தமிழர்களையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும், மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் அந்தப் படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.திரையரங்க உரிமையாளர்கள் தமிழகத் தில் இப்படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துவிட்டனர். இன்னொரு புறம் மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பது கருத்துவுரிமைக்கு எதிரானது என்கிற கருத்தும் வழக்கம் போல் பரப்பப் பட்டு வருகிறது.

அதுவும் வட இந்திய ஊடகங்களும் ஆங்கில ஊட கங்களும் விஸ்வரூபம், தலைவா, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிட எழுகின்ற சிக்கலை மையப் படுத்தி, தமிழ்நாடு கருத்துவுரிமைக்கு எதிரான மாநிலமா? என சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களையும் ஓரே நேர்க்கோட்டில் பொருத்தி வைப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை! அநீதி!!

உண்மைதான், ஒரு திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது தான். மேம்போக்காகப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றும். ஆனால் மெட்ராஸ் கஃபே படத்துக்கான எதிர்ப்பு என்பது வெறுமனே அந்தப் படத்துக்கு எதிரான போராட்டம் அல்ல. இது இந்திய அரசுக்கு எதிரான போராட்டம். இந்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு எதிரான போராட்டம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப் பட்ட பாலை திரைப்படத்தில், ஈழமும் கிடையாது, சிங்களமும் கிடையாது. ஏன்? விடுதலைப்புலிகளும் கிடையாது.

ஆனால் அந்தப் படத்தில் தீயவர்களாக (திரைப்பட மொழியில் வில்லன்களாக) சித்தரிக்கப்பட்ட கதாப் பாத்திரங்கள் தங்கள் உடலில் சிங்கத்தின் உருவத்தைப் பச்சை குத்தியிருப்பார்கள். அந்தப்படம் தணிக்கைக்குச் சென்ற போது தணிக்கைத் துறை அதிகாரி திருவாளர் பக்கிரிசாமி அவர்கள் சிங்கத்தின் உருவத்தை மறைக்க சம்மதித்தால் தான் படத்தை வெளியிட அனுமதிக்க முடியும்; மறுத்தால் படத்துக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.

சிங்கத்தின் உருவத்தைத் திரையில் காட்டுவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று கேட்டால், அதற்கு அவர் சொல்கிறார். “சிங்கம் நம் அண்டை நாடு இலங் கையின் அடையாளம். உங்கள் படம் அந்த நாட்டு டனான உறவை சிதைப்பது போல் உள்ளது” என்றாரே பார்க்கலாம். ஆக ஒரு திரைப் படத்தில் சிங்கத்தின் உருவத்தை கொடூரத்தனத்தோடு ஒப்பிட்டுக் காட்டி னால் அது சிங்களவர் களுக்கு எதிரானது; அதை வெளியிடக் கூடாது (கடைசியில் சிங்கத்தின் உருவம் மறைக்கப்பட்ட பின்னர்தான் பாலை படம் வெளி யானது) என்று தடை விதிக்கின்ற இந்திய அரசின் போக்கு கருத்துரிமைக்கு ஆதரவானதா?

ஆபாசமாக படம் எடுக்கலாம்; அரி வாளால் மனிதத் தலையை அறுப்பது போல் காட்சிகள் வைக்க லாம். வன்முறை வெறியாட்டத்தை காண்பிக்கலாம். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக சித்தரிக்கலாம். இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கலாம். ஏன் இந்திய அரசியல்வாதிகளை ஊழல் செய்பவர்களாக காட்சிகள் கூட வைத்துக் கொள்ளலாம். காவல் நிலையங்கள் பாலியல் வன்புணர் வுக் கூடங் களாக மாறி வதைக் காட்டினால் கூட சகித்துக் கொள் ளும் இந்திய அரசு, இலங்கைக்கு எதிராக இம் மியளவும் நம் படங்களில் காட்சி கள் வந்து விடக் கூடாது என்பதில் ஏன் இவ்வளவு உறுதி யாக இருக்கிறது?

அப்படியே வந்தால் அந்தப் படம் திரைக்கு வரவே முடியாது. இதுதானே இந்தியத் தணிக்கைத் துறையின் எண்ணமும் செயலுமாக இருக்கிறது.

