சென்னை விபத்தில் 4 பள்ளி மாண்வர்கள் பலியான நிகழ்வு

தமிழக இளைஞர் முன்னணியின் நடுவண் குழுக் கூட்டம் 16.12.2012 அன்று, சென்னைத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சனவரி - 4 அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டும். என்றும், மிகை எண்ணிக்கையில் நுழைந்து, தமிழர் தாயகத்தை சீர்குலைக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டையும், குடும்ப அட்டையும் வழங்கக் கூடாது என வரும் சனவரி 20 முதல் 27 வரை, தமிழகமெங்கும் பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் சென்னை பேருந்து விபத்து குறித்து இயற்றப்பட்ட தீர்மானம் கீழ்வருமாறு:

மாணவர்களைக் குற்றவாளிகளாக்காதீர்!

சென்னை கந்தன்சாவடியில் 10.12.2012 அன்று நடந்த பேருந்து விபத்தில் 4 மாணவர்கள் பலியான சோக நிகழ்வில், பள்ளி மாணவர் களையே குற்றவாளியாக்கும் போக்கை அரசும், ஊடகங்களும் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

பள்ளி மாணவர்களில், ஒரு சிலர் படிக் கட்டு களில் தொங்கிக் கொண்டு வரும் தவறானப் போக்கை, ஒட்டுமொத்த மாணவர்களும் செய்வது போல அரசும் ஊடகங்களும், காட்டுவதன் பின்னணியில், பள்ளி நேரத்தில் அதிகப் பேருந்து கள் இயக்கப்படாதது, தானியங்கிக் கதவு இயங் காத நிலையில் பல அரசுப் பேருந்துகள் பராமரிப் பற்றுக் கிடப்பது, பேருந்து ஓட்டுநர்கள் தானியங்கிக் கதவுகளை மூடாமல் அலட்சியமாக இருப்பது என அரசின் பல குற்றங்கள் மறைக் கப்படுகின்றன.

மேலும், சென்னை நகருக்குள் நுழையும் பன் னாட்டு நிறுவனங்களுக்காகவும், அதன் ஊழியர் களின் கேளிக்கைகளுக்காகவும், நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில், மண்ணின் மைந் தர்களாக வாழ்ந்து வந்த மக்களை, கண்ணகி நகர், செம்மஞ்சேரி என சென்னையைத் தாண்டி பல ஊர்களுக்கும் அரசு இடம் பெயரவைத்ததன் காரணமாகவே, அதிகளவில் இடம்பெயர்ந்த மக்கள், தம் வேலைகளுக்காகவும், பள்ளி- கல்லூரி களுக்காகவும் சென்னை நகருக்குப் பேருந்து களில் வருவதையும் அரசாங்கம் காண மறுக்கின்றது.

அவரவர் வாழும் பகுதியின் 2 அல்லது 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள், தரமான அருகமை அரசுப் பள்ளிகளைத் திறப்பதன் மூலம் பள்ளி மாணவர்கள் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்க முடியும். இதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும். படிக்கட்டு களில் தொங்கும் மாணவர்கள் குறித்த தகவல் களை காவல்துறை மூலம், பள்ளி - கல்லூரிக்குத் தெரிவிப்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டு மன்று, பள்ளி - கல்லூரி நடவடிக்கைகளில் காவல் துறையை நுழைக்கும் முயற்சியுமாகும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி அலுவலக நேரங்களில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

Pin It