புதிய தலைமுறைநேர்காணல் 

உலகமே திரும்பி பார்க்கும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கூடங்குளம் பகுதியில் வழி நடத்தி வரும் முனைவர் சு.ப.உதயகுமார் அக்னிப் பரிட்சை என்ற புதிய தலைமுறை தொலைகாட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் 01/09/2012 அளித்த அறிவார்ந்த, உணர்ச்சி ததும்பும் பதிலுரைகள் கீழே தரப்படுகின்றன. 

இன்றைக்கு உயர்நீதி மன்றத்தில் வந்துள்ள தீர்ப்பில் அணுமின் நிலையம் எல்லா வித பாதுகாப்பு அம்சங்களோடு கட்டப் பட்டுள்ளது. தன் பணியை தொடங்கலாம் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று உயர்நீதி மன்றம் சான்று அளித்துள்ளது இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மக்கள் மன்றத்திலே போராடுகின்ற இயக்கம். எங்களுக்கு ஆதரவான சில இயக்கங்களும், நண்பர்களும் தான் இவ் வழக்கை தொடர்ந் திருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் இதனுடைய பாரபட்சங்களை ஆராய்ந்து ஒரு நல்ல தீர்ப்பு தரும் என்று நம்பியது உண்மை. ஆனால் இன்றைய சூழலில் ஒரு தரப்பாக மட்டுமே இத்தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அரசியல் கட்டமைப்பு அம்சமே தவிர, இந்த நீதிமன்றங்கள் எங்கிருந்தோ வருவதில்லை. இந்த தீர்ப்பு எங்களுக்கு எந்த வித ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று. இதற்கு மக்கள் மன்றத்தில் தான் ஒரு நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் அணுசக்தி இருக்கிறது, இந்தியாவிலே கூட ஏழு இடங்களில் அணுமின் நிலையம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மட்டும் நீங்கள் எதிர்ப்பது, தொடங்கவே கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து வருவது, ஒரே கோரிக் கையிலே உறுதியாக நிற்பது என்பது சரியான அணுகுமுறையா?

 உலகம் முழுவதும் அணுமின்நிலையம் இருக்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல், ஒரு சில நாடுகளில் மட்டும் தான் அணுமின் நிலையம் அதிகமாக இருக்கின்றன. அணுசக்தி யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பெரும்பாலான நாடுகள் உதாரணமாக பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா இந்த மூன்று நான்கு நாடுகள்தான் அணுசக்தியில் மின்சாரம் அதிகமாக எடுக்கிறதே தவிர, உலகில் 250 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்ற வழிகளிலேதான் மின்சாரம் எடுக்கிறார்கள், இந்தியாவில் வெறும் 2.7 சதவிதம் தான் அணுசக்தியிலிருந்து மின்சாரம் எடுக்கப் படுகிறது, இது கிட்டதட்ட ஒன்றும் மில்லாதது, இந்த 2.7 மின்சாரம் வராத நிலையில் இந்தியா தலைகீழாக போய்விட போவதில்லை. நமக்கு எந்த விதமாற்றமும் ஏற்படாது. 

அனல் மின்நிலையம் வழியாகவும் , நீர்மின் நிலையம் வழியாகவும் மின்சாரம் எடுக்கும் போது, இது சாதாரண மக்களுக்கு அல்லது எந்த பிரிவி னருக்கும் பெரிய அளவில் பாதிப்புக்களை உருவாக்குவது இல்லை. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து உருவாக்கப்படும் மின்சாரம் மிகப் பெரியப் பாதிப்புகளை உருவாக்குகிறது. அப்படி பட்ட அழிவுகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம் எனவே தான் அணுசக்தி மின்சாரம் வேண்டாம் என்று சொல்கிறோம். 

