டு நீர் இறைத் தனர். 1963ம் ஆண்டுக்குப் பின் மின் மோட்டார் பயன்பாட்டிற்கு வர, அது பயன்படுத்தப்பட்ட இடங்களில் இறைப்பு அதிகரிக்க இதனால் கிணற்று நீர் 50, 60 அடி ஆழத்திற்கு கீழே போய்விட்டது. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க 7 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் கள் பயன்படுத்தப்பட்டன. விளைவு கிணற்று நீர் வெகு ஆழத்திற்குச் சென்று விட்டது.

 1991-2004 ஆண்டுகளில் தமிழ கத்தின் பெரும்பாலான திறந்த வெளிக் கிணறுகளின் நீர்மட்டம் வெகு ஆழத் திற்கு சென்று விட்டதால், இக் கிணறுகள் விவசாயத்திற்குப் பயனற்றதாகப் போய் விட்டன என ஒரு புள்ளி விவரம் குறிப் பிடுகிறது.

இதனால் பல மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது 1000 அடி ஆழ முடைய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் எடுத்து உழவுத் தொழிலை மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட பகுதிகளில் திறந்த வெளிக் கிணறுகள் வறண்டு போய்விட் டன. இது போன்ற ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வசதியற்ற விவசாயிகள், விளை நிலங்களைத் தரிசாகப் போட்டு விட்டு, வேறு தொழிலுக்கு பிழைப்பு தேடி நகரத்தை நோக்கி நகர்ந்தனர்.

நாடு விடுதலை அடைந்த பிறகு நம்மை ஆளும் மைய, மாநில அரசுகள் குடிநீர் பிரச்சனையைப் போர்க்கால அடிப் படையில் தீர்ப்பதாக பறைசாற்றி பல் வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின் றன. ஆனால் நாளுக்கு நாள் பிரச்சனை கூடிக் கொண்டே போகிறதே தவிர, குறை வதற்கான அறிகுறி தென்பட வில்லை.

நாட்டின் பல கிராமங்களில் பெண்கள் பல மைல் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வரும் அவல நிலை இன்றும் உள்ளது. கோடைக் காலங்களில் நீண்ட வரிசையில் குடங்கள் அணி வகுக்கின்றன. நகர்ப்புறம் மட்டு மின்றி கிராமப்புறங்களிலும் குடிநீர் கோரி திடீர் திடீர் என சாலை மறியல் மற்றும் தேர்தல் காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்துவது சாதாரண நிகழ்வுகளாகிப் போய்விட்டன.

இந்நிலையில் அண்டை மாநிலங் களால் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் தமிழக ஆற்று நீர் உரிமைக்காக நாம் போராடும் அதே வேளை இப்படிப்பட்ட தண்ணீர் பிரச்சினை யிலிருந்து தமிழ்நாடு மீள்வதற்கான யோசனைகளாக சில.

1. 2003-ஆம் ஆண்டு மழைநீர் சேமிப்பு திட்டத்தை கறாராக செயல் படுத்தியதின் பலனாக 2004-ஆம் ஆண்டு பரவலாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை வைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் மேலும் விரிவாக்க வேண்டும். தமிழக அரசு மீண்டும் மழைநீர் சேமிப்பு திட்டத்தைச் செயல் படுத்த ஊக்கமளிக்க வேண்டும். இதற்கு வேண்டிய வல்லுநர்களின் ஆலோசனை களையும், மற்றும் கருவிகளையும் அரசு மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

2. ஏரி, குளம், கண்மாய், ஆற்றுப் பாசனம் போன்ற பொது நீராதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை முறையாக பராமரித்துப் பாதுகாக்க அந்தந்த பகுதி மக்களை குழுக்களாக அமைத்துப் பயனடையச் செய்ய வேண்டும்.

இவ் நீராதாரங்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும்.

3. அடுத்து ஏரிகளின் சங்கிலித் தொடர் அமைப்பை மறுபடியும் கட்டி யமைக்க வேண்டும், எங்கெல்லாம் புதிய நீராதாரங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய நீர்நிலைகளை உருவாக்கிப் பூங்காக்களை அமைத்துப் பராமரிக்க வேண்டும்.

