thamilarkannotam 400ஜன்லோக்பால் சட்டம் கோரி காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய அன்னா அசாரே - தில்லி தேர்தலில் வென்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் ஆகியோர் வடநாட்டு ஆங்கில ஊடகங்களில் பேசப் பட்டு வந்த அதே காலகட்டத்தில், பஞ்சாபில் நடை பெற்று வரும் உழவர் ஒருவரின் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் 43 நாட்கள் ஊடக வெளிச்சமின்றி நடைபெற்றது.

பஞ்சாபில் அரசியல் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி, குர்பக் சிங் என்ற சீக்கிய உழவர் நடத்திய காலவரையற்ற உண்ணாப் போராட்டமே அது. கடந்த நவம்பர் 14 அன்று உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கிய அவர், இந்தியச் சிறைகளில் வாடும் அரசியல் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதேயே தனது போராட்டத்தின் அவரது முதல் கோரிக்கையாக அறிவித்தார்.

1984ஆம் ஆண்டு பஞ்சாபில் நீலநட்சத்திர நடவடிக்கை என்ற பெயரில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில், சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற் கோவிலில் இந்திய இராணுவம கொடுந்தாக்குதல் நடத்தியது. சீக்கி யர்களின் தனிநாடு விடுதலைக் கோரிக்கைக்காகப் போராடிய பிந்தரன்வாலே உள் ளிட்ட பல சீக்கியத் தலைவர்கள் அதில் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசின் நீலநட்சத்திர நடவடிக்கையை எதிர்த்துப் போராடிய பல சீக்கியர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டனர். அவ்வாறு போராடிய 118 பேர் பஞ்சாபில் இன்றைக்கும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு சண்டிகர், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், உத்திரப்பிரதேசம் மாநிலச் சிறைகளில் 18 ஆண்டுகளைக் கடந்து வாடும், 6 பேரை மட்டும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென் பதே குர்பக் சிங்கின் இரண்டாம் கோரிக்கையாகும்.

போராட்டத்தின் 6ஆம் நாள், ஹரியானா காவல் துறையினர், மொகாலி நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவுக்குள் நுழைந்து குர்பக் சிங்கை கைது செய்து, தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்து ரோப்பார் சிறையில் அடைத்தனர். இதனைக் கண்டித்து, குர்பக் சிங்கிற்கு ஆதரவாக 6 பேர் உண்ணாப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குர்பக் சிங் சிறையிலும் உண்ணாப் போராட்டத்தைத் தொடரவே, அவரை 10.12.2013 அன்று விடுவித்தனர். விடுவிக்கப்பட்டதும், கைது செய் யப்பட்ட அதே இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், போராட்டத்தின் 23ஆம் நாள், இரவு நேரத்தின் போது, குர்பக் சிங்கை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை, அவரை மருத்துவமனையில் அனுமதித்து வலுக்கட்டாயமாக உணவூட்ட முனைந்தது. அதனை எதிர் கொண்ட குர்பக் சிங் தொடர்ந்து உணவு மறுப்பில் ஈடு பட்டார்.

குர்பக்சிங் உண்ணாப் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாபில் மட்டுமின்றி, சீக்கியர்கள் அதிகமாக வாழும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. திசம்பர் 18 அன்று, கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டம் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியாக அமைந்தது.

இதனையடுத்து, கன்சர் வேட்டிவ் கட்சியில் பண்பாட்டுத்துறை அமைச்சராகவுள்ள கனடா வாழ் சீக்கியரான டிம் உப்பால், அங் குள்ள இந்தியத் தூதரை நேரில் சந்தித்து குர்பக் சிங் போராட்டம் குறித்த கவலையை வெளியிட்டார். கனடா எதிர்க் கட்சியான NDP - கட்சியினர் 21.12.2013 அன்று, குர்பக் சிங்கின் உண்ணாப் போராட்டம் நசுக்கப் படுவது குறித்து அறிக்கை வெளியிட்டனர்.

