திருவொற்றியூர் பெரியார் நகரில், 11.08.2013 அன்று மாலை தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கம் சார்பில், இலங்கையின் 13ஆவது சட்டத் திருத்தத்தை கைவிட்டுத் தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அவ்வாறு நடத்தினால் அதை இந்தியா புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கம் நடை பெற்றது.

கருத்தரங்கிற்கு, தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர் தலைமையேற்றார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், ஜனநாயகத் தொழிலாளர் இயக்க அமைப்பாளர் தோழர் சதீஸ்குமார், சேவ் தமிழ் இயக்க ஒருங்கி ணைப்பாளர் தோழர் செந்தில், புரட்சிகரத் தொழி லாளர் முன்னணி அமைப்பாளர் தோழர் தென்கனல், அசோக் லேலண்ட்டு தொழிலாளர் அமைப்பு இணைச் செயலாளர் தோழர் இரமேசு உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில்:

இந்தக் கூட்டத்தை நடத்தும், தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கம் என்ற அமைப்பின் பெயரைக் கேட்டாலே, பாரதியார் கூறுவதைப் போல காதுகளில் தேன்வந்து பாய்கின்றது. 2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் இனவெறிப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் பெரிய பெரிய தொழிற்சங்கம் எதுவும் வேலை நிறுத்தம் செய்யவில்லை. போர்க்குணத்தோடு போராட வில்லை. பல்வேறு தொழிலகங்களில் பணிபுரியும் இனவுணர் வுள்ள தொழிலாளத் தோழர்கள் போர் நிறுத்தம் கோரும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அவர்களின் அமைப்புகள் போராடவில்லை.

தொழிற்சாலைகள் நிறைந்த இந்த வடசென்னை பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழிலாளர் கூட்டமைப்பு, தெளிவாக தமிழீழ விடுதலையை முன்னிறுத்திச் செயல்படுகிறது. அதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

தொழிலாளர்கள், தொழிலாளர் என்பதற்காகவே இயல்பாக போர்க்குணம் பெற்றிருப்பார்கள் எனக் கருத முடியாது. அதே போல, தொழிலாளர் என்பதற்காகவே அவரைக் கம்யூனிஸ்ட் என்றும் கருத முடியாது. சூது, வஞ்சகம் உள்ளிட்ட முதலாளியக் கருத்துகள் தொழி லாளர்களிடத்திலும் இருக்கும். தவறான தலைமையின் கீழ், முதலாளியக் கருத்தியலின் கீழ் அவர்கள் வழி நடத்தப்படுவதால் தான் இது நீடிக்கிறது. இருக்கின்ற சமூகப்பிரிவுகளில் தொழிலாளர்கள் தான் புரட்சிக்கு நெருக்கமானவர்கள்.என்ற பொருளில் காரல்மார்க்சு தொழிலாளிவர்க்கத்திற்கு நவீன வரலாற்றில் முதன்மைப்பாத்திரம் உள்ளது என்றார்.

தொழிற்சங்கங்கள் நடத்தும் இடது சாரிகள், ஈழத்தமிழர் பிரச்சினையில் வலதுசாரி நிலை எடுத்தது தான் தமிழ்நாட்டின் மிகப்பெரும் வரலாற்று சோகம். இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்து என்னவோ, அது தான் ஈழ விடுதலையில் தமிழ்நாட்டு இடதுசாரியான சி.பி. எம் கட்சியின் கருத்து. அதன் சி.ஐ. டி.யு.வின் கருத்து.

காரல் மார்க்சு, இலண்டனில் இருந்த போது, காலனி நாடுகளின் விடுதலையை வளர்ச்சியடைந்த தொழிற்சங்கங்கள் பல ஆதரிக்க வில்லை. தொழிலாளர்கள் தான் உலகையே ஆள வேண்டும் என்று சொன்ன காரல் மார்க்சின் கண் முன்னே இது நடந்தது. ஏன்?

