ஆரியர் மீதான ஆய்வுகள் தமிழ்த் தேசிய அரசியல் உலகில் தீவிரமடைந்து வரும் இந்த வேளையில், தொடக்க கால ஆரியர் குறித்த சில ஆய்வுத் தகவல்களை இக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆரியர், சிந்து வெளி மீது படையெடுத்து வந்து, அங்கு வாழ்ந்த உயர்ந்த நாகரிக சமூகத்தவரான தமிழர் மீது கொடும் தாக்குதல் நடத்தி வெற்றியும் பெற்றனர் என்ற நோக்கு, அண்மைக்காலமாக வளர்ந்துள்ளது. இதே நோக்கில் என்னுடைய முந்தைய ஆய்வுக் கட்டுரைகளும் அமைந்துள்ளன. இந்த நிலையின் அடிப்படையில் எவ்வகை மாற்றமும் இல்லை. ஆயினும், ஆரியர் - தமிழர் முரண்பாடு குறித்த விளக்கங்களில் சில மாற்றங்கள் உள்ளன.

சிந்து வெளி ஆய்வு முடிவுகள் மற்றும் ரிக் வேதப் பாடல்கள் ஆகியவற்றின் மூல வரலாற் றைத் தேடும்போது, ஆரியர் தமது ஆதி காலத்தில் தமிழருக்கு இணங்கியும் வாழ்ந்தனர் என்பதற் கான தடயங்கள் புலப்படுகின்றன.

அதாவது, ஆரியர் சிந்து வெளிக்குள் பிழைப்புக் காக வந்தபோதே போர் நடத்தி விடவில்லை. நீண்ட காலம் தமிழருடன் இணக்கமாக இருந்து, தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கினர். குறிப்பாக, தமிழரது அறிவியல் - மெய்யியல் திறனை ஏற்றுக் கொண்டு விட்டனர். ஆரியர் சிந்து வெளிக்குள் வந்தபோது, அவர்களுக்கென தனித்துவம் மிக்க மெய்யியல், அறிவியல் ஆற்றல்கள் உருவாகிவிடவில்லை.

ஆரியர் வணங்கிய கடவுளர் அவர்களது வழிபாட்டு முறை ஆகியவற்றின் பெரும்பகுதி தமிழர் அறிவியல் - மெய்யியல் சார்ந்தவையே.

ரிக் வேதம் என்பது நீண்ட காலமாக பல்வேறு முனிவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. கி.மு 1500 க்கு முந்தைய காலம் என்று ரிக் வேத காலத்தைக் குறிப்பிடுவது பொது வழக்கமாக உள்ளது. இன்றிலிருந்து ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையைப் பதிவு செய்த பாடல்களே ரிக் வேதத்தில் உள்ளன.

ரிக் வேதத்தைப் பாடிய முனிவர்கள் (ரிக்ஷிகள்) அனைவரும் ஆரியரே என்ற கருத்தும் ஆய்வுலகில் உள்ளது. எனினும் இது ஆய்வுக்குரியது. அகத்தியரும் ரிக் வேத முனிவர்தான். அவர் ஆரியரல்லர்; தமிழர். மேலும், இம்முனிவர்கள் பாடிய ரிக், தெள்ளத் தெளிவாக ஆரிய மேலாதிக்கத்தை மட்டுமே வலியுறுத்துகின்றனவா என்ற கேள்விக்கான விடையைத் தேடுவோம்.

இந்திரன்

இந்திரன்தான் ரிக் வேதத்தின் நாயகன். போரில் வெற்றியடையவும், கால் நடைகளைக் கவர்ந்து வரவும், அணைக் கட்டுகளை உடைக் கவும், கோட்டைகளை / நகரச் சுவர்களை/புரங்களை இடிக் கவும், தாராளமாக உணவு கிடைக்கவும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் ரிக் வேத முனிவர்கள் இந்திரனையே வேண்டுகின்றனர்.

இந்திரனை வேண்டும் முனி வர்கள், அவனுக்கு சோமபானம் படைக்கின்றனர். இந்திரனைப் பற்றிய முதல் ரிக்,

‘These, indra - vayu, have been shed; come for our offered dainties'
Sake:
The drops are yarning for you both' ’(1/ 2-4)

’இந்திரனே வாயுவே, இவை உங்களுக்காகப் பிழியப்பட்டிருக்கின்றன; எங்கள் நேர்த்தியான இவ்வழங்கல்களைப் பெறும் பொருட்டு வாருங்கள்:

இந்தத் துளிகள் உங்கள் இருவருக்காகவும் ஏங்குகின்றன என்று பாடப்பட்டுள்ளது.

இங்கு பானம் எனக் குறிப் பிடப்படுவது சோமபானம்.

