thondaimaan_320(1904-1965)

-2010 

அரசுப் பணியில் இருந்த வண்ணம் அருந்தமிழ்ப் பணி ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இன்றைக்குத் தினசரிகளும் வாரப் பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றிக் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் முத்தையாமுத்தம்மாள் தம்பதியினர். இவருடைய கல்லூரிக் காலத்தில் தமக்கு ஆசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் மற்றும் இரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோரின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்பராமாயணத்தைப் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்.

நெல்லையில் புகழ் பெற்ற வட்டத்தொட்டி என்ற இலக்கிய விவாத அமைப்பின் தலைவர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் என்றால் அதன் தூண்களில் ஒருவராகத் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் செயல்பட்டார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகமெங்கும் சுற்றி கோயில்களில் உள்ள சிறப்புமிக்க கலைநயங்களைப் பற்றி வேங்கடம் முதல் குமரிவரை என்ற தலைப்பில் இவர் எழுதியவை கல்கி வார இதழில் தொடராக வந்தது. இவை போக இவர் எழுதிக் குவித்தது ஏராளம். காரைக்குடியில் கம்பன் கழகத்தில் இவரது பேச்சைக் கேட்க இலக்கிய ஆர்வமுள்ள கூட்டம் காரைக்குடியைப் படையெடுத்தது ஒரு காலம். புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளரான தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய இளைய சகோதரர். 

1. தமிழறிஞர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்

2. பிள்ளையார்பட்டி பிள்ளையார்

3. ஆறுமுகமான பொருள்

4. சீதா கல்யாணம்

5. கம்பன் சுயசரிதம்

6. ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள்

7. பட்டி மண்டபம்

8. ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

9. இந்தியக் கலைச் செல்வம்

10. வேங்கடம் முதல் குமரி வரை (முதல்பாகம்) பாலாற்றின் மருங்கிலே.

11. வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) பொருநைத் துறையிலே

12. வேங்கடம் முதல் குமரிவரை (பாகம் 3) காவிரிக் கரையிலே

13. வேங்கடம் முதல் குமரிவரை (பாகம் 2) பொன்னியின் மடியிலே

14. வேங்கடத்துக்கு அப்பால்

15. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)

16. வேங்கடத்துக்கு அப்பால். (வடநாட்டு கோயில்கள் பற்றிய வரலாறு)

17. கல்லும் சொல்லாதோ கவி

18. கலைஞன் கண்ட கடவுள்

19. தமிழ் கோயில்களும் தமிழர் பண்பாடும்

20. அமரகாதலர்

21. மதுரை மீனாட்சி

22. பாதுகா பட்டாபிஷேகம்

23. மாயமான்

24. தென்றல் தந்த கவிதை