திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன் வாழ்வூர் இளம் உழவர் இராஜாராமன், (அகவை 37), தான் சாகுபடி செய்த பருத்திப் பயிர் மழையில் பாதிக் கப்பட்டு, வேர் அழுகி பாழ்பட்டதைப் பார்த்து, கடன் அடைக்க வழியில்லையே என்று மனமுடைந்து, 27.04.2015 அன்று, பருத்தி வயலிலேயே பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இராஜாராமன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறு தல் சொல்வதற்காக, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தோழர் பெ.மணியரசன் (ஒருங்கிணைப்பாளர்), திரு. அய்யனாபுரம் சி. முருகேசன் (பொதுச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி), திரு. த. மணிமொழியன் (தஞ்சை மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்), தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), தோழர் க. விடுதலைச்சுடர் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) ஆகியோர் 30.04.2015 அன்று, சித்தன்வாழ்வூர் சென்று இராஜாராமன் துணைவியார் இராஜீ (அகவை 28), அவர்களுடைய குழந்தைகள் மகள் இராகவி (அகவை 6), மகன்கள் வீரையன் (அகவை நான்கரை), இராகவேல் (அகவை 2) மற்றும் அவரது பெற்றோர், சகோதரர்கள் ஆகியோ ரைச் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன் நடந்த விவரங் களைக் கேட்டறிந்தனர்.

இராஜாராமன் குடும்பத்தினரையும், கிராமத்திலுள்ள மற்றவர்களையும் விசாரித்ததில், பின்வரும் முடிவுகளுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு வந்தது.

1. கோடைக் காலத்தின் மழையைக் கூட தாங்க முடியாமல் வேர் அழுகிப் போகும் தன்மையுள்ள, மிகவும் பலவீனமான வெளிநாட்டு பி.ட்டி. பருத்தியை, சாகுபடி செய்ததால்தான் இந்தச் சாவு நேர்ந்துள்ளது. ஏனெனில், இரண்டு நாள் பெய்த கோடை மழையில் பருத்திச் செடிகள் வேர் அழுகி வாடிப்போய்விட்டன..

பெருமழையையும் தாக்குபிடிக்கக்கூடிய உள் நாட்டுப் பருத்தி விதைகளைப் புறக்கணித்து, பன் னாட்டு நிறுவன பி.ட்டி. பருத்தி விதையை உழவர் களிடம் திணித்தது இந்திய மற்றும் தமிழக அரசுகள் தான்! இந்திய மற்றும் தமிழக அரசுகளே, பருத்தி விவசாயி இராஜாராமன் சாவுக்குப் பொறுப் பேற்க வேண்டும்.

2. இராஜாராமன், கேரளத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்சில், 24 சதவிகித வட்டிக்கு, ரூ. 45,000 வேளாண் நகைக்கடன் வாங்கி யுள்ளார். இது, மிக மோசமான கந்துவட்டியாகும்.

அடுத்து, தமிழ்நாடு அரசு - வேளாண் கூட்டுறவு கிராமத் தொடக்க வங்கியில், 14லு சதவிகித வட்டிக்கு, ரூ. 31,000 வேளாண் நகைக்கடன் வாங்கியுள்ளார். இந்த வட்டியும், அரசுக் கூறிக் கொள்ளும் 7 சதவிகித வட்டியைவிட மிகக் கூடுதலாகும்.

இப்படிப்பட்ட கந்து வட்டிக்கு, கடன் வாங்க வேண்டிய நெருக்கடியில் விவசாயிகள் வைக்கப் பட்டுள்ளதால்தான், அவர்களுடைய கடன்களை அடைக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்த வட்டி முறை என்பது சட்ட விரோதமாகும்.

முத்தூட் பைனான்ஸ் என்ன வகையில் வட்டி வசூலிக்கிறது என்பதை விசாரிக்க, தமிழக அரசு உட னடியாக தகுந்த ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, தமிழ்நாடு முழுவதும் விசாரணை செய்து பரிந்துரை பெற வேண்டும். அப்பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளிலும், அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், வேளாண் நகைக்கடன்களுக்கு 7 சதவி கிதத்திற்கு மேல் வட்டி வாங்கக் கூடாதென்று தமிழக அரசும் இந்திய அரசும் முறையே ஆணையிட வேண் டும்.

4. பருத்தி, நெல், கரும்பு போன்றவற்றிற்கு இலாப விலை வைக்காமல், அடிமாட்டு விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதனால், வாங்கியக் கடனை திருப்பி செலுத்தும் சக்தியை உழவர்கள் இழந்து விடுகிறார்கள். தன்மானப் பிரச்சினையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கிறார்கள். நெல்லுக்கு ஒரு குவின்டாலுக்கு ரூ. 2,500 என்றும், பருத்திக்கு ஒரு குவின்டாலுக்கு ரூ. 8,000 என்றும், கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ. 3,500 என்றும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

5. விவசாயிகளுக்குப் பயன்படாத வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. அதுவும், தனியார் வசம் உள்ளது. ஒரு தனிநபர் வேளாண்மை பாதிக்கப் பட்டா லும், அந்த பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கும் வகையில், திருத்தம் செய்து, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக நடத்த வேண்டும்.

6. மத்திய, மாநில அரசுகளின் மிக மோசமான வேளாண் கொள்கைக்கு பலியானவர்தான், மேற்கண்ட இராஜாராமன். அவரது குடும்பத்தினர்க்கு, ரூ. 10 இலட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இராஜாராமனின் விதவை மனைவிக்கு, தமிழக அரசு மாத உதவித் தொகை வழங்க வேண்டும். அவரது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை, தமிழக அரசு ஏற்க வேண்டும்.

இந்த அறிக்கை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 30.04.2015 அன்று தஞ்சையில் நடந்த ஊடகத் தார் சந்திப்பில், அனைவருக்கும் தரப்பட் டுள்ளது.

மேற்படி காட்சி மற்றும் அச்சு ஊடகத்தார் சந்திப்பில், கலந்து கொண்டோர்:

தோழர் பெ.மணியரசன் (ஒருங்கிணைப்பாளர்), திரு. அய்யனாபுரம் சி. முருகேசன் (பொதுச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி), திரு. த. மணிமொழியன் (தஞ்சை மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம்), தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), திரு. கலந்தர் (மனித நேய மக்கள் கட்சி, மாநில வணிகப் பிரிவு செயலாளர்), திரு. சிமியோன் சேவியர் ராஜ் (தஞ்சை மாவட்டத் தலைவர், இந்திய சனநாயகக் கட்சி), திரு. அருள் மாசிலாமணி (மாநில அமைப்புச் செயலாளர், விடுதலைத் தமிழ்ப் புலிகள்), தோழர் பழ.இராசேந்திரன் (தலைமைச் செயற் குழு உறுப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), தோழர் இல.இராமசாமி (தஞ்சை நகரச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்).