உதாரணமாக சப்பானில் 52 அணுமின் நிலையம் உள்ளது . இந்த பிக்குஷிமா விபத்துக்கு பிறகு அத்தனையும் மூடினார்கள் சப்பான் நாட்டவர்கள் எல்லாவிதத்திலும் மின்சாரம் உபயோகிக்கிறவர்கள். ஆனால் இந்த 52 அணு உலையையும் மூடிய பிறகு சப்பான் நாட்டவர்கள் நிலை குலைந்து போகவில்லை. இன்றைக்கு வெறும் இரண்டு அணு மின்நிலையம் மட்டும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள் அதற்கும் சப்பானிய மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். நாங்கள் அதைத்தான் சொல்கிறோம் சப்பானிய மக்களாலேயே இதை எதிகொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் . இங்கே ஊழலும்,இலஞ்சமும்அநியாயமும், அட்டூழியங் களும் நிறைந்த நமது சமுதாய மக்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள் சாதாரண மக்கள் மிகப்பெரும் ஆபத்தில் தள்ளப்படுவார்கள், போபாலில் நடந்த விபத்தை நாம் பார்த்திருக்கிறோம். 

போபால் விபத்து என்பது வேறு இது வேறு இல்லையா? 

வேறு வேறு விபத்துகள் ஆனால் நடந்தது என்ன? பேரிடர் இழப்புக்கு தயாராக இருக்கி றோமா, அப்படி பேரிடர் நடந்தது. பேரிடர் நடத்தியவருக்கு தண்டனை கொடுத்தோமா?, அல்லது இழப்பீடு வழங்கினோமா? அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தோமா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கிறது. 

நீங்கள் இந்த போரட்டத்தை தொடங்கிய போது மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தீர்கள். அதை கடந்து ஒரு படி மேலே போய் அணு உலை யையே மூட வேண்டும் என்று சொல்கிறீர்கள்? அச்சத்தை போக்க வேண்டுமா? அணுஉலையை மூட வேண்டுமா? 

தவறான கேள்வி இது. நாங்கள் அணு மின் நிலையம் வேண்டாம் என்றுதான் போராடு கிறோம் இப்போது அல்ல 1980களில் இருந்து இந்த போராட்டங்கள் தொடங்கிய காலத்தி லிருந்தே அணுமின்நிலையம் வேண்டாம், அணுசக்தி வேண்டாம். மக்கள் அடர்த்தியாக அதிகமாக வாழக்கூடிய நாடு நமது நாடு இந்த திட்டங்களால் மக்களுக்கு பெரும் கேடுகள் விளையும் எனவே அணுசக்தி வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. எங்கள் போராட்டம் உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு உக்கிரமான போராட்டத்தை ஆரம்பித்த போது. 

தமிழக அரசு சட்டமன்றத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றுயது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று. மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்று சொன்னது தமிழக அரசு தான். நாங்கள் அன்றைக்கும் சொன்னோம், இன்றைக்கும் சொல்கிறோம் நாளைக்கும் சொல்வோம் கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம், கல்பாக்கம் அணுமின்நிலையம் விரிவாக்கம் வேண்டாம். இந்தியாவிலே அணுமின்நிலையம் எங்கேயும் வேண்டாம். அதுதான் எங்களின் தெளிவான ஒரே தீர்க்கமான நிலைப்பாடு. 

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியமான ஒன்று. நம்முடைய மின்தேவை மிக அதிகமாக இருக் கிறது. மின்உற்பத்தி இரண்டையும் ஒப்பிடும் போது இடைவெளி என்பது இட்டு நிறப்ப முடியாததாக இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரக்கூடிய இந்தியா போன்ற நாட்டில், அனல் மின் நிலையம் , புனல்மின்நிலையத்தை மட்டும் வைத்து கொண்டால் மட்டு, முடியாது என்பதால் அரசாங்கம் இது போன்ற திட்டங்களை கொண்டுவருகிறது. மூடியே தீருவோம் என்பது எந்த வகையில் நியாயம் 

14,000 கோடி ரூபாய் செலவு செய்வதற்கு முன்பு மக்கள் மத்தியிலே கருத்து கேட்கும் கூட்டம் நடத்த பற்று எங்களுடைய மக்களின் ஒத்துழைப் புடன், ஆலோசனையுடன், ஆதரவுடன் அதை தொடங்கியிருந்தால் நாங்கள் சொல்லியிருப்பது இன்று தவறு, உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்க வில்லை, உள்ளூர் மக்களிடம் அனுமதி வாங்க வில்லை தான்தோன்றி தனமாக எதேச்சாதி காரமாக, பலவந்தமாக உள்ளே நுழைந்து இந்தத் திட்டத்தை கட்டிவைத்து விட்டு நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் 14,000 ரூபாய் செலவு செய்து விட்டோம் என்பது தவறு, 2ஜி அலை கற்று ஊழலிலே 1,76,000,000,00 கோடி இந்த நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள், நிலக்கரி பேரத்திலே 1,86,000,000,00 இழப்பு ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இன்று கிரேனட் வெட்டி விற்பனையில் 40,000,00 நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