4. பொது நீராதாரங்களின் மேலாண்மையை, அந்தந்த பகுதி பாசனதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் அரசு நேரடியாக தலையிடாமல், பக்க பலமாயிருந்து உதவி செய்யவேண்டும்.

5. நீர் நிலைகளின் ஊற்று கண்களை பாழ்படுத்தும், வேலிக் கருவேல மரங்கள் சமூகக் காடு திட்ட மர வகைகள் அகற்றப் படவேண்டும். நீர் நிலைகளின் கொள்ளவு குறையாமல் இருக்க வழி வகைகள் காணவேண்டும்.

6. ஆறு மற்றும் ஓடைகளில் மணல் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

7. நீராதரங்களில் கழிவுகள் கலப்பதை முற்றிலும் தடுக்கவேண்டும். தொடர்ந்து மாசுபடுத்தும் தொழிற் சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

8. ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பது தொடர்பாக சில வரை முறைகளை உருவாக்க வேண்டும். தேவையை ஒட்டி ஒவ்வொரு ஆழ்குழாய் கிணற்றுக்கும் இடையே இருக்கவேண்டிய இடைவெளி, ஆழம் போன்ற விதி முறை களை கட்டாயப்படுத்த வேண்டும்.

9. குடிநீர் விநியோகம் செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாயக் கடமை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

10. தண்ணீரை வணிகமயமாக்கும் போக்கை உடனடியாக தடை செய்ய வேண்டும். “தவிக்கும் வாய்க்கு தண்ணீர்” என்ற தர்ம சிந்தனையை மீண்டும் உரு வாக்கும் நோக்குடன் பொது இடங்களில் மண் பானையில் தண்ணீர் என்ற பண் பாட்டை உருவாக்க வேண்டும். பாக் கெட், பாட்டில் தண்ணீர் கம்பெனி களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

11. வளர்ச்சிடையந்த நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலிருந்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இத்தடையை மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, உடமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

12. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் போன்ற ஆதிக்க நிறுவ னங்களின் நிர்ப்பந்தமின்றி, மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் தெளிவான நீர் கொள்கையை உருவாக்க வேண்டும்.

13. முக்கியமாக தண்ணீர் பயன் படுத்தும் முறையில் திட்ட வட்டமான முன்னுரிமை இருக்க வேண்டும். நீர் பயன்படுத்தும் முறையில் குடிநீருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத்து விவசாயம். அதிலும், சிறு நடுத்தர விவசாயிகள் பயன்படுத்த உறுதி செய்ய வேண்டும். இதற்கடுத்து கால் நடைகள், மிருகங்கள், வன விலங்கு, பறவைகள் போன்ற உயிரினங்களின் தண்ணீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் மட்டுமே தொழிற் சாலைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதுவும் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மக்களுக்கு உண்மையில் பயனளிக்க கூடிய தொழிற் சாலைகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க வேண்டும். குறிப்பாக மக்களின் அடிப்படை உணவுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

14. மிகவும் குறுகிய காலத்தில் ஒரே அடியாக மழை பெய்து விட்டு போகிறது. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் ஆயிரக் கணக்கான டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. எனவே ஆறு, கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக செல்லும் வெள்ள நீரினைத் தடுத்து நிறுத்தி ஆங்காங்கே தடுப்பணை கள் கட்டி தேக்கி வைக்க வேண்டும். இந்நடவடிக்கையால் அந்தந்தப் பகுதி களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் போது, உழவுத் தொழில் வளர்ச்சியடை வதோடு அல்லாமல் குடிநீர் பிரச்சினை யும் தீர்க்கப்படும். மேற்கண்ட நட வடிக் கையினால் மெகா கூட்டுக் குடிநீர் திட் டங்களுக்கு செலவு செய்யும் நிதியினை வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன் படுத்தலாம்.

15.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதில் தொண்டு நிறுவனங்கள், மக்கள் இயக் கங்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சி கள், மற்ற பிற அமைப்புகள் இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறான பரிந்துரைகைளை முன்வைப்பதால் இதன் மூலமே தமிழ கத்தின் தண்ணீர் பிரச்சனை முற்றாகத் தீர்ந்து விடும் அல்லது தீர்க்கப் பட்டு விடும் என்பதாகப் பொருள் கிடையாது.

