நியூட்டன் கண்டறிந்த இயற்பியல் விதி சமூகவியலுக்கும் பொருந்துவதுதான். மார்க்சிய மெய்யியலின் சிறப்பே இயற்பியல் விதிகளைச் சமூகவியல் வளர்ச்சிக்குப் பொருத்திக் காட்டியது தான்.

தமிழகத்தை விட்டு வெளி யேறுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 7.12.2011 அன்று மலையாள நிறுவனங் களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது.

குடந்தையில் மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையில் த.தே.பொ.க. தோழர்கள் நடத்திய போராட்டத்தால் ஒன்றரை இலட்சம் ரூபாய் அளவிற்கு அந்நிறுவனத்தின் கண்ணாடிகள் மற்றும் அணிகலன்களுக்குச் சேதம் என்றும் அந்நிறுவனத்தின் கார் கண்ணாடி ரூபாய் 5 ஆயிரம் பெறுமானமுள்ளது சேதம் என்றும், அந்நிறுவன மேலாளருக்குக் காயம் என்றும் ஐந்து தோழர்கள் மீது காவல்துறையினர் பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருச்சிச் சிறையில் அடைத்தனர்.

தஞ்சை நகரில் மலையாளிகளின் மூன்று கடைகளைத் தாக்கிப் பொருள்களைச் சேதப்படுத்தியதாக ஐந்து தோழர்களை திருச்சிச் சிறையில் அடைத்தனர். ஒரு கடையின் சேத மதிப்பு பத்தாயிரம் ரூபாய் என்றும் இன்னொரு கடையின் சேத மதிப்பு ஐந்தாயிரம் ரூபாய் என்றும் கூறியுள்ளார்கள்.

 கோவையில் ஆலுகாஸ், கஜானா நகை மாளிகைகளில் போராட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்கள் 15 பேர் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் ஆலுக்காஸ் நகை மாளிகை முன் போராட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்கள் ஆறு பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ள தோழர்கள் மீது புதிதாக ஒரு பொய் வழக்கையும் போட்டுள்ளது சென்னைக் காவல்துறை. சைதாப்பேட்டையில் மலையாளி ரொட்டிக் கடையை வேறு யாரோ தாக்கி சேதப்படுத்தியுள்ளார்கள். நம் தோழர்கள் அக்கடையைத் தாக்கியதாக அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, நீதி மன்றத்தில் புதிய சிறை ஆணை பெற்றுள்ளார்கள்.

ஓசூரில் ஆலுக்காஸ் நகை மாளிகைகளில் போராட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்கள் 12 பேரைத் தளைப்படுத்தி வைத்து, மாலையில் விடுவித்தனர்.

வேறு பல இடங்களில் உணர்வாளர்கள் பலர் இதே போல் மலையாள நிறு வனங் களை மூட முழக்க மிட்டுப் போராடி சிறைப்பட்டி ருக்கிறார்கள்.

இத்தாக்குதல்கள் அனைத் தும் கடந்த பத்து நாள்களுக் கும் மேலாகத் தமிழர்கள் கேரளாவில் மலையாள இன வெறியர்களால் தாக்கப் பட்ட தற்கு எதிர்வினையாக நடத்தப் பட்டவையே!

அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழக வழி பாட்டாளர் களை வழி மறித்துத் தாக்கி விரட்டினர் மலையாளிகள். தமிழகத்தி லிருந்து கேரளம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளைத் தடுத்துத் தாக்கினர். பயணி களை நடுவழியில் இறக்கி விட்டனர். தமிழகப் பதிவு பெற்ற வாகனங்கள் அனைத் தையும் தடுத்துத் தாக்கினர். ஆனால் கேரளத்திலிருந்து தமிழகம் நோக்கிவரும் கேரளப் பதிவு பெற்ற வாகனங்களையும் பேருந்துகளையும் தடுக்காமல் அனுப்பினர். கேரள வண்டிகள் தமிழகம் வந்துவிட்டுப் பாது காப்பாகத் திரும்பிப் போகும். தமிழக வண்டிகள் கேரள எல்லைக்குள் நுழைய முடியாது என்ற அவல நிலை இருந்தது.

