கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீச்சோடு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் இடிந்தகரை என்ற சின்னஞ் சிறு கிராமம், உலகம் கவனிக்கும் முக்கியமான மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கூடங் குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் இன்று தமிழகம் தழுவியதாக மாறிவருகிறது. இது இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்காக ஒரு பக்கம் வாக்குறுதிகளையும், குழப்பமான வாதங்களையும் முன்வைத்து, மறுபுறம் தங்கள் கையாட்களின் மூலமாகவும் உளவு நிறுவனங்களின் மூலமாகவும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முயலுகிறது இந்திய அரசு. கூடங்குளம் அணுஉலை மிகவும் உயர்தரத் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ளது, பாது காப்பானது என்று இந்தியப் பிரதமர் முதல் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகள் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் இந்த அணு உலை தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்த்து தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்று கூறுகிறார்கள். கூடங்குளம் பகுதி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் என்ற வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள். இருக்கிற மின்சாரங்களிலேயே அணு மின்சாரம்தான் சிக்கனமானது, தூய்மையானது, சுற்றுச் சூழலைக் கெடுக்காதது என்றும் கூறுகிறார்கள். இவற்றை எதிர்கொண்டு இந்திய ஏகாதிபத் தியத்தின் சதித்திட்டத்தை முறியடிப்பது தமிழகத்திலுள்ள மக்கள் இயக்கங்களின் முன்னுள்ள பணி ஆகும். அவர்களுடைய வாதங் களையும் வாக்குறுதிகளின் பொய்மைகளையும் எதிர்கொண்டு அம்பலப்படுத்த வேண்டியது முதன்மையான தேவையாக இருக்கிறது. இக்கட் டுரை அந்நோக்கத்திலேயே வருகிறது.

1988 நவம்பரில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்ட உடனேயே தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. இந்திய அரசும் சோவியத் ஒன்றிய அரசும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தியது.

அன்று இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு கிளையாக இயங்கிய போது, எம்.சி.பி.ஐ. தமிழ்நாடு மாநில அமைப்புக்குழு 1988 நவம்பர் 26, 27 ஆகிய இருநாட்கள் சிதம்பரத்தில் கூடிய போது இயற்றியத் தீர்மானம் இதனை வலியுறுத்தியது.

பொதுவாக அணு உலைகள் அது எந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1.சாதா ரண உற்பத்திக் காலங்களில் இயல்பாக உற்பத்தி நடக்கிறபோது, 2. உற்பத்தி நடந்து கொண் டிருக்கும்போது ஏற்படுகிற நிகழ்வுகளின் போது (Incidents), 3. எதிர்பாராமல் நடக்கிற விபத்துகளின் போது (accidents), 4. உற்பத்தி முடிந்து அணு உலையின் ஆயுள் காலம் முடிந்து அதை மூடி வைக்கிற போது, 5. அணு உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளைப் பாது காக்கிற போது என்று எல்லா நிலைகளிலும் கதிர்வீச்சு ஆபத்து வெவ்வேறு அளவுகளில் இருக்கவே செய்கின்றது.

அணு உலை இயங்கும்போது அதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுவதோடு கதிர் இயக்கத் தனிமங்களும் வெளிப் பட்டுக் கொண்டே இருக் கின்றன. ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவற்றின் கதிரி யக்க ஐசோடோப்புகள் வெளிப் படுகின்றன. அது மட்டுமின்றி அயோடின் 131, சீசியம் 137 ஆகிய கதிரியக்க ஐசோ டோப்புகளும் வெளிப்படு கின்றன. இவை ஏராளமான கதிர்வீச்சைப் பரப்புகின்றன.

இயல்பாக உடல் தாங்கக் கூடிய கதிர்வீச்சு அளவை விட ஒரு இலட்சம் கோடி மடங்கு கதிர்வீச்சு இவற்றின் மூலம் வெளிப்படுகிறது, இக்கதிர்வீச்சு உடலைத் தாக்கினால் எலும்புப் புற்று நோய், இரத்தப் புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற புற்று நோய்கள் வரும். கருச்சிதைவு ஏற்படும். தலை முறை தலைமுறையாக உடல் ஊனத்தோடு குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட காற்றைச் சுவாசிக்கும் எல்லா உயிரிகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அணு உலை அமைந்திருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குறைந்தது 170கிமீ சுற்றளவில் உள்ள புல்லி லிருந்து நெல்லிலிருந்து அனைத்து வகை தாவரங் களிலும் இந்த அணுக்கதிர்வீச்சு படிந்துவிடும். புல்லைத் தின்கிற மாடும் தாவரங்களை மேய்கின்ற ஆடும் அவற்றைப் பயன்ப டுத்துகிற மனிதர்களும் தொ டர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அடுத்தடுத்த தலை முறைக்கும் இந்தக் கதிரி யக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

