1990-இல் இருந்து இந்திய ஆட்சியாளர் கள் ஒவ்வொரு துறை களிலும் உலக மய, தனியார்மய, தாரா ளமய கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

முதலாளிகளும், அரசியல் வாதிகளும், வர்த்தக நிறுவனங்களும் ஒன்றுக்குள் ஒன்று கலந்த ஒட்டுண்ணி முதலாளியம் தீவிரமாக வளர்ந்து வருகிறது. கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன.

வணிக நிறுவனங்கள் தங்கள் இலாபவெறிக்காக எந்த பொய்யையும் சொல்லத் தயங்குவதில்லை. இயற்கையை வெறும் மூலதனப் பொருளாககருதுகின்றன. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற நுகர்வு பண்பாட்டை உருவாக்குகின்றன. மனித உறவுகளை சிதைத்து உதிரி மனிதர்களை, ஒழுக்கமற்ற மனிதர்களை தங்கள் விளம்பரங்கள் மூலம் உருவாக்க முயல்கின்றன.

கிழக்கிந்திய கம்பெனி தொடங்கி இன்றுள்ள பல நிறுவனங்கள் நடத்தும் வணிகத்தை, அரசியலை - இந்த வணிக நிறுவனங்கள் செய்யும் விளம்பரத்தை - நம்பி ஏமாந்து அழியும் மக்களின் அறியாமையை - ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கை நகைச் சுவை உணர்வோடு எல்லோரும் ரசித்து உணர்ந்து புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது வியாபாரமாயணம் நாடகம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை தலை வராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற வரும், மதுரை நிஜநாடக இயக்கத்தின் இயக்குனருமான முனைவர் மு. இராமசாமி அவர்கள் எழுத்துருவாக்கத்தில் பெர்ச் நாடகக்குழு வின் தலைவர் இயக்குனர் ராஜீவ் கிருஷ்ணன் இயக்கத்தில், பெர்ச் நாடகக் குழுவால் வியாபாரமாய ணம் கடந்த 12-12-2013 அன்று தஞ்சை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மற்றும் முள்ளிவாய்க்கால் முற்றகலை இலக்கிய வட்டம் அமைப்புகள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிகழ்த்தப்பட்டது.

பெர்ச் நாடகக் குழு குழந்தைகள் நாடகமான ஜீஜீபி (JUJUBEE),), மிசஸ் மீனா, கீராவின் கதைகளைக் கொண்ட கி.ரா. குழம்பு உள்ளிட்ட பலநாடகங் களை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, வங்காள மொழிகளில் நடத்தியுள்ளது.

ஸ்பார்ட்டக்கஸ, கலிலியோ நாடகங்களைத் தொடர்ந்து கலகக்காரர் “தோழர் பெரியார்” நாடகம் மூலம் தமிழக முழுமைக் கும் அறிமுகமானவர் மு. இராமசாமி அவர்கள்.

திருநங்கைகளின் மனவலியை சமூகத்திற்கு வெளிப்படுத்தியது இவரின் “வலி அறுப்பு” நாடகம். திருநங்கையர்களை கிண்டலும், கேலியும் செய்கிற சமூகத்தில் அவர்களை சிறப்பாக நடிக்க வைத்து, அவர்களின் உள்ளக் குமுறல்களை தன் எழுத்து, நடிப்பின் மூலம் அருமையாக வெளிப்படுத்தியவர். கீழத் தஞ்சையில் சாட்டையடி, சாணிப்பால் கொடுமை களுக்கு ஆளான ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராடி உரிமைகள் பெற்றுத் தந்த தலைவர் பி. சீனிவாசராவ் வாழ்க்கை வரலாற்றை வாட்டாக்குடி இரணியன் - ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் இவர்களின் தியாக வரலாற்றை ஈழப் போர் வாயிலாக உள்ளத்தை தொடும் வகையில் சொன்னது இவரின் ‘தோழர்கள்’ நாடகம்.

வியாபாரமாயணத்தையும் தோழர்கள் நாடகத் தைப் போலவே பல்வேறு கருத்துக்களை ஒன்றுக்குள் ஒன்று என்ற தன்மையில் சொல்லி உள்ளார்.

மேடையில்மொத்தமே மூன்று பேர்தான். ஒருவர் இசைக் கலை ஞர். இரண்டு பேர் நடிகர்கள். மனிதன் இயற்கை, யானை இயற்கை மனிதனின் முகத்தில் யானையைப் பொருத்தியது மனிதனின் கற்பனை (புனைவு). மனித முகத்தில் யானையைப் பொருத்தி அதனை விநாயகர் என்று வணங் குவதும், அந்த விநாயகர் பல் வேறு வேடங்களை விநாயகர் சதுர்த்தி நேரத்தில் எடுப்பதையும் கிண்டலாக சொல்லி தொடங்குகிறது நாடகம்.

நாத்திகம், ஆத்திகம் - உண்மை - புனைவு - சிகப்பு, காவி, மஞ்சள், பச்சை நிறங்களின் அரசியல் ஊடாக தொடங்குகிறது வியாபா ரமாயணம்.

உண்மை, புனைவு - இவைக ளைப் புரிந்துகொள்ளாத தன்மைகளை நம்முடைய அறியாமை உணர்வை நாடகம் முடிந்ததும் புரிந்துகொள்கிறோம்.

