கூடங்குளம் அணுமின் திட்டத்தின் சில உயர் அதிகாரிகளும், காவல்துறை மற்றும் உளவுத் துறைகளைச் சார்ந்த சில அதிகாரிகளும் சேர்ந்து ஒரு மாபெரும் ஊழல் செய்திருப்பதாகத் தெரிகிறது. 23.08.2013 அன்று அஞ்சுகிராமம், கூடங்குளம், விஜயாபதி, ராதாபுரம் போன்ற ஊர்களில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

 இடிந்தகரையைச் சார்ந்த காங்கிரசு பிரமுகர்கள் பி. எல். அந்தோணி சந்தியாகு என்பவரும், முன்னாள் விஜயாபதி பஞ்சாயத்துத் தலைவர் வால்டர் எட்வின் என்பவரும் சேர்ந்து அந்த சுவரொட்டியை வெளியிட் டிருந்தனர். அதில் ரூ. 50,000 விலை மதிப்புள்ள 50 மீன் பிடி வலைகளை இடிந்தகரை மீனவ மக்களுக்கு வழங்கியதற்காக இந்திய அணுமின் கழகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

 இதுபற்றி விசாரித்தபோது ஒரு மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பரமேசுவர புரம் எனும் கிராமத்தில் வசிக்கும் சிலுவை அந்தோணி மகன் கபூர் (வயது 35) என்கிற கூடங்குளம் அணுமின் திட்ட துணை ஒப்பந்தக்காரர் ஒருவரும், மேற்கண்ட இரு நபர்களும் சேர்ந்து காடுதலா, காமனேரி போன்ற உட்பகுதி கிராமங்களில் வசிக்கும் விவசாயக் தொழி லாளர்களை மீனவர்களாக அடையாளம் காட்டி, அணுமின் நிலைய அதிகாரிகளின் கூட்டுச் சதியோடு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப் போட்டு வலைகள் திருட்டில் உதவிய மக்களுக்கு ரூ. 500 மட்டும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றனர். அந்த வலைகளை நாகர்கோவிலிலுள்ள பாத்திமா ஸ்டோர் எனும் மீன் வலைக் கடையில் 4.75 லட்சம் ரூபாய்க்கு திருட்டு விலைக்கு விற்றிருக்கின்றனர்.

 கடல் தொழிலுக்கு சம்பந்தமேயில்லாத ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும், கடலில் மீன்பிடிக்கப் போகாத மக்களுக்கும் வலைகள் வழங்கியதாக அணுமின் நிர்வாகம் தனது ஊழல் சகாக்களுடன் சேர்ந்து மக்கள் பணத்தை திருடியிருக்கிறது. மக்கள் பணத்தை திருடுவதோடு, இரண்டு ஆண்டுகளாக அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் இடிந்தகரை ஊர் மக்களைக் கேவலப்படுத்துவதும், ஊருக்குள் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி வன்முறை நிகழச் செய்வதும்தான் இவர்களின் சதித் திட்டம்.

இந்த ஊழலைக் கண்டித்து, உறுதியான நடவடிக் கைக் கோரி ஆகஸ்ட் 24, 2013 அன்று இடிந்தகரை மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்தார்கள். பகல் முழுவதும் ஊர்க் கூட்டமும் நடத்தப்பட்டு, ஊர் மக்களால் இந்தப் பிரச்சினை பேசப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 24, 2013, சனிக்கிழமை இரவு 10:30 மணியள வில் இடிந்தகரை மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வெனாசீஸ் என்பவர் வீட்டு முன்பு இரண்டு இரு சக்கர வாகனங்களில் கீழ்க் காணும் நான்கு பேர் வந்து “இந்த ஊரை அழிக்காமல் விட மாட் டோம்; இனி தினமும் இப்படி நடக்கும்” என்று கத்திவிட்டு இரண்டு நாட்டு வெடி குண்டு களை வீசிவிட்டு வேகமாகச் சென் றனர்:

[1] கபூர், த/பெ சிலுவை அந்தோணி, வயது 33.

[2] சாக்ரடீஸ் (எ) முட்டி, த/பெ சிலுவை அந்தோணி, வயது 36.

[3] லாரன்ஸ், த/பெ சிலுவை அந்தோணி, வயது 38.

[4] சத்தீப், த/பெ பெர்னாட், வயது 22.

அந்த குண்டுகள் பயங்கரமான சத்தத்துடன் வெடித்தன. இரு சக்கர வாகனங்களில் இடிந்தகரை சுனாமி நகர் நோக்கிச் சென்று, அங்கும் ஏதோ கத்திவிட்டு இன் னும் ஒரு குண்டை வெடித்துவிட்டு சென்றி ருக்கின்றனர்.

திருமதி மேரி (க/பெ செபாஸ் டியன், வயது 75), அமலி (க/பெ நஸ்ரேன், வயது 70) மற்றும் லில்லி புஷ்பம் (க/பெ கிளமெண்ட், வயது 58) ஆகிய மூவரும் புனித லூர்து மாதா ஆலய வளாகத்தில் தூங்கு வதற்காக வரும்போது தெருவிளக்கு வெளிச்சத்தில் அந்த நான்கு பேரையும் தெளிவாகப் பார்த்திருக் கின்றனர். அதே போல சுனாமி நகர் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே பேசிக் கொண்டிருந்த வர்களும் இந்த சமூக விரோதி களை தெளிவாகப் பார்த்திருக் கின்றனர்.

இடிந்தகரையைச் சார்ந்த இந்த நபர்கள் தற்போது பரமேஸ்வரபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுள் கபூர் என்பவர் கூடங் குளம் அணுமின் நிலையத்தில் துணை ஒப்பந்தக்காரராகவும், ஆதர வாளராகவும் வேலை செய்து வரு கிறார். இவருக்கு பல அணு உலை அதிகாரிகளோடும், காவல் துறை, உளவுத்துறை அதிகாரிக ளோடும் நெருங்கியத் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். இடிந்த கரை ஊருக்குள் அரசு அனுமதி யற்ற திருட்டு மது வியாபாரம் நடப் பதற்கும் மேற்கண்ட நபர்கள் காரணமாக இருந்து வருகின்றனர்.

ஊரைப் பிளவுபடுத்தி கலகம் விளைவிக்கும் நோக்கோடு மேற் கண்ட நபர்கள் இந்த சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக் கின்றனர். இவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து தக்க நட வடிக்கை எடுக்கும்படி கூடங்குளம் காவல் நிலையத்தில் முறையாக முறையீடு செய்திருக்கிறார்கள். மின் சாரம் உற்பத்தி ஆகாத, முடங்கிக் கிடக்கும் அணுமின் நிலையப் பிரச்சினையை மூடி மறைக்க முயன்றுகொண்டிருக்கும் அதிகார வர்க்கம்,தற்போது ஆபத்தான மக்கள் விரோத நடவடிக்கைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றது.

Pin It