தேர்தல்களில் பங்களிப்பு

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் அணியை வீழ்த்த வேண் டும், இதற்காக வேறு வழியின்றி அ,தி,மு,க அணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நாம் குறிப்பிட்டிருந்ததை தருக்கப் பூர்வமான வாதமாக எதிர் கொள்ளாத சிலர், மீண்டும் மீண்டும் உணர்ச்சி வயப்பட்ட நிலைப் பாட்டுக்கு உள்ளானவர்களாக போயும் போயும் ஜெ.வுக்கா வாக்களிக்கச் சொல்கிறீர்கள் என்கிற உணர் வுச் சிக்கல் பற்றியே பேசிக் கொண் டிருக் கிறார்கள். இதனடிப் படையில் இவர்கள் புறக்கணிப்பே நல்லது என் றும் பரிந்துரை செய்தார்கள். வந்தி ருக் கும் வாசகர் கடிதங்களிலும் சிலர் இந்தக் கருத்தையே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

இந்நிலையில் நாம் இவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வ தெல்லாம் தயவு செய்து மீண்டும் மீண்டும் இப்படி உணர்வுச் சிக்கல் பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். அறிவு பூர்வமான தெளிவுடன் வாதி டுங்கள் அல்லது கீழே எழுப்பப் படும் வினாக்களுக்கு நேராகவும், தெளிவா கவும் பதிலளியுங்கள். அப்போதுதான் உங்கள் நிலைப்பாடு எங்கே யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியவரும்.

 1. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு அணி வெல்லப் போகிறது என்கிற நிலையில் உங்கள் தேர்தல் புறக்கணிப்பு நிலை யால் நீங்கள் சாதிக்கப் போவது என்ன?

2, நீங்கள் புறக்கணித்தாலும் இரண்டில் ஏதோ ஒரு அணி வெல்லப் போகிறது என்கிற நிலையில் எந்த அணி தோல்வி பெறுவதை - வெற்றி பெறுவதை அல்ல- தோல்வி பெறு வதை விரும்புகிறீர்கள், ஆட்சியில் உள்ள அணியையா? அல்லது ஆட் சிக்கு வெளியே உள்ளே அணியையா?

3, இரண்டில் எது வென்றாலும் அடிப்படையில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்பது எல் லோரும் அறிந்ததுதான், அது நீங்கள் சொல்லித் தெரிய வேண்டிய அவசி யமோ, இது உங்கள் கண்டு பிடிப்போ அல்ல, இது சாதாரண பாமரனும் அறிந்தசெய்தி.ஆகவே அந்த வாதத்தை விட்டு இரண்டில் ஏதாவதொன்று வெல்லப் போகிறது என்ற வகையில் ஒப்பு நோக்கில் எந்த அணியின் வெற் றியை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்

4. இரண்டில் எது வந்தாலும் ஒன்றுதான் என்று நிங்கள் சொல்வதன் மூலம், அல்லது போயும் போயும் ஜெ,வை ஆதரிப்பதா என்று நீங்கள் முகம் சுளிப்பதன் மூலம், இது தி.மு.க அணியே தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதர வளிப்பதா?

5. என்னதான் இவ்விரு கட்சி களுமே மோசமானதாக இருந்தாலும் ஒரு சனநாயக அமைப்பில் ஒரு கட்சியே தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது நல்லதா? அல்லது மாறி மாறி அதிகாரத்தில் இருப்பது நல்லதா?

6. ஒரு கட்சியே தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது, சர்வாதிகாரத் துக்கும் கருத்துரிமைப் பறிப்புக்கும் அராஜகத்துக்கும்தானே வழிவகுக்கும். மக்கள் மீண்டும் தங்களுக்கே ஆட்சிய திகாரம் வழங்கி விட்டதான அகம் பாவத்தில் அது மேலும் தொடரத் தானே செய்யும்.

7, மோசமான கட்சிகளே ஆனா லும், ஒன்று மட்டுமே அதிகாரத்தில் இருந்து ஊழல் புரிவதும் அதை மூடி மறைப்பதும் நல்லதா. அல்லது மாற்றி மாற்றி அவற்றை அதிகாரத்தில் வைத்து ஒன்றின் ஊழலை மற்றொன்று அம்பலப் படுத்தவும் ஒன்றின் மீது மற் றொன்று நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பளிப்பது நல்லதா. இரண்டா வதாக உள்ளதுதானே சனநாயகத்துக்கு நல்லது. அதை விட்டு ஒரு கட்சியே தொடர்ந்து ஆள வாய்ப்பளிப்பது என்பது என்ன வகை சனநாயகம்,

8, சரி ஒரு பேச்சுக்கு திமுக காங்கிரஸ் கட்சிகளே வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைப்பதாக வைத்துக் கொள்வோம் அப்போது என்ன ஆகியிருக்கும். இந்தக் கட்சி களுக்குத்தான் மக்கள் ஆதரவு என்று இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மேலும் வலுப் பெறும். இரண்டின் ஊழல் நடவடிக்கைகளும் முற்றாக மூடி மறைக்கப்படுவதோடு மேலும் தொடரும். யாரும் புதிதாக கைது செய் யப்பட வாய்ப்பில்லாது போவதுடன் ஏற்கெனவே சிறையிலிருப்பவர்களும் வெளிவர வழிகோலும். ஊற்றி மூடப் பட்ட பல வழக்குகளுடன் இதுவும் ஒன்றாக அமையும்.

9.ஆக ஜெ ஆட்சிக்கால ஊழலை அதிகாரக் கெடுசெயலை திமுகவும் திமுக ஆட்சிக்கால ஊழலை கெடு செயலைஅதிமுகவும் வெளிக்கொண்டு வருவதும் அதன் மீதான நடவடிக்கை எடுப்பதும் தானே சனநாயகத்துக்கு நல்லது. அதைவிட்டு ஒரு கட்சியே தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது பல கேடுகளை விளைவிக்காதா?

10.இப்போது ஜெ ஆட்சி வந்த தால்தான் பல ஊழல்கள் அராஜகங்கள் அதிகாரக் கெடு செயல்கள் அம்பலத்துக்கு வந்து நடவடிக்கைக்கு உள்ளாகி யுள்ளன. இல்லாவிட்டால் என்னாகி யிருக்கும். எதுவுமே வெளிப்படாமல் போயிருக்கும் என்பதுடன் அராஜகம் மேலும் தொடரவும் பல குடும்பங்கள் பரிதவிக்கவும் ஆன நிலை அல்லவா தொடர்ந்திருக்கும்.

தவிர புறக்கணிப்பு என்றால் யார் புறக்கணிப்பார்கள்.ஆதரவு வாக்குகள் என்பது எப்போதும் போல் விழ அதிகார எதிர்ப்பு வாக்காளர்கள் தானே புறக்கணிப்பார்கள். இந்தப் புறக்க ணிப்பு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே சாதகமாக அமையாதா

இப்படி சனநாயகத்தில் எத்த னையோ வழிமுறைகள் வாய்ப்புகள் இருக்க இதையெல்லாம் பயன்படுத்த மாட்டேன் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பது எந்த வகையில் நியாயம் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Pin It