இந்திரனைப் புரிந்து கொள்வதற்காக வேறு சில ரிக்கு களையும் காண்போம்.

Well do ye mark libations, ye vayu and indra, rich in spoil!
So, come ye swiftly hitherward . (1 /2 -5)

’வாயுவே இந்திரனே, நீங்கள், வேள்விப் படையல்களின் குறியீடுகளாக இருக்கிறீர்கள், கொள்ளைப் பொருட்களில் செழிப்புடன் இருக்கிறீர்கள்!

ஆகவே, இங்கு விரைந்து வாருங்கள்.’

‘o indra, marvelously bright for, come, these libations long for thee, thus by fine fingers purified. (1 / 3- 4/

ஓ இந்திரனே, திகைக்க வைக்கும் ஒளிமிக்கவரே, வாரும், தூய்மையான விரல்களால் சுத்திகரிக்கப்பட்ட இந்தப் படையல்கள் உமக்காக ஏங்குகின்றன.

Urged by the holy singer, sped by song, come indra, to the prayers,
Of the libation-pouring-priest (1 /3-5)

புனிதப் பாடகரால் விரைவு படுத்தப்பட்டு, பாடலால் விரைவு படுத்தப்பட்டு,

படையல் அளிக்கும் புரோகி தனிடம் வாரும் இந்திரா!

Approach, o indra, hasting thee, lord of bay horses, to the prayers,
In our libation take delight. (1 / 3-6)

சுருண்ட பிடறி மயிர் உடைய குதிரைகளின் பிரபுவே, ஓ இந்திரனே, எங்கள் படையல் இன்பத்தில் திளைக்க வரும்படி உம்மை அவசரப்படுத்துகிறோம்!

-இவ்வாறெல்லாம் இந்தி ரனை முனிவர்கள் அழைக் கிறார்கள். இந்திரனிடம் முனிவர்கள் வைக்கும் வேண்டு தல்கள் எண்ணற்றவை. அவை அடிப்படை வாழ்வாதாரத் திற்கானவையாகவே இருந்தன. அதாவது, உணவு, நீர், வாழிடம் போன்றவை.

இந்த வாழ்வாதாரங்களை ஏன் இந்த முனிவர்களது சமூகத் தினர் உழைத்துப் பெற முடிய வில்லை?

இந்தக் கேள்விக்கான விடையில்தான், ஆதி ஆரியரது சமூகம் / அறிவு குறித்த பல புதிர்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆரியர், கால்நடைகளை மட்டுமே தமது மையமான வாழ் வாதாரமாகக் கொண் டிருந்தனர். ஆரியர்களில் பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெரும்பாலும் இந்த இனக்குழுக்களுக்குள் போட்டிகளும் கடும் பகை மையும் நிலவியது. வேளாண்மை அவர்களுக்கு விருப்பமானதல்ல. மேலும், வேளாண்மை செய் வதற்கு பல்வேறு அறிவுத் துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை.

கலப்பை உள்ளிட்ட கருவிகள் - தச்சு
உரம் - மண்ணியல், தாவர வியல், கால்நடையியல்
நீர் - பொறியியல், நிலவியல் மற்றும் நீர் மேலாண்மை
பயிர்கள் - தாவரவியல்

இவை தவிர, பருவகால அறிவு, வானியல், விதைகள் குறித்த நுட்பங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய சேகரிப்புத் தொழில் நுட்பங்கள்.

வேளாண்மை செய்வதற்கு இவ்வளவு அறிவும் ஆற்றலும் வேண்டும்.

தொல் மரபுகள் முதிர்ந்த இனங்களுக்கு மட்டுமே இவை சாத்தியம். ஆகவே, ஆரியரது வாழ் வாதாரம் நிலையற்ற தாகவே இருந்தது. அவர்கள் பிற இனக்குழுக்களின் கால்நடை களைக் கவர்ந்து வருவதைத் தமது உரிமையாகவே கருதினர். இவ்வாறு கொள்ளையடிப் பதற்கும் இந்திரனை வேண் டினர்.

’கொள்ளைப் பொருட்களில் செழிப்புடன் இருக்கிறீர்கள்!’ என்று மேலே குறிப்பிட்டுள்ள ரிக் பாடல் ஒன்று இந்திர னையும் வாயுவையும் நோக்கி துதிப்பது இதனால்தான்.

ரிக் வேதத்தின் தொடக்க காலத்தில் / பாடல்களில் கொள்ளை அடிப்பது சர்வ சாதாரணமாகக் காணப்படு கிறது. பிற்காலப் பாடல் களில் போர் நட வடிக்கைகள் மிகுந்து விடுகின்றன. இந்தப் பிற் காலத்தில், ஆரியர், தமது வாழ்க்கை முறையை சற்றே மேம்படுத்திக் கொண்டனர்.

