(தோழர் பெ.மணியரசன் எழுதிய “சாதியும் தமிழ்த் தேசியமும்” நூல் வெளியீட்டு விழா திருச்சியில் 23.03.2013 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் முனைவர் த.செயராமன் வழங்கிய உரையின் சுருக்கம்)

“சாதியும் தமிழ்த் தேசியமும்’’ என்ற தோழர் பெ.மணியரசன் எழுதியுள்ள நூல் செறிவான கருத்துக்களையும், அழுத்தமான பார்வைகளையும் தாங்கிய நூலாகும் இந்நூல் 14 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டு, 120 பக்கங்களுடன் அழகான வடிவ மைப்புடன் பன்மை வெளியீடாக உங்கள் கைக ளுக்கு வந்திருக்கிறது.

வரலாற்றின் விளை பொருளான ஒவ்வொரு தேசிய இனமும் தன் விடுதலையை நோக்கி நகர்ந்து தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்வதையே இலக்காகக் கொண்டிருக்கும். அது போன்று, தமிழ்த் தேசிய இனமும் தன்னுணர்வு பெற்று வருகிறது.

தமிழ்த் தேசிய இனக் கருத்தியல் மக்களைப் பற்றிக் கொள்ளும் முக்கியக் காலக் கட்டம் இது. ஆனால், தமிழ்த் தேசியத்தை எதிர்த்து, திட்ட மிட்ட எதிர்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படு கிறது. அடிப்படையற்ற அவதூறுகள் அள்ளி வீசப் படுகின்றன. “சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு இவற்றைப் புறந்தள்ளிவிட்டு; தமிழ்த் தேசியம் பேசப் படுவதாகக் குறை பேசுகி றார்கள். சமூக விடுதலையே இன்னும் வரவில்லை; சாதியே ஒழியாத நிலையில், இந்தத் தமிழ்த் தேசம் யாருக்கான தமிழ்த் தேசம்? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

அவ்வாறெனில், தமிழ்த் தேசியம் என்பதை என்னவாகப் புரிந்திருக்கிறார்கள் என்ற திகைப்பு மேலிடுகிறது. எழுப்பப்படும் பல்வேறு கேள்வி களுக்குப் பதில் இந்நூலில் இருக்கிறது.

2011 பரமக்குடி படுகொலைகளை ஒட்டி தலித்தி யவாதிகளும், மார்க்சிஸ்ட்களும், பெரியாரியவாதி களும் தமிழ்த் தேசியத்தின் மீது தாக்குதல் தொடுத்தார்கள் “தமிழ்த் தேசிய வாதிகளால் ஆதிக்க சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை”என்றும் சாடினார்கள். நடந்து போன சாதியப் படுகொலையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டு தமிழ்த் தேசியவாதிகள் கண்டித்திருக்கும் நிலையில், தமிழ்த் தேசியத்தின் மீது இந்த அமைப்புகள் தாக்குதல் தொடுக்க என்ன காரணம்?

தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை விட்டு விட்டு, தமிழ்த் தேசியக் கருத்தியலின் மீது தாக்குதல் நடத்திய இவர்களுக்கு தோழர் பெ.மணியரசன் சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார். “நாம் இந்தியர், இந்தியர் அனைவரும் சகோதரர்கள், இந்தியா நமது தேசம்’’ என்று தூங்கிய நேரம் போக மற்றெல்லா நேரங்களிலும் பரப்பி வருகிறீர்கள்.. உங்களால் ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களையும் பிற்படுத்தப் பட்ட மக்களையும் சாதி ஏற்றத் தாழ்வற்ற சாதி ஒடுக்கு முறை அற்ற உடன் பிறப்புகளாக மாற்ற முடிய வில்லை?

நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்: “தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடி மறைக்க புரட்சிகரத் தமிழ்த் தேசியம் ஒரு போதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல் வார்களோ, அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தை தின்று கொண் டிருக்கும் சாதியை ஒழிக்க முயல் கிறது’’ (பக்: 9)

உலகெங்கும் சமூகங்களில் வேலை பிரிவினை ஏற்பட்டன; குலத்தொழில் பிரிவுகளாக மாறின; இது பின்னர் மாறி எல்லோரும் எல்லா தொழிலும் செய்யும் வகையில் மாற்றங்கள் வந்தன; வர்க்கப் பிரிவினைகள் மட்டுமே நீடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில் “வர்க்கமும், சாதியும் ஒன்று கலந்து விட்டன. அதா வது, வடிவம் சாதியாகவும் உள்ளீடு வர்க்கமாகவும் உள்ளது. “இங்கு வர்க்க ஆதிக்க ஒழிப்புப் போராட்டமும், சாதி ஆதிக்கக் ஒழிப்புப் போராட்டமும் சேர்ந்தே நடக்க வேண்டும்”(பக்:10)

தலித்தியம் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. சரியான புரிதலுக்காக, நாம் சில அடிப் படைச் செய்திகளை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சாதி மற்றும் வர்ணாசிரம முறை போன்றவை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நிலவியதாக நாம் கற்பனை செய்து கொண்டு அதன் அடிப்படையில் பிரச்சினை களை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.