காலனி நாடுகளிலிருந்து பிரிட் டன் வல்லாதிக்க அரசு, கொள் ளையடித்து வருகிறது, அதிலிருந்து ஒரு பகுதி அந்த நாட்டுத் தொழி லாளர்களுக்கு சம்பளமாக, ஊதிய மாக பங்கிட்டுத் தருகிறது. எனவே, காலனி நாடுகளின் விடுதலையை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஆதர விக்கவில்லை. காரல் மார்க்சு இதைக் கடிந்து கொண்டு, அத் தொழிலாளர்களை ‘தொழிலாளர் பிரபுக்கள்’ Labour Aristrocratsஎன்று எழுதினார். இப்போக்கு தொழிலாளர் பிரபுத்துவம் என் றார். அவர்களை மேட்டுக் குடித் தொழிலாளர்கள் என வர்ணித்தார். இது 19ஆம் நூற்றாண்டின் நிலைமை.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் Labour Aristrocrats எனப்படும் தொழிலாளர் பிரபுக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசுத் தொழிற் சாலைகளிலும், தனியார் தொழிற் சாலைகளிலும் அவர்கள் ஒப்பீட்டளவில் கூடுதல் ஊதியம் பெறுகி றார்கள்.

தொழிலாளர்கள், தொழிற்சங்க மாகத் திரண்டு தங்கள் உரிமை களைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடுவது தவறில்லை. ஆனால், சமூகப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் தங்களுக்காக மட்டும் போராடிக் கொண்டிருந் தால், அப் போராட்டம் வெறும் தன்னலப்போராட்டமாக மட்டுமே இருக்கும்.

இவ்வாறு இல்லாமல், இன்று தமிழீழ ஆதரவுத் தொழிலாளர் இயக்கம் ஒரு பொதுப் பிரச்சி னைக்குப் போராட முன்வந்துள் ளது பாராட்டத்தக்கது. அதனால் தான், இலட்சக்கணக்கான தொழி லாளர் கள் வாழும் சென்னையில் ஒரு தனித்தீவாக இந்த வட சென்னைத் தொழிலாளர் இயக்கம் எனக்குக் காட்சியளிக்கிறது.

1902ஆம் ஆண்டு, இரசிய சமூக சனநாயகக் கட்சிக்குள் (கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதையப் பெயர்) நடைபெற்ற விவாதத்தின் போது லெனின், தொழிலாளர் களுக்கு வெளியிலிருந்து தான் அரசியல் சொல்லித் தர வேண்டு மென அடித்துச் சொன்னார். பொருளியல் கோரிக்கைகளில் தொடர்ந்து போராடும் அவர்கள், அதன் வழியே அரசியல் கோரிக் கைகளுக்குத் தானே வர மாட்டார் கள் என அவர் உறுதிபடச் சொன்னார்.

ஈழத்தை விடுங்கள், உலகம யத்தை எதிர்த்து இன்றைக்குத் தமிழகத்தில் போர்க்குணமிக்கத் தொழிலாளர் போராட்டம் என்ன நிகழ்ந்துள்ளது? பண்டைக் காலத் தில், பார்ப்பனர்களுக்குப் பல சலு கைகள் கொடுத்து, “வரிகள் எதுவும் கிடையாது அரசன் ஆணையும் நுழையாது என” அறிவித்து ‘இறை யிலி நிலங்கள்’ என்று பல கிராமங் களை பிரமதேயம் என்ற பெயரிலும் ‘தேவதானம் என்ற பெயரிலும் மன்னர்கள் கொடுத்தார்கள். அப் படிப்பட்ட பிரம்ம தேயங்களாக, சிறப்புப் பொருளாதார மண்ட லங்களை (Special Economic Zones) இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்து வருகின்றதே? தொழிற் சங்க உரிமையோ, வேறு எவ்விதத் தொழிலாளர் உரிமையோ அங்கு கிடையாது. தொழில் தகராறு சட்டம் (Industrial disputes Act) அங்கு பொருந்தாது. அங்கெல்லாம் ஏன் போர்க் குணமிக்கத் தொழி லாளர் இயக்கங்கள் போராட வில்லை?

எனவே, தொழிலாளர்கள் அரசியல் உணர்வோடு, சமூக உணர்வையும் சனநாயக உணர்வையும் பெற வேண்டும். வெறும் சனநாயக உணர்வு மட்டுமல்ல, இன உணர் வையும் அவர்கள் பெற வேண்டும். இன உணர்வை நாம் ஏன் மறைத் துக் கொள்ள வேண்டும்? பசி, தாகம் எப்படியோ அதைப் போல இன வுணர்வும் இயல்பூக்கமாக (மிஸீstவீஸீநீt) நம்மிடம் எழுகிறது. அதை ஏன் அடக்கிக் கொள்ள வேண்டும்?