இவை எல்லாவற்றுக்கு அப்பால் முதன்மையாகவும் அடிப்படையாகவும் நாம் செய்யவேண்டியது,அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமையை, காலம் காலமாக தமிழகத்தை வளப்படுத்தி வந்த முக்கிய நீர் ஆதாரங்களான தமிழக ஆறு களை மீட்கவும் பாதுகாக்கவும் தமிழக மக்களிடையே விழிப்பூட்டி அவர்களை இதற்காகப் போராட வைக்க வேண்டும்.

இதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் நாம் ஒன்று திரட்ட வேண்டும். இப்படியெல்லாம் நாம் இணைந்து செயல்பட்டால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர வாய்ப்புண்டு.

*

தேவை ஒரு தமிழ் ஐயப்பன்

முல்லைப் பெரியார் சிக்கல் ஐயப்ப பக்தர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டுப் பதிவு எண்ணோடு செல்லும் பேருந்து கள், பக்தர்கள் தாக்கப்பட, குமுளி வரை சென்ற பக்தர்கள் சபரிமலை செல்ல இயலாமல் திரும்பி வந்து அடையாறு ஐயப்பனை தரிசித்து தெம்போடு பேட்டியும் கொடுத்து செல்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழக அரசு ஐயப்ப பக்தர்கள், ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம். தமிழ்நாட்டிலேயே ஒரு ஐயப்பன் கோயில் கட்டி, ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் இங்கேயே தரிசிக்கச் செய்யலாம்.

பக்தி மட்டும் போதாது, சபரிமலைப் பயண சாகசமும் வேண்டும் என்றால் இந்த ஐயப்பன் கோயிலைத் தமிழகத்திலேயே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் உள்புறம் எங்காவது கட்டலாம். இதன் மூலம் தமிழ்நாட்டுப் பணம் கணிசமாக அண்டை மாநிலம் போகாது. இத்துடன் ஐயப்பசாமி சார்ந்த வணிகம் நன்கு தழைக்கும். தமிழ் நாட்டு வணிகர்கள் பிழைப்பார்கள். இதன் மூலம் அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். ஆகவே தமிழக அரசு இதன் பல்நோக்குப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு விரைவிலேயே தமிழ்நாட்டில் ஒரு ஐயப்பன் கோயிலை - தமிழ் ஐயப்பன் கோயிலைக் கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு சில வேண்டுகோள்.

ஐயப்பன்மீது எவ்வளவுதான் பக்தியாக இருந்தாலும் எவ்வளவுதான் கடுமையான விரதங்கள் இருந்தாலும் தன்னை தரிசிக்க வரும் தமிழர்களை, தாக்க முனையும் மலையாளிகளிடமிருந்து அவர் காப்பாற்ற மாட்டார். காப்பாற்றவில்லை என்பதைத் தமிழக ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இனியும் மலையாள ஐயப்பனை நம்பி ஏமாறாமல், தமிழ்நாட்டில் ஓர் தமிழ் ஐயப்பனை உருவாக்கி, அவர் தமழகத்தில் குடிகொண்டு, தமிழ் ஐயப்ப பக்தர்களுக்குக் காட்சி தரவும், தமிழர்கள் எந்த அச்சமுமின்றி பாதுகாப்பாக அவரைத் தரிசித்து திரும்ப, இதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் கருதியும் தமிழ்நாட்டிலேயே ஓர் ஐயப்பன் கோயில் கட்ட தமிழக அரசு களுக்கு கோரிக்கை வைத்து அதன் நிறைவேற்றத்திற்காகப் போராடவேண்டும்.