இந்திரன் யார் எனக் காண்போம்.

இந்திரன் என்ற சொல்லுக்கு ஆர்தர் ஆண்டனி மெக் டொனல் அகரமுதலி பின்வரும் பொருள் கூறுகிறது:

Indra - chief of the vedic gods; highest, chief, prince of

வேதக் கடவுளரின் தலைவன், உயர்ந்த, தலைமை வகிக்கும், இளவரசர்.

மேற்கண்ட முதலி சமக் கிருதச் சொற்களின் மூலப் படிகளில் இருந்து பொருள் தருவதாகும். அதாவது, சமக் கிருத நூல்களின் பிற் காலத் தைய விளக்கங்களைக் காட்டி லும் மூலங்களின் சொற் பொருளை மட்டும் முன்னி லைப்படுத்துவது அவ்வகர முதலி.

இந்திரன் என்ற சொல் பொதுவாகவே சமக்கிருதத்தில், ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயன்பட்டுள்ளது.

சுரேந்திரா (surendra / surainrda) - கடவுளரின் தலைவர் (chief of gods)
சைலேந்திரா (sailendra / saila - Indra) - மலைகளின் தலைவர் (chief of mountains)
வீரேந்திரா (Virendra / viraindra)-வீரர்களின்/நாயகர்களின் தலைவர் (chief of heroes)

ஆகவே, இந்திரன் என்றால் குறிப்பிட்ட சமூகத்தின்/குழு வின்/பாடுபொருளின் தலைவர் என்பதாகும். இந்திரன் என்பவன், தனிப்பட்ட மனிதன் அல்ல. ரிக் வேத முனிவர்கள் ’இந்திரா’ என அழைத்தது, அந்தந்தக் காலத்தைய தங்கள் தலைவர்களையே. இவ்வாறு பல இந்திரர்கள் இருந்தனர். ஆனால், இந்திரன் என்ற சொல் இந்த விளக்கத்தை மட்டும் அளிக்க வில்லை.

இந்திரன் என்ற சொல் லுக்குப் பின்னால் ஓர் மெய் யியல் கூறு ஒளிந்துள்ளது. அம் மெய்யியல் கூறு தமிழர்களின் தொல் மரபுசார்ந்தது.

தொல்காப்பியர், மருத நிலத்துத் தெய்வமாக,

’வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ என்கிறார். வேந்தன் என்று அவர் கூறுவது இந்திர னையே என்பது தமிழறிஞர் ஆய்வு. ’தீம்புனல் உலகம்’ என்பதை, மிகையான நீர் கொண்ட உலகம் என்று கொள் ளலாம். மருத நிலம், வேளாண் நிலம் என்பதால், நீர் மேலாண்மை இன்றியமை யாமை ஆகும். ஆகவே, வேந்தன் - நீர் மேலாண்மைக்கான தெய்வம்.

வேந்தன் என்ற சொல், சங்க காலத்தின் தொடக்கத்தில் இனக் குழுவின் தலைவனையே குறித்தது. ஒருவர் தலைவர் ஆகும்போது அவருக்கு முடி சூட்டப்படுவது அக்கால வழக்கம். அவ்வாறு ‘முடி வேய்ந்தோர் - முடி வேந்தர் - வேந்தர்’ எனப்பட்டனர். (சங்க கால ஆய்வுகள்- பேரா.கா. சுப்பிரமணியன் / என் சி பி எச்)

மருத நில வேந்தன் என்ப வனும் தலைவன்தான்! ரிக் வேத முனிவர்கள் பாடிய இந்திரனும் தலைவன்தான்!

ரிக் வேத கால ஆரியர் சிந்து வெளிக்குள் வந்தபின்னர், தமது மரபுசார் மேய்ச்சல் தொழிலை விட மேம்பட்ட வேளாண் தொழிலைக் கண்டனர். சிந்துவெளி அடிப்படையில் மருத நிலமே. அம்மருத நிலத்தில் தமிழர்கள் தம் தெய்வ மாகக் கொண்டிருந்த ’வேந்தன்’ எனும் தெய்வத்தின் பொரு ளுக்கு நிகரான தம் மொழிச் சொல்லாக ‘இந்திர’ என்பதை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

இந்திரன் ஆயுதம் - வச்சிராயுதம் என்கிறது ரிக். வச்சிரம் என்றால், ‘இடி’ என்று பொருள். ’காபா’ (ளீ’ணீஜீணீ’) என்ற சொல், இந்திரனின் ’வில்’ லைக் குறிக்கிறது. இச்சொல்லுக்கு ’வானவில்’ என்று பொருள் .(Arthur Anthony macdonnel)