வடஇந்தியாவின் சமூகப் படி நிலை உருவாக்கம் வேறு; தமிழ கத்தில் உருவான விதம் வேறு. ஆதிகாலத்தில், ஆரிய சமூகங் களில், உற்பத்திப் பண்டங்கள், வேலைகள் போன்றவை வளர்ச்சி யடைந்த நிலையில், கடமைகள் நான்கு பிரிவினருக்கு- (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) வகுக்கப்பட்டன. இவைதாம் நான்கு வர்ணங்கள்.

உற்பத்திச் சாதனங்கள் மீது அனைவருக்கும் கூட்டு உடை மையே இருந்ததால், வர்ணங்கள் உருவான போது, அவை ‘பகை’ வர்க்கங்களாக மாறவில்லை. உற் பத்தியிலும், உற்பத்திப் பொருள் களை உரிமை கொண்டாடு வதிலும் ‘கூட்டுத் தன்மை’ மாறிய போது, வர்ணங்கள் முரண்பட்ட வர்க்கங்களாக மாறின வர்ணங் கள் பிறப்பின் அடிப்படையிலா னவையாக மாறின. இவ்வர் ணங்களில் கலப்பு ஏற்பட்ட போது அவை ‘சங்கரஜாதிகள்’ என குறிக்கப்பட்டன. வர்ணக் கலப்பு கடுமையான தண்டனைக் குரியது.

இந்த சங்கர ஜாதியினர் தரத் தில் குறைந்தவர்கள். ஒரு பிராமண பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்தவர்கள் ‘சண் டாளர்கள்’ எனப்பட்டனர். அவர்களுக்கு வகுத்தளிக்கப் பட்ட இழி வும், கொடுமையும் இனி வர்ணக் கலப்பில் எவரும் ஈடுபடாத வகையில் அச்சுறுத்தி வைத்தன. வட இந்தியாவைப் பொறுத்த வரை வர்ணங்களும், சாதிகளும் பிறப்பின் அடிப் படையிலானவை.

தமிழகத்தில் வர்ணமுறை நிலவியது இல்லை. வடக்கில், ஆரியர்கள் மற்றோர் ஆரியக் குழுவை சூத்திர வர்ணமாக்கி யிருந்தனர். ஆனால் கங்கை யமுனை பிரதேசத்தை வந்த டைந்த பிறகு ஆரியர் அல்லா தவர்களுக்கு சூத்திரத் தகுதி வழங்கினர். பிராமண, சத்திரிய, வைசியர் என்ற மூன்றும் ஆரியர் களுக்கு மட்டுமே உரியன. இவர்களில் பிராமண வர்ணம் மட்டுமே தமிழகச் சமூகத்தில் புகுந்தது. ஆரியர்- அல்லாதவர் களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக சூத்திரர் என்ற சொல்லை கருதியிருக்கலாமே ஒழிய, தமிழர்கள் தங்களை சூத்திரர் என்று அடையாளப் படுத்திக் கொண்டதில்லை.

தமிழர்களின் சாதிகள் பிறப் பின் அடிப்படையில் உருவா னவை அல்ல.குலக்குழுக்கள், தொழிலாளர், கைவினைஞர் பிரிவுகள் சாதிகளாயின. தாங்கள் வாழுமிடத்தாலும் குறிக்கப் பட்டனர்.

ஆகவே, தமிழர்கள் ஒரு போதும் சத்திரியர்களாகவோ, சூத்திரர்களாகவோ இருந்ததே இல்லை. ஆனால் சாதி அடை யாளங்களுடன் மேலும் கீழு மான சாதிகளாக, கூடுதல் குறை வான உரிமைகளுடன் வாழ்ந்து வந்தனர். சாதி ஒடுக்குமுறை அன்னியர்களான பல்லவர் காலம் தொட்டே தொடங்கியது. சோழர் பாண்டியர் காலங்களில் மேலும் தொடர்ந்தது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரத் தெலுங்கர்களின் கீழும், அவர்க ளுடைய ஆளுநர்களான நாயக்க மன்னர்களின் காலத்திலும், சாதிய ஒடுக்குமுறை உச்சநிலை அடைந்தது.

வட இந்தியச் சமூகம் பற்றிய வருணனைகளை அப்படியே தமிழகத்துக்கும் கேள்வி முறை யற்றுப் பொருத்திக் கொள்ளும் வழக்கம் இங்கே இருக்கிறது. வட இந்தியச் சமூகம் பற்றி மேதை அம்பேத்கர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவர் பயன் படுத்திய மூல நூல்கள் அனைத் தும் சமஸ்கிருத நூல்களே. அவர் விவரிக்கும் வட இந்தியச் சமூக கட்டமைப்பு உருவாக்கம் வேறு. தமிழகச் சமூகக் கட்டமைப்பு உருவாக்கம் வேறு விதமானது.

