(1900-1980)

2000

mayila_seeni_200தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும்புலவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி ‘யாப்பருங்கல விருத்தி’ என்னும் நூலைப் படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாகக் கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. ‘அடடா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?’ என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர்.

இத்தகைய நூல்களின் பெயர்களைத் தொகுத்து வெளியிட நினைத்து, அதனைச் செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி. ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,’ களப்பிரர் காலத் தமிழகம் என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதி பெருமை பெற்றவர். ‘கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1. கிறித்துவமும் தமிழும்

2. பௌத்தமும் தமிழும்

3. சமணமும் தமிழும்

4. மகாபலிபுரத்து ஜைன சிற்பம்

5. இறையனார் களவியல் (ஆராய்ச்சி)

6. பௌத்தக் கதைகள்

7. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்

8. மகேந்திரவர்மன்

9. நரசிம்மவர்மன்

10. மூன்றாம் நந்திவர்மன்

11. புத்த ஜாதகக் கதைகள்

12. அஞ்சிறைத்தும்பி

13. கௌதம புத்தர்

14. மறைந்து போன தமிழ் நூல்கள்

15. சாசனச் செய்யும் மஞ்சரி

16. மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்

17. பழங்காலத் தமிழ் வாணிகம்

18. கொங்கு நாட்டு வரலாறு

19. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

20. இசைவாணர் கதைகள்

21. உணவு நூல்

22. துளுவ நாட்டு வரலாறு

23. சமயங்கள் வளர்த்த தமிழ்

24. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

25. சேரன் செங்குட்டுவன்

26. 19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்

27. சங்க காலச் சேர சோழ பாண்டியர்

28. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்

29. நுண் கலைகள்

30. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

31. சிறுபாணன் சென்ற பெருவழி

32. மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)

33. பழந்தமிழும் பல்வகைச் சமயமும்