கேரள மலைத் தோட்டங் களில் வேலைக்குச் சென்ற தேனி மாவட்டத் தமிழர்களைப் பெண்கள் உட்பட 500 பேரை மலையாளிகள் சிறைப்பிடித்து வைத்துவிட்டனர். தமிழக அரசு அதிகாரிகள், தமிழகக் காவல் துறை அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி அந்த 500 பேரை மறுநாள் மீட்டுக் கொண்டு வந்தனர்.

தமிழக சரக்குந்து வண்டிக் கும் மகிழ்வுந்து வண்டிக்கும் மலையாளிகள் குமுளியில் தீ வைத்தனர். கேரளாவின் காங் கிரசுக் கட்சியினரும், பா.ச.க. கட்சியினரும் முல்லைப் பெரி யாறு அணையில் உள்ள தமிழ கப் பொதுப்பணித் துறை அலு வலகத்தைத் தாக்கிச் சேதப் படுத்தினர். அலுவலர்களை உள்ளே வைத்து அக் கட்டடத் தைப் பூட்டினர். குமுளியில் உள்ள தமிழர் கடைகளை அடித்து நொறுக்கினர்.

தமிழர்கள் மீது மலை யாளிகள் இத்தனை வெறியுடன் வன்முறை ஏவுவதற்குக் காரணம் என்ன? மலையாளிகளுக்கெதி ராகத் தமிழர்கள் செய்த குற்ற மென்ன?

மலையாளிகள் மீது தமிழர் கள் எந்த வன்முறைத் தாக்குத லும்நடத்தவில்லை. முல்லைப் பெரியாறு அணை வழக் கில் 27.12.2006 அன்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை நிறை வேற்றுங்கள் என்று கேரள அரசிடம் கூறிவருவதைத் தவிர வேறு எந்தக் குற்றமும் தமிழர் கள் மலையாளிகளுக் கெதிராகச் செய்யவில்லை.

மேற்படி உச்சநீதி மன்றத் தீர்ப்பு முல்லைப் பெரியாற்று அணை வலுவாக உள்ள தென்றும், 142 அடி வரை இப் பொழுது தண்ணீர் தேக்கலாம் என்றும், முதன்மை அணையின் இணைப்பாக உள்ள சிற்ற ணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளைச் செய்தபின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. அத்தீர்ப்பு கேரளத் தைக் கட்டுப்படுத்தாது என்று 18.3.2006 அன்று கேரளம் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. “கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்ப்பாதுகாப்புத் திருத் தச் சட்டம்“ என்ற பெயரில் கொண்டு வந்த அச்சட்டத்தை எதிர்த்துத் தமிழக அரசு 27.3.2006இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு இப்பொழுது விசார ணையில் உள்ளது. உச்சநீதி மன்றம் தமிழக, கேரளப் பிரதி நிதி தலா ஒருவருடன் ஐவர் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை தரச் சொல்லி யுள்ளது. 2012 சனவரியில் அந்த ஐவர்குழு அறிக்கை தர உள்ளது.

உச்சநீதி மன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு தனி நாடு போல் சட்டமியற்றிக் கொண்ட கேரளத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காரணம் தெளி வானது. தமிழினத்திற்கெதிராக எந்த இனம் செயல்பட்டாலும் அந்த இனத்தின் அநீதியான செயல்பாடுகளை இந்திய அரசு ஆதரிக்கும். அதிலும் மலையா ளிகள் தமிழினத்தின் மீது பகை கக்கும் போது, இந்திய அரசு கூடுதல் துடிப்புடன் அவர்களை ஆதரிக்கும். மலை யாளிகள் இந்திய அரசின் அதிகாரக் கட்டமைப்பின் உச்சத்தில் உட் கார்ந்துள்ளார்கள்.