வட இந்தியாவைப் போலவே தமிழ்ச் சமூகத்திலும் சாதிய வன்முறைகளும் ஒடுக்கு முறை களும் இன்றுவரைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அடிப் படையில் ஒரு பெரும் வேறுபாடு உண்டு.அவ்வேறுபாட்டை நூலாசிரியர் பெ. மணியரசன் சுட்டிக் காட்டுகிறார். அண்ணல் அம்பேத்கர், ‘தீண்டப்படாத மக்கள் இந்தியா முழுவதும் இந்து மதத்திற்கு வெளியே உள்ள மக்கள் (ஷீut நீணீstமீ) என்று கூறியி ருக்கிறார். இக்கருத்து விவாதத் திற்குரியது. வட இந்தியாவிற்கு இது பொருந்தும். ஆனால் தமிழ கத்தில் இன்று ஒடுக்கப்பட்ட வர்களாக அடையாளப்படுத் தப்படும் தொல்குடி மக்கள் தமிழ்ச் சமூகத்தின் ஒரு கூறா கவே இருந்து வந்திருக்கின்றனர். என்று இந்நூல் வாதிடுகிறது.

“தமிழ்ச் சமூகத்தில் எத்தனைச் சாதிகள் இருந்தாலும் அவற்றின் வேர் ஒன்றுதான்’’ ஆனால் ‘தலித் துகள்’ என்று இந்திய அளவில் ஒற்றை அடையாளம் கொடுப் பது எதனால் நிகழ்கிறது. இந்த நிகழ்வுப் போக்கு பற்றி இந்நூல் ஆய்வு செய்கிறது. ‘தலித்தியம்’ பேசும் சிலர் ஒடுக்கப்பட்ட வகுப் புத் தமிழர்களைத் தமிழ் வேரிலி ருந்து பிரித்துவிடப் படாதபாடு படுகிறார்கள். தமிழினம், தமிழ்த் தேசியம் என்றாலே அவர்களுக்கு எட்டிக் காயாய் கசக்கிறது’’ (பக்:16)

“தலித்தியம் பேசும் சிலரின் தமிழ்த் தேசிய எதிர்ப்பு எங்கி ருந்து முளைத்தது? இந்தியத் தேசியத்திலிருந்து முளைத்தது’’ (பக்:17)

‘தமிழ்த் தேசிய எதிர்ப்பின் தத்துவவேர் வட நாட்டுத் தலித் திய சிந்தனையாளர்களிடம் இருக்கிறது’ என்று கூறும் நூலா சிரியர் உத்திரப் பிரதேசத் தைச் சேர்ந்த, பகுசன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த விவேக் குமார் தலித் முரசு ஏட்டிற்குத் தந்த நேர்காணலி லிருந்து சான்று காட்டுகிறார் ‘பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் நாட்டில் ஏன் இயக்கமாக வில்லை’ என்ற கேள்விக்கு, விவேக் குமார் “தமிழ் தலித்துகள் தமிழ்ப் பண்பாட்டிற்கு பலியாகி உள்ளனர். அவர்களைத் தமிழ் அடையாளத்தை விட்டு வெளிக் கொணர்வதும் மிகுந்த கடின மான ஒன்றாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்த் தலைவர்களே தமிழ்ப்பண்பாட்டிற்குப் பலியா கியுள்ளனர்’’ என்று கூறுகிறார்.
இதன் பொருள் என்ன? இத்த தலைவர்களின் நோக்கத்தை பெ.மணியரசன் வெளிப்படுத்துகிறார்:

“தொல் தமிழர்களான ஒடுக் கப்பட்ட மக்கள், தமிழர் என்ற தங்களின் இன அடையாளத் தைத் துறக்க வேண்டும் வட நாட்டுத் தலித் தலைவர்களின் தலைமையை ஏற்க வேண்டும். இப்படியாக நம்மவர்கள் இந்தி மயமாக வேண்டும் (பக்:18) தலித்தியம் என்ற கோட்பாட் டின் சாரம், இந்திய மயமாதலும் இந்தியத் தேசியத்தை ஏற்றலும், தமிழர் அடையாளங்களைக் கைவிடலும் என்பதைப் பகுஜன் சமாஜ் கட்சிக்காரர் தெளிவாகப் புரிய வைத்து விட்டார்’’ (பக்:18)

இந்தித் திணிப்பு, இந்திய தேசியத் திணிப்பு இரண்டும் தலித்தியத்தின் பிரிக்க முடியாத உட்கூறுகள் என்பதை அம்பேத் கரின் எழுத்துகளைக்கொண்டு இந்நூல் பதிவு செய்கிறது. 1955 இல் மாநிலங்கள் மறு சீரமைப்பு ஆணைய அறிக்கை வெளியான பிறகு, அம்பேத்கர் எழுதிய குறு நூல் அவருடைய இந்தித் திணிப்பு, இந்தியத் தேசியத் திணிப்பு உளநிலையைக் காட்டுறது.