மூத்த மலையாளக் கம்யூனிஸ்ட் டான அச்சுதானந்தன், தமிழ்நாட் டிற்குரிய முல்லைப் பெரியாற்று அணையை உச்சநீதிமன்ற உத்தரவு களையும் மீறி உடைக்கத் துடிக்கி றார். நம்மோடு மனித உரிமைக் களத்தில் பயணிக்கும், சமூக நீதித் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர், முல்லைப் பெரியாற்று அணையை உடைக்க வேண்டுமென அச்சுதானந்தனுடன் கைகோத்துக் கொண்டு மனிதச் சங்கிலியில் நிற்கிறார். காரணம், அவரது மலையாள இன உணர்வு.

ஒரு தேசத்தின் அடிப்படை அலகு தேசிய இனமும் அதன் தாயக எல்லையும்தான். இதைத் தேச அரசு உருவாக்கக் கோட் பாடாக 18, 19 ஆம் நூற்றாண்டு களில் ஐரோப்பா உருவாக்கியது. எனவே தேசிய இன உணர்வுக் கொள்வது தவறல்ல. ஆனால் முல்லைப் பெரியாற்று அணையை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் இடிக்க வேண்டுமென வெறிக்கூச்சலிடுவது அப்பட்டமான மலையாள இனவெறி. நாம் இனப்பற்றோடு நிற்கிறோம். நமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நிற்கிறோம். நமக்கு இன வெறி கிடையாது. இனவெறி கூடாது. எல்லா இன மக்களையும் நாம் சமமாகக் கருதுகிறோம். நம் உரிமையைப் பறிப்போரை, நம்மை ஆதிக்கம் செய்ய முயலும் அயல் இனத்தாரைக் கடுமையாக எதிர்க்கி றோம்.

நடுவண் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு, கடலியல் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை சென்னை யில் அமைப்பதாக நாடாளுமன்றத் தில் அறிவித்தார். அப்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள், அதைக் கொல்கத் தாவில் தான் அமைக்க வேண்டு மென கூச்சலிட்டுக் கொண்டு, அவரது அறிக்கையை நாடாளுமன்றத்தி லேயே கிழித்தெறிந்தார்கள். அது வங்காளிகளின் “இடது சாரி” இனவெறி! இவ்வாறான இனவெறி கூடாது, இனப்பற்று தான் நமக்கு வேண்டும் என்கி றோம். இனப்பற்று ஒரு தற்காப்பு ஆற்றல். அது நமக்கு வேண்டும்.

இன்றைக்கு, பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து நாடு தனிநாடாகப் பிரியப் போராடுகின்றதே, அங்கு என்ன இனப்படுகொலையா நடந்து விட்டது? ஆங்கிலேயர்கள் ஸ்காட் லாந்து நாட்டை அடிமைப்படுத்தி, அங்கு தமிழீழத்தில் நடைபெற்றது போலத் ‘தரப்படுத்தல்’ நடைபெற்றதா? இல்லை. ஸ்காட்லாந்தியர் களுக்கு வேலை இல்லையென சொன்னார்களா? இல்லை.

இங்கிலாந்தின் 4 பகுதிகளில் ஒரு பகுதிதான் ஸ்காட்லாந்து. விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் ஸ்காட்லாந்துக் காரர்கள் சாதனை நடத்தினால், அது ஆங்கிலேயர்கள் சாதித்தது போல் பேசப்படுகிறது. எங்கள் அடையாளம் மறைக்கப்படுகிறது என்கின்றனர் ஸ்காட்லாந்தியர்கள். அதனால் தான் தனிநாடு கேட்டுப் போராடுகின்றனர்.

முதலாளியம் வளர்ந்த மண் ணில், வளர்ச்சியடைந்த முதலாளிய சனநாயகம் தேசிய இனச் சிக்கல் களைத் தீர்த்துவிடும் என மார்க்சிய ஆசான்கள் சொன்னார்கள். ஆனால் அது அவ்வாறு நடக்க வில்லை.

2014ஆம் ஆண்டில் ஸ்காட் லாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப் பிரித்தானிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டனுடன் சேர்ந்து இருப்பதா, வேண்டாமா என அவர்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள்.

கனடாவில், பிரஞ்சுக்காரர்கள் வாழும் மாநிலமான கியூபெக் தனிநாடு கோரிக்கை வைத்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால் அங்கு பொது வாக்கெடுப்பு நடை பெற்றது, ஒரு விழுக்காடு குறை வாக வாக்குப் பெற்றதால் அது தோற்றது. மீண்டும் அங்கு சில ஆண்டு களில் கருத்து வாக்கெடுப்பு நடத்த விருக்கிறார்கள். இன அடிப் படையில்தான் இந்த விடுதலைப் போராட்டங்கள் நடக்கின்றன. உலகம் இப்படியிருக்க, நாம் ஏன் நமது இனவுணர்வை மழுங்கடிக்க வேண்டும்? மறைத்துக் கொள்ள வேண்டும்?

