ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்  கிளைக்கு ஈரோடு த.தே.பொ.க. தோழர் மாவீரன் அவரது துணைவியாருடன் 20.01.2012 வெள்ளி யன்று காலை வரைவோலை எடுக்கச் சென்றார்.

 அங்கு பணப்பரிமாற்ற அறைக்கு முன்பு  CASH COUNTER  என ஆங்கிலத்திலும், இந்தியிலும் கையால் மை கொண்டு எழுதப்பட்டிருந்தது. தமிழில் எழுதப்படாமல்  ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் எழுதப்பட்டிருந்ததைக் கண்ட தோழர் மாவீரன்  வங்கி மேலாளரிடம் "தமிழில் ஏன் எழுத வில்லை" என்று கேட்டார். வங்கி மேலாளர் சந்திரசேகர் என்பவர் தோழரின் கேள்விக்கு பதில் கூற முற்படாமல் ‘இப்படி எழுதுவது தான் வங்கிச் சட்டம்’ என்று கூறிவிட்டு, அங்கிருந்த காவலாளியை அழைத்து, ‘யார் இவங்களை யெல்லாம் உள்ளே விட்டது?’ என சத்தமிட்டார். ‘நாங்கள் எழுதி விடுகிறோம் நீங்கள் கிளம்புங்கள்’ என்றார்.

 வெளியேறிய மாவீரன் பிற்பகல் வங்கிக்குச் சென்று தமிழில் எழுதியுள்ளார்களா எனப் பார்த்தார். தமிழில் எழுதவில்லை. தமிழில் ஏன் எழுத வில்லை யென்று மேலாளரிடம் கேட்டார். உடனடியாக மேலாளர் சந்திர சேகர் மாவீரன் வங்கியில் கலாட்டா செய்வதாக  கருங்கல்பாளையம் காவல் நிலையத் துக்குத் தொலைபேசியில்  புகார் கொடுத்தார். அங்கிருந்து உதவி ஆய்வாளர் வேலன் வந்து மாவீரனையும் அவர் மனைவியையும் கருங்கல் பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு மாவீரனிடம்  நீ ஏன் வங்கியில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை செல்லில் புகைப்படம் எடுத்தாய். வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டாயா என்று மிரட்டினார். தமிழில் எழுதவில்லை என்று சான்று காட்டத்தான் புகைப்படம் எடுத்தேனே தவிர எனக்குக் கெட்ட நோக்கம் எதுவுமில்லை என்று மாவீரன் சொல்லியும் உதவி ஆய்வாளர் மிரட்டுவதை நிறுத்தவில்லை.

 மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால்தான் உங்கள் இருவரையும் வெளியே விடுவேன் என்று வேலன் நிர்பந்தித்தார். மனைவியும் உடன் இருந்த தால் வேலன் சொன்னபடி எழுதி கொடுத்து விட்டு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அதன் பிறகு நான்கு நாள் கழித்து (24.1.2012) வேறொரு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் மாவீரனைக் கருங்கல் பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து ”வங்கியில் இருந்த பெண்களை ஆபாச மாக படம் எடுத்திருக்கிறாய், உன் மீது வழக்குப் போட முடியும்”  என்று மிரட்டினார். அதன் பிறகு வெளியே அனுப்பியுள்ளார்.

 தமிழ்நாட்டில் தமிழிலும் எழுதுங்கள் என்று கேட்டதற்காக வங்கி மேலாளர் சந்திர சேகர், காவல் உதவி ஆய்வாளர்கள் வேலன், சீனிவாசன் ஆகியோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தாய் மொழிப்பற்றாளர் ஒருவரை காவல் நிலையத் திற்கு அலைக்கழித்து, மிரட்டி அவமானப் படுத்தி ஏதோ பெரும் குற்றம் செய்ததுபோல் எழுதி வாங் கியுள்ளனர்.  இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக் கையெடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.  அதே வேளை தமிழ் மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்த தோழர் மாவீரனை த.தே.பொ.க. பாராட்டுகிறது.

Pin It