இவ்வளவு பெரிய தொகையை பல அரசியல் வாதிகளும் இவ்வளவு பெரிய இழப்பீடுகளை உருவாக்கும் போது . 14 ஆயிரம் கோடி, இந்த பகுதி மீனவர்களுக்கும், விவசாயத்திற்கும் இழந்து விடுவதிலே பெரிய இழப்பு அல்ல. இன்னொறு விடயம் இந்த கட்டிடங்களை இந்த திட்டங்களை அப்படியே விட்டு விட்டு ஓடுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அணுசக்தி இல்லாத மாற்று வழியிலே மின்சாரத்தை உற்பத்தி செய்வோம். நிச்சயமாக முடியும் இன்றைய உலக நாடு களெல்லாம் அணுசக்தி வேண்டாம் என்கிறது. ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் அணுசக்தி வேண்டாமென்று சொல்கிறார்கள். அமெரிக்கா விலே ஒரு புதிய அணுமின் நிலையம் கட்ட வில்லை. 

அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமான அணுமின் உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன அவை ஒன்றும் மூடபடவில்லையே ? 

இல்லை. 1979 மூன்று மைல் தீவுகளுக்கு பிறகு இதுவரை புதிய அணுமின் நிலையம் கட்டப் படவில்லை. எத்தனையே ஜனாதிபதிகள் வந்து சென்றிருக்கிறார்கள். ஜார்ஷ் புஷ் ஜனாதிபதியான பிறகுதான் அந்த கொள்கை மறு பரிசீலனை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஷ் புஷ் தனது ஆட்சிக்காலத்தில் ஒரு அணு உலையும் கட்டவில்லை. அதற்குப் பிறகு வந்த பாரக் ஒபாமா மும் இதுவரை ஒன்றும் கட்டவில்லை. இந்த தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்க முயற்சி செய்கிறார்கள். அமெரிக்காவிற்கு நான் அடிக்கடி போகிறவன். அமெரிக்காவிலே பனி ரெண்டு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவன். அமெரிக் காவிலே எத்தனை அணுமின் நிலையங்களுக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் எனக்குத் தெரியும். 

அமெரிக்காவிலே புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட வில்லை. அமெரிக்க கம்பெனிகள் அந்த தொழில் நுட் பங்களை விற்று காசு பார்க்க பார்க்கிறார்கள். நமது அரசியல் வாதிகளும் அதிகாரிகளும், அதிலே கிடைக்கிற இலாபத்திற்காக நம்மை கொல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள் இதுதான் உண்மை. 

அமெரிக்கவில் மட்டும் அல்ல 29 நாடுகளில் எறத்தாழ 441 அணுமின் நிலையங்கள் செயல் பட்டு கொண்டுயிருக்கின்றன. எல்லா அணு உலையையும் மூடி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற வளரக்கூடிய நாட்டில் கூடங்குளம் என்பது இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி பலரும் வலியுறுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது அதற்கு எல்லாவித பாது காப்பும் உள்ளது. நிலநடுக்கம் வராது, சுனாமி வந்தால் கூட பெரியதாக பாதிப்பு இருக்காது அதை தாங்கி நிற்கூடிய ஒன்றாக இருக்குமென்று விஞ்ஞானி யெல்லாம் சொல்கிறார்கள். இவர்கள் சொல்கிற கருத்தையேல்லாம் நிராகரித்து வருகிறீர்கள் ஏன்? 

