vanamamalai(1917 -1980)

-2009  

நாட்டுப்புற இலக்கியத்தைப் பேணி வளர்த்த விற்பன்னர். ஆய்வு நெறியில் புதுமையைப் புகுத்தி இலக்கியம், வரலாறு சமூகவியல் போன்ற துறைகளில் புது ஒளிபாய்ச்சியவர். ‘ஆராய்ச்சி’ என்ற காலாண்டு இதழை நடத்தியவர். தமிழர் நாட்டுப் பாடல்கள், கட்டபொம்மன் கதைப் பாடல்கள் ஆகியன சிறந்த தொகுப்புகள். சிறந்த திறனாய்வாளர். பல்துறை அறிஞர். இவரது பணியைப் பாராட்டும் முறையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரது மறைவிற்குப் பின்னர் டி.லிட். பட்டம் அளித்து கௌரவித்தது. 2008ம் ஆண்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

நா.வா. படைப்புகள்

நாட்டார் வழக்காற்றியல்

1960 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1961 கட்டபொம்மன் கதைப்பாடல், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1964 தமிழர் நாட்டுப் பாடல்கள், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1967 வீணாதி வீணன் கதை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1969 Studies in Tamil Folk Literature, Madras: N.C.B.H.  

1971 வீரபாண்டிய கட்ட பொம்மு கதைப்பாடல் மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1971 முத்துப்பட்டன் கதை, மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1971 காத்தவராயன் கதைப்பாடல், மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1972 கட்டபொம்மு கூத்து, மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1972 கான்சாகிபு சண்டை, மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1972 ஐவர் ராசாக்கள் கதை, மதுரை, மதுரைப் பல்கலைக்கழகம்

1981 Interpretation of Tamil Folk Creations, D.L.A., Trivandrum

வரலாறு

1966 தமிழர் வரலாறும் பண்பாடும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1973 வரலாறும் வக்கிரங்களும் ரொமீலாதாப்பர் (மொ.பெ.) சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1980 வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, சென்னை மக்கள் வெளியீடு

1980 தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள், சென்னை, மக்கள் வெளியீடு

பண்பாடு

1973 தமிழர் பண்பாடும் தத்துவமும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1980 பழங்கதைகளும், பழமொழிகளும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இலக்கியம்

1964 பாரதியும் தொழிலாளரும், சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1967 இலக்கிய உலகம் எதிர்ப்பதென்ன, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

1975 (மார்ச்) புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும், சென்னை, மக்கள் வெளியீடு

1978 உரைநடை வளர்ச்சி, சென்னை, மக்கள் வெளியீடு

குழந்தைகள்

1962 (ஏப்ரல்) ரப்பரின் கதை (கூட்டாசிரியர் எஸ். தோத்தாத்ரி) திருநெல்வேலி எஸ்.ஆர். சுப்ரமணியபிள்ளை வெளியீடு

1964 (ஜனவரி) இரும்பின் கதை. திருநெல்வேலி எஸ்.ஆர். சுப்பிரமணியபிள்ளை வெளியீடு

விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு

1960 விண்யுகம் (ஸ்டீபன் ஹெய்ம்) (மொ.பெ) திருநெல்வேலி, நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட்

ஆ.தெ. உடலும் உள்ளமும் (பாவ்லோவ்) (மொ.பெ.) திருநெல்வேலி நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட்

ஆ.தெ. உயிரின் தோற்றம் (ஏ ஐ ஒபாரின்) (மொ.பெ.) சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆ.தெ உடலியல் மருத்துவ வரலாறு (கூட்டாசிரியர் எஸ். தோத்தாத்ரி) சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1973 வரலாறும் வக்கிரங்களும் (ரொமீலாதாப்பர்) (மொ பெ) சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1973 வரலாறும் வக்கிரங்களும் (ரொமீலாதாப்பர்) (மொ பெ) சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1983 விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சி, சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தத்துவம்

1976 (மார்ச்) பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்பு பௌத்தமும், சென்னை, மக்கள் வெளியீடு

1976 மார்க்சிய சமூக இயல் கொள்கை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1977 மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள் முதல் வாதம், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1978 மார்க்சிய அறிவுத் தோற்றவியல், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1978 மார்க்சிய அழகியல், சென்னை, மக்கள் வெளியீடு

அரசியல்

1951 இந்தியர் கண்ட ரஷ்யா, சென்னை ஜனசக்தி

1975 இந்தியக் கல்வித்துறையில் அமெரிக்க டாலர் ஊடுருவல், சென்னை மக்கள் வெளியீடு

பதிப்பித்தவை

1965 தமிழில் முடியும், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1977 மக்களும் மரபுகளும், தூத்துக்குடி சாந்தி

1977 தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்