2002

sethuammal_230எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் சகோதரியான இவர் தன் வீட்டில் நிலவிய இலக்கியச் சூழலின் உந்துதலால் எழுதியவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எழுதியவர். இவருடைய கதைகள் காந்தி, சித்திரபூI, பெண்மணி, மங்கை, சிவாஜி, ஹிந்துஸ்தான், ஆனந்தவிகடன், கதாமணி, புதுமைப்பெண், நவயுவன், கதம்பம், கிராம ஊழியன், கலாமோகினி, சுதேசமித்திரன், மின்னல், குண்டூசி, திரட்டு, மணிக்கொடி, வசந்தம், கதைக்கடல், தேனீ, கலைமகள், கல்கி, தினமனி, தினமணிக்கதிர், தினமணிச்சுடர், வெள்ளித்திரை, அருணோதயம் ஆகிய இதழ்களில் வெளியாகின.

நாவல்கள்

மைதிலி (வைரம் பதிப்பகம்)

உஷா (வைரம் பதிப்பகம்)

தனி வழியே (வைரம் பதிப்பகம்)

ஓட்டமும் நடையும் (வைரம் பதிப்பகம்)

அம்பிகா (மல்லிகைப் பதிப்பு)

கல்பனா (மல்லிகைப் பதிப்பு)

குரலும் பதிலும் (இமயம் பதிப்பகம்)

உண்மையின் உள்ளம் (வள்ளுவர் பண்ணை)

சிறுகதைத் தொகுதிகள்

தெய்வத்தின் பரிசு (வானதி பதிப்பகம்)

வீர வனிதை (மின்னொளி பதிப்பகம்)

உயிரின் அழைப்பு (சாரதி பிரசுரம்)

ஒளி உதயம் (புதுமலர் நிலையம்)

சமையல் நூல்

சமயற்கலை (இருபாகங்கள்) _ (வானதி பதிப்பகம்)

சரித்திரம்

பாரதப்பெண் - மல்லிகை பதிப்பகம்

போதி மாதவன் (புத்தர் வரலாறு) - சேகர் பதிப்பகம்
Pin It