இதில் அடிப்படை அரசியலும் பார்க்கனும் இது விஞ்ஞானம் மட்டும் இல்ல. இது விஞ்ஞான கேள்வி மட்டும் அல்ல அரசியலும் சம்மந்தப் பட்ட கேள்வி. இந்த விஞ்ஞானிகளும், அதிகாரி களும் யாருக்காக பேசுகிறார்கள், அவர்கள் எந்த ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இவர்கள் பேசுவது யாருக்காக இந்த அரச கட்டமைப்பைத் தூக்கி நிறுத்துகிற வியாபாரிகளுக்காக இந்திய முதலாளிகளுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்காக. நாங்கள் பேசுவது சாதாரண மக்களுக்காக உழைத்து வாழுகிற யாரையும் கொள்ளையடிக்காத உண்மையாக வேலை செய்து இந்த இயற்கை வாழ்வாதாரங் களை தன்னோடு வாழ்வின் அடிப்படையாக கொண்டு, தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்கிற சாதாரண மக்களுக்காக. இந்தமாதிரி விஞ் ஞானிகள் பேசும் போது பன்னாட்டு நிறுவனங் களுக்கும் இந்த கட்டமைக்காகவும் பேசுகிறவர்கள் என்று சொல்கிறோம். 

நாங்கள் என்ன சொல்கிறோம் இந்தியாவுக்கு மின்சாரம் தேவையில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தியாவுக்கு வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்தியா வுக்கு வளர்ச்சி வேண்டும், மின்சாரம் வேண்டும். மக்களுக்களுடைய சாதாரண மக்களுக்களுடைய வாழ்வாதாரங்களை சீரழிக்காமல், உழைத்து வாழக்கூடிய சாதாரண மக்களுக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், எங்கள் எதிர்கால சந்ததிகளை நசுக்கி அழிக்காமல் மின்சாரம் தயாரியுங்கள் என்று தான் சொல்கிறோம். வழிகள் கிடையாதா இருக்கு. எப்படி ஜெர்மனிநாடு நம்மைவிட தொழில் வளத்தில் சிறந்த நாடு. அந்த நாட்டில் என்ன சொல்கிறார்கள் அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை அவைகளை படிப் படியாக மூடி விட்டு, சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்போம் என்கிறார்கள். 

முன்னாள் குடியரசு தலைவர் ஒரு அறிவியல் நிபுணர் திரு அப்துல்கலாம் கூட ஜெர்மனியை உதாரணம் காட்டக்கூடாது ஏன் என்றால் ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு, மின்சாரத்தை தங்கள் தேவைக்கு அதிகமாக தயாரிக்கும் நாடு என்ற கருத்தை சொன்னதுடன் இல்லாமல், சூரிய ஒளியானாலும் சரி அல்லது காற்றாலையின் மூலம் மின்சாரம் தயாரிப்பது ஒரு நிலையான மின்சாரம் அல்ல ஒரு பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற கருத்தை சொல்கிறார்? 

டாக்டர் அப்துல்கலாமை பற்றி நான் பேச வேண்டாம் என்று நினைத்தேன் . நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் அப்துல்கலாம் சாதாரண ஒரு விவசாயியோ, ஒருமீனவனோ, ஒரு தலித் தொழிலாளியோ உபயோகிக்கிற மாதிரி ஒரு கண்டுபிடிப்பை கண்டிபித்தது உண்டா. இன் றைக்கு நீங்கள் குறிப்பிடுகிற எந்த விஞ்ஞானியும் இந்தியாவில் உள்ள ஏழைகள் பயன்படுத்தும் பொருளை கண்டுபிடித்ததுண்டா. இவர்கள் எல்லாம் இவ்வளவு ஆய்வு செய்த பிறகும் இந்தியாவில் 42 சதவீதம் குழந்தைகள் ஊட்ட சத்து இல்லாமல் பிறக்கிறார்கள் நோஞ்சானாக பிறக்கிறார்கள் பிரதமர் சொல்கிறார். இதற்கு இந்த விஞ்ஞானிகள் சொல்கிற பதில் என்ன? 

