நானோ என்ற கிரேக்க வார்த்தைக்கு குள்ளம் என்று பொருள். நானோ அளவுகோலை 100 கோடியில் ஒரு பங்கு என்று குறிக்கிறார்கள். அந்தக்காலத்தில் தமிழில் கீழ்க்காணி, கீழ் முந்திரி, இம்மி அளவு, அடிசாரம் என்றெல்லாம் அளவுகோல்கள் இருந்தன. கீழ்க்காணி என்றால் 25 ஆயிரத்து 600இல் ஒரு பங்கு, கீழ்முந்திரி என்பது 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 இல் ஒரு பங்கு ஆகும்.

        இதே போல் இம்மி அளவு என்றால் 10 லட்சத்து 75 ஆயிரத்து 200 இல் ஒரு பங்கு அடிசாரம் என்பது 18 லட்சத்து 38 ஆயிரத்து 400இல் ஒரு பங்கு ஆகும். இவ்வளவு சிறிய அளவுகளை தமிழர்கள் எதற்குப் பயன் படித்தினார்கள் என்று தெரிய வில்லை. ஒரு வேளை மருந்துகள் தயாரிக்கும் போது பயன்பட்டிருக்கலாம். இது குறித்து எல்லாம் ஆய்வு செய்யலாம்.

        இவ்வாறு கூறியவர்; அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மு.அனந்தகிருட்டிணன் அவர்கள்.

        மிகச்சிறிய அளவில் வடிவமைக்க பட்ட பொருளில் அதிக ஆற்றலை உட்புகுத்தும் தொழில் நுட்பம் நானோ டெக்னாலஜி என்று பொருள் கொள்ளலாம். தமிழரின் பண்டைய அளவை அலகுகள் மிக நுண்ணியதாக இருந்திருக்கிறது.

        தமிழ்ச்சித்தர் மருத்துவ முறைகளில் இவ்வாறான மிகச்சிறிய அளவைகள் பயன் படுத்த பட்டுள்ளன. கனிம, உலோகப் பொருட்களை முதன்மை மூலப்பொருள்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் பற்பம் மருந்துகள், செந்தூரம் மருந்துகளை தயாரிக்கும் முறைகளில் இச்சிறிய அலகுகளை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்ச்சித்தர்களின் இம்மியம் முறையிலான உலோகத்தாது பகுப்பு முறை அத்தகையதுதான். இந்த இம்மி உலோகத்தாது பொருள்களின் பகுப்பு முறைதான்(கிறீநீலீமீனீவீ) என்று உலகங்கிலும் பரவியுள்ளது.

        போதிசத்துவர் என்ற தமிழ்ச்சித்தர் காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்று ஜென்புத்த மதத்தை பரப்பியவர். அவர்தான் உலோகத் தாது பகுப்பு முறையும், தமிழ் மருத்துவத்தையும் சீனர்களின் போர்க்கலை வடிவத்திற்கு ஆதாரமான தமிழர் விளையாட்டு சிலம்பம், வர்மம், குஸ்தி ஆகியவற்றையும் சீனர்களுக்கு கற்றுத்தந்தவர். அவரது ரிஸி மூலத்தை அறியவே பல்லவர் காலத்தில் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்திற்கு யுவன் சுவாங் என்ற சீனப்பயணி வருகை புரிந்தாக அவரே பதிவு செய்துள்ளார்.

        உலகில் தொன்மை வாய்ந்ததாக கருதப்படும் சீனமருத்துவமே தமிழ்ச்சித்தர் மருத்துவத்தின் அடிபடியாக கொண்டது எனில் ஆயூர் வேதம் போன்ற மாற்று மருத்து வத்தின் முறைகளில் தொன்மையை நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

தமிழ் சித்தர் மருத்துவம் - 4000 ஆண்டுகளுக்கு முன்னும்

ரோமர் மருத்துவம் - கி.பி. முன்னூறிலும்

யுனானி மருத்துவம்      - கி.பி. அறுநூறிலும்

கிரேக்க மருத்துவம் - கி.பி. தொள்ளாயிரத்திலும்

அஸ்டாங்க ஹிருதயம்    - கி.பி தொள்ளாயிரத்திலும்

சாரங்கதரசம்கிதை        - கி.பி. ஆயிரத்து முன்னூறிலும்

சிவப்பிரகாசம்            - கி.பி ஆயிரத்து அறுநூறிலும

அலோபதி என்ற ஆங்கில மருத்துவம்

 கி.பி ஆயிரத்து எழுநூற்றி எழுபத்து ஐந்திலும்

தோன்றியதாக அறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.

