சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி பகுதியில் 4.5 ஆ.மி.க. (டி.எம்.சி) கொள்ளளவில் புதிய அணை கட்டக் கேரள அரசு திட்டம் தீட்டியுள்ளது. ஏற்கெனவே அது முல்லைப் பெரியாறு அணையை முடக்கி வைத்துள்ளது. முற்றாக அதனைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளது. கன்னியாகுமரியில் தமிழகத்திற்குரிய நெய்யாற்றின் இடதுகரைக் கால்வாயை மூடி வைத்துள்ளது. அமராவதிக்குத் தண்ணீர் கொண்டுவரும் பாம்பாற்றில் அணைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கெதிரான தண்ணீர் முற்றுகையைக் கேரளம் செயல்படுத்துகிறது. அதே வேளை அன்றாடம் திமுதிமு வென மலையாளிகள் தமிழ் நாட்டில் குடியேறி வருகிறார்கள். இங்கு பெரும் தொழில், வணிக நிறுவனங்கள் நடத்துகிறார்கள். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் பல நடத்து கிறார்கள். சிறிய தேநீர்க் கடையிலிருந்து பெரிய உணவகங்கள் வரை நடத்துகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் அவர்கள் ஆதிக்கம் அதிகம். தமிழகச் செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் மலையாளிகள் கணிசமான எண்ணிக்கையில் வேலைபார்க்கிறார்கள். முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராகச் செய்திகளை திரித்துத் தருகிறார்கள்; தமிழர்களின் உரிமைகள் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரில் முனைப்புக் காட்டியவர்கள் மலையாள அதிகாரிகளும் அமைச்சர்களும் என்பதை நாமறிவோம்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் என்ற அளவுக்கு மலையாளிகளின் மக்கள்தொகை வீங்கியுள்ளது. தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளையெல்லாம் மலையாளிகள் பறித்துக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டை இரண்டாவது கேரளமாக மாற்றிக்கொண்டுள்ள மலையாளிகளுக்குக் கொஞ்சம் கூட நன்றியுணர்ச்சி இல்லை. தமிழ் நாட்டைப் பழிவாங்க, ஒவ்வொரு முனையிலும் முனைப்புக்காட்டுகிறார்கள். தமிழர்களுக்கெதிரான பகை நடவடிக்கைகளில் ஒன்றுதான் சிறுவாணி ஆற்றில் அணைகட்டும் திட்டம்.

அட்டப்பாடி மலைப்பகுதியாகும். அங்கு வேளாண் உற்பத்திக்கான சமவெளியில்லை. ஆனாலும் அணைகட்டித் தண்ணீரைத் தேக்கி வைக்கத் திட்டமிடுகிறார்கள்.

சிறுவாணியில் அட்டப்பாடி சிட்டூரில் அணைகட்டி விட்டால் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது. அம்மாவட்டங்களின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் என்ற அளவிற்குக் குடியேறியுள்ள மலையாளிகளும் அந்நீரைத் தான் குடிக்கிறார்கள்.

சிறுவாணி ஆற்று நீர் தமிழ கத்தின் பவானி ஆற்றில் கலக்கிறது. பவானி காவிரி ஆற்றில் கலக்கிறது. காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆறும் காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது.

காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-இல் அளித்த இறுதித் தீர்ப்பில் 2.87 ஆ.மி.க (டி.எம்.சி) தண்ணீர் மட்டுமே சிறுவாணியிலிருந்து கேரளம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. 4.5 ஆ.மி.க. கொள்ளளவு கொண்ட அணை கட்டினால் நீர் குறையக் குறைய நிரப்பி 12 ஆ.மி.க. வரை கூடக் கேரளம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் பிறகு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழ் நாட்டிற்கு சிறுவாணியிலிருந்து வராது.

தமிழக முதல்வர் செயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு மடல் எழுதியுள்ளார். சிறு வாணியில் அணைகட்டக் கேரளத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு இதுவரை கடைபிடித்து வரும் தமிழர் எதிர்ப்புக் கொள் கையைத்தான் இதிலும் கடை பிடிக்கும். சிறுவாணியில் அணைக்கட்டத்தடை போடாது.

சிறுவாணி ஆற்று நீர்ப்பகிர் வையும் உள்ளடக்கிய காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மறு ஆய்வுக்காக, உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு வருவதற்குள் கேரளம் தன்முனைப்பாக அணைகட்டக் கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குப்போடலாம்.

உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டுத் தடுத்துவிடுமா என்ன? முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது, முதற்கட்டமாக 142 அடி வரைத் தண்ணீர் தேக்கலாம் என்று 2006 பிப்ரவரி 27-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பைக் குப்பைக் கூடையில் வீசி, ஒரு சட்டத்தை இயற்றிக் கொண்டது கேரளம். அச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரித் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குக் போட்டது.அது என்ன ஆனது?

மீண்டும் புதிதாக வல்லுநர் குழு அமைத்து அணை வலிமை குறித்து ஆய்வுச் செய்ய சொன்னது உச்சநீதிமன்றம். மலையாளிகள் இழுத்த இழுப் பிற்கு உச்ச நீதிமன்றம் நகர்ந் ததே அன்றி நடுநிலை காக்க வில்லை. இதுமட்டுமல்ல, இன் னும் பல வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் நடுநிலை நீங்கி, தமிழ்நாட்டிற்கெதிராகவே செயல் பட்டுள்ளது. அது பற்றிக் கடந்த (சூன்16-30) இதழில் கட்டுரை வெளியிட்டோம். (மூன்று தமிழர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தமிழினப்பகை- கி.வெங்கட்ராமன்)

சிறுவாணியில் கேரளம் அணை கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், மறியல் என்று ஆர்ப்பரித்துப் பின்னர் தமிழர் கள் ஓய்ந்து போவார்கள். அவர் களால் நம்மை அசைக்க முடி யாது என்பது மலையா ளிகளின் கணக்காக இருக்கும்.

மூன்று தமிழர் உயிர்க்காப்பு, முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பு, காவிரி மீட்பு, பாலாறு உரிமைக்காப்பு, மீனவர் உயிர்மற்றும் உரிமைக் காப்பு, சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை அவர்கள் நடத்திய தமிழினப் படுகொலைகளுக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துதல், அணுஉலை மூடல், இப்பொழுது சிறுவாணியில் அணைகட்ட முயல்வதைத் தடுத்தல் என நமது தற்காப்புப் போராட்டங்களின் பட்டியல் நீள்கிறது.

அரசும், ஆளும் சக்திகளும் அண்டை மாநில இனவெறியர்களும் தமிழின உரிமைகளைப் பறிக்கும் போது, நாம் எதிர்வினைப் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவைகள் எழுகின்றன. எதிர்வினைப் போராட்டங்கள் சாரத்தில் தற்காப்புப் போராட்டங்கள் தற்காப்புப் போராட்டங்கள் சாரத்தில்,இருப்பதைத்தக்க வைத்துக் கொள்ளும் போராட்டங்கள்.

ஒரு போரில் நீண்ட காலம் தற்காப்புப் போர் மட்டும் புரியும் படையணி இறுதியில் தோல்வியைத் தழுவும். தாக்குதல் போர் புரிந்து எதிரியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளும் படையணியே,வெற்றிக் கோட்டை நோக்கி முன்னேறும். ஆயுதந்தாங்கிய போருக்கான இந்த இலக்கணம் அரசியல் போராட்டங்களுக்கும் பொருந்தும்.

எதிர்வினையாக அவ்வப் போது நடத்தப்படும் அடையாளப் போராட்டங்கள் இன உரிமைகளை மீட்டுத்தராது; இனவிடுதலையையும் ஈட்டித் தராது. நாமும் இயங்குகிறோம் என்பதை நாட்டிற்குத் தெரிவிக்க மட்டுமே பயன்படும். நமது இலட்சியத்தை அடைவதற்கான இலக்கு நோக்கிய போராட்டங்களே, அவ்வபோது எழும் சிக்கல்களுக்கும் தீர்வு தரும். அடையவேண்டிய இலக்கிற்கும் இட்டுச் செல்லும்.

நாம் நமது இலட்சியத்தை அடைவதற்கான இலக்கு நோக்கிப் போராடும்போது, அரசும், பிற்போக்கு சக்திகளும், குழப்பவாதிகளும் நமக்கு எதிர் வினையாற்றுவர்! எதிரியை எதிர்வினையாற்ற வைத்தலே சிறந்த போராட்ட முறை! நாம் எதிர்வினையாற்றுவது குறை வாகவே இருக்க வேண்டும்.

நமக்கு எதிரிகளால் ஏற்படும் ஒவ்வொரு சிக்கலுக்கும் நாம் எதிர்வினை ஆற்ற வில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. நமது இறுதி இலட்சியத்திற்கான போராட்டக்களத்தில் செயல்பட வேண்டியதே முக்கியம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் சரியான புரிதல் வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமை சக்தி – போராட்ட சக்தி தமிழீழத் தமிழ் மக்களே! தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு உறுதியான ஆதரவு சக்திகளே! ஆதரவு சக்தி என்றுமே தலைமை சக்தி ஆக முடியாது; ஆகக்கூடாது.

தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காகவே தமிழ் நாட்டில் கட்சி நடத்துகிறோம் அல்லது இயக்கம் நடத்து கிறோம் என்று யாரவது சொன்னால், அவர்கள் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள். ஏனெனில், தமிழ் நாட்டில் உள்ள கட்சியோ அல்லது இயக்கமோ, ஈழ விடுதலையை வென்று தரும் வாய்ப்பும் சூழலும் அற்றவை. உலகில் எந்த நாட்டு விடுதலையும் பக்கத்து நாட்டில் உள்ள அதே இன மக்களால் வென்றெடுக்கப் பட்டதாக வரலாறில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலையைத் தமிழீழ மக்களே வென்றெடுக்க வேண்டும் என்று உறுதிபடப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலையை இந்தியா பெற்றுதரும் என்று ஈழக்குழுக்கள் சில நம்பின. அந்த நம்பிக்கை தவறு என்றார் பிராபகரன். ஈழ விடுதலைக்குத் தமிழ்நாடு உறுதியாகத் துணை நிற்க வேண்டும் என்று கருதினாரே தவிர, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியோ அல்லது இயக்கமோ, ஈழ விடுதலையை வென்று தரும் என்று ஒருபோதும் பிரபாகரன் எண்ணவில்லை; எதிர்பார்க்க வில்லை.

தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்நாட்டு விடுதலை, தமிழ் மக்களின் வாழ்வுரிமை முதலியவற்றில் வேர்விட்டு, அவற்றை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் கட்சி அல்லது இயக்கமே தமிழீழ விடுதலைக் குத் துணை நிற்கமுடியும். அவ்வாறு தமிழ்நாட்டில் செயல்படாத எந்தத் தமிழினக் கட்சியும், தமிழின இயக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உருப்படியான உறு துணையாகச் செயல்பட முடியாது. தான் அடிமைப் பட்டிருப்பதை உணராதவனும், தனது விடுதலைக்குப் போராடாதவனும் தன் பங்காளி விடுதலைக்குப் போராடி வெற்றி ஈட்டித் தருவான் என்பது வெறும் கற்பனையே!

நாம் இவ்வாறு, உடைத்துப் பேசுவது, “ தமிழீழத்திற்காகவே “என்று தமிழ் நாட்டில் செயல்படும் கட்சிகளை அல்லது அமைப்புகளைசரியான திசைக்கு மாற்றிவிட முடியும் என நம்பிக்கையில் அன்று. உண்மையான தமிழின உணர்வாளர்களுக்கு உள்ளதை உள்ளவாறு எடுத்துச் சொல்லவே!

தமிழின உணர்வாளர்களே,

தமிழ்நாட்டில் ஒவ்வொரு உரிமையாக இழந்து வருகிறோம். இனியும் எதிர்வினைப் போராட்டங்களை மட்டுமே நாம் நடத்திக் கொண்டிருந்தால், இழந்ததை மீட்க முடியாது, எஞ்சியுள்ளதையும் காக்க முடியாது.

எதிரிகள் நமக்கு எதிர்வினை புரியும் வகையில் போராட்டங்களைத் தீர்மானிப்போம். இலட்சிய இலக்கு நோக்கிய போராட்டங்களைக் கூர்மைப் படுத்துவோம். அதற்கு இலட்சியம் எது என்பதை அடையாளம் காண்பதாகும்.

தமிழ்த் தேச விடுதலையை முன்னிறுத்தாதது தமிழ்த் தேசிய மன்று. சிறுவாணி, முல்லைப் பெரியாறு, அமராவதி ஆறு, நெய்யாற்றின் கரை இடது புறக்கால்வாய் போன்றவற்றின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் நாம் நடத்த வேண்டிய போராட்டம் மலையாளிகளுக்குப் பாடம் புகட்டுவதாக அமையவேண்டும். தமிழ் நாட்டை விட்டு மலையாளிகளை வெளி யேற்றவேண்டும். முதல் கட்டமாக ஒரு மாதத்திற்குக் கேரளா செல்லும் அனைத்துப் பாதைகளையும் மூடிப் பொருளாதாரத் தடையை செயல்படுத்த வேண்டும்.

இந்த அணுகுமுறை மூலம் தான், மலையாளிகளைப் பணிய வைக்க முடியும். மலையாளிகளின் வாழ்வு தமிழகத்தைச் சார்ந்துள்ளது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க முடியும்.

Pin It