தமிழக அரசும் தமிழக மக்களும் உச்சநீதி மன்றம் மீண்டும் என்ன சொல்லப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கேரள அரசுக்கும் கேரள மக்களுக்கும் எதிராக எதுவும் செய்யவில்லை. எப்பொழுதாவது நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதுபோல் ஒரு நாள் அடையாள மறியல் கேரளா செல்லும் சாலைகளில் நடை பெறும். அதுவும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி!

உரிமைகளை இழந்தாலும் ஓங்கி எழாமல், ஒதுங்கி வாழும் தமிழர்களை வலிந்து தாக்கு கிறார்கள் மலையாளிகள். ஏன்? பதிலடி கொடுக்காதவன் பாதிக் கப்படுவான். நீதி தானாக வெற்றி பெறாது. நீதியை நிலை நாட்ட வலிமை வேண்டும். வலி மை என்பது என்ன? அநீதியைத் தாக்கும் ஆற்றல். தாக்கும் ஆற்றல் என்பது என்ன? வன் முறையைச் செயல் படுத்தும் ஆற்றல்!

இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் திருவள்ளுவப் பெருந்தகை சொன்னார்.

“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை“ என்று

அறச் செயல்களுக்கு மட்டு மே அன்பு துணையாகத் திகழ் கிறது என்று கூறுவோர் அறியா தவர்களாவர். ஆனால் வீரச் செயல்களுக்கும் அன்பே துணையாகத் திகழ்கிறது. இதன் விரிந்த பொருளாக இன்னொன் றையும் பார்க்க வேண்டும். தம்மின மக்கள் மீதுள்ள அன்பு நீதியின் மேல் நமக்குள்ள பற்று ஆகியவை காரணமாக நம் மக்களையும், நீதியையும் காப் பாற்ற நாம் வீரச் செயல்கள் புரிய வேண்டும் என்பதாகும். வீரச் செயல் என்பது மறம் ஆகும். வீரச் செயல் என்பது சாரத்தில் வன்முறை சார்ந்த தாகும். அன்பு என்ற ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று அறம். மற் றொன்று மறம்.

ஆயுதங்கள் எடுப்பது, அடி தடித் தாக்குதலில் இறங்கு வது போன்றவை வன்முறை தான். அதே வேளை அரசையோ அல்லது இன்னொரு தரப் பையோ தமது கருத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் நோக்கில் நடத்தப்படும் உண்ணாப் போராட்டம் கூட எதிராளி மீது ஏவப்படும் ஒரு வகை வன்முறைதான்.

வன்முறை இரு வடிவில் செயல்படுகிறது. ஒன்று நீதிக் கான வன்முறை. இன் னொன்று அநீதிக்கான வன் முறை. ஆக்கிர மிப்பாளனின் வன்முறையும் அதை எதிர்ப்பவன் வன் முறையும் ஒன்றல்ல. 1930களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்கு அளிக்கும் உரிமையைக் கோரிப் பெற்றார் அம்பேத்கர். அதைக் கைவிட்டு ஒற்றை வாக்குரி மையுடன் தாழ்த்தப் பட்டவர் களுக்கான தனித்தொகுதி உரிமையை ஏற்குமாறு அம்பேத் கரை வலியுறுத்தினார் காந்தி. அவர் காலவரம்பற்றப் பட்டி னிப் போராட்டம் நடத்தினார். காந்தியின் உயிரைக் காக்கும் நோக்கில் அம்பேத்கர் ஒற்றை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதி முறையை ஏற்றுக் கொண்டார். காந்தி உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டார்.

