கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், 144 ஆணையை உத்தரவு விலக்கிக் கொள்ள வேண்டும், அப்பகுதி யிலிருந்து காவல்துறை பிணையையும், துணை இராணுவப்படையையும் விலக்கிக் கொள்ள வேண்டும், மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் ஆகிய கோரிக்கை களை முன்வைத்து, 29.10.2012 அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப் பட்டது சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகி லிருந்து சட்டமன்றத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டவர்களைக் காவல்துறை யினர் கைது செய்தனர்.

இம்முற்றுகைப் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை ஒருகிணைப்பாளர் திரு பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் திரு வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல்.திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு த.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு ஜவாகிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) (மக்கள் விடுதலை) மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன்,தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் மோகன்ராஜ்,விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன்,பியூசிஎல் தமிழகத் துணைத் தலைவர் திரு கண.குறிஞ்சி, தமிழ் நாடு மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் செல்வி, எழுத்தாளர் பா.செயபிராகாசம், ஓவியர் வீரசந்தனம், இயக்குனர் புகழேந்தி தங்கராசு, வியனரசு (பா.ம.க.), உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, கோ.மாரிமுத்து, பழ.இராசேந்திரன், அ.ஆனந்தன், க.அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் கு.சிவபிரகாசம், பழ.நல்.ஆறுமுகம், மு.தமிழ்மணி, ரெ.இராசு, க.முருகன், விடுதலைச் சுடர், ஆ.குபேரன், மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி, தமிழக மாணவர் முன்னணி தோழர் சுப்பிரமணியசிவா உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றுக் கைதாயினர்.

இப்போராட்டத்தை நடக்கவிடாமல் தடுக்க காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். ஈரோடு, கிருட்டிணகிரி, சேலம் கடலூர், சிதம்பரம் போன்ற பலபகுதிகளில் பல்வேறு இயக்கங்களின் முன்னணித் தோழர்கள் தடுப்புக் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் பேருந்து உரிமையாளர்களுக்கு வாய்மொழி ஆணை வழங்கி, போராட்டத்தில் பங்கேற்க வந்தோருக்கு பேருந்துகள் கிடைக்காமல் தடுத்தனர். போராட்டத்திற்கு முதல் நாள் தொடங்கி சென்னையை நோக்கி வந்த அனைத்து தனியார் வாகனங்களும் சோதனை என்ற பெயரால் மிரட்டப்பட்டன. சென்னை மாநகரச் சாலைகள் எங்கும் காவல்துறையின் கெடுபிடிகள் போராட்டத்தன்று அதிக அளவில் இருந்தது இவை அனைத்தையும் மீறி தஞ்சை, சிதம்பரம் த.தே.பொ.க. தோழர்கள் வாகனங்களில் வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாயினர். அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It