Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

நம்பிக்கை வைத்து
நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்
நாம் நடந்தால் தேர் நடக்கும்
இன்றேல் வெயில் மழையில் கிடக்கும்

- திசை குழம்பித் திகைத்து நிற்கும் இன்றைய தமிழ் வாழ்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் தெளிவும் வெளிச்சமும் கொண்ட மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாடு தியாகத்தால் சுடரும் நாகை மண்ணில் கம்பீரமாக நடைபெற்றது. பிப்ரவரி 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் பங்கேற்றுத் தமிழகம் இன்று சந்திக்கும் சகல பிரச்னைகளையும் பற்றி ஆழமாக வும் விரிவாகவும் விவாதித்தனர். 

markisiyam_370மனந்திறந்த விவாதங்கள் விமர்சனம் சுயவிமர் சனம் என்கிற அடிப்படையில் நடைபெற்று அசலான ஜனநாயகத்தின் அர்த்தமுள்ள அடை யாளமாக இம்மாநாடு நடைபெற்றது. அரங்கிற் குள்ளே கூர்மையான விவாதங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்க வெளியே மக்களுக்குக் கல்வி தரும் வண்ணம் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றுக் கண்காட்சி கம்யூனிஸ்ட்டு களின் வீரஞ் செறிந்த தியாக வரலாற்றை வண்ணமிகு வர்த்தை களாலும் மனங்களை அசைக்கும் பேசும் சித்திரங் களாலும் மக்களோடு உரையாடல் நடத்திக் கொண்டிருந்தது.

முப்பதுக்கு மேற்பட்ட தீர்மானங்களின் வடிவில் தமிழகப் பிரச்னைகளின்பால் இம் மாநாடு கொண்ட அக்கறையும் இம்மாநாடு வடித்தெடுத்த முழக்கங்களும் வெளிப்பட்டன. ஜனநாயக முறைப்படி வரும் மூன்றாண்டு களுக்கான 82 பேர் கொண்ட மாநிலக்குழுவும் 15 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப் பட்டது. தோழர் ஜி.இராமகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். எல்லோருக்கும் செம்மலர் தன் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநாட்டில் எல்லோரையும் நெகிழ வைத்த நிகழ்வுகளாக மூத்த தோழர்களுக்குப் பாராட்டுச் செய்த நிகழ்வும் தியாகிகளின் குடும்பத்தாரை கௌரவித்த நிகழ்வும் அமைந்தன. திருவாரூர் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் நாவலன் அவர்களின் தாய் தந்தையரும் அவருடைய துணைவியாரும் மேடை யில் நின்ற அக்காட்சி பார்த்தவர் நெஞ்சிவிட்டு என்றும் அகலாத காட்சியாகும். கண்களில் கண்ணீர் வழிந்து நிற்க முடியாத சோகத்தில் தோழர் நாவலனின் தந்தையாரும் நாவலனின் துணைவியாரும் தோழர் பிராகாஷ் காரத்தின் தோள்களில் சாய்ந்து நின்றபோதும் இருவரும் தம் வலது கரத்தை முஷ்டி மடக்கி உறுதியுடன் உயர்த்திய போதும் அந்த அசைவு ஆயிரம் சேதிகளைச் சொல்லாமல் சொல்லியது.

மாநாடே தன்னெழுச்சி யாக எழுந்து நின்று “எங்கள் தோழர் நாவலனின் தியாகம் என்றும் வீண்போகாது” என்று முழக்க மிட்டபோது அந்த முழக்கம் கண்ணீரைக் கனன் றெழும் ஆவேசமாக மாற்றிய கம்பீரமான இசை யாகக் காற்றில் வெப்பத்தைப் பரப்பி நின்றது. இறுதி நாளில் மேடைக்கு வந்தது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளயத்தில் சமூக விரோதி களால் கொல்லப்பட்ட தோழர் வேலுச்சாமியின் குடும்பம். அவருடைய துணைவியார் அவர் கொல்லப்படுவதற்கு முன்பே அவரைப்பிரிந்து சென்று விட்டதால் தோழர் வேலுச்சாமியின் மூன்று குழந்தைகளும் தாரணி(12வயது), ரேணுகா(9), வினோத்(7)) தாயும் தகப்பனு மில்லாத குழந்தைகளாகி நிற்கின்றனர்.