 “நாம் தமிழர்கள்” என்ற உணர் வைப் பெற வேண்டும். டெல்லி நமது உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகின்றது என்ற உண் மையை புரிந்து கொள்ள வேண்டும்.

‘பாடுபடும் பாட்டாளிக்கு மொழி இல்லை - இனம் இல்லை என இடது சாரித் தொழிற்சங்கத் தோழர்கள் சில நேரங்களில் முழக் கம் எழுப்புவார்கள். அது சரியல்ல. நமக்கு இனம் இல்லை யென்றால், வேறோரு இனம் நம்மை ஆதிக்கம் செலுத்தும். மொழி இல்லையென் றால் வேறொரு மொழி நம்மீது ஆதிக்கம் செலுத்தும்.

இன ஒடுக்குமுறை ஈழத்தில் மட்டுமா நடக்கிறது? தமிழ்நாட்டி லும் நடக்கிறது. ஈழத்தில் தமிழினம் விடுதலை பெற வேண்டுமென நினைப்பதைப் போல, தமிழ்நாட்டி லும் நம் இனம் விடுதலை பெற வேண்டுமென நினைப்பது தான் சரி. அது தான் சரியான அரசியல் நிலைப்பாடு.

7 கோடி பேர் தமிழர்கள் நாம் தமிழ்நாட்டில் இருந்தும், ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்கள் இனப்படு கொலை செய்யப்பட்ட போது நம்மால் தடுக்க முடியவில்லை. இனப்படுகொலையிலிருந்து, அம் மக்களைப் பாதுகாக்க முடியவில் லையே ஏன்? தமிழீழ விடுதலை இருக்கட்டும், நம்மால் அங்கு ஒரு போர் நிறுத்தம் வரச் செய்து, மக்கள் பலியாவதைத் தடுக்க முடியாமல் போனதே, ஏன்?

நமக்கென்று ஒரு இன அரசியல் இங்கு கிடையாது. தமிழ்நாடு இந்தி யாவுக்கு அடிமையாக இருக்கிறது. இதோ ஆகஸ்ட் 15 வந்துவிட்டது. ஏசுநாதர் சிலுவையைச் சுமந்தது போல, நம்மவர்கள் இந்தியக் கொடியை சுமப்பார்கள்.

1947 ஆகஸ்ட் 15க்கு முன்னால், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத் தில் நமக்குக் காவிரியில் உரிமை இருந்தது. 1924ஆம் ஆண்டில் மைசூர் சமஸ்தானத்துடன் வெள் ளையர்கள் ஒப்பந்தம் போட் டார்கள். இன்று அந்த உரிமை நமக் கில்லை.

1947 ஆகஸ்ட் 15க்கு முன்னால், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க நமக்கு உரிமை இருந்தது. கர்னல் பென்னிக்குயிக் என்ற ஒரு வெள்ளைக்காரன், தனது சொத்துகளையெல்லாம் விற்று நமக்காக அந்த அணையைக் கட்டி வைத்தான். இன்று, அது 136 அடியாக குறைக்கப்பட்டுவிட்டது. 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அணை வலுவாக இருக்கிறதென்று உத்தரவிட்டும் கூட, நமக்கு அந்த அணை உரிமை இன்று இல்லை.

