ஆரிய திராவிட புரட்டும் அந்நிய தலையீடுகளும்

ராஜிவ் மல்ஹோத்ரா, அர விந்தன் நீலகண்டன் ஆகியோ ரால் ஆங்கிலத்தில் 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந் நூல் கிழக்கு பதிப்பகம் வெளி யீட்டில் தமிழில் டிசம்பர் 2011ல் வெளிவந்துள்ளது. 768 பக்கங்கள் கொண்ட இந்நூல் இந்திய ஒற்று மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்துப் பேசுகிறது.

“இந்தியாவில் ஆழமாக காலூன்றியிருக்கும் மூன்று சர்வ தேச வலைப்பின்னல்களால் இந் திய ஒருமைப்பாடு  அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருகிறது.

1. பாகிஸ்தானுடன் தொடர் புடைய இஸ்லாமிய அடிப் படைவாதம்.

2. நேபாளம் போன்ற நாடு கள் வழியாக, சீனாவால் தூண்டி விடப்படும் மாவோயிச மார்க் சிய அடிப்படைவாதம்

3. மேற்கத்திய உலகால் மனித உரிமை போராட்டம் என்ற போர்வையில் திராவிட, தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினை வாதம். இந்தப் புத்தகத்தில் ஆசி ரியர்கள் மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிர தானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்” என நூலில் குறிப்பிடப்பட் டுள்ளது.

இந்திய நாட்டின் ஒற்று மைக்கு ஆபத்து உள்ளது என்பது உண்மை. பல்வேறு பிரிவினை வாத சக்திகள் அந்நிய உதவி யுடன் செயல்படுவதும் உண்மை.

Indai_370மத்திய அரசு பின்பற்றும் முதலாளித்துவ - நிலப்பிரபுத் துவக் கொள்கைகளால் ஏற் பட்டுள்ள  ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, பல மாநிலங்களும், மொழி, இன, மத சிறுபான்மை யினரும் புறக் கணிக்கப்படுவதால் ஏற்படும் உணர்வுகளும் பிரிவினைவாத கருத்துக்கள் தோன்றும் விளை நிலங்களாக உள்ளன. மக்கள் ஒற்றுமைக்கு எதிராக, மக்களின் பன்முக கலாச் சாரத்தை மறுத் தும் செயல்படும் இந்துத்துவா சக்திகள் இந்தியா வின் ஒற்றுமைக்கு பெரும் ஆபத் தாக உள்ளன. ஏகாதிபத்திய சக்தி கள் இவை அனைத்தையும் தூண்டிவிட்டு பயன்படுத்துகின் றன.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆரிய திராவிட புரட்டு மட்டுமே இன்று மிகப்பெரும் ஆபத்து என இந்நூல் சித்தரிக் கிறது.

மாக்ஸ் முல்லர், பிஷப் கால்டுவெல் போன்றோர் இந் திய அடையாளங்களை பிளவு படுத்தி ஆரிய, திராவிட கோட் பாடுகளை உருவாக்கினர். இது கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்கும் காலனியாதிக்க ஆட்சியை நியா யப்படுத்தவும் பயன்பட்டது என வும் இவையெல்லாம் இனங் கள் குறித்த ஐரோப்பிய கண்டு பிடிப்புகள் எனவும் இந்நூல் குறிப்பிடுகிறது.

தென்னிந்தியாவில் தலித் ஸ்தான், திராவிடஸ்தான் உருவாக்க அமெரிக்க, ஐரோப் பிய சர்ச்சுகள், அறிவுலகம், நிறு வனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் பங்காற்று கின்றன என இந்நூல் பேசுகிறது.

ஏற்கனவே நம்நாட்டில் உருவாகியுள்ள ஆரிய, திராவிட இன கோட்பாடுகளை முற்றி லும் நிராகரித்து இவை புரட்டு, அந்நியத் தலையீடுகள் என இந் நூல் வாதிடுகிறது.

இவை அனைத்தும் ஏற்க முடியாத வாதங்கள். இன்றைய சூழ் நிலையில் இந்திய ஒருமைப் பாட்டிற்கு மிகப்பெரும் அச் சுறுத்தலாக உள்ள சக்திகளை யும், பின்புலமாக உள்ள ஏகாதி பத்திய சக்திகளையும் சுட்டிக் காட்டாமல் இந்துத்துவா சாய் மானத்துடன் இந்நூல் வெளிவந் துள்ளது.

- வெ.சுந்தரம்

வெளியீடு: கிழக்கு பதிப் பகம், 177/103, முதல்தளம், அம் பான்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை,  சென்னை - 600014
விலை: ரூ.425

Pin It