மாநாட்டு மேடைக்கு வினோத் மட்டும் தோழர் வேலுச்சாமி யின் சகோதரரால் அழைத்து வரப்பட்டார். மாநாட்டுத் தலைமைக்குழுவின் சார்பாக அறிவிப்புச் செய்ய மைக் முன் வந்த தோழர் பி.சண் முகம் குரல் உடைந்து கரைந்து  நிற்க, தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அந்தச் சிறுவனைத் தூக்கித் தன் தோள்களில் இறுக அணைத்துக்கொண்டு அப்படியே நிற்க,  தோழர் பிரகாஷ் காரத் அச்சிறு வனுக்குப் பொன்னாடை போர்த்தினார். நடக்கிற இந்த நிகழ்வுகளைப் பற்றியோ நடந்துவிட்ட கொடுமை பற்றியோ ஏதும் அறியா அச்சிறுவன் வினோத் எல்லோரையும் பார்த்து வெட்கம் கலந்த சிரிப்போடு நின்ற கோலம் மாநாட்டில் பல தோழர்களை வெடித்து அழச்செய்தது. கோஷங் களால் மண்டபம் சுயநினைவு பெற்றது.

கட்சியின் சென்ற மாநில மாநாட்டுக்குப் பிறகு கட்சித்தோழர்களான எழுத்தாளர்கள் தோழர் மேலாண்மை பொன்னுச்சாமியும் தோழர் சு.வெங் கடேசனும் மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்றதை மாநாடு பெருமையுடன் கொண்டாடி அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தது.

markisiam_1_370நிறைவுநாள் பேரணியும் பொதுக்கூட்டமும் தமிழக மக்களுக்கு அழுத்தமான செய்தியைச் சொல்லுவதாக அமைந்தது. உலகமயத்துக்கு அடி பணிவதைத்தவிர வேறு வழியில்லை என்கிற முத லாளித்துவப் புரட்டுகளுக்கு மறுப்பாக  உறுதி யுடன் அடிவைத்து முன்னேறி நாங்கள் வரு கிறோம் என்கிற செய்தி அது. மார்க்சியம் ஒன்றே  இன்றைய உலகத்தின் நோய்களுக்கெல்லாம் மாமருந்து என்கிற முழக்கத்தை முன்வைத்த பேரணி அது. சாதியமைப்பை வேரோடு சாய்க்க வல்ல சக்தி இதுதான் இதுதான் என்று வலுவான குரலில் உலகுக்கு உரைத்திட்ட பேரணி அது.

தோழர்கள் ஏ.வி.முருகையன், வி.மாரிமுத்து, நாகை மாலி தலைமையிலான வரவேற்புக் குழு வினர் சிரித்த மனங்களோடும் பெருமித முகங்க ளோடும் எல்லாப் பணிகளையும் செய்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித்தந்தனர்.

தோழர் பிரகாஷ் காரத், எ°.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத், கே.வரதராஜன், பி.வி.ராக வலு ஆகிய ஐந்து அரசியல் தலைமைக் குழு  உறுப் பினர்கள் முழுமையாக இம்மாநாட்டில் பங்கேற்ற தும், விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர்கள் உமாநாத்தும் என்.சங்கரய்யாவும் முழுமை யாகத் தோழர்களோடு ஒன்றி நின்றதும் மாநாட்டுக்கு மேலும் புத்துணர்ச்சியும் விசையும் தருவதாக அமைந்தது.

- சதன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 neerodai 2012-03-13 19:44
வெட்கக் கேடு. ஈழத் தமிழர் படுகொலைக்கு ஜெனிவாவில் ஆதரவளிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. ரசியா ஏன் கியூபாவும் கூட. மனித நேயமற்ற ,தேசிய இனஙகளின் சுய நிர்ணய் உரிமை என்றால் என்னவென்றே அறியாதவர்கள்தான ் மார்க்ச்சியத் தலைவர்கள், *** ***** தோழர் தமிழ்ச் செல்வன். பேசச் சொல்லுஙகள், உங்கள் மார்க்கசீ...யத் தலைவர்களை, அந்த நாட்டு தலைவர்களோடு. மாமருந்தாம், மாமருந்து,வெங்க ாயம்.