நிகழ்வுகள் நடைபெறுவ தற்கான வாய்ப்பு இந்த இரஷ்ய அணு உலையில் அதிகமாகவே இருக்கிறது. கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலை விவிஇஆர்1000 (V.V.E.R 1000) என்ற ஒரு வகை அணு உலை யாகும். இதன் வாழ்நாள் 35 ஆண்டுகள். 35ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணுஉலையை இயக்கக்கூடாது என்று அதன் தொழில்நுட்பமே கூறுகிறது. அத்தோடு இரண்டாண்டு களுக்குப் பிறகு இந்த அணு உலையில் சிக்கல்கள் (Problems), நிகழ்வுகள் (Incidents) தொடங்கும் என்று அதை வடிவ மைத்த அறிவியலாளர்களே குறித்திருக்கிறார்கள்.

இப்போது 2011 சூலையில் இரஷ்ய பிரதமர் மெத்வதே விடம் இரஷ்ய சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் அணு உலைகளை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் 31 குறைபாடுகள் வி.வி.இ.ஆர். வகையில் இருப்ப தாகச் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது. மிகை யான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதார ணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் இற்று ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அது போல் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுபோல் 31 குறைபாடுகள் விவிஇஆர் அணுஉலைபற்றிக் குறிக்கப்பட்டுள்ளன.

இரஷ்ய வடிவமைப்பு வி.வி. இ.ஆர். அணுஉலை மட்டு மின்றி எந்த வகை அணு உலையும் தனது நாடடில் வேண்டாம் என்று செர்மன் நாடு முடிவு செய்துவிட்டது. வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் இருக்கிற எல்லா அணு உலை களையும் படிப்படியாக மூடி விடுவது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது.

எந்த வகை அணு உலையும் தங்கள் நாட்டில் கூடாதென்று இத்தாலி முடிவு செய்து விட்டது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளும் அணு உலை கூடாது என்று முடிவு செய்துவிட்டன. இவை யெல்லாம் அணு உலைகள் பாதுகாப்பானவை அல்ல என்பதற்கும் குறிப்பாக கூடங் குளத்தில் நிறுவப்படவுள்ள விவிஇஆர் அணு உலை பாது காப்பானது அல்ல என்பதற்கும் சான்றாகும்.

அணு உலைக்குள் செலுத் தப்பட்டு வெப்பத்தால் கொ திக்கும் கடல் நீர் மீண்டும் கடலுக்குள் விடப்பட இருக் கிறது. சராசரியாக 1300 டிகிரி ஃபாரன் கீட்டுக்கு மேல் அதனு டைய வெப்பம் இருக்கும். அவ்வளவு கொதிக்கும் நீர் கடலில் விடப்படும்போது கூடங்குளத்தைச் சுற்றி மட்டு மல்ல திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட் டம் வரையிலும் உள்ள கடற் பரப்பில் மீன்வளம் கடுமை யாகப் பாதிக்கப்படும். கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்குள்ள கடல் உயிரிகள் மீன் வகைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடும். மீனவர்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியைச் சந்திக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப் பே இல்லாத பகுதி என்று இந்திய அணுசக்திக் கழகத் தினுடைய தலைவரிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் வரை துண்டு போட்டுத் தாண்டாத குறையாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். உண் மை நிலையோ அதற்கு மாறாக உள்ளது. இதே கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. 2006 மார்ச் 10 ஆம் நாள் கூடங் குளம் அருகிலுள்ள அஞ்சு கிராமம், அழகப்பபுரம், சாமித் தோப்பு ஆகியவற்றில் இலே சான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய் துள்ளன. இப்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்தி ருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத் துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாத இடம் என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்திய அணு உலைகளில் இதுவரை நிறுவப்பட்டுள்ள எந்த அணு உலையுமே முழு பாதுகாப்புடன் இயங்கியதாக வரலாறு இல்லை.

கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக் குறைவின் காரண மாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் மீண் டும் மீண்டும் கூறி வருகிறார். எல்லா ஏடுகளிலும் அவருடைய நேர்காணல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் அவர் எழுப்பி வருகி றார். அதற்கு அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ உருப்படியான பதில் எதுவும் கிடையாது

அணுமின்சாரம் சிக்கன மானது என்று ஆட்சியாளர்கள் சொல்வதும் உண்மையல்ல. இந்திய அரசே வெளியிட்டுள்ள கணக்குகளைத் தொகுத்துப் பார்த்தால் அணுமின்சாரத் துக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் 200 விழுக்காடு ஆகும். அதாவது அணு மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் 2000 ரூபாய் மானியமாக அரசு அளிக்கிறது. இதன் மூலமாக ஒரு நிறுவனம் உற்பத்தியில் இறங்கிவிட்டாலே இரண்டு மடங்கு இலாபத்தைப் பெற முடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரிலையன்ஸ் அம் பானியும் டாட்டாவும் அணு உலை அமைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன் வந்திருக்கிறார்கள்.

அணு உலை மூடப்பட்ட பிறகு அல்லது அதனுடைய ஆயுள்காலம் முடிந்து நிறுத்தப் பட்டபிறகு அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப் பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாது காப் பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் கிடையாது என வே பல நாட்டு மக்கள் தங்கள் பகுதியில் அணுக் கழிவுகளைப் புதைக்கக் கூடாது என்று கிளர்ச்சி செய்கிறார்கள்.

யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை அணு எரிபொ ருளாகப் பயன்படுத்தினால் அது பாதுகாப்பானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. (எ.கா. புதிய தலைமுறை வார இதழ் 20.10.2011) தோரியம் என்ற தனிமமும் கதிரியக்கத் தனி மம்தான். அதிலிருந்தும் கதிர் வீச்சு அபாயம் இருக்கிறது.

தோரியத்தில் இயங்கும் அணு உலைகளில் கனநீருக்குப் பதிலாக நீர்ம சோடியம் குளிர் விக்கும் திரவமாகப் பயன் படுத்தப்படுகிறது. அதிவேக ஈனுலையில் (Fast Bar Reactor) நீர்ம சோடியமே பயன்படுகிறது. சோடியமானது காற்று பட்டா லே வெடிக்கக் கூடியது. கன நீரை விட இது பாதுகாப்பு குறைவானது. இந்த அதிவேக ஈனுலைகளின் மேற்கூரை பல வீனமானது. சோடியம் வெடிப் பை தாங்க இயலாதது.

1995இல் சப்பானின் மொன்சு ஈனுலையில் சோடியம் கசிவு தொடர்ந்து ஏற்பட்டது. ஆண்டுக்கணக்கில் அதனைச் சரிசெய்ய முயற்சி நடந்தது. அது தோல்வியில் முடிந்ததால் மூடப் பட்டது. பிரான்சு, பிரிட்டன் தோரியம் அணு உலையிலும் இவ்வாறான விபத்துகள் நடந்தன.

உண்மையில் தமிழ்நாட்டில் மின்வெட்டு வரக்கூடாது தொ ழில் நிறுவனங்களுக்கு தடை யற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்து மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே உரியதாக்கிவிட்டால் போதும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் மின்சார வாரியம் விலை கொடுத்துத்தான் வாங்கு கிறது. விலை கொடுத்து தமிழ்நாட்டு மின்சார வாரியம் வாங்குவதற்குக் கூட இந்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின் சாரம் முழுமையாகக் கிடைப்ப தில்லை.

தமிழகத்திற்குக் காவிரி நீரை அடாவடியாக மறுக்கும் கர் நாடகத்திற்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போய்க் கொண்டி ருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. அதே போல் பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு நெய் வேலி மின்சாரம் நாள்தோறும் 6 கோடி யூனிட் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழகத்துக்கு எதிரான சட்ட விரோதமான நீர் முற்றுகை யிடும் மாநிலங்களுக்கு இந்திய அரசின் நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து நாள் தோ றும் 26 கோடி யூனிட் மின் சாரம் போய்க் கொண்டி ருக்கிறது.

