1889-1971

1998

parali_200பரலி சு. நெல்லையப்பர் வ.உ.சி., பாரதியார், வ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். விடுதலைப் போரில் தீவிர ஈடுபாடு காரணமாகப் பலமுறை சிறை பிடிக்கப்பட்டார். ‘தம்பி’ எனப் பாரதியாரால் அழைக்கப்பட்ட சிறப்புக்குரிய நெல்லையப்பர், எளிய தமிழில் பெரிய விசயங்களை எழுதி தமிழ் உரைநடைவளர்ச்சிக்கு உதவியவர். பாரதியின் பல படைப்புகளைச் சிறு நூல்களாக அச்சிட்டு மக்களிடையே பரப்பியவருள் முதலிடம் இவருக்கே. பின்னாட்களில் காந்திய வழியை ஏற்றார். ஆயினும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார். அந்த நாட்களில் அவருடைய கட்டுரைகளும், விமர்சனங்களும், பதிப்புரைகளும் நூற்றுக்கணக்கில் வெளிவந்தன; ஆயினும் மிகச் சிலவே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன.

எளிய தமிழில் பெரிய விஷயங்களை எழுதித் தமிழ்ப் பத்திரிகை வசன நடைகளை வளர்த்தவர்களில் ஒருவர். பிரம்மசாரியான இவர் ஒரு பெண் குழந்தையைத் தத்துஎடுத்து வளர்த்தார் சென்னை குரோம்பேட்டை பாரதிநகரில் வாழ்ந்து அங்கேயே காலமானார்.

பாரதியார் சரித்திரம்

வ.உ.சிதம்பரபிள்ளை சரித்திரம்

பாரதி வாழ்த்து

நெல்லைத் தென்றல்

உய்யும் வழி

தமிழ்த் திருமண முறை

ராதாரானி (மொழி பெயர்ப்பு)

ஜோடி மோதிரம் (மொழி பெயர்ப்பு)

சுவர்ணலதா

மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்ஜியம்

மகாத்மா காந்தியின் சகவழி

சிவானந்தர் உபதேசமாலை

பூ லோகத்து சப்த அதிசயங்கள்

பகவான் அரவிந்தர் பத்தினிக்கு எழுதிய கடிதங்கள்

பதிப்பித்த நூல்கள்

மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு

நாட்டுப்பாட்டு, பாப்பா பாட்டு

முரசுப்பாட்டு, குயில்பாட்டு

பாரதி அறுபத்தாறு

ராஜாஜியின் ஆத்ம சோதனை

பி.வி. சுப்பையாவின் மாதர்கடமை

திரு. வாசகம் (மலிவுப்பதிப்பு)