எம்.எஃப்.ஹூசேன் [1915-2011]

இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியராக பாராட்டப் பெறும் எம்.எஃப். ஹூசேன் தன் இறுதி நாட்களைத் தான் பிறந்த மண்ணில் கழிக்க முடியாமல் இலண் டனில் குடியேறி அங்கு கடந்த 09-06-2011 அன்று காலமானார்.

முதல் உலகப்போர் தொடங்கிய அடுத்த ஆண்டில் 17-09-1915இல் மராட் டிய மாநிலம் பந்தர்பூரில் பிறந்தவர் எம்.எஃப்.ஹூசேன். குழந்தையாக இருக் கும்போதே தாயை இழந்தவர். பிழைப்பு காரணமாக குடும்பம் மத்தியப் பிரதேசம் இந்தூருக்குப் குடி பெயர, அங்கு தன் இளமைக் காலத்தைக் கழித்தவர்.

ஓவியத்தின் மீதான ஆர்வம் காரணமாக இந்தூர் வி.பி.தேவாலிகார் ஓவியப் பள்ளியில் சேர்ந்தார். இந்திய மரபு சார்ந்த ஓவியங்களை வரைவதில் வல்லவராகத் தோற்றம் பெற்ற இவர், அந்த வகையிலேயே உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் புகழ் பெற்றார். இவர் சிறப்புமிக்க பல ஓவியங்களை வரைந் ததுடன், தில்லி அரசு திரைத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஓவியரின் பார்வையில் என்னும் குறும்படத்தையும் உருவாக்கினார். பெர்லின் திரைப்பட விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற இப் படம், இவரை உலகு தழுவிய புகழுக்கு உயர்த்தியது.

எனினும், இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாத சக்திகள் இவருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின. இந்துக் கடவுள்களை குறிப்பாக பெண் தெய்வங்களை இவர் அம்மணமாக வரைந்து கேவலப்படுத்துகிறார் எனச் சொல்லி, இவரது கலைக் கூடங்கள் மீதும் ஓவியங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தன. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தன. இதைத் தடுத்து நிறுத்தவோ, அவருக்கு பாதுகாப்பளிக்கவோ முன்வராத தில்லி அரசு, இந்துத்துவ அடிப்படை வாதிகளோடு சமரசம் செய்து கொண்டு, உசேனுக்கு எதிராக இயங்கியது.

இவர் இசுலாமியராகப் பிறந்தாலும் இந்து ஓவியங்களையே வரைகிறார் என இசுலாமிய அமைப்புகளும் ஏற்கெனவே இவரைக் கை விட்டிருந்த நிலையில் வேறு வழியின்றி இவர் லண்டனில் குடியேறி வாழத் தொடங்கினார்.

எனினும் தன் இறுதி நாள்களைத் தன் சொந்த மண்ணில் கழிக்க வேண்டும், தனது உடல் இந்திய மண்ணில் புதைக் கப்பட வேண்டும் என்கிற விருப்பத் தோடும் ஆதங்கத்தோடும் வாழ்ந்த இவர் தன் எண்ணம் ஈடேறாமலேயே போய் தன் சொந்த மண்ணுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டிய அந்நிய மண்ணில் இறக்க இவரது உடல் இங்கிலாந்தின் சர்ரே, புருக்உட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கார்த்திகேசு சிவத்தம்பி [1912-2011]

தமிழீழத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞரும், ஆய்வாளரும் விமர்சகருமான கார்த்திகேசு சிவத்தம்பி கடந்த 06-07-2011 புதன் அன்று கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அன்னாருக்கு வயது 79.

1912இல் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் சிற்றூரில் பிறந்த இவர், யாழ் பல்கலைக் கழகத்தில் பேராசி ரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைத் தமிழகத்தில் நாடகம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழ்ச் சமூக ஆய்வு மற்றும் திற னாய்வு சார்ந்து சுமார் 70க் கும் மேற்பட்ட நூல்களை இவர் இயற்றினார். இவற்றுள் ‘தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்’ ‘தமிழ்ப் பண்பாட்டில் சினிமா’, ஆகியன தமிழ்க் கலை இலக்கிய. சமூகச் சூழலில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாகும்.