தேன்கூடு என்று படம். ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் போராளி ஒருவர் ஈழப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ்கிறார். இன விடுதலைக்காக அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. அது ஒரு ஈழ வரலாற்றுப் படம். இந்தப் படத்தின் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய முன்னோட்டக் காட்சி யில் (டிரைலர்) இருந்த ஈழம்--ஈழத் தமிழர்கள், தமிழினம் என்கிற வார்த்தைகளையும், ஈழ வரைபடம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை நீக்கி விட்டுத்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது.

தேன்கூடு படத்துக்கு இந்தியத் தணிக்கைத் துறை அனுமதி வழங் காது என்பதால் இந்தப் படத்தை இன்றுவரை தமிழ் நாட்டில் வெளியிட முடியாமல் வெளி நாடு களில்-புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் திரையிடப் பட்டு வருகிறது. இதனால், இந்தப் படத்தைத் தயாரித்த தமிழுணர் வுள்ள தயாரிப்பாளர் இன்று வரையில் பொருளாதார நெருக்கடி யில் சிக்கித் தவித்து வருகிறார்.

பாலைக்கும், தேன்கூடுக்கும் இன்னும் எத்தனை எத்தனையோ படங்களில் தமிழர் உணர்வுகள் வெளியாகாமல் பாதுகாத்து வரும் இந்தியத் தணிக்கைத் துறைதான் மெட்ராஸ் கஃபே படத்துக்கு சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது. ஏனெ னில் மெட்ராஸ் கஃபே தமிழர் உணர்வுக்கு எதிரான படம். தமிழர்களுக்கு எதிரான படம். இந்தப் படத்தில் நல்லவரெல் லாம் மலையாளிகள், கொலைச் சதிகா ரர்களெல்லாம் தமிழர்கள். ஒரு கண்ணில் வெண்ணையும் இன் னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறது இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறை.

ஆக, இந்தியத் தணிக்கைக் குழு சான்றிதழ் தந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிரான போராட்டம், தமிழர் உணர்வுக்கு எதிராக செயல்படும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஒரு தேசிய இனத்தை எப்படி வேண்டுமென்றாலும் அவதூறு செய்யலாம் என்பது படைப்பு சுதந்திரத்தின் பெயரால், கருத்து ரிமை பெயரால் இங்கு திணிக்கப் படுகிறது. இந்த மாய்மாலத்தில் தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித் ததில் கணிசமாக மக்கள் குழம்பி யதால்தான் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படு கொலை யான போது இந்தியாவை எதிர்த்து பெரிய எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை.

இப்போதுதான் இளம் தமிழ்ச் சமூகம் எழுச்சி கொண்டு வருகிறது. இதைக்குழப்பி, பிளவுபடுத்த இந்திய அரசு பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.

ஜான் ஆபிரகாமின் “மதராஸ் கஃபே படமும் அந்த வரிசையில் ஒன்று என ஐயப்பட இடமுண்டு.

இந்த நேரத்தில், இன்னொன் றையும் நாம் இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப் படத்துக்கு தமிழ் மக்கள் அளித்த வரவேற்பினால்தான் இன்றைக்கு அறப்போர் ஆவணப் படத்தைத் தயாரிக்க நண்பர் திரு. சி. கபிலன் அவர்கள் முன்வந்தார். அறப் போர், இப்படிக்கு தோழர் செங் கொடி ஆகிய படங்கள் சுவிசர்லாந் தில் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது! இங்கே எல்லாம் திரையிட எந்தத் தணிக்கைக் குழுவின் சான்றிதழும் தேவை இல்லை.

தமிழ்நாட்டில் இந்தப் படங் களைப் எடுக்கவும் குறுந்தகுடு களை வீட்டுக்கு வாங்கிச் சென்று பார்க்கவும் எந்தத் தணிக்கைத் துறையின் சான்றிதழும் தேவை யில்லை. தமிழ் உணர்வுக்கு எதிராக எடுக்கப்பட்ட மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்க்கும் அதே வேளை யில், தமிழர் உணர்வை பிரதிபலிக் கும் படங்களுக்கு ஆதரவு அளிப்ப தும் அவசியம்.

அப்போதுதான், காவிரி சிக் கலை, தமிழர்களின் வீரத்தை உல கிற்கே பறைசாற்றிய ஈழவிடுதலைப் போரை, தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் கொல்லப்படும் கொடூரத்தை மையமாக வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர் களும், இயக்குநர்களும் முன் வரு வார்கள்.