wrapper final copy

(குழந்தைகளைக் கொஞ்ச ஒரு தமிழக் கொஞ்சுமொழி)

உறைந்து கிடந்த உள்ளத்தை

நெருப்பின்றிச்

சிரிப்பெடுத்து உருக்குகிறாய்.

மெல்லக் கரைகிறேன் நான்.

சின்ன விரல்கொண்டு

சீராய் எனை வார்த்து

முன்னர் நிலை செய்தாய்.

அதனால் இன்று

உன்னைப் பாடுவேன்.

குமரிமக்கள் வாழ்வியலே

கொடுந்தமிழின் பேரறமே

குறள்பிறந்த பேரறிவே

புறத்தின் பொருட்செறிவே

அன்பின் அகப்பாட்டே

ஐம்பெருங் காப்பியமே

பதிணெண் கீழ்க்கணக்கே

பழகுதமிழ்ப் பத்துப்பாட்டே

உறையூர் மென்துகிலே

மறைமலைத் தனிமொழியே

பாண்டிய நன்முத்தே

பாவாணர்த் தமிழ்ச்சொல்லே

சேரமான் குறுமிளகே பெருஞ்

சித்திரனார்ப் பாவீச்சே

கீழடியின் நன்மணியே

கிஆபெ குறள்விரிவே

தென்மொழித் திரவியமே

சிந்துத் தமிழறிவே

சுமேரியச் சொற்கூட்டே

சொல்பிறந்த நல்லுலகே

மயக்கும் பறையலியே

மாண்புறு தமிழிசையே

பண்ணே பழந்தமிழே - இன்று

உன்னைப் பாடிடுவேன்.

Pin It

குடிக்க நீரின்றி

குதிரை மயங்கிச் சரிய

வீர நாராயண ஏரியின்

கானல் அலையும் கரையில்

குப்புற விழுந்தான் வந்தியத்தேவன்

நீரின்றி பொய்க்கவில்லை-காவிரி

நீதியின்றி பொய்த்துவிட்டது

புழுதியாற்றை இனியும்

பொறுக்க முடியாதென....

பொது ஆவுடையார் கோயிலில் கிடந்த

ஒற்றை வாளை உருவிக்கொண்டு

புறப்பட்டுவிட்டான்

பொன்னியின் செல்வன்

விவசாயிகள் போராட்டம் தானே என

நீங்கள் வீட்டுக்குள் இருப்பதெல்லாம்

அண்ணாச்சி கடையில்

அரிசியும் பருப்பும்

இருப்பு உள்ளவரைதான்.....

எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்

பசிக்கு சோறு வேண்டுமென

நீங்கள் உணரும்போது......

எல்லா நிலமும் பிளந்துகிடக்கும்

எல்லா உழவனும் இறந்துகிடப்பான்

 

பித்தம் தெளிய

காவிரி தீர்ப்பெழுதும்

காகிதத்துக்கு

மூங்கில் காடு

முந்நூறு அழித்தும்

தவணைப்படி

தண்ணீர் திறக்காமல்

திரும்பத் திரும்ப

தீர்ப்பெழுதும் திருநாட்டில்

நதிகளை இணைத்தால்

நாலு போகம் விளையும் என்போர்

பித்தம் தெளிய

சித்த மருத்துவம்

சிறந்ததெனக் கொள்க

Pin It

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஒருவேளை ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் அதில் விசாரணைக்குக் காவிரி வழக்கை அனுப்பக் கூடாது,  காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு புதிய  அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் முன்பு, கடந்த மார்ச்சு 28 அன்று தொடங்கி _- காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக -_ பத்தொன்பது நாட்கள் நடத்தி வந்த தொடர் அறப்போராட்டம், 15.04.2017 அன்று நிறைவடைந்தது. 

kaveri 600போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழர் தேசிய முன்னணி, விடுதலைத் தமிழ்ப்புலிகள், இந்திய சனநாயகக் கட்சி, மனித நேய சனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகளும்,  உழவர் அமைப்புகளும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

