ராஜீவ் மறைவு வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய இம்மூவர் உயிருக்கும் செப்டம்பர் 9 என நாள் குறிக்கப்பட இம்மூவர் உயிரையும் காப்பாற்றக் கோரி தமிழகமெங்குமுள்ள தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். அவ்வேளை காஞ்சிபுரம், ஓரிக்கையை அடுத்த மங்கல்வாடியைச் சேர்ந்த செங்கொடி என்னும் இளம்பெண், இம்மூவர் உயிரையும் காப்பாற்றக் கோரி ஆகஸ்ட் 28ஆம் நாள் மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகமுன் தன் உடல்மீது பெட்ரோலை ஊற்றி எரியூட்டிக் கொண்டு உயிர்த்தியாகம் செய்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

செங்கொடியின் முடிவு உணர்ச்சி வயப்பட்ட எழுச்சியின் முடிவு. அவர் உயிரோடு இருந்து தமிழகமெங்கும் நடைபெறும் போராட் டங்களில் பங்கு கொண்டு மக்களைத் திரட்டியிருக்க வேண்டும். எனினும் தமிழக அரசியல் சூழல் கையறுநிலை அவரை இம்முயற்சிக்குத் தள்ளி யிருக்கிறது.

செங்கொடியின் முடிவு தியாக முடிவானாலும் அது யாரும் பின்பற்றக்கூடாத முடிவு. ஒவ்வொரு போராளியும் தன் இறுதி மூச்சு வரை தான் முன்னெடுக்கும் இலட்சியத்திற்காகப் போராடி மடிய வேண்டுமேயல்லாது, தன் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் அதற்காக இழக்க வேண்டுமேயல்லாது தன்னையே அழித்துக் கொண்டு மாளக்கூடாது.

இதைக் கருத்தில் கொண்டு செங்கொடியின் தியாகத்தை மதிப்போம், அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவரது படத்தை வைத்து அதற்கு மாலையிடுவதும், தீபம் ஏற்றுவதும் மட்டுமே அவருக்கான அஞ்சலி எனக் கருதாது, அவர் எந்த மூவர் உயிர் காக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்தாரோ, அம்மூவர் உயிரையும் காக்க சபதமேற்போம். அதற்காகப் போராடுவோம்.

வீரப்ப மகாத்மியம்

நண்பர் ஒருவர் சமுகச் சிக்கல் களில் குறிப்பாக, அடித்தட்டு மக்களின் முன்னேற் றங்களில், தமிழ்த்தேச, தமிழீழ விடுதலையில் ஆழ்ந்த அக்கறையுள்ளவர். ஒவ்வொன்றைப் பற்றியும் துருவித் துருவி கேள்விகள் எழுப்பி பல்வேறு கோணங் களில் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களப் கப்பற் படையினால் தாக்கப் படுவது குறித்தும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த கடும் பின்னடைவுகள் குறித்தும் தமிழீழத்தில் போராளிகள் மீதும் அப்பாவிப் பொது மக்கள் மீதும் நிகழ்த்தப் பட்ட கொடுந் தாக்குதல்கள் குறித்தும், எதையும் தடுத்து நிறுத்த இயலாது கையறுநிலையில் நின்ற தமிழகம் குறித்தும், ஆதங்கமான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டி ருப்பவர். அப்படி ஒரு உரையாடலின் போது நண்பர் சொன் னார். ‘வீரப்பன் இல்லாம போனது தமிழீழத்துக்கும் தமிழகத்துக்கும் பெரிய இழப்பு என்றார் ’. ‘எந்த வகையில்’ என்றதற்கு அவர் சொன்னார். ‘வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா. ஈழத்தில் நிலமை இந்த அளவிற்கு போயி ருக்காது பிரச்சன வேற மாதிரி முடிந்தி ருக்கும் ’ என்றார்.

