உலகெங்கும் வர்க்கப் போராட்டங்கள் மொழிவழி தேசிய இனப் போராட்டங்கள்

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு மொழி பேசும் மக்கள் நெருக் கமாக வாழ்ந்தால் அது ஒரு மொழி வழி தேசிய இனமாக ஒருங்கிணைந்து தனக்கென்று ஒரு குடியரசு வை நிறுவிக் கொள்ள முனையும் கருத்து  மூன்று நூற்றாண்டு காலமாக ஐரோப்பாவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சி என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

18ம் நூற்றாண்டின் மன்ன ராட்சிக் கொடுமைகளுக்கு எதிராக ஐரோப்பா கொந்தளித்துக் கொண்டு இருந்தது. உற்பத்தியில் கைத்தொழில் பட்டறைகளின் காலம் முடிந்து நீராவி இயந்திரம் நெசவு இயந்திரம் உருக்காலைகள், உருட்டாலைகள், மூலம் உற்ப்பத்தித் தொழில் நுட்பம் மாற்றம் அடைந்து பெரும் ”தொழில் புரட்சி” ஏற்ப்பட்டது. மக்களை அடக்கி சுரண்டிய நிலப்பிரபுத்துவம் ஆட்டங்கண்டது.

மேற்கு ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சி ஆப்பிரிக்க , ஆசிய, தென் அமெரிக்க நாடுகளை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தியது. இங்கி லாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச் சுக்கல், டச்சு, பெல்ஜியம் முதலிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளாக மாறி ஆப்பிரிக்க, ஆசிய தென் அமெரிக்க நாடுகளைச் சுரண்டின. ரஷ்யா பண்ணையடிமைகளை நிலப் பிரபுத் துவ முறை மூலம் கொடுமைப் படுத்தியது. சீனா 17ம் நூற்றாண்டு முதல் வலிமை குன்றிய மையப் பேரரசாலும் பல பிராந்திய பகுதிகள் யுத்த பிரபுக்கள் என்று சொல்லப் படுகின்ற பிரபுக்களாலும் ஆளப்பட்டு வந்தது. இந்தப் பிரபுக்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு கொடுங் கோன்மை ஆட்சி  நடத்தினர். கடலோர சீனத் துறை முகங்களை மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு திறந்து விட்டனர். மக்கள் பெரும் கொந்த ளிப்புக்கு உள்ளானர்கள். ஐரோப் பாவின் வெவ்வேறு பகுதியில் இருந்து சென்று வட அமெரிக்கா கண்டத்தில் 16 இடங்களில் குடியேறியவர்கள்  ஒருங்கிணைந்து இங்கிலாந்துக்கு எதிராக போரடி 18ம் நூற்றாண்டின் இறுதியில் சுதந்திர அமெரிக்க நாட்டை உருவாக்கினார்கள். அமெரிக்க நாடு ஒரு கலப்பு தேசியம் எனலாம். ஆங்கில மொழி தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவை அமெரிக்க நாட்டை வலுவாக்கின. இதுவே 18ம் நூற்றாண்டின் உலக சூழல் .

சுருக்கமாக, மேற்கு ஐரோப் பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சி இங்கிலாந்து பிரஞ்சு ஸ்பெயின் போர்ச்சுகல் டச்சு நாடுகளை  உள் நாட்டில் தங்கள் மக்களையே சுரண்டும் முதலாளித்துவ நாடுகளா கவும் உலகைச் சுரண்டும் ஏகாதிபத்திய நாடுகளாவும் ஆக்கின.

அடிமைப்பட்டுக் கிடந்த தென் அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் உரிமைகளுக்கு போராடத் தொடங்கி இருந்தன.இரஷ்ய, சீனா நாட்டு மக்கள் கொடுங் கோன்மை மிக்க உள் நாட்டு நிலப்பிரத்துவ ஆட்சியாளர்களால் அடக்கி யாளப் பட இதற்கு எதிரான கிளர்சிகள் எழுந்தன.

அமெரிக்கா விடுதலைப் போரில் இங்கிலாந்தை வென்றபின் முதலா தளித்துவ தொழில் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டது. இதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோ மக்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டு அடிமைகளாக் கப்பட்டு மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்டனர்.

இந்த மாதிரியான உலக சூழலில் அந்தந்த பகுதி உலக மக்களின் நியாய உணர்ச்சி தார்மீக உணர்ச்சி  என்ன வாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய மக்கள் தொழில் புரட்சியால் ஒரு பக்கம் சுரண்டப் பட்டனர். அதே வேளை இன்னொரு பக்கம் அச்சு இயந்திரம் இதழியல் பத்திரிகைத்துறை வளர்ச்சியடைந்து மக்களை அரசியல் ரீதியாக விழிப்பூட் டியது ஐரோப்பா எங்கும் மன்ன ராட்சிக்கு எதிராக மக்களாட்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றன.

ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாட்டு மக்கள் தங்களை அடக்கி ஆண்டு வரும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அரசியல் விடுதலைக்குப் போரடினார்கள். இந்தியாவில் 1857ல் ஏற்ப்பட்ட முதல் சுதந்திரப் போர், தென் அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைமன் பொலிவார் தலமையில் ஏற்பட்ட சுதந்திரப் போர் எல்லாம் அரசியல் விடுதலைக்கான போரட் டங்கள் ஆகும்

அயர்லாந்து மக்கள் இங்கி லாந்து நாட்டிடம் இருந்து விடுபட தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். போலந்து மொழி பேசும் பிரதே சங்களை 1.ரஷ்யா 2.ஜெர்மனி 3.ஆஸ்திரியா என மூன்று நாடுகளும் கூறு போட்டு ஆண்டு கொண்டு இருந்தன. மூன்று பகுதியிலும் வசிக்கும் போலந்து மக்கள் தங்கள் அடிமைத் தனத்தில் இருந்து விடுபட்டு ஒரே போலந்து தேசிய இனமாக ஒருங்கி ணைய விரும்பினார்கள். ஆக 18, 19,ம் நூற்றாண்டுகளில்  உலகமெங்கும் முத லாளித்துவத்துக்கு எதிரான  வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்தியத்துக்கு ஏதிரான  காலனி நாடுகளின் அரசியல் விடுதலைப் போராட்டம், பரம்பரை மன்னராட்சி,  நிலப்பிரபுத் துவத்துக்கு எதிரான மக்களாட்சிப் போராட்டம், ஒடுக்கும் தேசிய இனத்துக்கு எதிரான ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் என நடை பெற்றன.

எனினும் இந்தப் போராட் டங்கள் எல்லாம்  அதாவது வர்க்கப் போராட்டங்கள், மொழிவழி தேசிய இன விடுதலை போரட்டங்கள் ,அர சியல் உரிமைகள் மற்றும் பாரா ளுமன்றஜனநாயகத்துக்கான போராட் டங்கள் எல்லாம் ஒரே நோக்கில் இல்லை, இருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான  சூழ் நிலையிலேயே ஒரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு தேசிய இன அரசு என்ற கருத்து ஒரு முழுமையான அரசியல் ரீதியான, அறிவு பூர்வமான கோட்பாடக  ஐரோப்பாவில்  வளர்ச்சி அடைந்தது.

பொதுவாக ஒரு மொழி பேசும் மக்களை பல குறு நில மன்னர்கள், பல நிலப் பிரபுக்கள் கொடுங் கோன்மையாக ஆண்டு வந்த சூழ் நிலையில் அவர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேச மக்களும் ஒருங்கி ணைய மொழிவழி வகுத்தது.

இந்த அரசியல் போராட்டங்கள் ஊடே தாய்மொழிப் பண்பாடே சிறந்தது என்ற எண்ணமும் ஒங்கி வளர்ந்தது. ஒவ்வொரு தாய் மொழி யிலும் தோன்றிய இலக்கியங்கள், அறநெறி நூல்கள் தாய் மொழி சார்ந்த உணர்வை மக்களிடையே வளர்த்து பேச்சுமை, எழுத்துரிமை, பற்றிய விழிப்பை போராட்ட உணர்வை மக்களிடையே தூண்டின. அச்சுத் தொழில் நுட்பம், பத்திரிகைத் துறை ஆகியன  மக்களை அரசியல் போராட் டங்களுக்கு தயாரித்தன.

வால்டேர், ரூஸோ, என்ற இரு பிரெஞ்சு எழுத்தாளர்களின் அரசியல், புரட்சிக் கருத்துக்கள் பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட அவை  இதர ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பா முழுக்க பரவி மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கு வடிவம் கொடுத்தன.

மாண்டெட்ஸ்கியு என்ற அரசி யலைப்பு வல்லுனர் மக்களாட்சித் தத்துவத்தில் (1)பாராளுமன்றம் (2)நீதித்துறை (3)அமைச்சரவை இவற்றுக்கிடையே இருக்க வேண்டிய தெளிவான அதிகாரப் பிரிவு கோட்டை - அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை விளக்கினார்.