போராட்டம் நடைபெற்ற பத்தொன்பது நாட்களிலும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் முதல் நாளான 28.03.2017 அன்று, தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் பகுதி தோழர்களும், 29.03.2017 அன்று சென்னை, புதுச்சேரி, பெண்ணாடம், சிதம்பரம், காட்டுமன்னார் குடி, சீர்காழி, ஒசூர், கிருட்டிணகிரி, தருமபுரி, கோவை, ஈரோடு மாவட்டத் தோழர்களும், 30.03.2017 அன்று திருச்சி, மதுரை, திருச்செந்தூர், புளியங்குடி தோழர் களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் சுழற்சி முறையில் வெவ்வேறு நாட்களில் தோழர்கள் தொடர்ந்து வந்த அனைத்து நாட்களிலும் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளா ளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. விடுதலைச்சுடர், இரெ. இராசு, கோ. மாரிமுத்து, க. முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் தோழர் கதிர்நிலவன், திருச்சி மூ.த. கவித்துவன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை இரா.சு. முனியாண்டி, பாவலர் இராசாரகுநாதன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ. தேவதாசு, வல்லம் செயலாளர் தோழர் சி. முருகையன், செங்கிப்பட்டி தோழர்கள் ப.வு. சண்முகம், ஆனந்த், செயராஜ், மணிகண்டன், தஞ்சை மாநகரத் தோழர்கள் பன்னீர்ச்செல்வம், அண்ணா துரை, சீனிவாசன், குடந்தை தோழர்கள் பிரபு, செந்தமிழன், முத்துக்குமார் உள்ளிட்டோர் வெவ்வேறு நாட்களில் போராட் டப்பந்தலிலேயே தங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். 

மயிலாடுதுறை பெரியசாமி, சென்னை பழ.நல். ஆறுமுகம், காஞ்சிபுரம் நடராசன், புளியங்குடி க. பாண்டியன், ஈரோடு வெ. இளங்கோவன், புதுச்சேரி வேலுச்சாமி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, அரியலூர் மேலமைக்கேல்பட்டி வடிவேலன், சீர்காழி கோ. நடராசன், இராசராசன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேரியக்கச் செயல்பாட்டாளர்கள், அவரவர் பகுதி தோழர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஓசூரிலிருந்து திரு. வனமூர்த்தி தலைமையில் மைலான் நிறுவனத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட் சுமி, திருச்சி தோழர் வெள்ளம் மாள் ஆகியோர் அனைத்து நாட்களிலும் போராட்டத்தில் பங்கேற்றனர். தஞ்சை தோழர்கள் தமிழினி,இராசப்பிரியா, சரசுவதி,பெண்ணாடம் வித்தியா, ஓசூர் வழக்கறிஞர் பாக்கிய லட்சுமி உள்ளிட்ட திரளான மகளிர் தோழர்கள் வெவ்வேறு நாட்களில் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து செங்கிப்பட்டி, பூதலூர் பகுதிகளில் மாணவர்களும் இளைஞர்களும் பரப்புரை மேற்கொண்டனர். தமிழக இளைஞர் முன்னணித் தோழர் குழ.பா. ஸ்டாலின் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தார்.

Pin It

கல்வியே சமூக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கூறலாம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், “வானமே எல்லை” என்று கூறும் அளவிற்கு இளைஞர்களுக்கு கல்வி, வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவிக் கிடக்கின்றன.

மருத்துவம், துணை மருத்துவம், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, வனவியல், மீன் வளம், பொறியி யல், கலை, அறிவியல், கல்வியியல், மேலாண்மை, சட்டம், நூலக அறிவியல், உணவக வேளாண்மை, சுற்றுலா, இதழியல், வடிவமைப்பு, நுண்கலை, நிதி மற்றும் கணக்கியல், சமூகப்பணி, மனை யியல், விளம்பரத் துறை, மொழியியல், மானுடவியல், பொதுத் தொடர்பு, காப்பீடு, வங்கியியல், உடற்கல்வி, மறுவாழ்வியல், அழகுக்கலை, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, உணவு பதப்படுத்தல், உளவியல், உடற் கல்வி, காட்சி ஊடகவியல் போன்ற பலதுறைகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வளமாக உள்ளன. தொழில் முனைவோர் ஆக விரும்பும் இளைஞர்களுக்கும் ஏற்ற பல்வேறு படிப்புகள், இங்கே தாராளமாக வழங்கப்படுகின்றன.