காந்தி நடத்திய அவ் வுண்ணாப் போராட்டம் எவ்வளவு பெரிய வன்முறை என்பதை அம்பேத்கர் உணர்ந் தார். இங்கு ஒற்றை வாக்குள்ள தனித்தொகுதி சரியா, இரட்டை வாக்குரிமை சரியா என்று நாம் விவாதிக் கவில்லை. உண்ணாப் போராட் டம் என்பதும் ஒரு வகைத் தாக்குதலே, ஒரு வகை வன் முறையே என்று மட்டுமே கூறுகிறோம். உண்ணாப் போராட்டத்தின் வழி மிகப் பெருந்திரளான மக்களின் கருத்தைத் தமது நிலை பாட்டுக்குஆதரவாகத் திரட்டிக் கொண்டு மிகப் பெரும் நெருக் கடியையும் நிர்பந்தத்தையும் அம்பேத்கருக்கு உண்டாக் கினார் காந்தி. தமக்கு ஞாயம் என்று பட்ட கோரிக் கையை அம்பேத்கர் கைவிட நேர்ந்தது.

பழைய சமுதாயத்தின் வயிற் றிலிருந்து புதிய சமுதாயம் பிறக்கும்போது செவிலிப் பெண் போல் வன்முறை பயன்படுகிறது என்றார் காரல்மார்க்ஸ்.

வன்முறை என்பது அடுத் தவர் உரிமைகளைப் பறிக் கவும் பயன்படுகிறது. தங்களு டைய உரிமைகளைப் பாது காக்கவும் தேவைப்படுகிறது. அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கப் பயன் படுத்தப்படும் வன்முறை அநீதி யானது. தங்களுடைய உரிமை களைப் பாதுகாக்கப் பயன் படுத்தப்படும் வன்முறை அறம் சார்ந்தது. அறம் சார்ந்த வன்முறை தற்காப்புத் தன்மை உடையது.

ஓர் உயிர் தன்னைத் தற் காத்துக் கொள்ளக் கையாளும் வன்முறை இயற்கை நீதிக்கு உட்பட்டது. தன் உயிரைக் காத்துக் கொள்ள ஒருவர் கையாளும் வன்முறையை இந்திய அரசமைப்புச் சட்டமும் ஏற்கிறது. ஒருவர் என்பதை ஓரினம், ஒரு தேசம் என்று விரித்துப் பார்த்தால் அதன் தற்காப்புரிமைக்காக அது வன்முறையைக் கையாள்வது உலகில் ஞாயப்படுத்தப்படுவது புரியும். ஒரு தேசம் படை வைத்துக் கொள்வதை உலகச் சட்டங்கள் ஏற்கின்றன. எந்த அடிப்படையில்? தற்காப்பு அடிப்படையில்தான்!

முல்லைப்பெரியாறு அணை உரிமைச் சிக்கலில், மலையாளக் குற்றக் கும்பல் வேண்டுமென்றே சதி நோக்கத்தில் அணை உடையப் போகிறது, 35 இலட்சம் மலையாளிகள் வெள்ளத்தில் மிதக்கப் போகி றார்கள் என்று புரளி கிளப்பி, மலையாள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு வதந்தி பரப்பும் மலையாளக் குற்றக் கும்பலில் அம்மாநில முதலமைச்சர்தான் எப்போதும் முதலிடம் வகிக்கிறார்.

உலகப் பாட்டாளி வர்க்கத் திற்கான சர்வதேசிய சகோதரத் துவம் பேசும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் முதலமைச்சர் அச்சு தானந்தன் இந்திய தேசிய சகோதரத்துவம் பேசும் காங் கிரசுக் கட்சியின் இந்நாள் முதல்வர் உம்மண்சாண்டி ஆகி யோரே அப்பாவித் தமிழர் களைத் தாக்குவதற்கு மலை யாளிகளைத் தூண்டி விட்ட வர்கள். அப்பாவி மக்கள் மீது வன்முறை ஏவத் தூண்டி விட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் இவர்கள்!

இந்தியத் தேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதிய சனதா கட்சி ஆகியவையே அணை உடைப்புப் போராட்டத்திலும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கும் வன்முறையிலும் முன்னணியில் நிற்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் உள்ள சில மலையாளி நிறுவனங்களை மூட வலியுறுத்தியும், மலையா ளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேறக் கோரியும் 7.12.2011 அன்று போராட்டம் நடத்தியது. இது தமிழத்தில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றுள் ளது. கேரளத்தில் மலை யாளிகள் தமிழர்களுக்கெதிராக நடத்திய போராட்டம் சற்று மட்டுப் படவும் நமது போராட் டம் துணை செய்துள்ளது.