1947 ஆகஸ்ட் 15க்கு முன்னால், கச்சத்தீவு நமக்கு இருந்தது. ஒரு தமிழ்நாட்டு மீனவன் கூட சுட்டுக் கொல்லப்பட்டதில்லை. ஒரு வேளை, இலங்கைப் படையால் தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தால், சிங்களர்களை கைது செய்து சிறையில் அடைத்தி ருப்பான் வெள்ளைக்காரன். இன்று, 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழகக் கடல் எல்லையிலும் பன்னாட்டுக் கடல்பரப்பிலும் சுட்டுக் கொல்லப் பட்டபிறகும் இந்தியா ஏனென்று கேட்கவில்லை.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதற்காக ஜாலியன் வாலாபாக் நகரில், வெள்ளைக்காரனால் துப்பாக்கி யால் சுடப்பட்டு ஏராளமான மக்கள் இறந்தனர். அந்தத் தியாகத் தைக் காங்கிரசுக்காரர்கள் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். பாடப் புத்தகங்கள் வர்ணிக்கின்றனர். அந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய தமிழர்களையும், மாண வர்களையும் முந்நூறு பேருக்கும் அதிக மானோரை சுட்டுக் கொன் றார்களே சுதந்திர இந்தியாவில்! 300க்கும் மேற்பட்ட தமிழர்களை இராணுவத்தைக் கொண்டு இந்திய அரசு சுட்டுக் கொன்றதே! ஜாலி யன் வாலாபாக்கிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத ஒரு மண்ணில், தமிழகத்தைப் போல வேறு எந்த இனமும் உயிரி ழப்புகளை, உரிமை இழப்புகளை சந்தித்ததில்லை. காசுமீர், வடகிழக் குப் பகுதிகளில் ஆயுதம் ஏந்திப் போராடும் மக்களை, இந்திய இராணுவம் சுட்டுக் கொல்கிறது. ஆனால் 1965 இல், தமிழ்நாட்டில் ஆயுதம் ஏந்தி மக்கள் போராட வில்லை. ஆனாலும், இராணுவம் வந்து மக்களை சுட்டுக் கொன்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் இராசேந்திரன் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் பலியானான். திருப்பூரில், குமாரபாளையத்தில், பொள் ளாச்சியில் சுட்டுக் கொல்லபட்ட தமிழர்கள் கூட்டம் கூட்டமாகப் புதைக்கப்பட்டனர். இந்த வரலாறு கூட இன்றைக்கு தமிழகப் பாடப் புத்தகங்களில் இல்லை.

கப்பலோட்டியத் தமிழன் என்கிறோமே, வ.உ.சிதம்பரனார், நம் மீனவர்கள் கடலில் இப்படி சுட்டுக் கொல்லப்படுவதற்காகவா அவர் கப்பல் ஓட்டினார்? கண வனை இழந்த பெண்கள் கதறு கிறார்கள். இதற்காகத்தானா வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்று சிறையிலிருந்தார்? இந்தியக் கொடியைக் கீழே விடாமல் உயிர் துறந்தானே திருப்பூர் குமரன், இதற்காகத்தான் அவன் இந்த தியாகத்தைச் செய்தானா?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, முல்லைப் பெரியாற்று அணை யில் நீர் தேக்க மறுக்கிக் கின்ற மலை யாளிகள், 2 மீனவர்கள் இத்தாலி நாட்டுக் கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு எப்படி துடிக்கிறார்கள் பாருங்கள். இத் தாலி கடற்படைக்காரர்கள் ஊருக் குப் போய்விட்டுத் திரும்பி வர வில்லை என்றதும், மன்மோகன் சிங் தூதர் உறவு துண்டிக்கப்படும் என்று எச்சரித்தார். அவ்வாறு அவர் கண்டித்தது சரிதான்! ஆனால், 600க்கும் மேற்பட்ட மீனவர்களை நாம் இழந்தும் நமக்கு ஏன் எந்த நடவடிக்கையும் மன் மோகன் எடுக்கவில்லை. இந்திய அரசு தமிழினத்தைத் தனது பகை சக்தியாகக் கருதுகிறது. பழிவாங்கு கிறது.

இந்திய அரசு, நமக்கு இனப் பகை அரசு என்பதே நாம் இதிலி ருந்து பெற வேண்டிய படிப்பினை. நெஞ்சில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், அத்வானி என யார் அந்த பதவியில் அமர்ந் தாலும், தமிழர்களுக்கு இது தான் நிலைமை.

ஒரு போதும், தமிழர்களுக் கென்று ஒரு நாடு அமைவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவின் இடுப்பெலும்பை உடைத்து நொறுக்கும் போதுதான் தமிழீழம் அமைவதற்கான சூழல் உருவாகும். நெருக்கடி தாங்காமல் தமிழீழம் அமைய ஒரு வேளை சிங்களர்கள் ஒத்துக் கொண்டாலும் இந்தியா அதை ஏற்காது. இந்தியா வின் இடுப்பெலும்பை உடைக்க வேண்டிய பொறுப்பு, 7 கோடித் தமிழர் வாழும் தமிழ்நாட்டுத் தமி ழர்களான நமக்குத்தான் இருக்கி றது. அதை உணர்ந்து நாம் செயல் பட வேண்டும்.

Pin It