இவரின் இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி. இவர் பள்ளியில் படிக்கும் போது நிறைய கிருஷ்ணமாச்சாரி இருந்ததால் ஏ.எஸ்.கே. அய்யங்காராகி விட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான ம. சிங்காரவேலர், எஸ்.வி.காட்டே போன்றவர்களின் தொடர்பால் கம்யூனிஸ்டானவர். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் தொடர்பால் தமிழ் மொழியைக் கற்று, தமிழ் மொழிக்கு பங்களிப்பு செய்தவர். தேச விடுதலைப் போராட்டங்களிலும் தொழிற்சங்கங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்டவர் சென்னை துறைமுகத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொடுத்த தொழிற்சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலை, பயிற்சிபள்ளிகள் என்று இவரது பெயரை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கடைசிவரையிலும் பிரம்மசாரியாக வாழ்ந்தவர்.

இவரின் நூல்கள் :

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா,

தங்கம்மா,

கம்யூனிசம்,

ரஷ்யா,

அம்பேத்கர் வாழ்க்கையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்