நிறைவாக பகுத்தறிவாளர்களுக்கும் ஓர் வேண்டுகோள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பக்தர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஐயப்ப பக்தர்களுக்கும் அதுவே. ஆகவே, அவர்களது உணர்வுகளைப் புரிந்து, தமிழ் இன மான உணர்வோடு அவர்களது கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு என்று ஒரு தமிழ் ஐயப்பனை உருவாக்கித் தர நீங்களும் தமிழக அரசை நோக்கி குரல் கொடுக்கவேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக போராடவேண்டும்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 சு.பாரதிதாசன் 2012-01-23 15:06
ஐயா
கட்டுரை படித்தேன். இரண்டு இடங்களில் முரண்படுகிறேன்
1. ஏற்கனவே மேற்குத்தொடர்ச் சி மலையை நாசம் செய்தது போதாதா. புதிதாக கோவில் கட்டி வேறு நாசம் செய்யவேண்டுமா. ஒவ்வோர் ஆண்டும் பக்தர்கள் செய்யும் கேட்டாலும் தொடர்ந்து செல்லும் வாகனங்களாலும் கணக்கற்ற காட்டுயிர்கள் திண்டாடி போக்கிடம் இன்றி தவித்து மாண்டுபோகின்றன.
இது முறையா?
2. கடலுக்குச்செல்ல ும் நீரெல்லாம் வீண் என்பது சரியா? மனிதனுக்குப்பயன ்பட வில்லையாயின் அது வீண் என்றாகிவிடுமா?
Report to administrator
0 #2 நாகராஜன் செயம் 2012-01-25 20:23
தமிழக அரசு மீண்டும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை இலவசமாக அளிக்கலாமே.
தொலைக்காட்சி , மின்விசிறி இவையெல்லாம் வழங்குவதற்கு பதிலாக .

மேலும் நான் மதுரையில் வசிப்பவன் .

நான் சிறு பிள்ளையிலிருந்த ு பார்த்து வளர்ந்த மரங்களை (80 ௱ வருடங்கள் கொண்டவை) அனைத்தையும்
தெரு, சாலை பராமரிப்பு என்ற பெயரில் அழித்து விட்டார்கள் . மீண்டும் மரக்கன்றுகள் இடவில்லை .

இந்த சிமெண்ட் சாலையினால் சிறு குழந்தைகள் விளையாட முடியவில்லை

மரங்கள் வளர்வதில்லை , செதில் செதிலாக உள்ளது , விழுந்தால் பலத்த காயம் தான் .

மழை பொழிந்தாலும் தண்ணீர் சரியாக நிலத்தடியில் வடிவதில்லை , ஓடி ஆற்றுக்குள் தான் வீணாக செல்கிறது.
எனக்கு என்னமோ வீணான திட்டங்கள் என்று தான் தோன்றுகிறது.

சாலை விற்பனையாளர்கள் ஒதுங்க ஒரு மர நிழல் இல்லை

பறவைகள் இளைப்பாற (குடும்பம் நடத்த) ஒரு மரம் இல்லை.

வாகனங்கள் சாலையில் முறி இழந்து முட்டி நிறுத்த ஒரு மரம் இல்லை

மழைக்கு ஒதுங்க மரம் இல்லை

மாதம் ஒரு மரம் தாருங்கள் , இல்லை வருடம் ஒரு மரம் தாருங்கள்

இதை இலவசமாக வேண்டாம் கடமையாக, கட்டாயமாக்குங்க ள்

எங்கள் பகுதியில் இருந்த சின்ன குளங்கள் எல்லாம் பராமரிப்பின்றி இப்போது வாழ நிலங்களாக , கட்டிடங்களாக மாறி விட்டது .

நான் இதில் முற்றிலும் ஏற்று கொள்கிறேன். """" தண்ணீரை வணிகமயமாக்கும் போக்கை உடனடியாக தடை செய்ய வேண்டும். “தவிக்கும் வாய்க்கு தண்ணீர்” என்ற தர்ம சிந்தனையை மீண்டும் உரு வாக்கும் நோக்குடன் பொது இடங்களில் மண் பானையில் தண்ணீர் என்ற பண் பாட்டை உருவாக்க வேண்டும். பாக் கெட், பாட்டில் தண்ணீர் கம்பெனி களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.""

நீர் - மழை- மரம்- தண்ணீர் -இந்த தொடரை பலப்படுத்தினால் நல்லது .
Report to administrator
0 #3 Sakthivel 2013-05-14 01:29
நீர் மேலாண்மை குறித்து பள்ளிகளிலேயே சொல்லித்தர வேண்டும். தண்ணீரின் அவசியம் குறித்து நம் மக்களுக்குப் போதிய விழிப்புணர்ச்சி இல்லை. எல்லாம் அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல ் தங்கள் பகுதிகளில் தண்ணீர் வளத்தைப் பெருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும ் எடுக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு
Report to administrator

Add comment


Security code
Refresh