1.
ஆண்களின் விலா எலும்பில்
படைக்கப்பட்டவளாம் பெண்!
இருக்கலாம். எனக்கென்னவோ,
என் இதயம் உன்னிலிருந்து
படைக்கப்பட்டிருக்கலாம்.
உன்னைத்தவிர வேறு யாரையும்
அது நினைப்பதில்லை...
2.
நீ எழுந்து போய் விட்டாய்.
ஆயினும்,
நீ சாய்ந்திருந்த
என் தோல்கள்
இன்னும் கனக்கிறது...
3.
நீ தரும் முத்தங்களின்
வெப்பங்களை தொலைப்பதால்தானோ
அதை தொலைபேசி
என்கின்றனர்?...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.
வெப்பங்களை தொலைப்பதால்தானோ
அதை தொலைபேசி
என்கின்றனர்?.../ அருமை
முதல் நறுக்கில் 'தோல்களா' தோள்களா...
RSS feed for comments to this post