தனித்தமிழ் இயக்கத்தின் சமகாலப் பேரறி ஞரும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழிவந்து உலகத் தமிழ்க் கழகத்தின் பொறுப்பேற்று செயல் பட்டவரும், ‘தென்மொழி’ ஆசிரியருமாகிய ‘திருக்குறள்மணி’ புலவர் இறைக்குருவனார் அவர்கள், 23.11.2012 அன்று பின்னிரவில், தஞ்சையில் மாரடைப்பால் திடீரென்று காலமானார்.

பட்டுக்கோட்டையில் தமிழர் முறைத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு இரவு சென்னைக்கு திரும்பும் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, தஞ்சையில் பேருந்தி லிருந்து இறங்கிக் கொண்டார். அய்யா அவர்கள் நெஞ்சுவலியால் துடிக்கும் செய்தி பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மகன் பூங்குன்றன் வழியாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வந்தது.

உடனடியாக, இறைக்குருவனார் அவர்கள் இருக்கு மிடத்திற்கு சென்ற தோழர் பெ.மணியரசன் மற்றும் பேராசிரியர் வி.பாரி, பொறியாளர் கென்னடி, வி.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் நல்லதுரை, முனைவர் இளமுருகன் உள்ளிட்டத் தோழர்கள் அவரை,தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் ஆய்வுசெய்து விட்டு, இறைக்குருவ னார் இறந்துவிட்டார் எனக் கூறிவிட்டனர். அதன்பிறகு, மருத்துவ வாகனத்தில், திருச்சித் தோழர் ஈகவரசன் பாதுகாப்பில் புலவர் இறைக்குருவனாரின் உடலை தோழர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்னாரது இறுதி வணக்க நிகழ்வு, 25.11.2012 அன்று காலை 10 மணியளவில், சென்னை மேடவாக் கத்தில் நடைபெற்றது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவுஇல்லமான தமிழ்க்களத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த புலவர் இறைக்குருவனாரின் உடலின் அருகில், சோகமே உருவாக புலவர் இறைக்குருவனார் அவர்களது துணைவியார் பொற்கொடி அம்மாளும், தென்மொழி அவையம் திரு. பூங்குன்றன், இறைக்குருவனாரின் மகள்கள் இசைமொழி, அங்கயற்கண்ணி, ஆகி யோரும் அமர்ந்திருந்தனர். பாவலரேறு பெருஞ்சித் திரனார் அவர்களின் மகனும், தமிழக ஒடுக்கப்பட் டோர் விடுதலைஇயக்கத்தலைவருமான தோழர் பொழிலன் புழல் சிறையிலிருந்து சிறப்பு விடுப்பில் (பரோலில்) வந்திருந்தார்.

புலவர் இறைக்குருவனாரின் உடலுக்கு, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்பின் தொடங்கிய இறுதி வணக்க ஊர்வலம் மேடவாக்கம் கூட்டுச்சாலை வழியாக, திரளான தமிழ் உணர்வாளர் களுடன் இடு காட்டைச் சென்றடைந்தது.

ஊர்வலத்தில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் பாவேந்தன், தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர் களும், தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

உடலடக்கத்திற்குப் பின் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு, திரு பழநெடுமாறன் தலைமேற்றார். அதில் பேசிய தோழர் பெ.மணியரசன், பின்வருமாறு கூறினார்.

“எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஒரு மரபை தமிழறிஞர்களிடையே பாவலரேறு பெருஞ் சித்திரனார் உருவாக்கினார். அந்த மரபில் வந்து அவரது மருமகனாக விளங்கி சிறப்பாக தமிழ்ப் பணியாற்றியவர் திருக்குறள் மணி புலவர் இறைக் குருவனார். சாதிக் கூடாது என்று மேடையில் பேசும் அவர்கள் தங்கள் குடும்பத்திலும் சாதி இல்லாமல் வாழ்கிறார்கள். எழுத்திலும், சொற்பொழிவிலும் தனித் தமிழ் பேசும் அவர்கள் குடும்பத்தில், பிள்ளை களும் பேரப்பிள்ளைகளும் தனித்தமிழில் பேசும் கொள்கைப் பிடிப்பை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களின் குடும்ப பிள்ளைகள் பல்வேறு அமைப்புகளில் இருந் தாலும் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, என்ற இலட்சி யத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஈழத்தில் நம் இனம் அழிக்கப்பட்ட அவலத்தில் ஆத்திரத்தில், தனித் தமிழ்நாடு கோரிக்கை மேலும் வளர்ந்து வரும் இக்காலத்தில் அக்கொள்கைக்காகப் பாடுபட்டுவந்த இறைக்குருவனார். மறைந்துவிட்டது துயரமளிக்கிறது தமிழ் இலக்கியம்,இலக்கணம், வரலாறு குறித்து எந்த நேரத்தில் ஐயம் கேட்டாலும் உவகையுடன் விளக்கம் அளிக்கும் இறைக்குரு வனாரை இழந்துவிட்டோம். அவருக்கு வீரவணக்கம் செலுத்திக்கொள்கிறேன்.""

இரங்கல் நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அக்கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தோழர் தியாகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பாவேந்தன், தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், முனைவர் இரா. இளவரசு, புலவர் கி.த. பச்சையப்பன். சொல்லாய்வறிஞர் அருளி, தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், எழுகதிர் ஆசிரியர் அருகோ, தமிழர் முன்னேற்றக்கழக ஒருங்கிங்கிணைப்பாளர் அதியமான், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் தாயம்மாள் அறவாணன், செம்மொழி நடுவண் ஆய்வு நிறுவன பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி, முனைவர் தெய்வநாயகம், கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன், பாவலர் மு. இராமச்சந்திரன், இயக்குநர் மு.களஞ்சியம், ஆகியோர் உரையாற் றினர்.

த.தே.பொ.க. பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல் ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அற்புதம் அம்மையார், தமிழர் கழகம் தோழர் தமிழ் முகிலன், புலவர் இரத்தினவேலவர், பாவலர் பரணர், அன்றில் பா.இறையெழிலன் உள்ளிட்ட பெருந்திரளான இன,மொழி உணர்வாளர்களும், கலந்து கொண்டனர்.

புலவர் இறைக்குருவனாருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்து கின்றது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது. 

Pin It