(1889-1951)

1998

வ.ரா.என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட வ. ராமசாமியைத் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சி.என் அண்ணாதுரை அக்கிரஹாரத்தின் அதிசய மனிதர் என்று குறிப்பிடுவார். தஞ்சை மாட்டம் திருவையாறுக்குப் பக்கத்தில் உள்ள திங்களூரைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் வரதராஜ அய்யங்கார் பொன்னம்மாள் தம்பதியினர். இவர் பாரதியின் பெருமைகளைப் பரப்புவதைக் கடமையாகக் கொண்டார். இவர் புதுவையில் தங்கி இருந்த போது பாரதியின் நட்பு கிடைத்தது. அந்த நட்பின் அனுபவமே பின்னாளில் மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூலாக வந்தது. பங்கிம் சந்தர சாட்டர்ஜியின் எழுத்துகளை வங்காளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார். மேலும் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களில் எழுதினார். 1914 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். பிறகு வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றினார்.

வ.ரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் சேர்ந்ததுதான் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அந்த வகையில் கல்கி, புதுமைப்பித்தன் போன்றவர்களைக் கூறலாம். கல்கியின் முதல் புதினமான விமலாவை சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார். வ.ரா. வைதீக வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குல ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிட்டவர். பூணூல் கிடையாது. குடுமி இல்லை. பெற்றோர், உற்றார், சகோதரர் ஆகிய உறவுகளைத் துறந்தார். இலங்கையில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது புவனேஸ்வரி அம்மையாரை மணந்து கொண்டார். இவர் எழுதியவை நான்கு புதினங்கள். ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள் ஆகும்.

 

சுவர்க்கத்தில் சம்பாஷணை

கற்றது குற்றமா

மழையும் புயலும்

வசந்த காலம்

வாழ்க்கை விநோதங்கள்

சின்ன சாம்பு

சுந்தரி

கலையும் கலை வளர்ச்சியும்

வ.ரா. வாசகம்

விஜயம்

ஞானவல்லி

மகாகவி பாரதியார்

வாழ்க்கைச் சித்திரம்
Pin It