இந்திரனை நோக்கிய வேண்டல்கள் சில;

'Unclose, our manly hero, thou for ever bounteous, yonder cloud,
For us, thou irresistible’ (1 /7-6)

எதிர்க்கவியலாதவனே, எக் காலத்திலும் அளவிறந்த வளத்தை நாங்கள் அடையும் பொருட்டு, அதோ தெரியும் மேகங்களைத் திறந்துவிடு, ஆண்மை மிக்க எங்கள் நாயகனே’

‘Indra hath raised the sun on high inheaven, that he may see afar;
He burst the mountain for the kine'’ (1 /7-3)

‘சூரியனை இந்திரன் சொர்க் கத்தின் மேலே வெகு தொலை விற்கு உயர்த்தி விட்டான். அவன் பசுக்களுக் காக மலை களைத் தகர்க்கிறான்’

'indra, the golden thunder-armed'’(1 /7-2)

‘இந்திரன், பொன் இடியை ஆயுத மாகத் தரித்தவன்’

மேய்ச்சல் நிலத்தில் மழை பெய்யாதபோது, முனிவர்கள் இந்திரனை வேண்டுகிறார்கள். அவன் பொன் நிறமான இடியை ஆயுதமாகக் கொண் டவன். இவர்கள் வேண்டுதலைக் கேட்ட இந்திரன், சூரியனை சொர்க்க த்திற்கும் மேலே, அதாவது வானின் தொலை தூரத்திற்கு அனுப்புகிறான். அதனால், இருள் சூழ்கிறது. மேகங்கள் கருத்து, மலைகளைப் போல் திரண்டு நிற்கின்றன. இந்திரன் தனது இடி ஆயுதத் தால் அந்த மலைகள் போன்ற மேகங்களைத் திறக்கிறான். பசுக்கள் காக்கப்படுகின்றன.

மழை வேண்டி, செய்யப்படும் வேள்வியில் பாடப்பட்ட பாடல்கள் இவை. ரிக் முனிவர்கள் வருணனையும் வேண்டு கிறார்கள். அதே வேளை, இந்திரனைத் தமது தலைமைத் தெய்வமாக ஏற்று வேண்டு கிறார்கள்.

இந்திரன் என்ற சொல் பிற்காலத்தில் தமிழர்களாலும் ஏற்கப்பட்டது. சிலப்பதிகாரம், புகார் நகரில் நடந்த இந்திர விழாவைப் பற்றி விவரிக்கிறது.

ஆரியர் வேண்டிய முகா மையான தெய்வங்களான, ’அக்னி, வருணன், வாயு, இந்திரன்’ ஆகியவை தமிழரது தொல் மரபின் கூறுகளே ஆகும்.

’வெளி, வளி, தீ, நீர், நிலம்’ ஆகிய ஐம்பூதங்களின் சேர்க் கையே உலகம் என்பது தமிழரின் மெய்யியல்களின் அடிப்படை. இவற்றையே அப்படியே தம் மொழியில் அழைத்து வணங்கினர் ஆரியர். ‘நிலம்’ என்ற பூதத்தை மட்டும் ஆரியர் ஏற்கவில்லை. தமிழர் மரபு, தாயுரிமை மிகுந்திருந்தது. ஆதலால், நிலம் வணங்கப் பட்டது. தந்தையுரிமை மிகுந்த ஆணாதிக்க ஆரியர் நிலத்தை வணங்கவில்லை. (இது குறித்த விரிவான கட்டுரை எனது ‘நிலம் பெண்ணுடல் நிறுவனமயம்’ நூலில்)

ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள், ஆரியர் - தமிழர் போர் குறித்தவை மட்டும் அல்ல. ஆரியர் தமிழரது மெய் யியலை ஏற்றுக் கொண்டு தமக்கான சமூகத்தை அமைக்கத் தொடங்கிய வரலாறும் அப் பாடல்களில் உள்ளது. இந்த நோக்கில் ரிக் வேதத்தைக் காணும்போது, சிந்து வெளித் தமிழரின் மரபு மேன்மையும் ஆரியரின் மெய்யியல் மற்றும் பொருளியல் வறுமையும் புலப்படும்!

இது குறித்த மேலும் பல தகவல்களை வேறு ஒரு வாய்ப்பில் காண்போம்!

குறிப்பு: ரிக் வேதப் பாடல்களின் ஆங்கில மொழி யாக்கம்: ஆர்.டி.எச்.கிரிபித் / அலைகள் வெளியீட்டகம். இதே பதிப்பின் தமிழ் மொழி யாக்கம் கருத்தில் கொள்ளப் படவில்லை

Pin It