அம்பேத்கர் கூறுகிறார்; மொழிவாரி மாநிலங்கள் அமைந் தாலும் “பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது இதற்கு அரசியல் மொழியாக சட்டத்தி லேயே வகை செய்ய வேண்டும். இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேண்டும்’’ (பக்:19)

“இந்தியைத் தங்கள் மொழி யாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களுக்கும் மறுக்க முடியாத கடமையாகும்.

மொழிவாரி மாநில அமைப் பின் ஒரு பிரிக்க முடியாத பகுதி யான இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகை தயற்றவன்’’ (பக்.20)

அம்பேத்கர் ஏன் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தார் என்பதற்கு, அவர் கூறிய பதில் அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்கு முரண்பட்டதாக உள்ளது.

 “இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால், ஹிந்துக்கள் சுதந்திரமுடையவர் களாக இருந்தாலும் முஸ்லீம் களின் தயவைப் பெரிதும் எதிர் பார்க்கும் நிலையில்தான் இருந்தி ருப்பார்கள். ஹிந்து மகாசபை ஜன சங்கம் போன்றவை இருந் தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க் கத்தினராக இருந்திருப்பார்கள்’’ (பக்.23)

மதம் மாறுவது என்று முடிவு செய்த பிறகு, “சீக்கிய அல்லது பௌத்த மதத்திற்கு மாறுவது குறித்து இந்து மகாசபைத் தலை வர்களில் ஒருவரான டாக்டர் மூன்சே, சங்கராச்சாரியர் ஆகி யோருடன் கலந்து பேசினார் அம்பேத்கர். (பக் 23)

இன்றைய தலித்தியத்தின் அடிப்படையான அம்பேத்காரி யத்தைத் திறனாய்வு செய்திருக் கிறார் தோழர் பெ.மணியரசன். சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் பங்களிப்பை பாராட்டும் அதே வேளை, அவருடைய “இந்தித் திணிப்பு, இந்தியத் திணிப்பு, இயற்கையான தேசிய இனங் களை நசுக்கும் திட்டம் முதலிய வற்றை நாம் கடுமையாக எதிர்க் கிறோம் இப்புள்ளியில் அவர் தீவிர இந்துத்துவவாதி போல் நடந்து கொண்டார் என்று திறனாய்வு செய்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

வணக்கத்துக்குரிய மாபெரும் தலைவர்களாக இருந்தாலும் எதை எடுத்துக் கொள்ள வேண்டு மோ அவற்றைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்; சரியானவை அல்ல என்று தெரியுமானால் சமரசமின்றி நிராகரிக்க வேண் டும். காசு கொடுத்து வாங்கி விட் டோமே என்பதற்காக வாழைப் பழத்தைக் காம்போடு விழுங்கக் கூடாது.

மற்றும் ஒரு முக்கிய கருத்தை இந்நூல் பதிவு செய்கிறது. “இந்தியா முழுவதும் ஒரே தன்மையுடன் செயல்படுவதாக அம் பேத்கர் கருதினார். அப்பார் வையின் காரணமாகவே ‘தீண் டப்படாத மக்கள்’ அனைவரும் அனைத்திந்தியா முழுவதும் இந்து மதத்திற்கு வெளியே உள்ள மக்கள் (out caste) என்று அம் பேத்கர் குறிப்பிடுகிறார்.” (பக்; 27)

பெ.மணியரசனின் இந்தப் பார்வை ஆய்வாளர்களை மேலும் ஆய்வுக்கு இத்திசையில் உந்தித் தள்ளக்கூடியது.

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை இருந்தாலும் கூட பள்ளர், பறையர் ஆகிய இரு சாரார்க்கும் உள்ளூர்ப் பொதுக் கோயிலில் உரிமையும் பங்கும் உண்டு; இவ்விரு பிரிவுகளின் ஒப்புதல் இல்லாமல் தம் ஊர் கோயில் களில் திருவிழா நடத்தக் கூடாத மரபு மற்றும் உரிமை உள்ளமைக் குறித்தும் மணி யரசன் பதிவு செய்கிறார். தாழ்த் தப்பட்ட மக்கள் மீது ஒடுக்கு முறையே இங்கு இருந்து வந்திருந் தாலும் கூட தாழ்த்தப்பட்டோர் தமிழ்ச் சமூகத்திற்கு வெளியே வைக்கப்படவில்லை என்ற இக் கருத்தை மேலும் ஆய்வுக்கு நாம் உட்படுத்தலாம்.

சங்க காலத்தில் மதிப்பு மிக்கப் பெருங்குடியினராக இன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்து வந்ததை இந்நூல் சங்க இலக்கியச் சான்று மூலம் சுட்டுகிறது:

“துடியன் பாணன் பறையன் கடம்பனென்னும்
இந்நான் கல்லது குடியு மில்லை” (புறம்:335)
சில வரலாற்றுப் பதிவுகள் தமிழ்ச் சமூகத்திற்கு உட்பட்டு, பிரிக்க முடியாத கூறாகவே ஒடுக் கப்பட்ட மக்கள் இருந்து வந்துள் ளதைக் காட்டுகின்றன.

