சொன்னவர் யார்?

1.  ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம்.
2. புத்தகத்தை கையில் எடுக்கும் போது ஒரு மனிதனின் இதயத்தை கையில் எடுக்கிறீர்கள்.
3. ஒரு மனிதனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வாங்கித் தருவதைவிட ஓரிரண்டு புத்தகங்களை வாங்கித்  தாருங்கள்.
4. எனது முன்னேற்றம் அனைத்திற்கும் எனக்கு உதவிய ஒரே ஆசான்\ புத்தகங்கள்தான்.
5. எந்த ஊரில் ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அந்த ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
6. ஒரு புத்தகத்தை காப்பாற்றி அதை அடுத்த தலைமுறைக்கு தருபவனே உண்மையான மனித இனத்தின் விடிவெள்ளி.
7.  ஓர் ஆட்சி பீடத்தையே உலுக்கிப் பார்க்கும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.
8.  மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமானதும் அதிக பயனுள்ளதும் எது என்றுக் கேட்டால், அது புத்தகம் என்பேன்.
9.  நல்ல புத்தகம் என்பது திறக்கப்பட்டு..ஆச்சரியத்தோடும் நன்றி உணர்வோடும் மூடப்படுவதே ஆகும்.
10. சில புத்தகங்களை\மேலெழுந்தவாரியாக சுவைக்க வேண்டும்... சிலவற்றை அப்படியே முழுங்க வேண்டும்... ஒரு சிலவற்றை முழுமையாய் கடித்து சுவைத்து செரிக்க வேண்டும்.


விடைகள்:
1.சர் ஐசக் நியூட்டன்
2.வால்ட் விட்மன்
3.இங்கர்சால்
4.வின்ஸ்டன் சர்சில்
5.சுவாமி விவேகானந்தர்
6.ஜான் மில்ட்டன்
7.கார்லைல்
8.சாமுவேல் ஜான்சன்
9.மார்டின் லூதர்
10. பிரான்சிஸ் பேக்கான்

Pin It