அணுக்கருத் தொழில்நுட்பம் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும் அதேவேளை, மனித குலத்தையே அழித்தொழிக்கும் அபாயகரமான கதிர் வீச்சையும் வெளிப் படுத்துகிறது. அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மனித குலத்தை அச்சுறுத்துவதாக, இப்புவிக் கோளையே பிணக் காடாக்கும் வகையில் அனைத்து உயிரினங்களுக்குமே ஆபத்து விளை விப்பதாக இருந்து வருகிறது என்பதுஅறிவியல் உண்மை.

1979இல் அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்றுமைல் தீவு விபத்து, 1986இல் ருஷ்யாவில் செர்னோபில்லில் ஏற்பட்ட விபத்து, 2010இல் ஜப்பான் ஃபுகிஷிமோவில் நேர்ந்த விபத்து மற்றும் உலக நாடுகளில் அவ்வப்போது நேர்ந்து வரும் விபத்துகள் இதை மெய்ப்பிப்பதாக இருந்து வருகின்றன.

இதன் விளைவாக, உலக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி உலகெங்கும் அணு உலைகளுக்கு எதிராக போராட்டங்களை முகிழ்த்தெழச் செய்ய, பல்வேறு நாட்டு அரசுகளும் தங்கள் நாடுகளில் புதிதாக அணு உலைகள் ஏதும் கட்டுவதில்லை என முடிவு செய்துள்ளதோடு, ஏற்கெனவே இருக்கும் அணு உலைகளையும் மூடி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களை கல்பாக்கம் அணு மின் நிலையம் அச்சுறுத்திக் கொண்டிருப்பது போதாதென்று, தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் அச்சுறுத்தும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுவி அதைச் செயலாக்க முனைந்து வருகிறது நடுவண் அரசு.

முன்னதாக கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்கள் இந்த அணு உலை அபாயத்தை உணர்ந்து இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தமிழர்களை இளித்த வாயர்களாகவும் ஏமாளிகளாகவும் கருதும் தில்லி அரசு இத்திட்டத்தைத் தமிழ்நாட்டின் மீது தமிழக மக்களின்மீது சுமத்தியுள்ளது.

சுற்றுப்புற நில வளத்தையும், நீர் வளத்தையும் பாழ்படுத்தி தங்கள் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கி, உயிருக்கும் அச்சுறுத்தலாக செயல்பட இருக்கிற இக்கூடங்குளம் அணுமின் நிலைய அபாயத்தை உணர்ந்த பகுதி மக்கள் இந்த அணு உலைக்கு எதிரான உறுதிமிக்க தொடர் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இதற்கு ஆதரவாகத் திரண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தில்லி அரசு இந்த அபாயத்தையும் மக்களின் உணர்வுகளையும் புரிந்து இந்த அணு உலையை மூட முயல்வதை விட்டு. மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி அணு உலை ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஒரு பகுதி மக்களை தனக்கு ஆதவாகப் போராடத் தூண்டி மக்களுக்குள் மோதலை உருவாக்கி அதன்மூலம் தன் நோக்கை நிறைவேற்றிக் கொள்ள முயன்று வருகிறது.

இந்நிலையில் நடுவண் அரசு இந்த அடாவடிப் போக்கை கைவிட்டு, மக்கள் நலனையும் அவர்கள் வாழ்வுரிமையையும் பாதுகாக்கும் நோக்கில், இந்த கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தை - தமிழர்களை பிணக்காடாக்கி, தமிழகத்தைச் சுடுகாடாக ஆக்கிவிடும் இந்தத் திட்டத்தை - கைவிட்டு அணுமின் நிலையத்தை இழுத்து மூடுமாறு இதனடியில் கையப்பமிட்டுள்ள மாந்தநேய மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இ தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு நிறுவப்பட்டுள்ள நிலையத்தை அது செயல்பட இருக்கும் நிலையில் மூடக்கோருவது பெரும் நட்டத்தை ஏற்படுத்தாதா எனச் சிலர் கேட்கின்றனர்.எந்த திட்டத்திலும் மனித உயிரும் அதன் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர, பணம் அல்ல என்பதை, எந்த மனித உயிரையும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, காப்பாற்ற வேண்டும் என்றுதான் மக்கள் கருதுவார்களே தவிர, அழிக்க அல்ல என்பதை இவர்கள் உணரவேண்டும்.

அடுத்து அணு உலை வேண்டாம் என்றால் எதிர்காலத்தில் மனித குலத்துக்கு தேவைப்படும் ஆற்றலுக்கு வேறு எங்கே போவது என்றும் சிலர் கேட்கின்றனர். மனித குலத்தின் ஆற்றல் தேவைக்கு அணு ஆற்றல் மட்டுமே ஒரு வழி என்று கருதத் தேவையில்லை. மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கின்றன எனவே மனிதகுலத்துக்கு எதிரான இந்த அணுக்கருத் தொழில் நுட்பத்தைக் கைவிட்டு மாற்றுத் தொழில் நுட்பம் பற்றிச் சிந்தித்து வேறு வழிகளில் மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிக்காத மாற்று ஆற்றலைப் பெற ஆய்வுகள் முடுக்கி விடப்பட வேண்டும் அதன் வழி மனித குலத்துக்கத் தேவைப்படும் ஆற்றலைப்பெற முயல வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம்

தாழ்த்தப்பட்டோரின் உரிமைப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரின் 54வது நினைவு குருபூசையை யட்டி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வந்தோர் திரண்ட பேரணி யில், காவல்துறை அத்துமீறி துப்பாக் கிக் சூடு நடத்த, அதில் பல்லவராய னேந்தல் கணேசன், வீரம்பல் பன்னீர், மஞ்சூர் ஜெயபால், கடையனரி முத்துக்குமார், கீழ்க் கொடும்பலூர் தீர்ப்புக்கனி, காக்கனேந்தல் வெள்ளைச் சாமி ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெயப்பிரகாஷ், பாலசுப்பிரமணியம் ஆகிய இருவர் காயமுற்றுள்ளனர்.