ஆனால் சிலர் “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி“ என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இனத்திற் கெதி ராகப் போராடலாமா? இது இனவெறி ஆகாதா? கம் யூனிஸ்ட் இயக்கம் செய்யக் கூடிய காரியமா? என்று கேட் கிறார்கள்.

இக்கேள்வியை முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையைப் பார்த்துக் கேட்க வேண்டும் அதன் அரசியல் தலைமைக் குழுவைப் பார்த்துக் கேட்க வேண்டும். தமிழர் களுக்கெதிரான மலையாள இனவெறியைத் தூண்டிவிட்டு அதை மேலும் மேலும் வளர்த்து வருவது கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்பாவித் தமிழர் களை மலையாளிகள் அடிக் கிறார்கள். முல்லைப் பெரியாறு அணைக்குள் புகுந்து அதை உடைக்க முயல்கிறார்கள். அங்குள்ள தமிழகத்தின் பொதுப் பணித்துறை அலு வலகத்தைத் தாக்கி ஊழியர் களை உள்ளே வைத்துப் பூட்டு கிறார்கள். இந்த அட்டூழியங் களைக் கண்டிக்க வேண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் முதலமைச்சர் முதுபெரும் தலைவர் அச்சு தானந்தன் எரிகின்ற கொள்ளி யில் எண்ணெய் வார்ப்பது போல் தமிகத்தைக் கண்டித்து 7.12.2011 அன்று காலை உண்ணாப் போராட்டம் தொடங்கினார். இதனால் மலையாளிகள் மேலும் ஊக்கம் பெற்று மூர்க்கத்தனமாகத் தமிழர் எதிர்ப்பைக் காட்டு கிறார்கள்.

காங்கிரஸ் முதல்வர் உம் மண்சாண்டி “தமிழ்நாட்டுக்கு வெறும் தண்ணீர்ச் சிக்கல் எங்களுக்கு உயிர்ச்சிக்கல்“ என்று பேசி மேலும் மேலும் இன வெறியை மலையாளிகளிடம் தூண்டி வருகிறார்.

ஆனால் அணையின் உண்மை நிலை என்ன என்பதை கேரள உயர்நீதி மன்றத்தின் அம்மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.பி. தண்டபாணி புட்டு வைத்து விட்டார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அங்கு நடந்து வரும் வழக்கில் கேரள அரசின் விளக்கத்தை அம் மாநில உயர்நீதி மன்றம் கோரி யது. 2.12.2001 அன்று கேரள உயர்நீதி மன்றத்தில் கே.பி. தண்டபாணி பின்வருமாறு கூறினார்.

“முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. அது உடையாது. ஒரு வேளை அது உடைந்தால், வெளியேறும் தண்ணீரை அதற்குக் கீழே உள்ள இடுக்கி, செருதோணி, குலமாவு அணைகள் தாங்கிக் கொள்ளும். வெள்ளம் வெளி யேறி மக்களுக்கு ஆபத்தை உண்டாக்காது. இடுக்கி அணையின் கொள்ளளவு 70.5 டி.எம்.சி. முல்லைப்பெரியாறு அணை உடைந்து வெளியே றினால் மொத்த நீர் 9 டி. எம்.சி மட்டுமே.''

தலைமை வழக்கறிஞர் கே.பி. தண்டபாணியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று காங் கிரசு மற்றும் அதன் கூட்டணி அமைச்சர்களும், எதிர்க் கட்சியினரும் குதிக்கின்றனர். அதன்பிறகு 6.12.2011 அன்று அதே கேரள உயர்நீதி மன்றத் தில் முல்லைப் பெரியாறு அணை சிறப்பு வல்லுநர் குழுத் தலைவராகக் கேரள அரசு அமர்த்தி யுள்ள பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் அணை யின் பாதுகாப்பு குறித்துப் பின்வருமாறு எழுத்து வடிவில் வாக்குமூலம் கொடுத்தார்.

“முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அதன் மொத்தத் தண்ணீரையும் இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் வகை யில் அந்த அணையின் கொள் ளளவு அதிகம். நில நடுக்கம் வந்தாலும் இடுக்கி அணை தாங்கும். உடையாது. (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 7.12.2011)

கேரள அரசைப் பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்விரு உயர் அதிகாரிகளும் முல்லைப் பெரியாறு அணை உடையாது என்றும் ஒரு வேளை உடைய நேரிட்டால் அதன் முழு நீரையும் இடுக்கி, செருதோணி, குலமாவு அணைகள் தாங்கிக் கொள்ளும் என்றும் எனவே கேரள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கேரளத்தின் உயர்நீதி மன்றத்தி லேயே உண்மையைப் போட்டு உடைத்துவிட்டனர். இது கண்டு ஆத்திரப்பட்ட சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தன் தமிழக அரசு கேரள அதிகாரி களுக்குக் கையூட்டுக் கொடுத் துத் தன் வசப்படுத்தி யுள்ளது. அவ்வாறு யார் யாருக்குக் கையூட்டுக் கொடுத்தோம் என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதிலிருந்து ஒன்று தெரி கிறது. தமிழக அரசு அதிகாரி களைத் தம் வசப்படுத்த முதல் அமைச்சராக இருந்த போது அச்சு தானந்தன் முயன்றி ருப்பார். எவ்வளவு கேவல மானவர்கள் இவர்கள்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் களை இவர்களைப் போல் கேவலமாகவும் அநீதிக்கான வன்முறையாளர்களாகவும் இருக்கும்படி நாம் வலியுறுத் தவில்லை. தமிழினத்தற் காப்புக் காவலர்களாகஇருக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பு. கருணாநிதி முதல் வராக இருந்த போது நமது உரிமைகளைத் தர்க்க அளவில் கூட வலுவாக வாதாடவில்லை. ஒப்புக்குப் பேசிக் கொண்டிருப்பார். இப் போதைய முதல்வர் செயலலிதா முல்லைப் பெரியாறு அணை யில் உள்ள நமது உரிமைகளை வலியுறுத்தித் திறமையாக வாதாடுகிறார். ஆனால் இனத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உணர்வாளர்களைக் கடுமையாக ஒடுக்குகிறார்.

மலையாளிகளின் நிறுவனங் களைத் தாக்கியோர் மீது வழக்குப் போடக்கூடாது என்பது நமது வாதமல்ல. செய் யாத குற்றங்களைச் செய்தது போல் சட்டப் பிரிவுகள் போடுவதும் பிணையில் விடவே கூடாது என்பதற்காகப் பிரிவு களைச் சேர்ப்பதும் சட்டப் படியே ஞாயமன்று.

சென்னையில் தோழர் க. அருணபாரதி தலைமையில் ஆலுகாஸ் முன் அதை மூடும் படி வலியுறுத்தப் போன தோழர்களை முன் தடுப்பாகத் தளைப் படுத்தினார்கள். அவர்கள் வெளியே வரக் கூடாது என்பதற்காக 7(1) (A), பிரிவு 151 உடன் என்ற பிரிவை வேண்டுமென்றே சேர்த்தார்கள். புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவர்களை 9.12.2011 அன்று மீண்டும் நீதி மன்றத்தில் நிறுத்தி சைதாப்பேட்டையில் மலையாளி கடை ஒன்றை இவர்கள் உடைத்தார்கள் என்று பொய்யாகச் சேர்த்து இன்னொரு வழக்கை அவர்கள் மீது போட்டு மீண்டும் சிறையில் அடைத்தார்கள். வஞ்சகமும் பழிவாங்கும் நோக்கமும் கொண்டு அதிகாரத்தை அரா ஜகத்திற்குப் பயன்படுத்தியுள் ளது காவல்துறை. முதல மைச்சர் கவனத்திற்கு இதை நாம் கொண்டு போயுள் ளோம்.