பரதவர்கள் தங்கள் குறு நிலத்தலைவனின் கீழ் வலிமை யுடன் நிகழ்ந்ததைச் சங்கப் பாடல்கள் தெரிவிக் கின்றன. சோழன் இளஞ்சேட் சென்னி படையெடுத்து பரதவர்களை வென்றதாக புலவர் பசுங்கு டையார் புறப்பாடல் (378) இல் குறிப்பிடுகிறார். பாண்டியன் நெடுஞ்செழியன் பரதவரை எதிர்த்து சிங்கம் போன்று போரிட்டான் என்று மாங்குடி மருதனார் பதிவு செய்துள் ளார். (புறம்: 226) பரதவர் மன்னன் மத்தி பற்றி அக நானூறு 226 குறிப்பிடுகிறது. குறவர்கள் செல்வாக்கு மிக்க மக்களாகத் தங்கள் அரசனின் கீழ் வாழ்ந்த மையை அறிய முடிகிறது குறவர் சிற்றரசன் இறைக் கோன் என் பான் மீது இளவெயினியார் பாடி யுள்ளார்.

சங்கக் காலத்தில் நான்கு பெருங்குடியினருள் ஒரு பிரிவின ராக விளங்கிய பறையர், இடைக் காலத்திலும் சமூகப் பண்பாட்டு வாழ்வில் பிரிக்க முடியாத பகுதி யாக விளங்கி வந்துள்ளனர். திரு வாரூரில் “சாமிக்கு முன் இரத மேறும் பெரும்பறையப் யானை மீதேறி கவரி வீசிச்’’ சென்ற மைக்குக் கல்வெட்டுப் பதிவு உள்ளது.

பல்லவர் காலத்தில், கோயில் பூசையில் வள்ளுவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ‘ஸ்ரீ வள்ளுவம் பூவாணவன் உவச்சன், ஆறு வள்ளுவரை நித்தியக் கட்ட ளைக்கு வைத்துக் கொண்டு கோயில் காரியம்’ நடத்த வேண்டியது குறித்து கல்வெட்டு பேசுகிறது.

சோழர்கள் காலத்திய நிலவுட மைச் சமூகத்தில் சாதிகள் மேலும் இறுக்கம் பெற்றன. சாளுக்கியச் சோழனான முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் மனுதர்மம் செழித்தது. ‘மேதினி வளரும் சாதி ஒழுக்கமும், நீதி அறமும் பிறழாது’ என்று இரண் டாம் குலோத்துங்கனின் மெய்க் கீர்த்தி கூறுகிறது.

சோழர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில், பறையர், பள்ளர் ஆகிய குடிகள் சிறப்புடன் இருந்துள்ளனர்.

தனிச் சேரிகள், சில பிரிவின ருக்கு சமூகத் தாழ்வு ஆகியவை நிலை கொண்டன. வேளாளர் களில் ஒரு பிரிவினர் பையர் என்று அறியப்பட்டனர். அப்பிரி வினர் பறையர் என கல்வெட் டுகள் குறிப்பிடுவதாக டாக்டர் இரா. நாகசாமி குறிப்பிடுகிறார். “இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல் வெட்டில் (14 ஆம் நூற்றாண் டில்) கோயிலில் விளக்கு எரிக்க பத்து வராஹன் பணம் கொடுத் தவன் பெயர் “கொற்றமங் கலத்தி ருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்’’ என்று வருகிறது. வெள்ளாளரில் பைய் யரில் என்ற பிரிவில் பறையர் உட் பிரிவினர் என்பது சரியான பார்வை. மற்றொரு கல்வெட்டு “வெள்ளாளன் பைய்யரில் சடை யன் நேரியான பறையன்’’ என்ப வன் குறிப்பிடப்படுகிறான். வெள் ளாளரில் புல்லி என்றொரு பிரிவு உண்டு. விக்கிரமசோழன் காலத் தில் 1292 இல் தீபம் கொடுத்த “வெள்ளாளன் புல்லிகளில் பறை யன் பறையனான நாட்டுக்கா முண்டன் என்பவன் பற்றிக் கல்வெட்டு பேசுகிறது. நாட் டுக்கா முண்டன்’’ என்று அழைக் கப்படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கி றான் என்பது ஆய்வாளர் நாக சாமி கருத்து.

இடைக்காலத்தின் நிலவுடை மைச் சமூகச் சுரண்டலுக்குப் பறையர் உள்ளிட்ட பெருங்குடி யினர் ஆளாயினர் ஒடுக்கு முறை கள், இழிவுகள் போன்றவை தொடர்ந்து வந்தன. ஆனால், தமிழர்கள் தம் மண்ணுரிமையை இழந்து தெலுங்கர் ஆட்சியதி காரத்தின் கீழ் வந்த பிறகு இந்த ஒடுக்குமுறை உச்ச நிலை அடைந் தது. கி.பி. 15--16 ஆம் நூற்றாண்டு களில் விஜயநகரப் பேரரசு மற்றும் அதன் ஆளுநர்களான நாயக்கர்களின் ஆட்சியில்தான் இன்று நாம் பேசும் சாதிய ஒடுக்குமுறை உயர்நிலையை அடைந்தது. கீழ்நிலை சாதியார் களின் வீட்டில் உண்டால் “சாதிக்கும் புறம்பிட்டு கண்ணும் பறித்து தேசம் கடத்தப்பட்டனர்.” அவர்கள் வீடு பறித்து வண் ணான் துறை ஆக்கப்பட்டது.