இந்த விஞ்ஞானிகள் எல்லாம் மக்களுக்காக செயல்படுபவர்கள் அல்ல . இந்த விஞ்ஞானிகள் சாதாரண மக்களுக்களை கண்டு கொள்வில்லை. அரச கட்டமைப்புக்கு அப்துல்கலாம் மிசை விடுகிறார் அந்த மிசை எதற்கு விடுகிறார் இந்திய இராணுவத்திற்காக பனனாட்டு இராணுவ தளவாடங்களை வாங்குவதற்காக. இவர் எப்படி சொல்ல முடியும் பேரிடர் வராது, நில நடுக்கம் வராது, சுனாமி வராது எந்த விஞ்ஞானியால் உறுதியளிக்க முடியும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி 9 ரிக்டர் அளவுகோலிலே 9க்கு அதிகமான ஒரு நிலநடுக்கம் நடந்தது . ஏன் அவர் முன் கூட்டியே சொல்லவில்லை. போன அக்டோபர், நவம்பர் மாதத்தில் இங்கே வந்து சொன்னார் நிலநடுக்கம் வராது என்று அவர் சொன்ன இரண்டு, மூன்று மாதத்திலே நிலநடுக்கம் வந்தது அதற்கு பதில் என்ன. இந்த மாதிரி தனிபட்ட விஞ்ஞானியோ, அறிவியலாளரோ எந்த உத்தர வாதமும் கொடுக்க முடியாது, புக்குஷிமா விலும் இதைத தான் சொன்னார்கள் ஆனால் வந்தது. 

அப்துல்கலாம் ஆகட்டும் மற்றவர் ஆகட்டும் சுனாமியே வரவில்லை என்றெல்லாம் சொல்ல வில்லை. அவர்கள் சொல்வது சுனாமி போன்ற ஒரு பெரிய பேரழிவு வந்தாலும்கூட, நிலநடுக்கம் வந்தாலும் கூட அவற்றை தாங்கி நிற்கூடிய அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஒரு கட்டமைப்பாகத்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கிறது, புக்குஷிமாவில் நாம் பாடங்கள் கற்றியிருக்கிறோம் அதில் பெற்ற படிப்பினையெல்லாம் கூட அதைபோல் தவறு கள் நடக்காது மிகுந்த பாதுகாப்பு அம்சம் கொண்டது எனற கருத்தை தான் அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் சொல்ல கூடிய கருத் தெல்லாம் சரி மற்ற விஞ்ஞானிகள் சொல்லக் கூடிய கருத்தெல்லாம் தவறா? 

நாங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அறிவியல் பூர்வமாக உண்மையாக பேசுகிறோம். நாங்கள் யாருக்கும் எடுபிடியாக வேலை செய்பவர்கள் அல்ல. இதில் பிண்ணிப் பினைந் திருப்பது எங்கள் வாழ்கை. அய்யா அப்துல்கலாம் இங்கே வந்து உட்காரட்டும் இடிந்தகரையிலே வீடு எடுத்து தருகிறோம் டாக்டர் அப்துல்கலாம், எம்.ஆர்.சினுவாசன், டாக்டர் மன்மோகன் சிங், நாராயணசாமி அய்யா இவர்கள் எல்லாம் இடிந்தகரையில் வந்து இருப்பார்களா, இருக்கட்டும் நாங்கள் free housing , free electric city, free water we take care of that யாரது வருவாங்களா வரமாட்டார்கள் ஏன் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா நாங்கள் இங்கே இருக்கிறோம் எங்களுடைய வாழ்வா தரங்கள் சீரழிக்கபடுகிறது. புக்குஷிமா விபத்து வரும் போது இதைதான் சொல்கிறது டேப்போ என்கிற மின்சார கம்பெனி சொல்கிறது எந்த பிரச்சினையும் இல்லை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. 

அங்கே புக்குஷிமாவில் வந்தபோது நமது விஞ்ஞானி என்ன சொன்னார்கள் அங்கே நடந்தது வேதியல் விளைவு ஒரு chemical explosion ஸ்ரீகுமார் பேனர்ஜி என்கிற அணுசக்திதுறைத் தலைவர் சொல்கிறார் பத்திரிக்கையில் செய்தி வந்தது அது ஒரு chemical reaction ஒரு விபத்து ஒரு மிக பெரிய விபத்து அதன் உண்மையை ஏற்றுக் கொண்டு ஆமாம் இது ஒரு பெரிய விபத்து ஆபத்து இதே மாதிரி வரக்கூடாது என்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக் கிறோம் என்று சொல்வது ஒரு வகை. இன்னொரு வகை அங்கே நடந்தது ஒன்றுமே கிடையாது சும்மா ஒன்றும் செய்யாது. நம்ம ஊரில் சொல் வார்களே டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு . ஒன்றுமே பண்ணாது யாருக்கு ஒன்றும் பண் ணாது. உங்களுக்கு ஒன்றும் பண்ணாது ஆனால் எங்களுக்கு எல்லாம் பண்ணும். ஆகையால் நாங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும் அதனால தான் நாங்கள் கேட்கிறோம்.

