உண்மை உன்று சொல்வேன் – 16

உலகை உலுக்கிய கொலை வழக்குகள் பலவற்றில் அவிழ்க்கப் படாத மர்ம முடிச்சுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமானது, ராஜீவ்காந்தி கொலை. 21 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தக் கொலைக் கான பின்னணி மர்மமாகவே உள்ளது. இதற்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடு விக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மரண தண்ட னையை எதிர்நோக்கி உள்ளனர். நளினி உள்ளிட்ட நால்வர் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வருகின்றர்.

இவ் வழக்கின் பின்னணி குறித்து, ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக் கின்றன. குறிப்பாக, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், விசாரணை அதிகாரி ரகோத்தம்மன், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்ட பெங்களூர் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ராஜீவ்காந்தி கொலை பின்னணி குறித்து எழுதியிருக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் சோனியாகாந்திக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சுமத்தி, சுப்ரமணிய சுவாமி கூட ஒரு புத்தகம் எழுதி யிருக்கிறார். ஏனோ அந்தப் புத்த கத்தை சு.சுவாமி வெளி விடாமல் வைத்திருக்கிறார். ஆனால், அந்தப் புத்தகத்தின் நகல் படிக் கக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த வரிசையில் திருச்சி வேலுசாமி எழுதிய ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்கிற நூல் அண்மையில் வெளிவந்திருக் கிறது. இந் நூலை பத்திரிகையாளர் பா.ஏகலை வன் தொகுத்திருக்கிறார். பேட்ரிஷியா பதிப்பகம் வெளியிட விற்பனையை உரிமை தோழமை வெளியீடு பெற்றிருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கைக் கவனித்து வரு வோருக்கு திருச்சி வேலு சாமியின் அறிமுகம் தேவையில்லை. முன்னாள் காங்கிரசுக்காரரான இவர், ராஜீவ் கொலையுண்ட போது, சு.சுவாமி யின் ஜனதா கட்சியின் அகில இந்தியச் செயலாளராக இருந்தார். சு. சுவாமியுடன் நெருக்கமாக இருந்த இவர், ராஜீவ் கொலை யில் சு. சுவாமிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார். அதற் கான ஐயப்பாடுகளையும் அடுக்கு கிறார்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளே சு.சுவாமிக்குத் தொடர்பு இருப்பதை உணர்ந்ததாக சொல்லும் இவர், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறுகிறார். 1995 ஆம் ஆண்டிலி ருந்து பொதுக் கூட்டங்களில் சு.சுவாமியின் தொடர்பு பற்றி பேசி வருகிறார். அதன் பின்பு, ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த ஜெயின் விசாரணைக் குழு விடம் (கமிஷனி டம்) சு. சுவாமி மீது குற்றச்சாட்டு பதிவு செய்தி ருக்கிறார். அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு சு. சுவாமி விசாரிக்கப் பட்டிருக்கி றார். வேலுசாமியின் குற்றச் சாட்டுகளுக்கு சு.சுவாமியிடம் பதில் இல்லை.

ஆனால் சு.சுவாமி மீது எவ் வித நடவடிக்கையும் இல்லை என்பதுதான் ராஜீவ் கொலை யின் மர்ம முடிச்சுகளின் எண் ணிக்கையை கூட்டுகிறது. இவ்வ ளவும் நடந்து கொண்டி ருக்கும் போது, ‘சிபிஐ குழு எங்கே போனது? இப்படி ஒருவன் பல சந்தேகங்களை முன் வைக்கி றானே என்று ஒரு முறையாவது என்னை அழைத்து விசாரித் தார்களா?’ என்று வேலுசாமி இந்நூல் வாயிலாகக் கேள்வி எழுப்புகிறார். நியாயமான கேள்வி!

அதிலும் ராஜீவ் கொலை நடந்த நேரத்தில் அப்போது மைய அரசில் சட்ட அமைச் சராக இருந்த சு.சுவாமி எங்கே இருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்? என்கிற வேலுசாமியின் கேள்விக்கு சு. சுவாமியிடம் மட்டுமல்ல, இந்திய அரசிடமே பதில் இல்லை என்கிற உண்மை முகத் தில் அறைகிறது!

அதுமட்டுமா? அரசியல் புரோக்கரும் சாமியாருமான சந்திராசாமிக்கும் சு.சுவாமிக்கும் இருந்த தொடர்பு, இருவரும் சென்னையில் ஒன்றாக விடுதி யில் தங்கி இருந்தது, சு.சுவாமி யுடன் நெருக்கமாக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் மற்றும் (விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டதாக சொல்லப்படும் ஸ்ரீசபாரத்தினத் தின் சகோதரர்) ஸ்ரீகந்தா ஆகியோரின் தொடர் புகள் குறித்து வேலுசாமியின் ஐயங் கள் அதிர்ச்சி அளிப்பவை. இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு ராஜீவ் கொலையை விசா ரித்தது எந்த வகையில் நியாயம்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரசுக் கட்சியின் அன்றைய தமிழகத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாழப்பாடி ராமமூர்த்திக்கும் வேலுசாமிக்கும் இடையே நடந்த உரையாடல் கள் இதயத்தை உறைய வைக் கின்றன. அது போலவே, மர கதம் சந்திசேகர் அம்மையா ரின் மீதான ஐயப்பாடுகள்!

ராஜீவ் கொலையில் தமிழர் கள், தமிழுணர்வாளர்கள் என் கிற காரணத்தால் பலரும் தண்டிக்கப்பட்டனர். தண்டிக்கப்பட்டும் வருகின்றனர். ஆனால் பலரும் கூட இருந்தே குழி பறித்த பதவி சுகத்தோடு வலம் வந்திருக்கிறார்கள், வருகிறார் கள் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

புத்தகத்தில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் இவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மூன்று அப்பாவித் தமிழர்களின் விடு தலைக்கான போராட் டத்துக்கு வேலுசாமியின் இந்தப் புத்தகம் நிச்சயம் வலுசேர்க்கும்.

Pin It