ஆனால் நம் மக்களின் மனங்கள் சுருங்கி, சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே, வளர்ச்சி இருப்பதாக கருதி, அனைவருமே அந்த துறைகளில் சேர போட்டி யிடுவதுதான், தற்போதைய அடிப்படைச் சிக்கலாக உள்ளது.

கல்வி பெருமளவில் வணிகமயமாகிவிட்ட இன்றையச் சூழலில் தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும்  கல்வியைப் பயில வேண்டியது மிக அவசியமாகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும், அவருக்கேயுரிய தனித்திறன்கள் மற்றும் விருப்பங்கள் இருக்கும்.

முதலைக்கு தண்ணீரில் தான் பலம் அதிகம் என்பதைப்போல அவரவருக்கும் விருப்பமான துறைகளில் படித்தால், வாழ்வில் மிகச் சிறப்பாக வர முடியும். எனவே வாழ்வில் வெற்றி என்பது வேலைவாய்ப்புள்ள துறையைத் தேடுவதில் இல்லை; தமக்கு விருப்பமான துறையில், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதில் தான் உள்ளது.

பரிதாபத்திற்குரிய செய்தி என்னவென்றால், இன்றைய பெற்றோர்களும், மாணவர்களும், “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’’ என்பதைப் போல, எந்த படிப்பை, எந்த கல்லூரியில் படித்தால் அதிக ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்பதை மட்டுமே கொண்டு, உயர்கல்வியைத் தெரிவு செய்கின்றனர். உயர்கல்வியைத் தேர்வு செய்திட, மாணவரின் தனித் திறன் மற்றும் விருப்பம், குறிப்பிட்ட உயர்கல்வியில் சேர்வதற்கான தகுதி, அந்த மாணவரின் குடும்ப, சமூக, பொருளாதார சூழல், அந்த படிப்பை முடித்த பின் மேற்கொண்டு படிக்கவும் ஆராய்ச்சி செய்திடவும் கூடிய வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி தாமாகத் தொழில் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்புகள், போன்ற பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தச் சமூகத்தில் தனிமனிதர் ஒரு கூறு. இங்கு நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ இயலும். எனவே எல்லோருடைய பங்களிப்புமே சமமான  அளவில் இந்தச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே சில துறைகளே உயர்ந்தவை என்ற சமூகத்தின் மனத்தடையை உடைத்து, மாணவர்கள் தங்களுக்கு  விருப்பமான துறைகளில் படிக்க வேண்டும்.

விருப்பமான துறையில் அர்ப்பணிப்புடன் பணி யாற்றுவது மட்டுமின்றி மனித நேயத்துடன் செயலாற்ற வேண்டும். ஐஸ்வர்யாராய்களை விட அன்னை தெரசாக்களே அழகானவர்கள். தற்போது அவர்களே அதிகம் தேவைப்படுகிறவர்கள்.

பெற்றோர் தாங்கள் மட்டுமே உழைத்து தம் பிள்ளைகளை உயர்த்தி விட்டதாக இறுமாப்பு கொள்வதில்தான், மனித நேயமும், சமூக சிந்தனையும் அற்றுப் போய் முழுமையாக நுகர்வு சிந்தனையு டனையே, தம் பிள்ளைகளை உயர்கல்விக்கு செலுத்து கிறார்கள். “தம் பிள்ளைகளின் உணவுக்காக உழைத்த விவசாயி, உடையளித்த நெசவாளி மற்றும் தையற் தொழிலாளி, பயிற்றுவித்த ஆசிரியர், சிகிச்சை யளித்த மருத்துவர், பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர் புத்தகம் அச்சிட்டு வழங்கியவர்”, என ஆயிரக் கணக் கான மக்கள் உழைப்பில் தான் அந்தக் குழந்தை கள் மட்டுமின்றி நாமும் சமூகத்தில் வளர்ந்திருக் கிறோம் என்பதை உணர்ந்தால், அந்த சமூத்திற்கு நாம் பங்களிக்க வேண்டியது, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமையே என்பதையும் புரிந்து கொள்ள லாம்.

