தமிழ்ச் சமூகத்தின் சிறந்த உற்பத்தி சக்தியான, மனித உழைப்பு என்ற மாபெரும் ஆற்றலின் உடல் மற்றும் அறிவாற்றலை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் என்னும் மதுக்கடையின் மூலம் சிதைக்கிறது.

இதை எதிர்த்து மக்கள் நலன் சார்ந்த பல அமைப்புகள், காந்திய சிந்தனை அமைப்புகள் என்று பலதரப்பட்ட அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால் இப்போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை திரட்டுகிற மற்ற அமைப்புகளின் பரப்புரைக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளின் பரப்புரைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

மற்ற அனைத்து அமைப்புகளும் மது குடிப்பதன் மூலம் உடல் நலக்கேடு, குடும்ப அமைப்பு சிதறல், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பிரச்சனை, மதுபான நிறுவனத்திடமிருந்து பெறப்படும் ஊழல் இவைகள் குறித்து மட்டும் பரப்புரை செய்கின்றன.

தமிழ்த் தேசிய அமைப்புகள் மட்டுமே "நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.’’

என்ற வள்ளுவனின் கூற்றுபடி ஆராய்ந்து பரப்புரை செய்கின்றன.

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று 1949-ல் முழங்கிய தி.மு.க பின்னர் சறுக்கி ‘’ மாநில சுயாட்சி’’ என்று 1965 லும் பின்னர் ''வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’’ என்று 1969 லும் கூறியது. பின்னர் கங்காணி முதல்வர் பதவி அடைந்து அதில் மயக்கமுற்று இப்பொழுது ''தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது.’’ (மு.க.2010) என்று கூறலாம், இந்த கொள்கை சறுக்கல்தான் டாஸ்மாகின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் முக்கிய காரணமாகும்.

தமிழர்களுக்கு அனிச்சையாக முகிழும் இன உணர்வை கெடுத்து, ஒரு போதை மன நிலையிலேயே தள்ளாடி அடிமையாக வைப் பதற்குதான் இந்த டாஸ்மாக் மற்றும் புதிய எலைட் மதுக்கடைகள் உதவும்.

சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் வரி வருமானம் 45,000 கோடி

மத்திய அரசிடம் இருந்து பங்கிடப்பட்ட வரி வருமானம் 10,400 கோடி. மத்திய அரசு மானியத் தொகை 7,150 கோடி. மொத்தம் 62550 கோடி. மாநில அரசு வருவாயில் 15,000கோடி அதாவது 30% மேல் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது.

டில்லி வல்லாதிக்க அரசுக்கு என்று தனியாக மக்கள் என்று ஒரு உற்பத்தி ஆற்றல் இல்லை. பின்னர் அதற்கு எப்படி வருமானம், வரி முதலியவை கிடைக்கும்? எல்லாம் பல தேசிய இனமக்களிடமிருந்து, பறித்து, இந்தியா என்ற கற்பனை தேசியத்தை பரப்பி, நம்ப வைத்து நம்பாதவர்களை அடக்கி ஒடுக்கி, வசூல் செய்து மாநிலங்களின் மிகப்பெரிய இயற்கைச் செல்வங்களான நிலக்கரி, பெட்ரோல், தோரியம் மற்றும் பல கனிம வளங்களை தானாகவும்,தனியார் மூல மாகவும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு மாநிலங் களுக்கு பங்கிடப்பட்ட வரியாக 32 % தருவதாக கூறினாலும் மொத்த பங்கீட்டில் மாநிலங்க ளுக்கிடையே பிரித்து வழங்கும் போது, தமிழகத்தின் பங்கு 5.3 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக் காடாக குறைந் துள்ளது’ ’(நிதிய மைச்சர் சட்டப் பேரவையில் 2011)

மத்திய அரசிடமிருந்து பங்கிட்டப்பட்ட வரி வருமானம் 10,400 கோடி என்று முதல்வர் கூறினாலும் அதில் சேவை வரி என்று 1100 கோடி பிடித்தம் செய்து 9300 கோடி தான் வருகிறது. நமது தமிழ் மக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வரி வருவாயிலிருந்து 32 விழுக்காடு தர வில்லை. இந்தியா முழுவதும் மொத்தமாக பெறப்பட்ட வரியான 5,77,300 கோடியில் இருந்து நாட்டின் மொத்த மக்கள் தொகையான 121 கோடி மக்களுக்காக சேவை செய்யும் அனைத்து மாநில அரசு களுக்கும் சேர்த்து 1,87,00 கோடி தருகிறது. இதில் தமிழ் நாட்டிற்கு (10,400 கோடி) உத்திர பிரதேசத்திற்கு 20 (36,900 கோடி) பீகாருக்கு (21,00 கோடி) என்று பாரபட்சமாக 100 விழுக்காட்டையும் பிரித்து தருகிறது.

தமிழ்நாட்டு மக்களிட மிருந்து பெறப்படும் வரிப் பணமும், இங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி, கலால் வரி, கம்பெனி வரி, வருமான வரி முதலியவை மத்திய அரசுக்கு கிடைக்கிறது. மாநில அரசின் வரிவருவாயான விற்பனை வரியிலும் முழு கட்டுப்பாட்டையும் டில்லி பறித்துக் கொண்டது. தமிழ் நாட்டின் வரிவருமானத்தையும் இழந்து தனி நாடு கொள்கையும் விட்டுவிட்டு டில்லி வல்லா திக்கத்தின் கங்காணி முதல்வர் பதவியின் விளைவே இந்த டாஸ்மாக். இந்த புரிதலுடன் நாம் சிக்கலை அணுகினால் தான் தீர்வு கிடைக்கும்.