பொதுவாக, மக்கள் திரள் நிகழ்வு களில் கலவரம் மூண்டால் காவல்துறை தடியடி நடத்தி அதைக் கட்டுப்படுத்த முயல்வதும், முடியாவிட்டால் வானத்தை நோக்கிச் சுட்டு கூட்டத்தை எச்சரிக்கை செய்வதும், அதையும்

மீறி கூட்டம் கட்டுக்கடங்காமல் போனால் துப்பாக்கிக் சூடு நடத்து வதும், என மிக அரிதான நிகழ்வுகளில் வேறு வழியே இல்லை என்கிற சூழ லில்தான் துப்பாக்கிச் சூடு நடை பெறுவது வழக்கம்.

ஆனால் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு எந்தவித ஆத்திர மூட்டலும், முன்னெச்சரிக்கையும் இன்றி திட்டமிட்டே நிகழ்த்தப்பட் டிருக்கிறது. இது கடும் கண்டனத்துக் குரியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக் கதுமாகும். இதுபற்றிய முழு விவரத் தையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சென்ற உண்மை யறியும் குழு வெளிப்படுத்தியுள்ளது. விவரம் இணையத்திலும் இடம் பெற் றுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் அதைப் படித்தறிந்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும்.

துப்பாக்கிகள் எப்போதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்களை நோக்கியே பாய்கின்றன. காரணம் அது அதிகார வர்க்கத்தின் ஆதிக்க சக்திகளின் கை களில் இருப்பதுதான். இதனால்தான் இந்த ஆதிக்கத்தையும் அதிகாரத் தையும் தகர்க்க மக்கள் ஒன்றுபட்டுப் போராட விழைகிறார்கள். நிராயுத பாணியாக உள்ள மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கும் தள்ளப்படு கிறார்கள்.

எனவே ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும், 5 இலட்சமல்ல, எத்தனை லட்சமானாலும் இந்த இழப் பீடு என்றும் மறைந்தவர்கள் உயி ரையோ, உறவையோ எந்த வகை யிலும் ஈடு செய்ய முடியாது. அரசு இதை கவனத்தில் கொண்டு துப் பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குக் காரண மான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி எக்காலத்திலும் இதுபோன்ற சம் பவங்கள் நடைபெறவே பெறாது என்கிற நிலையை ஏற்படுத்த, முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளவேண்டும். வழிகாட்டுதல்கள் வழங்கப்படவேண்டும்.

*

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யாதே!

சென்னை கோட்டுர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்துக்கு மாற்றி அக்கட்டடத்தை குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவ மனை யாக பயன்படுத்த இருப்பதாக தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்டனத்திற்குரிய தாகும்.

ஒரு சமூகத்திற்கு நூலகம் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு மருத்துவமனையும் முக்கியம்தான். ஆனால் அதற்காக நூலகத்தை இடம் மாற்றியோ, அப்புறப்படுத்தியோ அங்குதான் மருத்துவமனை இயங்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இது முந்தைய ஆட்சியாளர்களது திட்டம் எதையும் நான் ஏற்கமாட்டேன் என்கிற பகைமையுணர்ச்சியின், சண்டித்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறல்ல

தற்போது நூலகம் இயங்கும் இடம் .சுற்றிலும் கல்வி நிலையங்களும் ஆய்வு மையங்களும் கூடியதும் நூற்றுக் கணக்கானோர் வந்து போக வாய்ப்புள்ளதுமான நெரிசலற்றதும¢ அமைதியான துமான ஓர் இடமாகும். எனவே இங்கு நூலகம் இயங்குவதே நியாயமானதாகவும் பொருத்தமாகவும் இருக்கும். மருத்துவமனையை மக்களுக்கு வாய்ப்புள்ள பயனுள்ள வேறு எந்த இடததிலும் நிறுவிக்கொள்ளலாம்.

தவிர.நூலகக் கட்டடம் நூலகத்துக்காக வடிவமைக்கப் படடதேயன்றி மருத்துவ மனைக்காக வடிவமைக்கப்பட்டதல்ல. இதை மருத்துவம¬னாயாக மாற்றகூடுதல் செலவுமாகும் எனவே முதல்வர் ஜெயலலிதா இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தன் பிடிவாதப் போக்கைக் கை விட்டு இந்த முடிவை மறு பரிசீலனை செய்து தற்போதுள்ள இடததிலேயே நூலகம் இயங்கவும் மருத்துவ மனையை பயனுள்ள வேறு இடத்தில் நிறுவவும் உரிய நடவடிக்கைகள் மேந்கொள்ளுமா£று தமிழ்ப் படைப்பாளிகள் உணவ்£ளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Pin It