லண்டன் கேம்பிரிட்ஜ், தில்லி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

ஜெ. ஆட்சியில் தஞ்சையில் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது அதில் கலந்துகொள்ள வந்த இவரை விடுதலைப் புலி ஆதரவாளர் எனக் கூறி விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது தில்லி அரசு.

திமுக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள் அறிஞர்கள் பலரும் புறக்கணித்த நிலையில் அம்மாநாட்டில் கலந்துகொண்ட இவருக்கு பெரும் முக்கியத்துவம் தரப் பட்டது.

அன்னாரது மறைவு தமிழ்க் கலை இலக்கிய திறனாய்வுத் தளத்திலும், ஆய்வுத் தளத்திலும் மிகப்பெரும் இழப்பாகும்.

பாதல் சர்க்கார் [1925-2011]

வங்கத்தின் நவீன நாடக உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் பாதல் சர்க்கார். ஒப்புநோக்கில் பிற மாநிலங் களை நோக்க மேற்கு வங்கத்தில் நாடகக் கலை என்பது தழைத்தோங்கியிருப்பதும் நாடகம் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருப்பதும் தெரிந்த செய்தி.

இப்படிப்பட்ட வங்க நாடக உலகில் புகழ்பெற்ற யதார்த்த வாதிகளாக சோம்புமித்ரா, உத்பல் தத், பிஜன் பட்டாச்சார்யா முதலானவர்கள் திகழ்ந்து வந்த வேளை, இவர்களிடமிருந்து மாறு பட்ட தனித்துவத்தோடும், நவீனத்துவக் கூறுகளோடும் தன் நாடகங்களை வெளிப்படுத்தியவர் ‘பாதல் சர்க்கார்’.

ஐரோப்பிய மண்ணில் தோற்றம் பெற்ற மூன்றாம் அரங்கு என்னும் கருத்தாக்கத்தை இந்திய நாடக வரலாற்று மரபுக்கு ஏற்ப கையாண்டு அறிமுகப்படுத் தியதிலும், பரப்பியதிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு.

1963இல் எழுதி 1965இல் அரங் கேற்றம் பெற்ற ‘ஏபங் இந்திரஜித்’ என்னும் இவரது முதல் நாடகம், இதுவரை நிலவி வந்த யதார்த்த நாடக மரபைத் தகர்த்து, ஒரு புதிய அணுகு முறையை அறிமுகம் செய்தது.

ஐரோப்பிய நாடகங்களைத் தழுவியும், இந்திய மரபு சார்ந்தும் பல நாடகங்களை இயற்றி மேடை யேற்றிய இவர். இந்தியாவின் பல்வேறு இடங் களில் நாடகப் பட்டறைகள் நடத்தியுள் ளார். தமிழகத்தில் 1970 இல் நிலவிய கலை இலக்கியச் சூழலில் நாடகம் குறித்த புதிய விழிப்பு தோன்ற, அப்போது தமிழகத்தில் இயங்கி வந்த சிறு சிறு நாடகக் குழுக்கள் தங்கள் முன்முயற்சியில் இவரை வரவழைத்து சென்னையை அடுத்த சோழ மண்ணில் ஒரு பத்து நாள் நாடகப் பயிற்சியும் நடத்தியது.

இவரது நாடகம் ஏபங் இந்திரஜித், ‘பிரிதொரு இந்திரஜித்’ என்கிற பெயல் ‘பரிக்ஷா’ நாடகக் குழுவால் தமிழில் இயக்கப் பெற்றதுடன், அந்நாடகம் தமிழிலும் நூலாக வெளிவந்தது.

பாதர் சர்க்காரின் நாடகப் பங்க ளிப்பு அரவது சொந்த மாநிலத்திற்கு அப்பால், பிற மாநிலங்களில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. ப வறு அமைப்புகளும் சிறுசிறு நாடகக் குழுக்களை உருவாக்கி வீதி நாடகங்கள் நடத்தக் தூண்டுதலாய் அமைந்தது.

