உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணமுடியாத இந்த வரையாடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் நீலகிரியை ஒட்டிய பகுதிகளில் வாழும் இவை மிகவும் அரிதான விலங்காக மாறியிருக்கிறது. 80  கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இந்த வரையாடு சுமார் 1200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் வாழ்கிறது. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கிறது. பழனி மலை பகுதிகளிலும் அரிதாகக் காணப்படுகிறது. இந்த விலங்கை வேட்டையாடுவது தடை செய்யபட்டிருக்கிறது. நிறைந்த புல்வெளிப்பகுதிகள் இவற்றின் வாழ்வுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. தற்சமயம் வெறும் 2000 வரையாடுகள் மட்டுமே இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய  செய்தி.

nilgiri_tahr_with_youngInternational Union for Conservation of Nature - தகவலின் படி இந்த விலங்கு அருகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். ஆண் பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. இமாலய காட்டாடு மற்றும் அரேபிய காட்டாடு தவிர்த்து வனத்தில் வாழும் முக்கியமான ஆடு இதுவாக இருக்கிறது. இவற்றைப் பாதுகாக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. வேட்டைகளில் இருந்து இவற்றைப் பாதுகாக்க இந்த வரையாடு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.

Pin It