எனவே அவ்வாறான சமூக மாற்றத்திற்கான மற்றும் தனி மனித முன்னேற்றத்திற்கான உயர் படிப்புகள் என்ன? அவற்றை எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்ன? போன்ற தகவல்களை இப்பகுதியில் வழங்கிட முனைகிறோம்.

வாருங்கள்! சேர்ந்துழைப்போம்!

 (வாய்ப்புகள் வளரும்)

Pin It

 த.தே.பே. தலைமைச்செயற்குழு தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் 22.04.2017 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக!

இந்தியக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேசவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. 

மேலும், இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும், முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும், அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு _- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே! அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போ துள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், வரும் மே 8 அன்று, சென்னை தியாகராயர் நகரிலுள்ள இந்திப் பிரச்சார சபை முன்பு குடியரசுத் தலைவர் கையப்பமிட்ட இந்தித் திணிப்பு ஆணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ளது. இப்போராட்டத்தில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென வேண்டுகிறோம்.

தீர்மானம் : 2

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏழு நாட்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம்!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து - நிலுவையில் வைத்துள்ள, ஒற்றைத் தீர்ப்பாயத் திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு காவிரியைத் தடுத்து அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மார்ச்சு 28 முதல் ஏப்ரல் 15 வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தின் முன்பு, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக நடத்திய தொடர் அறப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மே 15 முதல் ஒரு வார கால தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதற்காக விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 

தீர்மானம் : 3

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை, இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளைக் காரணம் காட்டி, கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற் படிப்பிற்கான 1,225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலைக் கிராமங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பணி யாற்றும் அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதற்கெதிராக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ்நாட்டின் மருத்துவ மேற்படிப்பில் நடப்பிலுள்ள 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு, இந்திய அரசின் ஒப்புதலைப் பெற அரசியல் நடவடிக் கையிலும் இறங்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு தேவையில்லை என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு வழங்க வேண்டும்.

தீர்மானம் : 4

கீழடி ஆய்வாளர் அமர்நாத் குழுவினரை அசாமிற்கு இடமாற்றம் செய்ததை இந்திய அரசு கைவிட வேண்டும்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் இந்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது.

முதல்கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்தபின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங் காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத் திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழாய்வைத் தொடங் கியுள்ளது. 

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மிகத் தாமதமாக இந்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில், திடீரென்று இந்தியத் தொல்லியல் துறையால் _ இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்த திரு. அமர்நாத் இராம கிருஷ்ணன் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். இதை எதிர்த்து நடுவண் நிர்வாகத் தீர்ப் பாயத்தில் முறையீடு செய்தார் அமர்நாத். தீர்ப்பாயமும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடியிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரி இந்தியத் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் 21.04.2017 அன்று, இந்தியப் பண் பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நடுவண் தொல்லியல்துறை, சென்னைக்கு பணியிட மாறுதல் கோரியிருந்த அவரது வேண்டுகோளையும் நிராகரித்து அமர்நாத் இராமகிருஷ்ணாவை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பணியிட மாறுதல் செய்ததை உறுதி செய்து கடிதம் வழங்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வுக்குத் தடை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது!

இந்திய அரசு, உடனடியாக திரு. அமர்நாத் அவர்களின் பணியிடமாற்றத்தைத் திரும்பப் பெற்று, அவரையும் அவரது குழுவினரையும் தொடர்ந்து கீழடியிலேயே ஆய்வு செய்ய ஆணையிட வேண்டும்.  

Pin It