விஞ்ஞானியாக இருக்கலாம் அல்லது விஞ்ஞானிகள் சொல்வதை மறுக்கலாம் அணுசக்தி என்று வரும் போது புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சர்வதேச விஞ்ஞானிகள் எல்லாம் பாதிப்பு வராது என்று அடித்து கூறுகிறார்கள் உங்களை சார்ந்தவர்கள் எல்லாம், உலகம் அழிந்து விடும் என்றெல்லாம் கூறுகிறார்கள், கூண்டோடு கைலாசம், அணு அணுவாய் சாவீர்கள் என்று கூறுகிறீர்கள் அணுசக்தி தான் வரம் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஏன் இந்த முரண்பாடு? 

காரணம் இதில் பின்னணி பிணையப்பட்ட அரசியல், புக்குஷிமாவுக்கு முன்னாடி ஹிரோ ஷிமா நடந்தது, ஹிரோஷிமாவில் அணுகுண்டை போட்டதை நாம் பார்தோம். இலட்சக்கணக்கிலே மக்கள் கருகி செத்ததை இந்த உலகம் சந்தித்தது அணுகுண்டு மாதிரியல்லாமல், அணுசக்தி என்பது மெதுவாய் கொல்கிறது. குண்டு வெடித்த மாத்திரத்திலே பல்லாயிரக்கணக்கில் உடனடியாக சாவது இங்கே நடக்கிறது. அணுசக்தி என்பது, அதிலிருந்து வருவது கதிவீச்சு. கதிவீச்சு என்பது மிகப் பெரிய கொடுமையான விசயம். அதில் கடுகு அளவில் உண்மையில்லை என்றால் அணு மின்நிலையத்தில் வேலைபார்ப்பவர்கள் அந்த வளாகத்திலே உட்கார வைக்கலாமே ஏன் அப்படி செய்யவில்லை. 1.6 கி.மி சுற்றளவுக்கு மனிதர்களே வாழக்கூடாது என்று ஏன் சொல்கிறோம் அங்கே கதிர்வீச்சு வரும் இங்கே வேலை செய்பவருக்கு 8 முதல் 10 கி.மி. அந்த பக்கம் குடியமர்த்த செய்கிறோமே ஏன் அங்கு கதீர்வீச்சு வரும், அணுசக்திக்கு துறைத் தலைவர்கள் பம்பாயிலும், டில்லியிலும் இருக்கிறார்களே ஏன் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

சாதாரண மக்களுக்கு ஒரு நியாயம், சக்தி வாய்ந்தவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்று கொள்ள முடியாது. சொல்லட்டும் தீர்ப்பு வந்திருக்கிறது, காசிநாத் பாலாஜி முதல் இங்கே இருக்கிற சுந்தர் இவர்கள் அத்தனைபேரும் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தான் இருக்க போகிறோம், பிரதமரும் இங்கேதான் இருக்கப் போகிறார் என்று சொல்லட்டும் ஒத்துக் கொள்கிறோம் போராட்டத்தை நிறுத்தி கொள் கிறோம். புதிய தலைமுறை தொலைக்காட்சி வாயிலாக சொல்கிறேன். பிரதமரும், அணுசக்தி அதிகாரி களும் இடிந்தகரையில் குடியேறப் போகிறோம் என்று சொல்லட்டும் நிரந்தரமாக குடியேற வந்தால் நாங்கள் நாளைக்கே போராட் டத்தை திரும்பப் பெருகிறோம். 

பல இடங்களில் அணுஉலைகள் இருக்கிறது ஒவ்வொறு அணுஉலை இருக்கிற ஊர்களிலும் பிரதமர் வந்து தங்கினால்தான் அனுமதிப்போம் என்று சொல்வது வாதம் ஆகுமா? 

