(1826-1889)

-2007  

தமிழ்ப் புதின இலக்கியத்தின் தந்தை என்ற பெருமைக்குரிய வேதநாயகம் பிள்ளை சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் இன்பம் ஊட்டுவதற்காகவும், அறிவூட்டுவதற்காகவும், புதினத்தைப் பயன்படுத்த முடியுமென எதிர்கால எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியவர். தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டிருந்த தொய்வையும், வறட்சியையும் போக்கிப் புத்துயிரூட்டி, இலக்கிய வளர்ச்சிக்குப் புதிய களங்களை அமைத்துக் கொடுத்தவர் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் மொழி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 

வேதநாயகம்பிள்ளையின் படைப்புகளும் அவை வெளியான ஆண்டுகளும்

உரைநடை

1. பெண் கல்வி 1869

2. பெண் மானம் 1870

3. பிரதாப முதலியார் சரித்திரம் 1879

4. சுகுணசுந்தரி 1887 கவிதை

5. நீதிநூல் 1858

6. பெண்மதி மாலை 1869

7. பொம்மைக் கலியாணம்

8. சோபனப் பாடல்கள் 1862

9. தனிப் பாடல்கள் 1908

சமய இலக்கியம் (கவிதை)

10. திருவருள் மாலை 1873

11. திருவருள் அந்தாதி 1873

12. தேவமாத அந்தாதி 1873

13. தேவ தோத்திர மாலை 1889

14. பெரிய நாயகி அம்மை பதிகம் 1873

இசை

15. சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் 1878

16. சத்திய வேதக் கீர்த்தனைகள் 1889

மொழிபெயர்ப்பு

17. சித்தாந்த சங்கிரகம் 1862

18. 1850 - 61 ஆண்டுகளின் நீதிமன்றத் தீர்ப்புகள் 1863

Pin It