இவ்வாறு செய்யாத குற்றத் திற்கு வழக்குப் போட்டது முதலமைச்சர் செயலலிதாவிற்கு உடன்பாடில்லை என்றால், அதற்குப் பொறுப்பான காவல் துறை அதிகாரியை இடை நீக்கம் செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் அவ் வழக் கைக்கைவிடச் செய்ய வேண்டும்.

உரிமைகளை இழந்து இழந்து உதைவாங்கி உதை வாங்கி அவமானப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள் இப் பொழுதுதான் எழுந்து பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம், உச்சநீதி மன்றம், இந்திய அரசு, தமிழக அரசு என சட்டப்படியான நிறுவனங்கள் எதுவும் தமிழர்களைப் பாது காக்காத போது திருப்பி அடித் துத்தான் தங்கள் உயிரையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்ற உணர்வுக்கு வந்துள்ளார்கள்.

தமிழினத்தை அழிக்க வரும் கூடங்குளம் அணு உலையை மூடச் சொல்லி இலட்சக் கணக் கான மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளார்கள் ஒரு பக்கம்! இன்னொரு பக்கம் மலையாளக் குற்றக் கும்பலுக்கப் பதிலடி கொடுக்கப் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் போர்க் களம் கண்டு வருகிறார்கள். கடலோரங்களில் மீனவத் தமிழர்களின் சிங்கள இன வெறியர்களின் கொலைத் தாக்கு தலுக்கு எதிர்வினையாக கால வரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார் கள். இதுதான் இன்றைய தமிழகம்!

கர்நாடகத்தில் அப்பாவித் தமிழர்களை 1991 நவம்பர், டிசம்பரில் காவிரிக் கலகம் என்ற பெயரில் கன்னட இன வெறி யர்கள் இனப்படுகொலை செய் தார்கள். அவர்கள் வீடுகளை எரித் தார்கள். தமிழர்களின் வணிக நிறுவனங்களைத் தாக் கிச் சூறையாடினார்கள். இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். அப்போதைய முதல்வர் செயலலிதா இங்கு அகதி முகாம்கள் அமைத்தார். எதிர்க் கட்சித் தலைவர் கருணா நிதி அறிக்கை விட்டுக் காலம் கழித்தார். தமிழ்நாட்டில் உருப் படியான எதிர்வினை எதுவு மில்லை.

காவிரி உரிமை பற்றியோ கன்னடர்களுக்கு எதிராகவோ எதுவும் பேசாமல் கர்நாட கத்தில் தங்கள் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழர் களைக் கன்னட இனவெறிக் கும்பல் தாக்கி, அகதிகளாக விரட்டியடித்தது. காங்கிரசு முதல்வர் பங்காரப்பா இந்த வன்முறைக் கும்பலுக்குப் பக்க வலுவாகச் செயல்பட்டார். தமிழ்நாடு தக்க பதிலடி கொடுக் கவில்லை.

இன்று தமிழகம் அன்று போல் ஊமையாய் அல்லது ஒப்பாரி வைக்கும் கூட்டமாய் இருக்கப் போவதில்லை. இன்றைய தமிழகத்தின் எழுச்சி தேர்தல் கட்சிகளுக்கு வெளியே வேர் விட்டுள்ளது. பணம், பதவி, விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இன உணர் வாளர்களிடம் அவ்வெழுச்சி வேர் கொண்டுள் ளது.