 கி.மு.200 க்குப்பின் போகர் அறிமுகம் செய்ததற்கு பின்னே உலோகத் தாது பகுப்பு மருந்து செய்முறை சீனாவில் பரவியது.மேலும் போகர் நீரிலும் வானிலும் செல்லும் விமான நுட்ப முறையை சீனருக்கு செயல் படுத்தி காட்டியதையும் சீனநூல்கள் சொல்கிறது. எனவே போகருக்கு முன்பே உலோகத் தாதுப் பகுப்பு மருந்து செய்முறை சித்தர் மருத்துவம் திகழ்ந்துள்ளது என்பதும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானது என்பதும் தெளிவு. சித்த மருத்துவம் இம்மி பகுப்பு மருத்துவமாக திகழ்ந்துள்ளது என்பதும் நாம் புரிதற்குரியது.

        மேலும் இந்த இம்மியப் பகுப்பு மருந்து செய்முறை யாக்கோப்பு என்ற இராம தேவரால் அரபு நாடுகளில் பரவியுள்ளது. இவர் பதிணென் சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் யாக்கோபு என்ற அராபிய நூல்களில் குறிப்பிடப்படுகிறார். இவர் கூறிய 100க்கும் மேற்பட்ட மருந்து செய்முறைகள் யுனானி மருத்துவ முறைகளில் காணப்படுகின்றன. சித்த மருத்துவ செய்முறை உலோக தாதுக்களின் பற்ப செந்தூரம் செய்முறையான இம்மிய பகுப்பு மருந்து செய்முறை சீன மருத்துவத்திற்கும், அராபிய மருத்துவத்திற்கும் மற்றும் உலகின் பல மருத்துவ முறைகளுக்கு சித்தம் அளித்துள்ள கொடை எனக்கூறலாம்.

        மருத்துவ முறையில் தமிழரின் இத்தகைய தொல்லறிவு ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழ்ச்சித்தர் மருத்துவ முறையின் பல்வேறு பிரிவுகள் இயற்கை மருத்துவம், ஓகம், மூலிகை மருத்துவம் என்ற வேற்றுப் பெயர்களில் நிலவி வருகிறது.

        வர்மம், தொக்கணம் என்பவை பஞ்சகர்மா என்று ஆயுர்வேத மருத்துவத்தின் உட்பிரிவாக்கப்பட்டு பிரபலமடைந்து விட்டன. கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மக்களிடமிருந்தும் மருத்துவ ஆசான்களிட மிருந்தும் கேரளாவிற்கு பரவிய வர்ம, தொக்கண முறைகள் மொழிமாற்றப்பட்டு ஆயுர்வேதத்தின் உட்பிரிவாகப்பட்டு விட்டன. பஞ்சகர்ம என்ற சிகிச்சை முறை 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய ஆயுர்வேத மருத்துவர்களால் கையாளப்பட்டதில்லை என்பதன் மூலமும், கேரளாவில் மட்டும் சிறப்பாக கையாளப்படுகிறது என்பதன் மூலமும் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும்.

        நமது இஞ்சி, மஞ்சள், வேம்பு போன்றவைகளுக்கு அமெரிக்கா மற்றும் மேலை நாட்டினர் காப்புரிமை பெற்றது போல் தமிழ்ச்சித்தர் மருத்துவ முறையின் பற்பம், செந்தூரம் மருந்துகள் நானோ தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்துள்ளதால் அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் காப்புரிமை பெற வாய்ப்புள்ளது அத்தகைய பேரிடியிலிருந்து நமது உரிமைகளைக்காத்துக்கொள்ளும் வகையில் பற்ப செந்தூரங்களின் பயன்களை அறிவியல் பூர்வமாக நாம் ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

        கடந்த காலத்தில் இப்பணிகளை அரசின் மூலமும் தனியார் மூலமும் செய்ததில் சில சிக்கல்கள் உள்ளன.இந்திய மருத்துவ முறைகளுக்கான ஆய்வுகளை இந்திய அரசு நிறுவனங்கள் பல்வேறு தனியார் பல்கலை ஆய்வுக்கூடங்கள் மூலம் மேற்கொள்வதை நடை முறைப்படுத்தி வருகிறது அவை வணிக ரீதியாக செயல் படுவதால் ஆயுர்வேத முறையாக பதிவு பெற வாய்ப்புள்ளது.

