வினோபா பாவேயின் ஒரு
சர்வோதய ஊழியனாய்,
பின்பு தமிழரசுக் கழகத்தின்
ஊழியராய், பத்திரிகை ஆசிரியராய்
இருந்தாய்.
ம.பொ.சியிடமிருந்து மார்க்சிடம் வந்தாய்
மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியனாய்
தொண்டராய், தோழராய், தலைவராய்
உழைத்து பீடத்தில் ஏறினாய்
பலமொழிகளில் பண்டிதன் நீ
எனினும் அன்னைத் தமிழை உயிரெனக் கொண்டாய்
உழைப்பாளர் இதயங்களில் ஒளியேற்றி
உத்வேகமூட்டினாய் - அவர்கள் தலைவனாய் உயர்ந்தாய்
கடுமையான அடக்குமுறைக் காலங்களில் கூட
அடலேறென நின்றாய், அதனால் வென்றாய்
ஒரு பேச்சாளனாய், அமைப்பாளனாய், எழுத்தாளனாய்,
தலைமையாய் பல்வகைத் திறங்கள்
படைத்தவன் நீ.
எல்லாவற்றையும் எங்களையும்
புறம்தள்ளிவிட்டு கண்காணாப் பயணம்
ஏன் சென்றாய் தோழனே!
உன்னோடு ஒன்றிப்பழகிய எங்களையெல்லாம்
எப்படிப் பிரியத்துணிந்தாய் தோழனே!
நீ எப்படி இறந்திருந்தாலும்
உன் இறப்பு எங்களுக்குப்
பேரிழப்பே.
உனக்குச் செம்மலரின் புகழஞ்சலி

- செம்மலர் ஆசிரியர் குழு