இதற்கு தமிழ்த்தேசிய விடு தலையே இறுதி தீர்வு என்றாலும் தற்காலிகமான தீர்வாக தமிழ்நாடு அரசு தன் மக்களிடமிருந்து மற்றும் தொழிற் சாலைகள் மூலம் பெறப்படும் அனைத்து வரி வரு மானத்தையும்தானே வசூலித்து 80 விழுக்காடு வரை வைத்துக் கொள்வோம் என்ற கோரிக் கையை முன் வைத்துப் போராட வேண்டும்.

தற்போது மொத்த பங்கிடப் பட்ட வரி வருவாய் 4.9% விழுக்காடு வரை தருகிறோம் என்று டில்லி கூறுவதும், கூடுதலாக கொடுங்கள் என்று கையேந்துவதும் வெட்கத் திற்குரிய செயல்.

மாநில அரசே வரி வருமா னத்தை வசூலிக்கும் என்ற ஒரு நிலை இருந்தால் என்ன வாகும் (எ.கா) 2009, 2010 கான ஒரே ஒரு துறையை மட்டும் எடுத்துக் கொள்வோம். கணினி மென் பொருள் துறை மூலம் மட்டும்( நாற்பதாயிரம் கோடி) 40,000 கோடி வியாபாரம் செய்து டில்லிக்கு தந்த வரிப்பணம் ஒன்பதாயிரம் கோடி (20 விழுக் காடு) சேவை வரி மட்டும். இதில் வருமான வரி செல்வ வரி உட்பட மற்ற வரிகள் அடங்கா.

தமிழ்நாட்டு மக்களுக்கும், சிறு தொழில்களுக்கு 5 மணி நேரம் மின்வெட்டு செய்து, பெரிய நிறுவனங்களுக்கு தடை யில்லா மின்சாரம், சாலை வசதி, உரிமைகளற்ற குறைந்த அளவு ஊதியம் பெறும் தொழிலாளர் வசதி என அனைத்து வசதி களையும், வழங்கியும் தமிழக அரசுக்கு வரி வசூலிக்க உரிமை யில்லை. இது போன்ற எண் ணற்ற துறையின் மூலம் தமிழக தொழிற்சாலைகள் டில்லிக்கு செலுத்தும் வரி தமிழ் மாநில வரி வருவாயை காட்டிலும் 4 மடங்கு அதிகம்.

டில்லி வல்லாதிக்கம் என்பது ஒரு சிதைந்து கொண்டிருக்கிற மணல் கோட்டை. இதற்கு மக்களின் நலன் மற்றும் உரிமையின் மேல் துளியும் அக்கறை இல்லை. கார்ப்ரேட் ஊழல் முதலாளிகள் வாரி சுருட்டி கொள்ளையடிப்பதற்கு மட்டுமே உதவும் இந்த அமைப்பு, சென்ற 2010,2011 ஆம் ஆண்டு தொழில் குழும நிறு வனங்களுக்கு அளித்த வரிச் சலுகை மட்டும் 4,60,977 கோடி.

121 கோடி உள்ள பல் தேசிய இன மக்களுக்கு சேவைகள் செய்யும் கடமை உள்ள அனைத்து மாநில அரசுக்கும் சேர்த்து ஒதுக்கிய மொத்த தொகை, 1,87,00 கோடி. ஊழல் டில்லி அரசின் திட்டச் செலவுக் காக ஒதுக்கிய பணம் 3,95,000 கோடி ரூபாய் திட்ட மில்லா செலவுக்காக ஒதுக்கிய பணம் 8,21, 550 கோடி ரூபாய்.

திட்டமில்லா செலவுகளின் மூலம்தான் ஊழல் என்ற மசகை அதிகம் உறிஞ்சி அதன் இருப்பை தக்க வைத்து கொண் டிருக்கிறது டில்லி.

ஆகையால் அனைத்து வரி வருவாயையும் மாநில அரசு களே வசூலித்து 20 விழுக்காடு மட்டும் டில்லி அரசுக்கு தருவோம் என்று மாநில கட்சிகள் குரல் எழுப்பினால் ஒழிய இந்த டாஸ்மாக பிரச் சனைக்கு தீர்வு இல்லை. இல்லை யென்றால் கட்டாயம் மாநில அரசு டாஸ்மாக்கை திறக்கும், கல்வியை கடைச் சரக்காக்கும், மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்க்கும். அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கும், மின்சாரச் சேவையை கைவிடும் சுடு காட்டுச் சேவையை கூட தனியார் மயமாக்கும் இன்னும் பல கொடுமைகள் நடக்கும் பாழாய்ப்போன கங்காணி முதல்வர் பதவிக்காக.

இத்தகைய அரசியலைப் புறந்தள்ளி புதிய எழுச்சி பெறுவோம்! டாஸ்மாக்கை ஒழித்து நமது உற்பத்தி ஆற்றலின் உயிர் மற்றும் அறிவை காத்து தமிழ்த்தேசம் காப்போம்!

Pin It