இப்படிப்பட்ட பின்னணியில் ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டு சூழலிலும் மொழிவழி தேசிய இன உணர்வு எப்படி வளர்ச்சி அடைந்தது  என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனி கெய்சர் என்ற பெரிய பேரரசராலும் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட சிற்றரசர்களாலும் ஆளப் பட்டது. பிரெடிரிக் லிஸ்ட் ( Fredrick List )என்னும் ஜெர்மன் புள்ளி விபர அறிஞர் ஜெர்மன் நாடு ஒன்று பட் டால்       சுங்கம், சுரங்கம், ஜெர்மன்  சிற்றரசர்கள் போடுகின்ற மாறுபட்ட வரிகள்  எல்லாவற்றுக்கும் ஒருமித்த நடைமுறை ஏற்ப்பட்டு ஜெர்மன் வலுவான வல்லரசாகும் என்று நூல்கள் எழுதி பிரச்சாரம் செய்தார். பேரரசர் குறு நில மன்னர்கள் மீது ஜெர்மன் மக்களுக்கு இருந்த வெறுப்பும் பிரெ டிரிக் லிஸ்டின் பிரச்சாரமும் ஜெர்மன் மக்களை கவர்ந்தன.

போலந்து நாடு. இது போலிஷ்  என்னும் மொழி பேசும் மக்களை உடையது.இயற்பியலில் இரு நோபல் பரிசு பெற்ற மேரி கியுரி அம்மையார் இந்த நாட்டை சேர்நதவர்தான்.  ரஷ்யா, ஜெர்மனி, பிரஷ்யா, என மூன்று ஏகாதிபத்திய நாடுகளாலும் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்த போலந்து  மக்கள் விடுதலை அடைந்து ஒரே போலந்து தேசியக் குடியரசு ஆக விரும்பினார்கள். இதற் கான போராட்டத்தில் ஏழை, பணக் காரன் என்ற பேதம் இன்றி எல்லா போலந்து மக்களுமே    ஒன்று பட்டு நின்றார்கள்.

இத்தாலி மொழி பேசும் மக்கள் எல்லாம் பல சிற்றரசர்கள் கீழ் சித றுண்டு கிடந்தார்கள் .இத்தாலியின் தலை நகர் ரோம் நகர் ஒட்டி இருந்த வாட்டிகன் உலக கத்தோலிக்கத் தலமையிடமாக விளங்குகிறது போப் ஆண்டவர் இதன் தலைவர்  எனவே இயல்பாக இத்தாலியில் கத்தோலிக்க மதம் செல்வாக்கு பெற்று விளங்கியது. சிதறிக் கிடந்த இத்தாலியை ஒன்று படுத்த மாஜினி, கரிபால்டி என்ற இரண்டு செயல் வீரர்கள் புயலெனப் புறப்பட்டனர், இத்தாலி ஐக்கயம் ஏற்ப்பட்டது.

அடுத்து அயர்லாந்து விடுதலைப் போராட்டம். இங்கிலாந்து நாட்டை ஒட்டியுள்ள ஒரு தீவு நாடு அயர் லாந்து. ஐரிஷ் என்னும் மொழி பேசுபவர்களைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக விடுதலைப் போராட் டத்தை  நடத்தியது. 1919 - 1921ல் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. 1922இல் தென் அயர்லாந்து விடுதலை பெற்றது.  வட அயர்லாந்து இன்று வரை (2010) பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ளது. வட அயர்லாந்து நாட்டை பிரிட்டனிடம் இருந்து விடுவித்து தென் அயர் லாந்துடன் இணைப்பதற்கான போராட்டம் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது  1937 ஆம் ஆண்டு முதல் புதிய அரசி யல் சாசனம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து ஐரிஷ் தேசியக் குடியரசு என்ற பெயரில் தென் அயர்லாந்து விளங்குகிறது.

புகழ் பெற்ற நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா, இந்தியாவில் 1915-1917இல் சுயாட்சி உரிமை இயக்கம்  கண்ட அன்னி பெசண்ட் அம்மையார், இந்து மத வீரத் துறவி சுவாமி விவே கானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா என்கிற மார்க்ரெட் எலிசுபெத் நோபிள் போன்ற பெருமக்கள் எல்லாம் அயர் லாந்து நாட்டுக்காரர்களே.

இவ்வாறாக பல்வேறு நாடுகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆராய ஐரோப்பாவில் மொழிவழி தேசிய இனக் கோரிக்கைகள் எழுந்தது எல்லாம் ஒரே மாதிரியான அடிப்படையிலோ  ஒரே மாதிரியான சூழலிலோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்     (தொடர்ச்சி அடுத்த இதழில்...)

Pin It