22.12.2013 அன்று, தோழர் குர்பக் சிங்கிற்கு ஆதரவாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க, தில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழகத் திலிருந்து சென்ற மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மற்றும் தோழர் உமர் ஆகியோர் கலந்து கொண்டு, குர்பக் சிங்கின் போராட்டத்திற்கு தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

முதலில், போராட்டத்தின் கோரிக்கையை தங்கள் மாநில அரசு மட்டுமே நிறைவேற்றிட முடியாது என்று வாதிட்ட சண்டிகர் அரசு, பின்னர் 24.12.2013 அன்று, அனைவரையும் விடுப்பில் விடுதலை செய்யமுன்வந்தது. இதனையடுத்து, குர்பக் சிங் தனது போராட் டத்தை 26.12.2013 அன்று நிறைவு செய்தார்.

உறுதி செய்யப்பட்ட காசுமீர் போலி மோதல் கொலைகள்

கடந்த 2010ஆம் ஆண்டு - ஏப்ரல் 30 அன்று, காசு மீரின் மச்சீல் செக்டர் என்ற பகுதியில், “தீவிரவாதிகள்’’ எனக்குறிப்பிட்டு 3 இளைஞர்களை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. பின்னர் விசாரித்ததில், அம்மூவரும் அப்பாவி இளைஞர்கள் என்பது தெரிந்தது, இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை காசுமீ ரெங்கும் பெரும் போராட்டங்கள் நடை பெற்றன. அப்போராட் டங்களின் போது மட்டும் சற்றொப்ப 123 பேர், இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1948 முதல் காசுமீரை ஆக்கிர மித்துக் கொண் டுள்ள இந்திய இராணு வம், கடந்த 1989 சனவரி யிலிருந்து, 2013 நவம்பர் வரை சற்றொப்ப 93,975 பேரை படுகொலை செய் துள்ளதாகவும், 10,083 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுத்தி உள்ள தாகவும் காசுமீர் ஊடகசேவை மையம் (Kashmir Media Service) என்ற ஊடக அமைப்பு தெரிவிக்கிறது.

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு, காசுமீர் இளையோரிடம் கடும் வெறுப்பை விதைத்துள்ளது. இந்திய இராணுவத்தினர் மீது ஆங்காங்குகல்வீச்சு நிகழ்வுகள் தொடர்ந்தவாறே உள்ளன. கடந்த மாதம் கூட, வடக்கு காசுமீரின் பல்ஹலன் பகுதியில் இராணுவத்தினர் மீது கற்கள் வீசப்பட்தைத் தொடர்ந்து, அப் பகுதியில் உள்ள அப்பாவி இளைஞர்கள் பலரை இராணுவம் கைது செய்துள்ளது.

மச்சீல் செக்டர் - போலி மோதல் தொடர்பாக, அப் போது வெளியான தமிழர் கண்ணோட்டம் - ஆகத்து 2010 இதழில், போலி மோதலில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென எழுதியிருந்தோம். தற்போது, அப் போலி மோதலை நிகழ்த்திய கேணல் பத்தன்யா, மேஜர் உபிந்தர் உள்ளிட்ட 6 இராணுவ வீரர்களுக்கும் 3 ஆண்டுகள் நடைபெற்ற இராணுவ விசாரணை களுக்குப் பின், வெறும் பதவி நீக்கத்தையே பெரும் தண் டனையாக அளித்துள்ளது இந்திய இராணுவம். இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என ஹூரியத் மாநாட்டுக் கட்சியினரும், காசுமீர் விடுதலை இயக்கங் களும் கருத்துத் தெரிவித்துள்ளன.

இந்த 6 பேர் மீதும் பதவிநீக்கம் செய்வது மட்டும் போதாது. இவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி கொலை வழக்குப்பதிவு செய்து சிறையிடைக்க வேண் டும் என்பதோடு, இது போல பல்வேறு இடங்களில் இந்திய இராணுவம் நிகழ்த்தியுள்ள போலி மோதல் களை சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

Pin It