கிழக்கிந்திய கம்பெனி வணி கம் செய்ய வந்து அரசியல் அதிகா ரத்தைக்கைப் பற்றியது. தனியார் மயம், தாராளமயம், உலகமயம் இவை சார்ந்த செய்திகளை சற்றும் சோர்வளிக்காமல்விளக்கம் சொல்வது பாராட்டுக்குரியது.

மழை இல்லை, மானியம் இல்லை, மின்சாரமும் இல்லை என்ன செய்வது? ம.மா.மி.(மழை, மானியம், மின்சாரம்) இல்லை யயன்றால் என்ன ரியல் எஸ்டேட் விற்பனை இருக்கு.

உயிர்வாழ ஆதாரமான உழ வுத் தொழிலை விட்டு உழவர் களை விரட்டிவிட்டு ரியல் எஸ் டேட் வணிகமும், ஐ.டி.துறை வளர்ச்சியும் நமக்கு உணவு தருமா? தற்கொலை சாவை தடுத்து நிறுத்துமா? சிந்தனை தூண்டுகிற காட்சிகள்- வசனங்கள் நம்முடைய துயரங்களைகாசாக்குகிற தொலைக்காட்சிகள், தொலைக் காட்சிப் பேட்டிகள் சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் நம்மைத் தூண்டுகின்றன.

விவசாயம் இல்லை என்றால் என்ன? நெகிழி அரிசியை உற்பத்தி செய்வோம். நெகிழியை சாப்பிடு வார்களா? 24 மணிநேர தாம்பத்யத்துக்கும்பயன்படுத்துறது நெகிழி அரிசியத்தான்.

நெகிழி தான் எனக்கு பிடிச்ச அரிசி-இப்படி நம்முடைய நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் கொண்டு விளம்பரம் செய்வோம்.

விளம்பரத்தைப் பார்த்து நம் மாளு நெகிழி அரிசியைத்தான் வாங்குவான். நம்மிடமிருக்கும் விளம்பர மோகத்தை நாடகம் நன்றாகவே நக்கலடிக்கிறது. சில இடங்களில்சாட்டையாலும் அடிக்கிறது.

நெகிழி என்றால் பிளாஸ்டிக் என்று விளக்கம் சொல்லும் போது சிரிப்பலைகள் எழுகின்றன.

கல்வி, மருத்துவம் வணிகமய மாகிவிட்டது. மருத்துவர்களும் வணிகமயச் சூழலுக்கு இறையாகி விட்டார்கள். உண்மையை சொல்கிற மருத்துவர்கள் மிகக் குறைவு.

நெகிழி அரிசி சாப்பிட்டா சுகர் இல்லை, பிபி இல்லை எதுவு மில்லை என்றுகூட மருத்துவர்கள் சொல்வார்கள் என்கிற காட்சி நம் முடைய நெஞ்சையடைக்கிறது.

நீங்கள் இரவு லேட்டா வந்தா நெகிழி அரிசியோடத்தான் வரனும் (இதயம் நல்லெண்ணை விளம்பரம்) நெகிழி நெகிழி நெகிழி (வாசிங் பவுடர் நிர்மா விளம்பரம்) என விளம்பரங்களை நன்றாகவே கிண்டலடித்து உணர்த்தி இருக்கிறார்கள். உங்கள் பணம் உங்கள் கையில் அரசின் திட்டத்தை கிண்டல டிக்கிற காட்சி அருமையானது. கடந்த காலத்தில் இந்தியன் வங்கி உங் களது வங்கி என்று வானொலியில் விளம்பரம் வரும். அப்போது கவிஞர் அறிவுமதி “இந்தியன் வங்கி அது உங்களது வங்கி. சுவிஸ் வங்கி எங்களது வங்கி” என்ற கவிதை எழுதினார். அதைப் போலவே நம்முடைய ஆட்சியாளர்கள் உங்கள் பணம் எங்கள் கையில் எங்கள் பணம் சுவிஸ் வங்கி யில் என்பதை நினைவுப்படுத்துகிறது.

முனைவர் மு. இராமசாமி, ஆனந்த்சாமி இருவரும் மேடை நடிகர்களாக வெகு சிறப்பாக நடத்துள்ளார்கள்.

பல்வேறு கதாபாத்திரங்களையும் இவர்கள் இருவரும் வெவ்வேறு தன்மையில் சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஆனந்த் சாமி மிகச்சிறந்த அற்பு தமான நடிப்புத் திறன் மூலம் நாடகத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். முகபாவங்கள், நடனம், உரையாடல் உச்சரிப்பு என அனைத்து வகைகளிலும் ஈடு இணையற்ற திறமை உடைய ஆனந்த் சாமியை நாடக உலகமும், திரைஉலகமும் நன்குபயன் படுத்திக்கொள்ளவேண்டும்.

நெல்லை மணிகண்டனின் இசை நாடகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. குறைந்த இசைக்கருவிகளைக் கொண்டு மிகச் சிறப்பாக செய்துள்ளார். மிகக் குறைந்த செலவில் நடை பெறும் இந்நாடகம், தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும். ஒரு மணிநேரம் நடைபெறும் இந் நாடகம் மனம்விட்டு சிரிக்கவும், சிந்திக்கவும் மட்டு மல்ல உலக மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வையும் தூண்டுகிறது.

Pin It