இந்திய நாணயமான ரூபாயை குறிக்க இந்தி ‘ருப்பியா’ என்பதன் முதலெழுத்தையும் ஆங்கில ‘கீ’ எழுத்தையும் இணைத்து புதிய குறியீட்டை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இது இந்திய மரபை குறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இதற்கு ஒரு ஞாயமும் சொல்கிறது. 

      பல மொழி, பல பண்பாடு, பல வரலாறு கொண்ட பல்தேசிய இன துணைக் கண்டமான இந்தியாவிற்கு மொழிகடந்த, ஒரு குறியீட்டை பயன்படுத்துவதே சனநாயக நெறியாகும். இந்தி வடிவத்தை ஒட்டு மொத்த பலமொழி மக்கள் மீது குறியீடாகத் திணிப்பது இந்தி வல்லாண்மையை நிலைநிறுத்தும் ஆதிக்க நடவடிக்கையாகும். 

      இதை வடிவமைப்பதற்கு தமிழகத்திலிருந்து உதயக்குமார் என்ற கருங்காலி கிடைத்திருக்கிறார். அவர் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகனாம். அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி பாராட்டுப் பத்திரம் அளிக்கிறார். 

      தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில ஏடுகளை முந்திக் கொண்டு, இப்புதியக் குறியீட்டை ‘தினகரன்’ தொடங்கி பல்வேறு தமிழ் ஏடுகள் பயன்படுத்தி அடிமைப்புத்தியை வெளிப்படுத்துகின்றன. 

      இக்குறியீட்டை பயன்படுத்த வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தமிழர்கள் இக்குறியீட்டை பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்.