தமிழகத்துக்கு உள்ள மின் சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் தான். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட்டால் தமிழ கத்தில் மின் பற்றாக்குறை இருக் காது. மின்சார உபரி மாநில மாகத் தமிழ்நாடு திக ழும். இதைச் செய்வதற்கு இந்திய அரசு என்றைக்கும் முன்வரு வதில்லை. மன்மோகன் சிங் என்றைக்கும் இதுபற்றிச் சிந்தித் ததில்லை. கூடங்குளம் அணு உலையை தமிழர்கள் மீது திணிப்பதற்காக இங்குள்ள மின்வெட்டைக் காரணமாகக் காட்டிப் பசப்புகிறார்.

கடலலை மின்சாரம், காற் றாலை மின்சாரம், கழிவி லிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் ஆகியவற்றில் இந்திய அரசும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும். எளிமை யான உறுதியான இவ்வாறான மாற்று வழிகள் இருக்க அணு உலை என்பது கூடவே கூடாது. அழிவை ஏற்படுத்தும் அணு மின்சாரத்தை ஒரு மின் உற்பத் திக்கான வழியாக ஏற்கவே கூடாது.

இந்திய அரசு தமிழக அமைச்சரவையின் தீர்மானத் தையோ தமிழக மக்களின் கருத்தையோ ஒரு பொருட் டாகவே கருதவில்லை. எப்ப டியும் கூடங்குளம் அணுஉலை யை இயக்குவது என்று பிடி வாதமாக இருக்கிறது. கண் துடைப்பாக தானடித்த மூப் பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து மக்களிடம் பேசுவது என்று அறிவித்திருக்கிறது. போராடும் மக்களிடமும் வல் லுநர் குழுவின் பட்டியல் பற்றிக் கேட்கப்படவில்லை. தமிழக அரசிடமிருந்தும் பட்டியல் பெறப்படவில்லை. இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக அக் குழுவை அமைத்து மக்களை எப்படியாவது ஏற்கச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இன்னொரு புறம் இந்திய அரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களிடம் பேச வைப்பது என்ற திட்டத்தில் இந்திய அரசு இறங்கியி ருக்கிறது. அப்துல்கலாம் அணு வெடிப்பை அணு குண்டை ஆதரிக்கிற அணுவியலாளர். அணு அறிவியலாளர். இருந்த போதிலும் நல்ல தமிழ் உணர் வாளர். இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை உள் ளவர் என்கிற வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்கள். ஆனால் கூடங் குளம் அணு உலைக்கு ஆதர வாகப் பரப்புரையில் அவர் இறங்கினால் அது அவருக்கு மதிப்புக் குறைவைத்தான் உண் டாக்கும்.

அவரை வைத்துத் தமிழ் உணர்வாளர்களை, அவர்மீது பற்று வைத்துள்ள இளைஞர் களை, ஒரு பகுதி இஸ்லாமியர் களை இப்போராட்டக் கருத்தி லிருந்தும் களத்திலிருந்தும் அப் புறப்படுத்திவிடலாம் என்று கேவலமான பிளவு உத்தியை இந்திய அரசு வகுத்துள்ளது. அதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. முனைவர் அப்துல் கலாமும் அதற்குத் துணை போகக் கூடாது.

அது மட்டுமின்றி சாதியை வைத்தும் மதத்தைக் காட்டியும் பணத்தாசைக் காட்டியும் போ ராடும் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அனைத்து வகை யிலும் இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதி ரானது. வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்புவதற்கு இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வகை கையாட்கள் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அக்கட்சியின் தமிழ்நாடு அமைப்பு கூடங்குளம் அணு உலைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேசுகிறது. ஆனால் அதே கட்சியின் அனைத்திந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் முயற்சியில் ஜெய்த்தாப்பூர் அணு உலைக்கு எதிராக மராட்டியத்தில் மட்டு மின்றி இந்தியா முழுவதும் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மராட்டிய மாநிலம் ஜெய்த் தாப்பூரில் அமையவிருந்த அணு உலைக்கெதிரான போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முனைப்பாகப் பங்கேற்றது. இப்போது அனைத்திந்திய அளவில் அப் போராட்டத்தை விரிவுபடுத் துவதற்கும் அக்கட்சி இறங் கியுள்ளது.