இந்திய ஏகாதிபத்தியதிற்குக் கங்காணி வேலை பார்ப்பது தான் தனது கடமை என்று தமிழக அரசும் தமிழகத் தேர்தல் கட்சிகளும் கருதுமா னால் அவை ஏமாந்து போகும். தமிழினத்தின் முதல் பெரும் பகை சக்தி இந்தியாதான் என்பதைத் தமிழ் மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் கண்ட றிந்து விட்டார்கள். இந்தியத் தேசிய வெறியைப் பரப்பி, எழுகின்ற இனத் தற்காப்புப் போராட்டங்களைத் தடுத்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் தோற் றுப் போவார்கள். அவர்கள் தமிழினத் துரோகிகள் என்று மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். இன்று நிலைமை அவ்வாறு மாறியுள் ளது. தமிழின மக்களுக்கு விழிப் புணர்வூட்டியவர்கள், இந்திய ஆட்சியாளர்களும் அயல் இன ஆக்கிரமிப்பாளரும் ஆவர்!

இவ்வளவு வீரம் பேசுகிறீர் களே, தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சியில் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எங்கள் எண் ணிக்கை குறைவாக இருக் கலாம். ஆனால் தங்களை இழந் தாவது தமிழினத்தைப் பாது காக்க வேண்டும் என்ற உணர் வுள்ளவர்களாக த.தே.பொ.க. தோழர்கள் இருக்கிறார்கள். ஒரு சொம்புத் தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அது ஒரு குடம் குளிர்நீரை வெந்நீராய் மாற்றி விடும்! எதிரிகள் ஏற் கெனவே தமிழ் மக்களைச் சூடாக்கியுள்ளார்கள்!

எதிரி தன்னை அழிக்க வரும்போது ஒருவன் எதிரியைத் தாக்கித் தன்னைக் காத்துக் கொள்வதை சட்டம் ஏற்கிறது. உலகநீதி ஏற்கிறது. கேரளத்தில் உள்ள அப்பாவித் தமிழர் களையும் கேரளத்திற்குச் செல்லும் அப்பாவித் தமிழர் களையும் தாக்குகிறது மலையா ளக் குற்றக் கும்பல். மலைத் தோட்டங்களுக்கு அன்றாடம் கூலி வேலைக்குப் போன தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிப் பெண்களைச் சிறை வைத்து மானபங்கப் படுத்தி யுள்ளது மலையாளக் குற்றக் கும்பல்! நடந்த அவமானங் களை முழுமையாக வெளியே சொல்ல தமிழ்ப் பெண்கள் வெட்கப்படுகிறார்கள்.

குமுளியில் உள்ள தமிழகப் பொதுப் பணித்துறை அலு வலர்கள் வெளியே நடமாட முடிய வில்லை. அவர்கள் பிள்ளைகள் பத்து நாள்களுக்கு மேலாகப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இத்தனைக் குற்றங்களைச் செய்து வரும் மலையாளிகள் மீது கேரள அரசு வழக்குப் போடு வதில்லை. அவர்களைச் சிறையிலடைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மலை யாள நிறுவனங்களை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது சில இடங் களில் அவற்றுக்குச் சிறு சேத மிழைத்தவர்கள் மீது கொடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு! பிணையில் வரமுடியாதபடி சிறை அடைப்பு! அதோடு முழுப் பொய் வழக்கு!

இன உணர்வுமிக்கத் தமிழ் மக்கள் காவிரி உரிமையைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிப்பது போல் இனியும் ஏமாளியாக இருக்கக் கூடாது. கன்னட வெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது கைகட்டி மனதிற்குள் அழுதது போல் இனி வாளாவிருக்கக் கூடாது. கச்சத் தீவை இழந்து அன்றாடம் மீனவர்களையும் இழந்துவரும் அவலம் தொடரக் கூடாது.

நம் மக்களைக் காப்பதற்கான நமது களம் நமது தமிழ் மண்ணிலேயே இருக்கிறது. அயல் மண்ணில் தமிழர்களை அவர்கள் தாக்கினால் நம் மண்ணில் அவர்களுக்குப் பதிலடி கொடுப்போம்! எதிரி கையாளும் உத்தியை நாமும் கையில் எடுப்போம்! ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம்! இது தற்காப்புப் போர்!

Pin It