நாயக்கர் காலத்தில் புகுத்தப் பட்ட பாளையக்கார முறையில், பறையர் மற்றும் பள்ளர்களின் நிலம் பாளையக்காரருக்கு அளிக் கப்பட்டன. இவர்கள் ஏது மற்றத் தொழிலாளிகள் ஆயினர். இதுவே, ஆங்கிலேயர் புகுத்திய ஜமீன்தாரி முறையிலும் நிகழ்ந்தது.

பறையர், பள்ளர், அருந்ததியர், உள்ளிட்ட சாதிகள் தமிழ்நாட் டில் மட்டுமே உள்ள சாதிகள் இவர்களை இந்தியாவில் உள்ள பிற பகுதியின் சாதிகளுடன் சேர்த்து ‘தலித்’ என்ற பெயரை வழங்கி விட்டு, நீண்ட இருப்பும் பெருமையையும் கொண்ட குடிப் பெயர்களைப் பறிமுதல் செய்து விடுவது, வரலாற்று ரீதியில் மொட்டையடிக்கும் வேலையல்லவா?

1990 களில் திடீரென்று ‘தலித்’ அடையாளத்துக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள வெவ்வேறு மொழியினப் பண்பாட்டைச் சேர்ந்த சாதிப் பிரிவினரை கொண்டு வர முயற் சித்ததுன் ஏன்? தலித் அடை யாளத் திணிப்பையும் அன்றைய சூழல்களையும் பொருத்திப் பார்ப்பது அவசியம்.

1990 களில் இந்தியா முழுவ துமே மொழிவழி தேசிய இனங் களின் தன்னுரிமைப் போராட் டங்களும், தனி நாடு போராட் டங்களும் உச்ச நிலையை அடைந்தன. அது போன்றே, மார்க்சிய- லெனினிய நக்சலிய அமைப்புகளும் பல மாநிலங் களில் முழு வீச்சுப் பெற்றிருந்தன.

இந்திய தேசியத்தின் “காந்தி தாத்தா’’ நேருமாமா’’ மாயையும் கழன்று போயிருந்தது. பலவீனப் பட்டுப் போன இந்தியத் தேசி யத்தை வலுப்படுத்த வேண்டிய தேவையும், முழுவீச்சும் பெற்று விட்ட தேசிய இனப் போராட் டங்களையும், நக்சலிய இயக்கங் களையும் பலவீனப்படுத்த வேண் டிய தேவையும் இந்திய தேசிய வாதிகளுக்கு இருந்தது.

தேசிய இனப்போராட்டங் களாயினும், நக்சலிய இயக்கச் செயல்பாடுகளாயினும் அவற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங் களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

தளர்ந்து போன இந்தியத் தேசியத்தின் துணைத் தேசியமாக, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப் பட்ட மக்களை ‘தலித்’ என்ற புதியஅடையாளத்துடன் ஒருங்கிணைந்து, இந்திய தேசியத் துக்கு முட்டுக் கொடுக்கும் முயற்சிகள் தொடங்கின.

போராடும் ஒவ்வொரு தேசிய இனத்திலிருந்தும் தாழ்த்தப்பட் டோரைத் தனிப்பிரித்து எடுத்துச் சென்று பாரதமாதா காலடியில் சமர்ப் பிப்பது அதன் நோக்கம். அவ் வாறுதான், மொழியின் தேசம்’ தேசிய இனம்’’ என்ற சொற்களை ஏற்காத அறிவு ஜீவிகள், அம்பேத்கரின் பழைய உரைகளில் எழுத்துக்களிலும் ‘தீண்டப்படாதாவர்’ அல்லது ஒடுக்கப்பட்டோர்’ என்று இருந்த இடங்களிலெல்லாம் ‘தலித்’ என்ற சொல்லை புகுத்தி அச் சிட்டு மக்களிடம் வினி யோகித் தனர்.