.நீரோடை.
Report to administrator
0 #2 rengasamy 2012-03-22 15:42
நீரோடை,இலங்கை தமிழர்களின் பால் மார்க்சிஸ்ட்களி ன் அக்கரையைப் பற்றி அதன் தோழர்களுக்குத் தெரியும்.சர்வதே சியு அரசியலளைப் ப்ற்றி மார்க்சிஸ்ட்டுக ளுக்கு யாரும் பாடம் நடத்த தேவையில்லை.இந்த பதிவில் சமூக மாற்றத்திற்கான அடுத்த கட்ட் போராட்டத்தை நடத்தவிருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு நிகழ்வுகளைத்தான ் தமிழ்ச்செல்வன் பதிவு செய்துள்ளார்.இன ்றும் கம்யூனிஸ்ட்கள் செய்துவருகின்ற பணிகளைப் பற்றியும்,செய்த தியாகங்களைப் பற்றியும்,அந்த தியாகங்கள் தோழர்களால் உணர்ச்சிப்பூர்வ மாக நிணைவு கூரப்பட்டதையும் தான் பதிவு செய்துள்ளார்.உங ்களுடைய பின்னூட்ட்ம் அதைப் பற்றி இல்லை.இப்படிப்ப ட்ட விமர்சனங்களை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.ஆக்கப்பூர ்வமான விமர்சனங்களை என்றும் மார்க்சிஸ்ட் இயக்கம் மதித்து வந்துள்ளது.இன்ற ு மக்களால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்ல ையென்றாலும் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மார்க்சிஸ்ட் இயக்கத் தோழர்கள் மக்கள் பணியாற்றுவார்கள ்.
Report to administrator
0 #3 jo.tamilselvan 2012-03-23 17:15
மாக்சியம் ஒரு உருப்பாடாத கொள்கை. எத்தனை வருடங்கள் ஆனாலும் வளராத ஒரு கட்சி. வளர்ந்த நாடுகளில் அழிவை நோக்கி செல்லுகின்ற கட்சி. உன்னிடம் இருப்பதை விற்று ஏழைக்குக் கொடு என்ற இயேசுவின் சமூகக் கொள்கைக்கு விரோதமான ஒரு கட்சி. இயேசுவே முதல் கம்யூனிஸ்ட்வாதி என்று திரித்துப் பேசும் கட்சி. ஒரு பார்ப்பன கட்சி. இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்த ரஷ்ய கட்சி. கூடங்குளம் அணு உலை வெடித்தால் நஷ்ட ஈடு தரமாட்டோம் என அறிவித்த மனிதகுல விரோத கட்சி. அவர்களின் விசயத்தை ச. தமிழ்ச்செல்வன் பேசாமல் இருப்பதே நலம்.
Report to administrator
0 #4 ஏகாந்தன் 2012-04-20 12:35
"உலகமயத்துக்கு அடி பணிவதைத்தவிர வேறு வழியில்லை என்கிற முத லாளித்துவப் புரட்டுகளுக்கு மறுப்பாக உறுதி யுடன் அடிவைத்து முன்னேறி நாங்கள் வரு கிறோம் என்கிற செய்தி அது." அய்யா மார்க்ஸிஸ்ட்க்ண ்ணியவாண்களே, உலகமயத்திற்கு அடிபணிந்து விவசாயிகளிடம் இருந்துநிலங்களை பறித்து டாடா, சலீம் குழுமம் போன்ற இந்திய, சர்வதேசிய பகாசுர நிறுவனங்களுக்கு வாரி வழங்கியதால் தான் மேற்குவங்க மக்கள் வங்காளவிரிகுடாக ் கடலில் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இனியும் மார்க்ஸிஸ்ட்களி ன் புரட்டு வாதங்களை மக்கள் நம்பத்தாயாரில்ல ை.
Report to administrator
0 #5 TAMIZH MATHI. 2012-08-29 15:29
C.P.M. spoke Left; but practiced Right.They are anti Marx, anti Peaple and anti Thamizh.First of all they should decide their own distination and then come to the peaple. Peaple are more clever than this so called 'COMREDS'.
Report to administrator
0 #6 THAMIZH ARUVI. 2012-08-30 23:51
Threre is no differences between Corrupt Congress, Communal B.J.P. and Cunning C.P.I.[M]. All are same. Their commen base is Hinduthva.Their idiolegy is to protect the Varuna Sastra Dharmam. The Working Class,Intelectu als and Commen Peaple are united together and to eliminate these three parties without loss of time.
Report to administrator
0 #7 TAMIZH ARUVI. 2012-08-31 20:20
There is a correction in my above comment dated 2012 -08-30. Insted of the word 'Eliminate', substitute 'Neglect'.The word eliminate may hurt somebody else.Though the KEETRU provides a demacrate plotform,we should carefull with harsh words. However, I never change my openion on Congress,B.J.P and C.P.I.[M].
Report to administrator
0 #8 Rajarajan 2013-05-07 20:27
Cpm is an anti communist party. That does'nt mean communism is to blame. Communism only respect the mankind as ' human'. All other, idealisms let the mankind live as slaves, except a few percent. Of course mistakes might have happened in implementing it. If there is no communism you would not get names like 'china, russia, vietnam, cuba etc to spell. Can you remind the prime name that defeated Hitler? If you don'nt know the history, go to hell. God never come with five breads or its multiples to serve you. Only scientific philosophy can prosper the life of mankind.
Report to administrator

Add comment


Security code
Refresh