        கீழாநெல்லி மூலிகை பற்றிய அறிவியல் தமிழ்சித்தர் மருத்துவத்தைச் சார்ந்தது.ஆந்திர மாநிலத்திற்கு வடக்கே கீழாநெல்லி தாவரம் காணப்பட்டதில்லை. ஆனால் கீழா நெல்லி ஹெபடைடிஸ்-பி கிருமித் தொற்றை முற்றாக நீக்க வல்லது. இந்தத் தன்மையை ஆய்வு செய்து ஆவணப்படுத்திய சென்னைப் பல்கலைக்கழகம் அதை ஆயுர் வேத மருந்தாக பதிவு செய்து லண்டனைச் சார்ந்த ராலிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.

        கீழா நெல்லி, குப்பைமேனி, தூதுவளை, கொளுஞ்சி இன்னும் இது போன்ற பல மூலிகைகளின் பதிவு ஆயுர் வேதமாக மாற்றிட முடிகிறது.

        தாம்பரம் நெஞ்சகநோய் மருத்துவமனையில் ஆங்கில மருத்துவப் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களின் தலைமையில் எய்ட்ஸ் நோய்க்கு 1992-95 ஆண்டுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த ரசகெந்தி மெழுகு, நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம் மாத்திரை ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு உலகு தழுவிய பல்வேறு மருத்துவ மாநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

        ஆனால் எவ்வித தயக்கமுமின்றி ஆயுர்வேதத் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு இணையான சமஸ்கிருத பெயர்கொண்ட நரசிம்ம கிருதம் (ரஸகெந்தி மெழுகுக்கு ஒப்பானது) சியவன பிராஸ் என்ற ஆயுர்வேதத்தின் பெயரில் கூட்டு மருந்து சிகிச்சையாக விளம்பரபடுத்தி விற்பனைசெய்து வருகின்றனர்.

        இதில் அந்நிறுவனங்களுக்கு எவ்வித தயக்கமோ குற்ற உணர்வோ இல்லை. இது குறித்து சித்த மருத்துவத்துறையினர் எவரும் கேட்பாரில்லை. இது போல் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களை கூற முடியும். தமிழரின் மருத்துவம் சார்ந்த தொல்லறிவு இது போல் பல வகைகளில் சூறையாடப்பட்டு வருகிறது. எனவே சித்த மருத்துவத்தின் ஆராய்ச்சி முடிவுகளை ஆவணப்படுத்துவதில் நாம் விழிப்புடன் செயல்பட்டு தமிழ்ச் சித்தர் மருத்துவத்தின் பெயரில் ஆவணப்படுத்துவது அவசியமாகிறது.

        நம் மண்ணில் விளையும் தாவரங்களைப்பற்றிய அறிவு நமது கிராம மக்களின் அறிவு மூலிகைகளைப் பற்றிய அறிவு நம்மூதாதையரின் அறிவு இயற்கை மருத்துவம், ஓகம், வர்மம் பற்றிய அறிவு தமிழ்ச் சித்தர்களின் அறிவு. ஆனால் இவையாவும் சித்த மருத்துவதினின்றும் அந்நியப் படுத்தப்பட்டிள்ளன. இவ்வறிவு சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு கோடிக்கணக்கில் பொருள் ஈட்டுவது யார்?

        தமிழ் மக்களோ, தமிழ்நாடோ, தமிழ் இன தொழில் அதிபர்களோ அல்லர்.

        எனவே பற்ப, செந்தூரங்களின் நானோ தொழில் நுட்பத்தையாவது தமிழ்ச்சித்தர் மருத்துவத்தில் ஆவணப்படுத்த தமிழ் மொழி, இன - பண்பாட்டு உணர்வுடன் கூடிய ஒரு அமைப்பு செய்து முடித்த பின்பு தமிழ்ச்சித்தர் முறை என்ற பெயரில் வணிகமயமாக்குதல் வேண்டும். அப்பணியை மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு சிறு தொழில் சித்த மருந்து உற்பத்தியாளார் சங்கம் மேற்கொண்டுள்ளது. மதுரை சித்தா கிளஸ்டர் என்ற பெயரில் விரைந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு உலகெங்கிலுமுள்ள தமிழ் மொழி, இன பண்பாட்டு ஆர்வலர்கள் எந்தவகையில் துணைபுரிய முன் வந்தாலும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ள ஜிகிழிஷிமிஞிகிவிகி சங்கமும், சித்தா கிளஸ்டருக்கான நீஷீஸீsஷீக்ஷீtவீuனீ-மும் ஆர்வத்துடனும் எதிர் பார்ப்புடனும் உள்ளன.

- வை.கு.கோபாலன்

Pin It