சாமானிய மக்கள், ஒடுக்கப் பட்டோருக்கு இதுவரை பல பெயர்களைக் கொடுத்தார்கள், காந்தியார் ஹரிஜனம்” என்றார். திராவிடக் கருத்தியல் தோன்றிய வுடன் ‘திராவிடர் ஆதி திரா விடர்’ என்றார்கள். ஆங்கிலேயர் காலத்திலிருந்து அட்டவணையி லிடப் பட்டதால் அட்டவணைச் சாதியர் (sநீலீமீபீuறீமீபீ நீணீstமீ) என்று பெயர் வந்தது ஒடுக்கப் பட்டவர் கள் என்ற பெயரில் “depressed class” என்று பின்னர், பெயர் வந்தது. இப்போது ‘தலித்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஓட்டலில் சோறு என்று கேட்க கேவலமாக இருக்கிறது; ரைஸ் என்று குரல் கொடுப்பது கவுர மாக இருக்கிறது. சாதி பேரைச் சொல்வதைவிட ‘தலித்’ என்ற பொருள் விளங்காச் சொல் கொஞ்சம் கவுரவமாக இருக் கிறது என்பதுதான் சாதாரண மக்களின் புரிதல். ‘தலித்’ என்ற சொல்லின் பின் உள்ள அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமே தெரியாது.

1994 இல் நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருந்த போது ‘காட்’ ஒப்பந்தப்படி இந்தியா உலகமயத்தை முழுமை யாக ஏற்றது. இந்தியக் கனி வளங்களையும், இயற்கை வளங் களையும், கச்சாப் பொருட்க ளையும் உலக முதலாளியம் சூறையாடத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் இந்தியா வின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஒன்றாக நின்று போராடு வதைத் தவிர்க்க வேண்டிய தேவை. உலக முதலாளியத்திற்கு இருந்தது.

 இந்தியத் துணைக் கண்டத்து மக்களை சாதி ரீதியாக உடைத்து அப்புறப்படுத்துவது எளிது. நீண்டகால ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருந்த ஒடுக்கப்பட்ட சாதிகளையும், பிற பிற்படுத்தப் பட்ட சாதிகளையும் ஒருங் கிணைக்க தேசிய இன உரிமை பேசியவர்களும், மார்க்சிய லெனியர்களும் முனைந்தனர். இக் காலக் கட்டத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித் தெடுக்கும் தலித்தியம் என்பது முன்வைக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளிடம் நிதி உதவி பெற்று வரும் ஙிஹிமிலிஞி என்ற தொண்டு நிறுவனத் தின் துணை நிறுவனமான ‘விகாஸ் அத்யாயன் கேந்திரா’ என்னும் அமைப்பு ‘தலித் அறிவு ஜீவிகள் கூட்ட மைப்பு’ (dalith intellectuals’ colletive என்ற அமைப்பை உருவாக்க நிதி உதவி செய்தது. நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் ஒத்துவரக் கூடிய பிறச்சாதிகளில் உள்ள அறிவு ஜீவிகளைத் திரட்டி ஓரணிக்குக் கொண்டு வந்து, ‘தலித்தியம்’ என்ற புதிய கருத்தியலைப் படைக்க முனைந் தார்கள். ‘தலித் அடையாளம்’ என்றும் ‘தலித் தேசியம்’ என்றும் சொல்லாடல்கள் புழங்கின.

 உழைக்கும் மக்களிடையே உள்ள சாதி முரண்களைப் பயன் படுத்தி, நட்பு முரண்களைப் பகை முரண் களாக மாற்றிவிடுவது அதிருப்தியை வெறுப்புணர் வாக வளர் தெடுப்பது, ‘தலித் பண் பாடு என்பதே தனியானது’ என்று கூறி, வெவ்வேறு பண்பாடு களைக் கொண்ட மொழியினங் களின் ஒடுக்கப்பட்ட மக்களைப் பண் பாட்டு ஓர்மை கொண்ட வர் களாக கதைப்பது, இவற்றின் மூலம் மற்றவர்களோடு இணைய விடாமல் தடுப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தி ருக்கின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில், “ஒடுக்கப் பட்டோர் கள்’’ என்ற ஒன்றைத் தவிர வேறு எவ்வித ஒட்டுறவும் இல்லாத சாதிகளே இந்தியாவின் இன் றுள்ள அட்டவணைச் சாதிகள்.

முல்லைப் பெரியாறு போராட் டம் நடைபெற்ற போது, நாகர் சேனை என்ற பெயரில் ஒரு சுவ ரொட்டி ஒட்டபட்டதை பெ. மணியரசன் பதிவு செய்திருக் கிறார். அதில் சொல்லப்பட்ட செய்தி, “முல்லைப் பெரியாரில் தண்ணீர் வந்தால் நிலமற்ற சேரி மக்கள் பொதுக் குளத்தில் தண் ணீர் எடுக்க அனுமதி உண்டா? சேரியே! அப்பாவியாய் போராட் டத்தில் கலந்து கொண்டு அடி, உதை, சிறை, செல்ல வேண்டாம்” உன் ஊர் ஆற்று நீருக்காக சேர்ந்து போராடாதே’’ என்று இது சேதி கூறுகிறது முல்லைப் பெரியாறு தண்ணீர் இல்லாமல் போனால், எல்லா சாதி மக் களுமே காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டும். ‘தமிழர்’ என்ற உணர்வுடன்தான் தமிழக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று வரை போராடிக் கொண் டிருக்கிறார்கள்.