இரஷ்ய அணு உலை முத லில் கேரளாவில் அமைய விருந்தது. கேரளத்திலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் இணைந்து எதிர்த் ததால் கேரளாவில் அமைய விருந்த இரஷ்ய அணு உலை கூடங்குளத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்திந்தியத் தலைமை யும் மராட்டிய மாநிலத் தலை மையும் கேரளத் தலைமையும் அணு உலைக்கு எதிராக இருக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு குழு தமிழின விரோதப் பாதையில் இன்னொரு நடவடிக்கையாக கூடங்குளம் அணு உலையை ஆதரித்துப் பரப்புரை செய் கிறது. அண்மையில் கூடங் குளம் அணுஉலை நிறுவனத் தலைவர் இராமமூர்த்தியை வைத்து கருத்து உருவாக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நடத்தியது. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராசன், அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராசன் ஆகியோர் அதில் கலந்து கொண்டு எப்படியும் கூடங் குளம் அணு உலையை நிறுவி யே தீருவது என்று வலிந்து பேசியிருக்கிறர்கள்.

இந்திய அரசு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து அப்போ ராட்டத்தை இடிந்தகரையில் மையம் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிற அறிவாளர் களையும் போராட்டத் தலைவர்களையும் மக்களிடம் இருந்து பிரிப்பதற்குப் பல அவதூறு களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது இரஷ்யா விற்கு எதிரான அமெரிக்கச் சதி என்று சொல்வதற்கு உளவுத் துறை யோடு தொடர்புடைய பலரையும் ஊடகத்தின் வாயிலாகக் களமிறக்கியிருக் கிறது முதல் நபர் அமெரிக்கக் கையாளான சுப்பிரமணியம் சுவாமி “இது வெளிநாட்டுச் சதி“ என்று தொலைக் காட்சியில் பேட்டி அளிக் கிறார். எந்த வெளிநாட்டுச் சதி என்று வெளிப்படையாக அவரால் சொல்ல முடிய வில்லை. காரணம் அவர் சொல்ல விரும்புகிற வெளிநாடு அமெரிக்கா. அந்த அமெரிக்கா வின் முதல் நபர் கையாளாகவே தான் இருக்கிறபோது அதைச் சொல்ல முடியாமல் விழிக் கிறார். இந்த அவதூறு களின் அடிப்படை நோக்கம் மக் களைத் தலைமையற்றவர் களாக மாற்றுவது, அதன் மூலம் திசை தெரியாமல் அவர்களைச் சிதறடிப்பது என்பதுதான்.

உலக அணு ஆயுத வல்லரசு களின் அணிவகுப்பில் இந்தியா வும் சேர்ந்து கொள்ள விரும்பு கிறது. அணு ஆயுத வல்லரசாக மாறும் கனவு இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி ஆட்சிக் கலத்தில் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை நடத்தப் பட்டது. அந்த பொக்ரான் 1 அணு வெடிப்பு சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப் புக்கு இந்திய அரசு ஆளானது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதர வோடு அணு ஆயுதக் குவிப்பில் இறங்குவதற்கு இந்திய அரசு முனைந்தது. அந்தச் சூழலில் தான் கூடங்குளம் பேச்சு வார்த்தை தொடங்கியது.

அணு மின்சாரத்திற்கான உலை என்பது அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் போன்ற கதிரியக்கக் கழிவுகளில் சிலவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். இது உலகறிந்த கமுக்கம். அணு மின்சாரம் என்ற பெயரில் இரஷ்யாவிலிருந்து யுரேனி யத்தை இறக்குமதி செய்து அணு மின்சாரத்தையும் உற் பத்தி செய்துவிட்டு அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியத் தை வைத்து அணுகுண்டு தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தில்தான் சோவியத் ஒன்றியத்தை இந்தியா அணு கியது.

ஆனால் சோவியத் ஒன்றி யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அரசியலில் ஏற்பட்டிருக்கிற மாறுதலுக்கேற்ப இந்திய அரசு அமெரிக்க வல்லரசின் கூட்ட ணியில் இணைந்திருக்கிறது. இன்று அமெரிக்க வல்லரசின் அணு ஆயுதக் கூட்டாளிகளில் ஒருவராக இந்தியா இணைந் திருக்கிறது. இங்கு அணு உலை ஏற்படுத்துவது என்பது இந் தியா உலக ஏகாதிபத்திய வல் லரசுகளில் ஒன்றாக வளர் வதற்கு ஒரு முக்கிய கண்ணியாக அமைகிறது.

