கன்னக்கோல் இல்லை
முகமூடி இல்லை
கண்முன்னே நடக்குது
கொள்ளை...

இங்கே
கல்விக் கோவிலாய்
வேடம் கட்டி
சில
பள்ளிக் கடைகள்.

எடுக்காமல்
பறிக்காமல்
திருப்பதி
உண்டியலாய்
திரளுது பணம்.

வசூல் முடிந்ததும்
நிரம்பி வழியும்
வகுப்பறைகளில்
அடுக்கி வைக்கப்பட்ட
மாணவ
எந்திரங்களும்
ஆசிரியத்
தொழிலாளர்களும்

இங்கே
இனிக்கப் புகட்டும்
கற்பித்தல் வேண்டாம்.
இதயம் நிறையும்
கற்றலும் வேண்டாம்.
மகிழ்ச்சி வேண்டாம்.
எழுச்சி வேண்டாம்.

ஓராண்டுப் பாடத்தை
இரண்டாண்டுக்கு
எழுதி எழுதியே
அமோகமாய்
நடக்குது
மதிப்பெண் உற்பத்தி.

மருத்துவமா?
பொறியியலா?
மனிதகுலம் முழுமையும்
இரண்டுக்குள் அடக்கம்
என்பது போல்
முண்டியடித்து
வரிசைகள் கடந்து
கத்தை கத்தையாய்ப்
பணம் கொ(க)ட்டி
அழும் பிள்ளையின்
கண்ணீர் துடைத்து
இன்னொரு எந்திரமாய்த்
தொழிற்சாலைக்குள்
விட்டுப் போகிறார்கள்
பெற்றோர்கள்.

Pin It