உங்கள் உள்ளூர் ஆறு, குளங்கள் இனி ஏலத்திற்கு வரும். அப்போது சாதிகள் ஒன்றாக இணைந்து நின்று போராடும் அந்தத் சூழலைத் தவிர்ப்பதற் காகவே சாதிகள் உடைக்கப் படுகின்றன. முன்னமே உள்ள முரண்பாடுகள் கூர்மை படுத்தப் பட்டு பகை உணர்வு வளர்த் தெடுக்கப்படுகிறது.

பெ.மணியரசனின் இந்நூல் பல செய்திகளைச் சிந்தனைக்குத் தருகிறது. இங்கே “அனைத்திந்திய சாதிகள் கிடையாது என்பதையும், தமிழ்நாட்டிலுள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய சாதிகளையும் இணைத்து ஓர மைப்பு ஆக்க முடியாத தலித்தி யம்,அனைத்திந்தியாவில் இணைத்து விடுமா?’’ என்ற கேள் வியையும் முன் வைக்கிறார்.

சாதியம் என்பது நிலவுடமைச் சமூகக் கூறு; முதலாளிய உற்பத்தி முறையில் சாதி அழியும்; வாக்கு ரிமை சாதி இறுக்கத்தை நீக்கும்; இட ஒதுக்கீடு சாதிகளுக்கு உரிமை அளித்து சமப்படுத்தும் என்றெல்லாம் கூறியதற்கு மாறாக சாதியம் தன்னை அழிக்க வந்த நஞ்சை உணடு வளர்கிறது என்று பெ. மணியரசன் கூறுகிறார்.

சாதியத்தை தேசிய இன விடு தலைதான் ஒழிக்கும். இந்தியா முழுவதும் ஒரு புரட்சியை நடத்த முடியாது. அதாவது ஏக இந்திய புரட்சி சாத்தியமே இல்லை. அது நிகரமைப் புரட்சியானாலும், ஜனநாயாகப் புரட்சியானாலும் அது ஒரு தேசத்திற்குள் தான் நடத்த முடியும். இந்நூலாசிரியர் இப்படி அறிதியிட்டுக் கூறுகிறார்:

“சமூக மாறுதல் என்ற புரட் சிக்கான முதற்பொருள் தமிழ கமே! தமிழ்த் தேசியம் என்பது, தமிழ்த் தேசத்தில் நடை பெற வேண்டிய புரட்சி பற்றிய கருத்தியல். வர்க்கப் புரட்சியும் சாதி ஆதிக்க ஒழிப்புப் புரட்சியும் ஒன்றிணையும் புள்ளி தமிழ்த் தேசியமே’’ (பக்.74)

சாதிச் சங்கங்களின் உளவியல் வேர் பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கிறது. ஒரு கூட்டு தற்காப்பு உணர்ச்சியே சாதி சங்கங்களின் அடிப்படை. ஆனால், இன்று நாம் சந்திக்கும் பிரச்சினைகளை சாதியாக எதிர் கொள்ள முடி யாது. தமிழினம் என்ற கூட்டு தற் காப்புணர்ச்சி தமிழ் மக்களிடம் இயல்பாய் இருக்கிறது. இதை வளர்த்தெடுக்க வளர்த்தெடுக்க சாதி உணர்ச்சி குன்றும்.

இந்தியன், திராவிடன் என்ற புனைவுகள் தமிழினத்தின் இயல் பான வளர்ச்சியில் குறுக்கிட் டன. இவை மறுதலிக்கப்பட வேண்டியவை. என்பதையும் இந்நூல் பேசுகிறது. சாதியைப் பாதுகாக்கும் தத்துவம் வருணா சிரம தர்மம்தான் இதைப் பாது காப்பது ஆரியப் பார்ப்பனியம். அதன் நவீன வடிவமே இந்திய தேசியம். “சாதி ஆதிக்கத்தின் பாதுகாப்பு பாசறையாக உள்ள தில்லியிலிருந்து அதாவது இந்தி யாவிலிருந்து தமிழ்நாடு தன் னைத் துண்டித்துக் கொள்வதே சாதி ஒழிப்பிற்கு முன் தேவையாக உள்ளது. எல்லா அதிகாரங்களும் பெற்ற இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைந் தால் வருணசாதி ஆதிக்க ஒழிப்பு விரைவுபடும்’’(பக்118)

சாதி ஒழிப்பில் தமிழ்த் தேசி யத்தின் உடனடி வேலைத் திட் டம் பற்றியும் இந்நூல் பேசுகிறது. மேலும், “தமிழ்த் தேசியப் புரட் சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட் டம் உள்ளது’’ என்பதைத் தெளிவு படுத்துகிறது.

தமிழ்த் தேசியத்தின் மீது வீசப்படும் அவதூறுகளுக்குப் பதிலும், தமிழ்த் தேசியக் கருத்தி யலுக்கு வளம் சேர்க்கும் சிந்த னைகளும் பொதிந்துள்ள “சாதி யும் தமிழ்த் தேசியமும் என்ற இந்நூல் தமிழ்த் தேசிய வர லாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறலாம்.

Pin It