இதுவரையிலும் இந்தியா வில் அமைந்துள்ள அணு மின்சார உலைகள் 500 மெகா வாட்டைத் தாண்டி உற்பத்தித் திறன் உள்ளவை அல்ல. முதல் முறையாக 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில்தான் நிறுவப்படுகின்றன. இது தொ டர்பான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தது. இதை நம்பிக் கையாக வைத்துத்தான் மேற்கு வங்காளத்தில் அரிப்பூரிலும் மராட்டியத்தின் ஜெய்த்தாப் பூரிலும் இன்னும் ஒரிசாவிலும் ஆந்திராவிலும் வேறு சில மாநிலங்களிலும அணு உலை களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தொடக்க நிலையிலேயே ஜெய்தாப்பூர் அணு உலைத் திட்டம் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அரிப் புரில் அணு உலை ஏற்படுத் துவதற்கு அம்மாநில முதல மைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு காட்டியதால் அத் திட்டம் கைவிடப்பட்டது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்கு வதென்பது தொடர்ச்சியான இந்திய அரசின் அணு வல்லரசு முயற்சியில் முக்கியமான ஒன் றாக அமைந்திருக்கிறது.

இந்த அணு உலை ஒப்பந் தத்தின் மூலமாக அணு உலை தயாரிக்கிற பன்னாட்டு நிறுவ னங்களிடமிருந்து பல இலட்சம் கோடி கையூட்டுப் இந்திய அரசியல் தலைவர்களுக்கம் அதிகார வர்க்கத்தினருக்கும் உயர் மட்ட அறிவியலாளர் களுக்கும் கிடைப் பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் பல இலட்சம் கோடி கையூட்டுப் பணம் மிகப் பெரிய கவர்ச்சி யாக ஆட்சியாளர்களை ஈர்க் கிறது. இவை எல்லாவற்றிற்கு மான திறவு கோலாக இன்று கூடங்குளம் அணு உலை அமைந்துள்ளது. எனவே தான் கூடங்குளம் அணு உலையைத் திறந்தே தீருவது என்ற முயற்சி யில் இந்திய அரசு இறங்கி யுள்ளது.

அதற்காக முயலைப் போல், எலியைப் போல் சோதனைச் சாலைக்கு உரிய பிராணிகளாக ஒட்டுமொத்தத் தமிழினத்தை மாற்றியுள்ளது.

எனவே இடிந்தகரை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவி வரும் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திய வல்லாட்சியை எதிர்த்த தமிழி னத்தின் தொடர் போராட் டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது.

சிங்களப் பேரினவாத அர சோடு இணைந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப் படுகொலை செய்தது இந்திய ஆரிய ஏகாதிபத்தியம் ஆகும். தமிழ்நாட்டு மீனவர்கள் 550 பேர் சிங்களத் துப்பாக்கிக்கு பலியானது இந்திய வல்லாட் சியின் துணையோடுதான். அது போதாது என்று நான்கு சுறா மீன்களைப் பிடித்தார்கள் என்பதற்காக கடலோரக் காவல்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கை விலங்கிட்டு அடித்து நொறுக்கி இழிவுபடுத்தியிருக்கிறது. நாள் தோறும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினராலும் சிங்கள அரசின் கைக்கூலிகளாலும் அன்றாடம் தாக்கப் படுவதும் இழிவுபடுத்தப்படு வதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு இந்திய வல்லரசு துணை செய்கிறது. உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கி யிருக்கிற மலையாள அரசுக்குத் துணை செய்கிறது இந்திய வல்லரசு. கசிந்து வரும் பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திராவிற்குத் துணை போகிறது இந்திய வல்லரசு. வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகச் சொல்லித் தமிழகத்தை வெளி யாரின் வேட்டைக்காடாக மாற்றியிருப்பதுதான் இந்திய வல்லரசு.

இந்திய வல்லரசின் தமிழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங் குளம் அணு உலையாகும். தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடை யில்லாத மின்சாரத்தை வழங்கு வதற்கு முனைந்திருக்கிறது இந்திய அரசு.

கட்டி முடித்துவிட்டார்கள் தடுத்து நிறுத்த முடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும். தமிழினத் திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Pin It