வட கல்கத்தாவில் மதம் மாறிய கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தேவாலயப் பிரார்த்தனை களில் நம்பிக்கை இழந்தவராக குடும்ப எதிர்ப்புகளையெல்லாம் மீறி தன் பழைய உறவுக்கார இந்துப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.

‘சதாப்தி’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கி வாழ்நாள் முழுக்க நாடகத் திற்காகவே உழைத்த இவரது இழப்பு நாடக உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்

மணி கௌல் [1944-2011]

இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநராகத் திகழ்ந்த மணி கௌல் புற்று நோயால் கடந்த 06-07-2011 அன்று நள்ளிரவில் தமதில்லத்தில் காலமானார். அன்னாருக்கு வயது 67.

1944இல். ராஜஸ்தான மாநிலம் ஜோத்பூரில் பிறந்த இவர், பள்ளிக் கல்வியை முடித்து, திரைத்துறை நாட்டம் காரணமாக, அப்போதைய திரைத் துறை ஆளுமையான ரித்விக் கட்டக்கிடம் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

பின் இந்தியின் சிறந்த நாடக ஆசிரியரான மோகன் ராகேஷின் கதையைத் தழுவி 1969இல் ‘உஸ்கி ரோடி’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். இந்தப் படம் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

இதன்பின் மோகன் ராகேஷின் நாடகத்தைத் தழுவி, ‘ஆஷாத் கா ஏக் தின்’ என்னும் படத்தைத் தயாரித்தார். காளிதாசனின் காதல் வாழ்வின் ஒரு பகுதியைச் சித்தரிக்கும் இத்திரைப்படமும் இவருக்கு அமோக பாராட்டுதல்களைப் பெற்றது.

சரியான லென்சையும், சரியான ஒளியையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் திரையில் உணர்வெழுச்சியைத் தூண்டும் வகையில் காட்சிகள் அமைவதே இவரது திரைப்படங்களின் சிறப்பாகப் போற்றப் படுகிறது. இவ்விரு படங்களுக்குமே ஒளிப் பதிவாளராக கே.கே.மகாஜன் பணியாற்றி மணிகௌலுகு புகழ் சேர்த்தார்.

சாதாரண மக்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் அல்லாத தனித் துவமான அழுத்தத்தோடும் இறுக்கத் தோடும் இவரது படங்கள் அமைந்ததால், இவருடைய படங்கள் எதுவுமே, வணிக ரீதியில் திரையரங்குகளில் திரையிடப் படுவதில்லை.மாறாக திரைப்பட சங் கங்கள், திரைப்பட விழாக்களில் மட்டுமே இவரது படங்களைக் காணமுடியும்.

இவ்விரு படங்களையும் அடுத்து இவர், ராஜஸ்தான் சிறுகதை எழுத்தாளர் விஜய் தான்தேதாவின் கதையைத் தழுவி, 1974இல் ‘துவிதா‘ என்னும் திரைப் படத்தையும் எடுத்தார். இம்மூன்று திரைப்படங்களுமே இவருக்கு நிலையான புகழைத் தேடித் தருவதாய் அமைந்தன.

இவர் இந்திய திரை மற்றும் சின்னத் திரை;ப் பயிற்சி மையத்திற்காக, வருகை, இதர் ஆகிய ஆவணப் படங்களையும், காஷ்மீர் அரசின் வேண்டுகோளுக் கிணங்க, ‘என் கண்களுக்கு முன்னால்’ எனும் திரைப்படத்தையும் எடுத்துள்ளார்.

படைப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத உறுதிமிக்க அவரது ஆளுமை, உன்னத கலை இலக்கியவாதிகள் அனை வராலும் மதித்துப் பாராட்டப் பெறுவ தாகும்

.மேற்குறித்த நால்வரது மறைவுக்கும் மண்மொழி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It