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எந்த முறைபடியும் செய்யவில்லை. பொது மக்கள் கருத்து கேட்கப் படவில்லை, பொதுமக்கள் அனு மதி வாங்கப்படவில்லை, இந்தியாவிலே மிகப் பெரிய அணுஉலை கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கத்தில் மற்ற இடங்களில் இருப்பது வெரும் 220 மெ.வா மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய சின்ன அணுமின்நிலையம் அதிலும் வருகிற மின்சாரம் வெரும் 50 சதவித மின்சாரம் தான் கிட்டதட்ட 100 முதல் 120 மெகாவாட் மின்சாரம் தான் வருகிறது. ஆனால் இது 1000 மெகா வாட் மின்சாரம் வருகிற அணுஉலை பூங்கா வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட் டது. கைகாவிலும், கல்பாக்கத்திலும் இருப்பது நமது விஞ்ஞானிகளால் நிறுவப்பட்ட வீஸீபீவீரீமீஸீts tமீநீலீஸீஷீறீஷீரீஹ் . இது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது மக்கள் அடர்த்தியாக, நெருக்கமாக வாழக்கூடிய பகுதியில் இருக்கிறது. இப்படி பல விசயங்கள் இருக்கிறது இங்கே விபத்து நடந்தால் மிகப் பெரிய அளவிலே இருக்கும் அதனால்தான் சொல்கிறோம். 

30 ஆண்டுகாலமாக சென்னைக்கு அருகிலே கல்பாக்கம் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது அதனால் மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்று சொல்ல முடியாது, கல்பாக் கத்தில் ஏற்படாத பாதிப்பு கூடங்குளத்தில் மட்டும் எப்படி பாதிப்பு வரும் என்று சொல்கிறீர்கள்? 

கல்பாக்கம் பகுதிக்கு நான் பல முறை போயிருக் கிறேன் அங்கே கடலோர கிராமத்துக்கு சென்றுயி ருக்கிறேன் அந்த அணுமின்நிலைய வளாகத்திலே ஊழியர்களை சந்தித்திருக்கிறேன். அந்த பகுதியில் பலருக்கும் நோய் இருக்கிறது. அங்கே மீனவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் பிடிக்கிற மீனுக்கு விலையில்லை என்று அங்குள்ள மீனவர்களே சொல்லியிருக்கிறார்கள். அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது முழு பொய். நாளை கல்பாக்கத்திலே விரிவாக்கப் திட்டங்கள் வந்தால் அங்கிருந்து வருகிற கதிர் வீச்சு நிச்சயமாக சென்னை நகரத்தை பாதிக்கும் தாராப்பூர் அணுமின்நிலையத்தால் மும்பாய் நகரத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்கிறது அணுசக்தி துறை. போனவாரம் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் திறமையாக செயல்படவில்லை. இந்த துறை கையாலாகாதத் துறை என்று கூறி மத்திய தணிக்கை துறை அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்கள் தாராப் பூரிலிருந்து தப்பி ஓட சாலை வசதிகள் கூட இல்லை. 

நீங்கள் அணுவின் ஆபத்தை பற்றி பேசுகிறீர்கள் மற்றோரு புறத்தில் அரசியல் பேசுகிறீர்கள்? அணு உலையால் வரக்கூடிய பாதிப்புகள் அதை பற்றி பேசுகிற போது மக்களின் மீதான கவலை என்று புரிந்து கொள்ளப்படுகிறது ஆனால் அரசியல் பேசுகிறபோது ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது ? 

