ஊர் உலகம்

கனடா நாட்டிலுள்ள மனிடோபா (Manitoba) என்ற மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக் (Winnipeg) என்ற நகரத்தில், கட்டுமானப் பணியில் வெளிநாட் டவர்கள் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து, கனடா நாட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

கனடா நாட்டின் அல்பெர்ட்டா மாகாணத் தலை நகரான எட்மோன்டன் நகரைச் சேர்ந்த பக்நோட்டா (Pagnotta Industries) என்ற தனியார் கட்டுமான நிறுவனம், வின்னிபெக் நகரில் பெண்கள் மருத்துவ மனை ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டுள் ளது. இப்பணியில், வடஅமெரிக்கா மற்றும் அயர்லாந்து நாடுகளைச் சோந்த வெளி நாட்டவர்கள் ஈடுபடுத்தப் படுவதைக் கண்டித்து, கனடா கட்டுமானத் தொழிலா ளர் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 24.04.2013 அன்று, வின்னிபெக் சுகாதார அறிவியல் மையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கனடா நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே இங்கு வேலையற்று இருக்கும் போது, எப்படி வெளி நாட்டவாகளை பக்நோட்டா நிறுவனம் பணியில் அமர்த்துவதை கனடா அரசு அனுமதிக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கனடா நாட்டில் செயல்படுகின்ற நிறுவனங்கள், தங்கள் பணியில் வெளிநாட்டவர்களை ஈடுபடுத்த வேண்டுமெனில், அப்பணிக்குத் தகுதியானத் தொழிலா ளர்கள் உள்ளூரில் கிடைக்கவில்லை என்பதை நிறுவவேண்டும். அப்பணிக்கு உள்ளூரில் விளம்பரங் கள் செய்யப்பட்டதை ஆதாரங்களுடன் அந்நாட்டு மனித வளத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே, அந்நாட்டு மனித வளத்துறை வெளிநாட்ட வர்களை பணியில் அமர்த்த தடையில்லாச் சான்றிதழ் வழங்கும்.

இந்நிலையில், மனிடோபா தச்சர்கள் சங்கம் (Manitoba Carpenters' Union) மற்றும் கட்டுமான வணிக அவை (Building trades council) ஆகிய தொழிலாளர் அமைப்புகள், பக்நோட்டா நிறுவனம் இவ்விதிமுறை களை முறைப்படி கடை பிடிக்கவில்லை என குற்றம் சாட்டின. பக்நோட்டா நிறுவனம் வேலை காலியாக இருப்பதற்கான விளம்பரத்தை மிகவும் கால தாமதமாக வெளியிட்டதையும், குறுகிய காலத்திற்கு மட்டும் வெளியிட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தகுதி வாய்ந்த தொழிலாளர் சங்கத்தின் (Specialized workers union) வணிக மேலாளரான விக்டர் டசில்வா (Victor DaSilva), தங்களுடைய தொழிற் சங்கத்திலேயே 190 பேர் வேலையற்று உள்ள போது, இவ்வாறு அயல் நாட்டவர்களக்கு குறைந்த கூலியின் அடிப்படையில் பணி கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவிக்கிறார்.

மண்ணின் மைந்தர்களுக்கு நீதி கேட்கும், கனடா தொழிலாளர் போராட்டம் வெல்க!

திவாலாகிப்போன டெட்ராய்ட் நகரம்

1950 - 1960ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்று, உலகின் ‘வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளின் தலைநகரம்’ என வர்ணிக்கப்பட்ட, வட அமெரிக்கா வின் முன்னணித் தொழில் நகரமாக விளங்கிய டெட்ராய்ட் (Detroit) நகரம், கடந்த 18.07.2013 அன்று திவாலாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டது. மிச்சிகன் மாகாணத்தின், மிகப்பெரும் முக்கிய நகரமான அந்நகரத்தின் மாநகராட்சி அளித்த இவ்வறிவிப்பு, அமெரிக்கப் பொருளியலில் நிலவும் நிலையற்றத் தன்மையை உலகிற்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கப் பொருளியல் வரலாற்றிலேயே மிகப்பெரும் தொகை கொண்ட ஒரு நகரம் திவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

திவால் அறிவிப்பு வெளியிட்டுள்ள டெட்ராய்ட் நகரைப் போலவே, கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கி பல அமெரிக்க நகரங்கள் இதே போன்று திவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் அலபாமா (Allabama) மாகாணத்தின் ஜெபர்சன் கவுன்ட்டி (Jefferson County) என்ற நகரம், சற்றொப்ப 3.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் சிக்கியதையொட்டி, திவால் அறிவிப்பு வெளியிட்டது. இந்நகரம் திவாலானதைத் தொடர்ந்து, கவுன்ட்டியில் வசித்து வந்த மக்கள் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏதுமற்ற நிலையில் தெருவில் தவித்த செய்திகள், 2011ஆம் ஆண்டு ஊடகங்களில் பெரிய அளவில் வந்தன.

தற்போது, அதே போன்று டெட்ராய்ட் நகரம், சற்றொப்ப 18லிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது 1.08 இலட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு கடன் சுமையிருப்பதாகச் சொல்லி திவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகமயப் பொருளியல் அகராதியில் ‘வளர்ச்சி’ எனப்படுவது, வாழ்விடங்களின் வளங்களை மேம்படுத் துவதோ, பாதுகாப்பதோ அல்ல. அவற்றை அழித்து உருவாக்கப்படுவதே வளர்ச்சி எனப்படுகின்றது. உலக மயத்தின் இதே ‘இலக்கணப் படி’த்தான், வட அமெரிக்காவின் பல முன்னணி நகரங்களில், மிகப்பெரும் அளவிலான பன் னாட்டு நிறுவனங்கள் தொழிற் சாலை களை நிறுவின.

நிறுவப்பட்ட அத் தொழிற்சாலைகள், மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த பகுதிகளில் கிடைத்த நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்தியும், மிகை அளவில் உறிஞ்சியும் அவ் விடத்தை மக்கள் வாழத் தகுதியற்ற நகரங்களாக மாற் றின. 1950ஆம் ஆண்டு சற்றொப்ப 1.8 மில்லியன் மக்கள்(20 இலட்சம் பேர்) வாழ்ந்த டெட்ராய்ட் நகரத்தில், தற்போது வெறும் 7 இலட்சம் பேர் தான் வசித்து வருகின்றனர்.

காலப்போக்கில், மக்கள் இந்நகரங்களை விட்டு அகன்றுச் சென்றுவிட்ட நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட உலகமயப் பொருளியல் மந்தநிலை காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல தொழிற்சாலைகள், உற்பத்தி நடவடிக்கைகள் செலவீனங்களைக் கணக்கில் கொண்டு ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல ‘வளரும்’ நாடுகளுக்கு மாற்றப்பட்டன.

இவ்வாறான சூழலில், இது போன்ற தொழிற்சாலை களின் வசதிக்காக, மக்கள் வரிப் பணத்தைக் கொண்டு பல சலுகைகளை இலவயமாக வாரி இறைத்த நகராட்சி நிர்வாகங்கள், கடன் சுமையில் சிக்கின. நகர நிர்வாகத்தில் காணப்படும் ஊழல் முறைகேடுகள், நிலை மையை மேலும் சிக்கலாக்கின.

உலக வல்லரசு எனப்படும் வடஅமெரிக்காவிற்கே இந்த நிலையெனில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட பல தமிழக மாவட்டங்களில் பன்னாட்டு - வடநாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் சலுகைகள் நம்மை எந்தளவிற்கு பாதிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

Pin It