‘எப்படி வீரப்பன் இங்கிருந்து படை எடுத்துக்னு போய் சிங்கள ராணு வத்தை ஏதுத்து சண்ட போட்டிருப்பாரா’ என்றார்கள் நண்பர்கள்.

“ஈழத்துக்குப் போய்தான் சிங்கள ராணுவத்தோட சண்ட போடணம்னு இல்ல. வீரப்பன் இருந்திருந்தா அந்த நெருக்கடி யான நேரத்துல யாரியாவது முக்கியமான நாலு பேர காட்டுக்கு கடத்திக்னு போயி வச்சிருந்திருப்பாரு. ஈழத்துல போர் நிறுத் தம் பண்ணாதான் விடுதலைன்னு அறி விச்சி ருப்பாரு. ஏதாவது ஒரு வகையில பிரச்ச னைக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஈழ மக்களுக்கும் ஏதாவது நிவாரணம் கிடைச் சிருக்கும். அந்த நேரம் போராளிகள் நெருக் கடியில் இருந்து மீண்டிருந்தா அப்புறம் மற்றதை பார்த்துக்னு இருந்திருக் கலாம். அந்த வாய்ப்பு கிட்டாமப் போச்சி ” என்றார். சிலர் சிரித்தனர். நண்பர் சொன்னார். ‘இது சிரிக்கிற சேதி இல்ல தோழர். சிந்தித்து பார்க்க வேண்டியது. ஆதிக்கங்கள் எப்ப வும் இது மாதிரி பிரச்சனைங்கள்லதான் ரொம்ப விழிப்போடவும் எச்சரிக்கை யோடவும் இருந்துக்னு வருது யாரால நமக்கு ஆபத்து, யாரால நமக்கு ஆபத்து இல்ல.யாரை விட்டு வக்கிறது யாரப் போட் டுத் தள்றதுன்னு எல்லாம் அது தெளிவாக திட்டம் போட்டு செயல் படுத்திக்கினு வருது.

‘நாட்டுல பலபேர் தமிழ்த்தேசியம் பேசனாலும் தமிழரசனையும். பழநிபாபா வையும். வீரப்பனையும் தானே அது போட்டுத் தள்ளுது வீரப்பன இனிமேலும் விட்டு வைக்கக் கூடாதுன்னு அரசு எப்ப முடிவுக்கு வருது. ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகுதான. இதல்லாம் சாதாரண விஷய மில்ல தோழர். ஒவ்வொண்ணையும் கூர்மையா ஊன்றிப் பாக்கணும்

‘இந்தமாதிரிப் பட்டவங்க இருந்தா நாம தங்கு தடையின்றி செயல்பட முடியா துன்னு அரசுக்குத் தெரியும்.சும்மா போராட் டம் ஆர்பாட்டம்னு பண்ணிட்டுப் போறவங் களால அரசுக்கு ஒண்ணும் பாதகமில்ல. ஆனால் வீரப்பனப் போல நேரடியாக நட வடிக்கையில் இறங்கி செயல்படறவங்க ளாலதான் அரசுக்கு இடைஞ்சல். அதனால தான் அப்படிப் பட்டவங்கள விட்டு வக்காம அரசாங்கங்கள் அவங்க கதைய முடிக்கிது. இப்பிடி மறைமுகமாகவோ, சூழ்ச்சியாக வோ முடிச்சகதைதான் இவங்க மூவர் கதையும். இவங்கள்ல யாராவது ஒருத்தர் இருந்திருந்தாகூடம் போதும். ஈழப் போராட்டம் வேறமாதிரி போயிருக்கும், ஈழப் போராட்டத்துக்கு மட்டுமில்ல இப்ப தீவிர மடைஞ்சிருக்கிற முல்லலைப் பெரியாறு பிரச்சனைக்கும் இத சேத்துப் பாக்கணம் என்றார் நண்பர். நண்பர் கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாயிருந்தாலும் முற்றாகப் புறக்கணிக்கவும் முடியாததாகவே இருந்தது.

Pin It