எம்.எல்.ஏ ஆவதற்கோ, எம்.பி ஆவதற்கோ இந்த மாதிரி அசிங்கமான பதவி அடைவதற்கோ இந்த போராட்டத்தை நானோ என் நண்பர் களோ நடத்தவில்லை அந்த கவலையோ பயமோ உங்களுக்கு வேண்டாம். நீங்க எங்கள புடிச்சி கொண்டு போய் தேர்தலில் நிற்க விட்டாலும் நாங்கள் நிற்கமாட்டோம். அரசியல் கலப்பு இல்லாமல் எந்த துறையும் இல்லை. மனித வாழ்விலே உள்ள ஒவ்வொரு துறையிலும் அரசியல் கலந்திருக்கிறது அந்த அரசியலை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். உதாரணமாக கேரள முதல்வர் சொல்கிறார் கூடங்குளத்தி லிருந்து எங்களுக்கு கட்டாயமாக 500 மெகா வாட் மின்சாரம் வேண்டும் என்று. கேரளாவில் இருப்பது யார் காங்கிரஸ் கட்சி, டெல்லியிலே இருப்பது காங்கிரஸ் கட்சி, ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்து அய்யா மன்மோகன் சிங் அவர்களே கூடங்குளத்தில் வரவிருக்கிற 2வது 3வது அணுஉலையை கேரளத்தில் வையுங்கள் எங்களுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது ஏன் சொல்லவில்லை? இழப்புகள், பரிதாபங்கள், துன்பங்கள் எல்லாம் தமிழருக்கு இங்கே உள்ள மின்சாரம் மட்டும் கேரளத்திற்கு வேண்டும். கேரள முதலமைச்சர் உம்மண்ச்சாண்டி சொல் வது தவறு என்று சொல்வது அரசியல் அல்ல உண்மை. 

இதைதான் நான் கேட்க வருகிறேன் அணுசக்தி எதிரானவரா அல்லது தமிழ்த்தேசிய ஆதரவாளரா? 

அரசியலை முழுவதையும் புரிந்து கொண்ட அணுசக்திக்கு எதிரான போராளி. அரசியலை புரியாதவன் எந்த பிரச்சினை பற்றியும் பேச முடியாது. தமிழ்த்தேசியம் பற்றி நாங்கள் பேசுவதற்கு காரணம் இன்று தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் உம்மன்சாண்டி இங்கு இருந்து மின்சாரம் வேண்டுமென்று கேட்பது என்பதை ஆதரித்து கொண்டு அவர்களோடு போவது மடமையிலும் மடமை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். 

அணுசக்தி தமிழ்நாட்டிலிருந்தாலும் ஆபத்து, கேரளாவில் இருந்தாலும் ஆபத்து என்பது தான் உங்களின் கருத்தாக இருக்க முடியும் ? ஆனால் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது கேரளத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா  

உம்மண்சாண்டி சொல்கிறார். கேரளத்திலே அணுமின்நிலையம் வேண்டாம் . தமிழ்நாட்டிலே அணுமின்நிலையம் வைத்து மின்சாரத்தை தயாரித்து அதிலிருந்து 500 மெகாவாட் கொடுங்கள். அவர் சொல்வது தவறு அதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என்று தான் நாங்கள் சொல்கிறோம். 

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது அதை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாம், ஏற்று கொள்கின்றன. ஒரு வேளை நீங்களும் ஏற்க கூடும் ? ஆனால் கூடங்குளம் அணுஉலை எந்த விஞ்ஞானி பாதுகாப்பானது என்று சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள் அறிவியலில் இரண்டு பார்வை என்பது சரியா ? 

ஆப்பிளையும், ஆரஞ்சியையும், ஒப்பிடக் கூடாது இரண்டும் வெவ்வேறு வெரைட்டி. முல்லைப் பெரியாறு அணை ஒரே நாளில் வெடித்து சிதறி பெரிய அளவில் சேதம் ஒன்றும் நடந்து விடபோவதும் மில்லை. அங்கே கீறல் விழலாம் அதை சரி செய்ய கால அவகாசம் கிடைக்கும். ஆனல் அணுமின்நிலையம் அப்படி அல்ல இங்கே மயிர் அளவு ஒரு கீறல் விழுந்தாலும் உடனடியாக இது முடிவுக்கு வந்து விடும். எனவே இந்த இரண்டையும் ஒப்பிடக் கூடாது ஒப்பிட முடியாது. என்று தான் நாங்கள் கூறுகிறோம்.

மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. அங்கே தமிழனோ, மலையாளியோ அங்கு அணையின் பகுதியின் வாழக்கூடிய மக்களோ, அணுமின்நிலையம் அருகில் வாழக் கூடிய மக்களோ என்று நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை மக்கள் பாதுகாப்போடு வாழ வேண்டும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 தொடரும்....

Pin It