-2009

tho_mu_si_ragunathanதிருநெல்வேலியில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரும் உண்டு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர். இவருடைய படைப்புகள் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ருஷ்யாவிலும் பிரசுரிக்ப்பட்டுள்ளன. 1965-ல் சோவியத்நாட்டின் நேரு நினைவு இலக்கியப் பரிசைப் பெற்றவர். சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டவர். இடதுசாரிகளின் இலக்கியம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆழமாக கால் பதித்தவர்.

ரகுநாதன் நூல்கள்

1. சேற்றில் மலர்ந்த செந்தாமரை (கதை)

2. க்ஷணப்பித்தம் (கதை)

3. பஞ்சும் பசியும் (நாவல்)

4. புயல் (நாவல்)

5. கன்னிகா (நாவல்)

6. ரகுநாதன் கவிதைகள்

7. கவியரங்கக் கவிதைகள்

8. காவியப்பரிசு

9. தமிழால் ஏலாதா?

10. மருதுபாண்டியர் (நாடகம்)

11. சிலை பேசிற்று (நாடகம்)

12. புதுமைபித்தன் வரலாறு

13. சமுதாய இலக்கியம்

14. இலக்கிய விமர்சனம்

15. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்

16. இளங்கோவடிகள் யார் (சிலப்பதிகாரம் பற்றிய சமூகவியல் ஆய்வு)

17. முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

18. புதுமைபித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் (வரலாற்றியல் பூர்வமான இலக்கிய ஆய்வு விமர்சனம்)

19. பாரதியும் ஷெல்லியும்

20. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

21. பாரதி - சில பார்வைகள்

22. பாரதி - காலமும் கருத்தும்

23. பாரதியும் புரட்சி இயக்கமும்

24. பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்

25. தாய் (மாக்சிம் கார்க்கி) (தமிழாக்கம்)

26. மூன்று தலைமுறைகள் (தமிழாக்கம்)

27. பிரமச்சாரியின் டைரி (தமிழாக்கம்)

28. தந்தையின் காதலி (தமிழாக்கம்)

29. சந்திப்பு (தமிழாக்கம்)

30. அக்கினி பரீட்சை (தமிழாக்கம்)

31. வசந்தமே வருக (தமிழாக்கம்)

32. இதயத்தின் கட்டளை (தமிழாக்கம்)

33. நாளை இருவர் (தமிழாக்கம்)

34. துரோகி (நார்வீஜியக் கதைகள்) (தமிழாக்கம்)

35. நவசீனக் கதைகள் (தமிழாக்கம்)

36. சோவியத் நாட்டுக் கவிதைகள் (தமிழாக்கம்)

37. லெனின் கவிதாஞ்சலி (தமிழாக்கம்)

38. மதத்தைப்பற்றி (தமிழாக்கம்)

Pin It